Panchangam- Sri Paranthaman Vaakya Panchagam
Sri Paranthaman Panchangams are available from following persons: (Not available in shops).
1.Dr. N.V.Srinivasan M.A,M.Phil. PhD. Plot No.5, Door No.1/7, Thiru Vi Ka Nagar Main Road, Thundalam, Near Iyappanthangal, Behind Ramachandra Hospital. Ph: 9444844493
இந்த முகவரிக்கு N.V.Srinivasan என்ற பெயருக்கு ரூ 250க்கு காசோலை அனுப்பி 10 பஞ்சாங்கங்களை கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
100 பஞ்சாங்கம் அதற்குமேல் வேண்டுவோருக்கு விசேஷமான குறைந்த விலையில் வழங்கப்படும்.
2.Mr.Veeraraghavan Cook, Ap.214, 9th Street, 2nd Sector, K.K.Nagar, Chennai – 600 078.
3.Mr.Murali Nanganallur and will deliver at any place in Chennai: 9283218375
4.Mr.Ananthanarayanan – Old No.15, Vaigai Colony, 12th Avenue, Ashok Nagar, Chennai – 600 083.
5.Mr.M.D.Ramanujam 21/13, Bharathiyar Street, Lakshmipuram, Near Kolathur, Chennai – 600099. Ph: 9884235340
6.Mr.Madhavan Pammal, Chennai, 600075. Ph: 9884620204.
7.Mr.Balaji (Contract Shradham & Vaideeka Things Seller), West Mambalam : 9677252510
8.Mr.V.Varadarajan Kumbakonam and Trichy : 9443743275
9.Sri.Prasanna Vadhyar, Srirangam : 9894213386
10.Sri.Thirumala Yajur, Sama Vadhyar, Valasaravakkam : 9043269159, 7299969159
11.Mr.R.Anantharaman Civil Contractor, SriPerumbudur : 9042245463, Bangalore: 9042539449
I request our regular visitors, Customers to contact us, if willing to add your address here to keep the panchangams for public delivery.
ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் சிறப்புகளை கேள்வி – பதில் வாயிலாக அறிவோம்
ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் ஒன்றுதான் முற்றிலும் ப்ராம்மணர்களுக்கு உபயோகமான தீட்டுவிஷயம், உபாகர்மா சங்கல்பம், வருடம் முழுவதும் அமாவாஸை சங்கல்பங்கள் என அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியது.
கேள்வி:- மற்ற பஞ்சாங்கங்களைவிட ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தின் பொதுவான சிறப்பம்சங்கள் என்ன?
பதில்:- 1. மற்ற பஞ்சாங்கங்கள் சற்றேறக்குறைய 12 அங்குலத்துக்கு 10 அங்குல அளவில் 50 முதல் 100 பக்கங்களைக் கொண்டவையாக இருக்கின்றன, அவற்றில் பல பக்கங்கள் விளம்பரம் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.
நமது பஞ்சாங்கம் 8 அங்குலத்துக்கு 5 அங்குலம் அளவில் வெறும் 24 பக்கங்களைக் கொண்டது
அட்டைகளில் மட்டும் 3 விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதனால் கைக்கடக்கமாக இருப்பதால் மிகச் சுலபமாக கைப்பைக்குள் வைத்து எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்ல ஏதுவாகிறது.
- மற்ற பஞ்சாங்கங்களில் ஜோதிடர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தேவையான ஒரு குடும்பஸ்தருக்குத் தேவையே இல்லாத க்ரஹபாத சாரம், வருடம் முழுமைக்கான சந்த்ராஷ்டம தினங்களுக்கான பட்டியல் போன்ற விஷயங்கள், எல்லோருக்கும் அவ்வப்போது எளிதாகக் கிடைக்கக்கூடிய ராசி பலன் விஷயங்கள், ஆண்டு பலன்கள், எப்போதுமே மாறாத விஷயங்களான திசா-புக்தி-அந்தர கணக்குகள், முஹூர்த்த நிர்ணய விஷயங்கள், சந்திர நிலைக் கட்டங்கள், ராஜா, மந்திரி என ஆண்டு நவநாயகர் பலன்கள் என ஒரு முறைக்கு மேல் பயனில்லாத பல விஷயங்களைப் போட்டு பக்கங்களை நிரப்பியுள்ளனர்.
