(1) பாலிகை நடுவில் உள்ளதில்; ஓம் பூ: ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி, ஓம்புவ: ப்ரஜாபதிம் ஆவாஹயாமி, ஓம்ஸுவ: சதுர்முகம் ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: ஹிரண்யகர்;ப்பம் ஆவாஹயாமி, ப்ரம்ஹாதிப்யோ நம: ப்ரம்ஹாதீநாம்இதம் ஆஸனம். (2) கிழக்கிலுள்ள பாலிகையில் ஓம்ப10: இந்த்ரம் ஆவாஹயாமி, ஓம்புவ வஜ்ரிணம் ஆவாஹயாமி, ஓம்ஸுவ: சதக்ருதும்; ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: சசீபதீம் ஆவாஹயாமி, இந்த்ராதிப்யோநம: இந்த்ராதீனாம் இதமாஸனம். (3) தெற்கே உள்ள பாலிகையில், ஓம்ப10: யமம் ஆவாஹயமி வைவஸ்வதம் ஆவாஹயாமி, ஓம் ஸுவ: பித்ருபதிம் ஆவாஹாயாமி ஓம்புர்புவஸ்ஸுவ: தர்மராஜம் ஆவாஹயாமி, யமாதிப்யோ நம: யமாதீனாம்; இதமாஸனம் (4) மேற்கேயுள்ள பாலிகையில் ஓம்ப10: வருணம் ஆவாஹயாமி ஓம்புவ: ப்ரசேதஸம் ஆவாஹயாமி ஓம்ஸுவ: ஸுரூபிணம் ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: அபாம்பதிம் ஆவாஹயாமி வருணாதிப்யோ நம: வருணாதீனாம் இதம் ஆஸனம். (5) வடக்கே உள்ள பாலிகையில் ஓம்ப10: ஸோமம் ஆவாஹயாமி ஓம்புவ: இந்தும்; ஆவாஹயாமி, ஓம் ஸுவ: நிசாகரம் ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: ஓஷதீசம் ஆவாஹயாமி, ஸோமாதிப்யோ நம: ஸோமாதீனாம் இதமாஸனம். ப்ரம்ஹேந்த்ர யம வருண ஸோமாதிகள் ஒவ்வொருவருக்கும் ஆஸனம் முதல் எல்லாவித உபசாரங்களும் வேஷ்டி உட்பட சாத்தி (நிவேதன தாம்ப10லம், ஸுவர்ண புஷ்பம், மந்த்ர புஷ்பம் முதலியவைகள் செய்து) மடக்கிலுள்ள பால் கலந்த ஓஷதி த்ரவ்யங்கள் மேல்கூர்ச்சத்தை வைத்துக்கொண்டு, மடக்கை எடுத்து நின்று ஃ உட்கார்ந்து கொண்டு பின்வரும் வாக்கியங்களைச் சொல்லவும்.
(ஓஷதீ சூக்தம் ஒலி இங்கு இணைப்பு பிறகு வழங்கப்படும். தேவையானால் தள மேலாளரைத் தொடர்பு கொள்க)
ஓஷதயஸ்ஸம்வதந்தே ஸோமேநஸஹ ராக்ஞா யஸ்மைகரோதி ப்ராம்ஹணஸ் தகும்ராஜந் பாரயாமஸி” என்று ஜபம் முடியும். இது வரையில் உட்கார்ந்து கொண்டு மடக்கிலுள்ள பாலிகை சாமான்களை கூர்ச்சத்துடன் தொட்டுக் கொண்டிருக்க வேணும். ‘பீஜாவாபந முஹ_ர்த்தஸ் ஸுமுஹ_ர்த்தோஸ்து இதிபவந்த: மஹாந்த: அனுக்ருண்ணந்து” என்று ப்ரார்த்திக்க ‘ஸுமுஹ_ர்த்தோஸ்து” என்று பதில். ஜபதக்ஷிணை கொடுக்கவேணும்.
ஒருதரம் மந்திரத்துடனும் இரண்டு தடவை மந்திரமில்லாமலும், மடக்கிலுள்ள ஓஷதீ த்ரவ்யத்தை கூர்ச்ச ஸஹிதம்; 5 பாலிகைகளிலும் சேர்க்கவேணும்.
(1) நடுபாலிகையில் ‘ப்ரும்ஹஜக்ஞாநம் – ப்ரதமம் – புரஸ்தாத் – விஸீமத: – ஸுருச: – வேநஆவ: – ஸபுத்நியா: – உபாமா: அஸ்யவிஷ்டா: – ஸதச்சயோநிம் – அஸதச்சவிவ:‚ பிதாவிராஜாம் ருஷபோராயீணாம் – அந்தரிக்ஷம் – விச்வ ரூப – ஆவிவேச – தமர்கை: – அப்யர்சந்தி – வத்ஸம் – ப்ரம்ஹ ஸந்தம் – ப்ரம்ஹணா – வர்த்தயந்த:‚‚ ப்ரம்ஹாதிப்யோ நம: அயம்பீஜாவபாப:” ஸக்ருந்மந்தரேண த்வி: தூஷ்ணீம்.
