தோசை மாவு மீந்துவிட்டால் அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
அதனை இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்து சின்ன சின்ன வடிவத்தில் வெட்டி வைக்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து, வெட்டிய இட்லியைக் கொட்டி பிரட்டவும்.
இதில் பிடித்தவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அப்படி இல்லாமல் இனிப்பு சுவை பிடித்தவர்கள் சர்க்கரை நீரை இவற்றின் மீது தெளித்து விடலாம்.
இது குழந்தைகளுக்குப் பிடித்தமாக இருக்கும்.
இட்லி மாவு மீந்துவிட்டால் அன்று மாலை இந்த உணவை செய்து அசத்தலாம் எளிதாக.