ஆனால் நமது பஞ்சாங்கத்தில் அவசியம் அடிக்கடி பார்க்கவேண்டிய சில மாறாத விஷயங்கள் – ராகு காலம், எமகண்டம், தினப் பொருத்தப் பட்டியல், பஞ்சாங்கத்தை உபயோகித்து தகவலை அறியும் முறைபற்றிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்தும் ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த ஆண்டுக்குறிய விஷயங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.
- மிக மிக முக்கியமானது:- நமது பஞ்சாங்கத்தில் முற்றிலும் அனைத்துத் தகவல்களும் ஆங்கில மணி நிமிடங்களாக மட்டுமே வழங்க்ப்பட்டுள்ளன. ஏனெனில் நாழிகைக் கணக்கில் (மணியாக மாற்றாமல்) நேரத்தை அறியக்கூடியவர்கள் 1 சதவீதம் பேர் கூட உலகில் இல்லை.
மற்ற பஞ்சாங்கங்களில் இன்றும் மணி – நிமிடமாக மாற்றாமல் நாழிகைகளிலேயே வழங்கப்பட்டு வந்தன. நமது பஞ்சாங்கம் வெளியான பிறகு தற்போது சில பஞ்சாங்கங்கள் நாழிகையுடன் மணி-நிமிடத்தையும் சேர்த்து வழங்குகின்றன. இன்னமும் பழைய பிரபலமான பஞ்சாங்கம் ஒன்று நாழிகைகளில்தான் வெளியாகிறது. மணி நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ள பஞ்சாங்களில்கூட இரவு பகல் வேறுபாட்டை அறிய சரியான வழிமுறை பின்பற்றப்படாததால் குழப்பம் நிலவுகிறது. காலை – மாலை – விடிகாலை – இரவு என்கிற பதங்களைக்கொண்டு வேறுபடுத்துகிறார்கள். இவற்றை கம்ப்யூட்டர் தானாக (ஆட்டோமேடிக்காக) குறிப்பிட வழியில்லை. வேலைஆட்களைக்கொண்டு குறிக்கச்சொல்லும்போது மிகுந்த பிழை உள்ளதை அறிகிறேன். ஆனால் நமது பஞ்சாங்கத்தில் ஆட்டோமேடிக்காக எழுதுவதற்காகவும், கால-மால – இரவு – விடிகாலை என்கிற குறிச்சொல் தேவையின்றி, 24 மணிநேர கடிகார முறையைப் பயன்படுத்துவதுடன், இரவு 12 மணியை 24 மணி என்றும், பின்னிரவில் வரும் நேரங்கள் என்பதை சுலபமாக அறிய இரவு 12 மணிக்குப் பிறகு, காலை 6 மணிக்கு முன்பாக உள்ள நேரங்களை முறையே, 25, 26, 27, 28, 29 என்ற எண்களால் ஆட்டோமேடிக்காகக் குறிப்பிடச் செய்கிறோம். இதில் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லை.