(2) கிழக்குபாலிகையில் ‘யதஇந்த்ர – பயாமஹே – ததோந: – அபயம்க்ருதி – மகவந்சக்தி – தவதந்ந: – ஊதயே வித்விஷ: – விம்ருதோஜஹி ‚ ஸ்வஸ்திதா: – விசஸ்பதி: – வ்ருத்ரஹ – விம்ருதோவசீ – வ்ருஷேந்த்ர: – புரயேதுந: – ஸ்வஸ்திதா: – அபயம்கர:‚‚ இந்த்ராதிப்யோநம: அயம்பீஜாவாப:” ஸக்ருமந்த்ரேண த்வி: தூஷ்ணீம்,
(3) தெற்கு பாலிகையில் ‘யோஸ்யகௌஷட்ய – ஜகத: – பார்த்திவஸ்ய – ஏக – இத்வசீ – யமம் – பங்யச்ரவ: – காய – யோராஜா – அநபரோட்;ய: – யமம்காய – பங்க்யச்ரவ: – யோராஜா – அந பரோட்ய: – யேநாப: – நத்ய: – தந்வாநி – யேநத்யவ்(ஹ{): – ப்ருத்வீத்ருடா‚‚ யமாதிப்யோ நம: அயம்பீஜாவாப:” ஸக்ருந்மந்த்ரணே: த்வி: தூஷ்ணீம்.
(4) மேற்குபாலிகையில் ‘இமம்மேவருண – ச்ருதீ ஹவம் – அத்யாசம்ருடய – த்வாமவஸ்யு: – ஆசகே‚ தத்வயாயாமி – ப்ரம்;ஹணா – வந்தமாந: – ததாசாஸ்தே – யஜமாந: – ஹவிர்பி: – அஹேடமாந: – வருண – இஹபோதி – உருசகும்ஸமாந: – ஆயு: – ப்ரமோஷீ:‚‚ வருணாதிப்யோநம: அயம் பீஜாவாப: ஸக்ருந்மந்த்ரேணத்வி. தூஷ்ணீம்.
(5) வடக்கு பாலிகையில் ‘ஸோமோதேநும் – ஸோம: – அர்வந்தம் – ஆசும் – ஸோமோவீரம் – கர்மண்யம் – ததாது – ஸாதந்யம் – விதத்யம் ஸபேயம் – பிதுச்ரவணம் யோததாசது – அஸ்மை‚ ஆப்யாயஸ்வ – ஸமேதுதே – விச்வத: – ஸோமவ்ருஷ்ணியம் – பவாவாஜஸ்ய – ஸங்கதே‚‚ ஸோமாதிப்யோநம: அயம் பீஜாவாப.” ஸக்ருந்மந்த்ரேணத்வி தூஷ்ணீம்.
பிறகு ஓம் ஓம் என்று 1 முதல் 5 பாலிகைகளையும் கையில் கூர்;சத்துடன் வரிசைக்ரமமாகச் தொட்டுச் சொல்லவும். பிறகு 3 அல்லது ஐந்து சுமங்கலிகளை கூப்பிட்டு , 1 முதல் 5பாலிகைகளிலும் வரிசை க்ரமமாக மடக்கிலிருந்து ஜலம் மூன்று தடவை சேர்க்கச் செய்து ஆத்திலுள்ள பெருமாள் சன்னதிக்கருகில் ஸ்தலசுத்தி செய்து கோலம் போட்டு அதன்மேல் கொஞ்சம் நெல் சேர்த்து இந்த 5 பாலிகைகளிலும் கொஞ்சம் மண் சேர்த்து அங்கு வைத்து 4 நாள் கல்லியாணம் முடியும் வரையில் காலையிலும் மாலையிலும் தளிகை ஸமர்ப்பித்து தீர்த்தம் கொஞ்சம் சேர்க்கிற பழக்கம். மெழுகாத கூடையால் மூடி வைக்கிற பழக்கம். கல்யாணம் முடிந்த பிறகு மேற்படி பாலிகைகளிலுள்ள பயிர்களை, நதியிலோ தடாகங்களிலோ சேர்க்கிற பழக்கம். மேற்படி 5 பாலிகைகளையும் க்ருஹத்தில் ஒரு கயற்றில் கோத்து அநேகமாக மாட்டுக்கொட்டிலில் அல்லது வேரிடத்திலோ கட்டிவைப்பது பழக்கம். ஆனால் தற்போது, உபநயனம் ஃ விவாஹத்தில் முத்தாலத்தி எடுக்கும்போது இந்த பாலிகைக்கும் காட்டி விட்டு பாலிகையை உடனேயே யதாஸ்தானம் பண்ணிவிட்டு மஞ்சநீர் எடுத்ததும் வயதுக்கு வராத இரண்டு கன்னிப் பெண் குழந்தைகள் மற்றும் சுமங்கலிகள் உபநயன ஃ விவாஹ பெண் பிள்ளைகள் ஸஹிதம் ஒரு பாத்திரத்தில் நிறைய தீர்த்தம் வைத்துக் கொண்டு அதில் கரைத்துவிட்டு, அதை நடுவில் வைத்து அதைச் சுற்றிவந்து கும்மி அடித்து குதித்துப் பாடுவது நீண்ட நாட்களாக வழக்கத்திலிருக்கிறது.
You must be logged in to post a comment.