Ankuram in Upakarma and Vivaham
தாத்பர்யம் – விளக்கம்: முளைவிடும் விதைக்கு அங்குரம் என்று பெயர். ப்ரஹ்மச்சாரியாக கலைகளை கற்க ஆரம்பிக்கும் மாணவன் ஒரு பயிர், அதுபோல் சம்சாhர சாகரத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த தம்பதிகளின் உறவு என்ற பந்தம் தற்போது முளைவிட ஆரம்பிக்கிறது. எனவே இந்த உறவு நல்லவிதமாக பல்கிப் பெருகி வளரவேண்டுமென்பதற்காக ஓஷதி எனும் வேத மந்திரங்களை ஜபித்து ப்ரஹ்மா, இந்த்ரன், யமன் வருணன், ஸோமன் ஆகிய சக்தி மிக்க தேவதைகளையும் அவர்கள் பரிவாரங்களையும் ஆவாஹனம் செய்து ஜபித்த பாலிகையை அவர் கள் ஸந்நிதியில் சேர்த்து இந்த தம்பதிகளுக்கு அவர்களுடைய பரிபூரண அனுக்ரஹம் கிடைக்கப் ப்ரார்திக்கப்படுகிறது.
Things required for this karma:
உபநயனத்திற்கு அல்லது விவாஹத்திற்கு மட்டுமே அங்குரம் செய்யப்படும். இதற்காகத் தனியாக எதுவும் சாமான் தேவையில்லை. ஐந்து பாலிகை மடக்குகள் மற்றும் முளைக்க வைத்த தானியங்கள் கொஞ்சம் பால் இவை மட்டுமே ப்ரத்யேகமாகத் தேவை.
Step -1
சௌளம், உபநயனம், விவாஹம் இம்மூன்று கர்மாவில் அங்குரம் செய்யவேண்டியது. சௌளமும், உபநயனமும் சேர்ந்தாற்போலத்தான் தற்காலம் நடக்கிறது. சௌளம் தனியாகச் செய்தால் அங்குரம் செய்துதான் சௌளம் செய்ய வேண்டியது. ப்ராணாயாமம் முன் விவரித்திருக்;கிறபடி செய்து ஸ்ரீ பகவதாக்ஞா கைங்கர்யம், நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய கோத்ரஸ்ய சர்மண: (மம) குமாரஸ்ய சௌளோபநயன கர்மாங்கம் அங்குரார்ப்பண கர்ம கரிஷ்யாமி (என்று உபநயனத்திலும் – கோத்ரஸ்ய சர்மண: வரஸ்ய கோத்ராய: நாம்நீயா: கன்னிகாயாச்ச உபயோ: உத்வாஹகர்மாங்கம் அங்குரார்பண கர்;ம கரிஷ்யாமி என்று விவாஹத்திலும்) இரண்டு தரம் சொல்லி தத்அங்கம புண்யாகவாசனம் கரிஷ்யே என்று சொல்லி இடுக்கு தர்ப்பத்தை வடக்கே சேர்க்கவும். புண்ணியாகவாசனம் கிரமப்படி செய்யவும். படியில் நெல்லில் கிழக்கு நுனியாக இரண்டு தர்ப்;பம் நடுவில் சேர்த்து பிறகு வடக்கு நுனியாக இரண்டு தர்ப்பம் சேர்த்து, 5 பாலிகைகளைக்கும் சந்தனம் ப10சி தேங்காய்நார் துவாரத்தில் அடைத்து மேல் அரசு, புரசு, மாஇலைகளை கிழக்கு நுனியாக சேர்த்து, புத்து மண் மேல் சேர்த்து, சந்தனம், புஷ்பம், சோபனாக்ஷதையும் சேர்த்;து, நடுவில் 1, கிழக்கில் 1, தெற்கில் 1, மேற்கில் 1, வடக்கில் 1, மேற்படி தர்ப்பங்களில் வைக்கவேண்டும். முதல்நாளே நெல்லு, யவை, (வால்கோதுமை என்றும் நெல்லில் ஒருவிதமும் என்கிறார்கள். அது எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.) இங்கு பழக்கம், நெல்லு, உளுந்து, எள்ளு, பயறு, கடுகு இவைகளை ஊரவைக்கவேண்டும். பசும் பாலில் கலந்து பெரிய மடக்கில வைத்துக்கொள்ளவும். புண்ணியாகவாசன தீர்த்தத்தால் 5 பாலிகைகள், பாலில் கலந்த மடக்கிலுள்ள ஓஷதி த்ரவ்யம், இவைகளை ப்ரோக்ஷக்கவும். கூர்ச்சத்தை வலது கையிலும், இடது கையில் சோபனாக்ஷதையையும் வைத்துக் கொள்ளவும். |
(1) பாலிகை நடுவில் உள்ளதில்; ஓம் பூ: ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி, ஓம்புவ: ப்ரஜாபதிம் ஆவாஹயாமி, ஓம்ஸுவ: சதுர்முகம் ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: ஹிரண்யகர்;ப்பம் ஆவாஹயாமி, ப்ரம்ஹாதிப்யோ நம: ப்ரம்ஹாதீநாம்இதம் ஆஸனம். (2) கிழக்கிலுள்ள பாலிகையில் ஓம்ப10: இந்த்ரம் ஆவாஹயாமி, ஓம்புவ வஜ்ரிணம் ஆவாஹயாமி, ஓம்ஸுவ: சதக்ருதும்; ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: சசீபதீம் ஆவாஹயாமி, இந்த்ராதிப்யோநம: இந்த்ராதீனாம் இதமாஸனம். (3) தெற்கே உள்ள பாலிகையில், ஓம்ப10: யமம் ஆவாஹயமி வைவஸ்வதம் ஆவாஹயாமி, ஓம் ஸுவ: பித்ருபதிம் ஆவாஹாயாமி ஓம்புர்புவஸ்ஸுவ: தர்மராஜம் ஆவாஹயாமி, யமாதிப்யோ நம: யமாதீனாம்; இதமாஸனம் (4) மேற்கேயுள்ள பாலிகையில் ஓம்ப10: வருணம் ஆவாஹயாமி ஓம்புவ: ப்ரசேதஸம் ஆவாஹயாமி ஓம்ஸுவ: ஸுரூபிணம் ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: அபாம்பதிம் ஆவாஹயாமி வருணாதிப்யோ நம: வருணாதீனாம் இதம் ஆஸனம். (5) வடக்கே உள்ள பாலிகையில் ஓம்ப10: ஸோமம் ஆவாஹயாமி ஓம்புவ: இந்தும்; ஆவாஹயாமி, ஓம் ஸுவ: நிசாகரம் ஆவாஹயாமி, ஓம்ப10ர்புவஸ்ஸுவ: ஓஷதீசம் ஆவாஹயாமி, ஸோமாதிப்யோ நம: ஸோமாதீனாம் இதமாஸனம். ப்ரம்ஹேந்த்ர யம வருண ஸோமாதிகள் ஒவ்வொருவருக்கும் ஆஸனம் முதல் எல்லாவித உபசாரங்களும் வேஷ்டி உட்பட சாத்தி (நிவேதன தாம்ப10லம், ஸுவர்ண புஷ்பம், மந்த்ர புஷ்பம் முதலியவைகள் செய்து) மடக்கிலுள்ள பால் கலந்த ஓஷதி த்ரவ்யங்கள் மேல்கூர்ச்சத்தை வைத்துக்கொண்டு, மடக்கை எடுத்து நின்று ஃ உட்கார்ந்து கொண்டு பின்வரும் வாக்கியங்களைச் சொல்லவும். |
You must be logged in to post a comment.