மேலும், மற்ற பஞ்சாங்கங்களில் காலை 6.15 மணிக்கு முடியும் திதி அல்லது நக்ஷத்திரத்தின் பெயரைக் கொடுத்து நேரம் கொடுத்து அடுத்த வரியில் (இடையில்) அடுத்த திதி அல்லது நக்ஷத்திரத்தின் பெயர் மற்றும் நேரம் வழங்கியிருப்பார்கள். இது மிகச் சரியானதுதான், ஆனால், நடைமுறையில் இதைப் பயன்படுத்தும் சாதாரண மனிதர்கள் குறிப்பிட்ட தேதிக்கு நேராக உள்ள திதி அல்லது நக்ஷத்திரத்தை மட்டுமே கவனித்துச் செயல்படுவார். இதைத் தவிர்க்க நமது பஞ்சாங்கத்தில்
அரை நாழிகைக்குக் குறைவாக உள்ள திதி அல்லது நக்ஷத்திரத்தின் நேரம் அடுத்து வருவதுடன் கூட்டப்பட்டு குறிப்பிடப்படும். இதனால் அரை நாழிகை பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதே என சிலர் எண்ணலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, ஏனெனில் முஹூர்த்தங்கள், அமாவாசை போன்ற தர்பண காலங்களில் மட்டுமே மேற்படி சரியான திதி, நக்ஷத்திர விஷயங்கள் தேவைப்படுவதால், முஹூர்த்தங்கள், சங்கல்பங்களில் மிகத் துல்லியமாக நேரம் கண்கிடப்பட்டு, வேறுபடும்
நேரங்கள் தேவையான இடங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. - நமது பஞ்சாங்கத்தில் முஹூர்தங்கள் உட்பட ஒரு மாதத்திற்கான அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் (வெவ்வேறு பக்கங்களில் தேடச் சொல்லாமல்) வழங்கப்பட்டுள்ளன.
- எந்தப் பஞ்சாங்கமும் இன்னமும் நடைமுறைப்படுத்தாத ஒரு சிறப்பம்சம் – க்ருஷ்ண பக்ஷம் – சுக்ல பக்ஷத்தை சுலபமாக அறிய கருப்பு – வெள்ளை வண்ண வேறுபாடு செய்து காட்டப்பட்டுள்ளது. திதிக்கு அருகிலேயே ச்ராத்த திதியைக் கொடுத்துள்ளபடியால் ச்ராத்த திதியைத் தவறாக குறிக்க வாய்ப்பில்லை.
- முஹூர்த்த தேதிகள் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
- மாதப் பிறப்பு, அமாவாசை போன்ற புண்ணிய காலங்களுக்கு மிக அருகாமையிலோ, ஏகாதசி போன்ற வ்ரத தினங்களிலோ நமது பஞ்சாங்கத்தில் முஹூர்த்தங்கள் வழங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், மிக முக்கியமான துருவம் உள்ளிட்ட பஞ்சக விதிகள், சிறந்த நக்ஷத்திர, சிறந்த லக்ன விதிகள், ஸ்தான சுத்த விதிகள் சரியாக அநுசரிக்கப்பட்டு முஹூர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- முக்கியமான விசேஷ தினங்களுக்கான படங்கள் சேர்கப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது. மற்ற முக்கிய நிகழ்ச்சிகள் கவனத்தை ஈர்க்கும் வகைியல் பெரிய எழுத்தில் வழங்கப்பட்டுள்ளன.
- மிக மிக முக்கியமாக, மிகச் சுலபமாக தேவையானவர்களின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தமான சிறந்த முஹூர்தங்களை உபயோகிப்பாளரே தேர்ந்தெடுத்துக்கொள்ளத்தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி:- மற்ற பஞ்சாங்களில் வழங்கப்பட்ட அவசியம் தேவைப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் நம் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளனவா?
பதில்:- அநேகமாக அவசியம் தேவையான அனைத்துத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இடப் பற்றாக்குறை காரணமாக, கரணத்திற்கான நேரம் மட்டும் வழங்க இயலவில்லை. ஆனால் நடைமுறையில் கரணத்திற்கான பயன்பாடு எதுவும் இல்லை.
ஏனெனில் ப்ரயோகங்களில் “சுப யோக சுப கரண” என்றுதான் குறிப்பிடுகிறோம். (அடியேன் மட்டும் யோக – கரணங்களின் பெயர்களை குறிப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளேன்.)
ஆங்கில வெளியீட்டில் கரணத்திற்கான நேரத்தையும் சேர்த்து வெளியிட உத்தேசித்துள்ளோம்.
மேலும் சில பொதுவான சிறப்பம்சங்கள் :
ஆங்காங்கே இடம் உள்ள இடங்களில் எல்லாம் ஆஸ்திகர்களுக்குத் தேவையான மிக முக்கிய தகவல்களான:
1. ஜன்ம – அநுஜன்ம – த்ரிஜன்ம நக்ஷத்திரங்களில் செய்யத் தகுந்தவை தகாதவை பற்றிய தகவல்கள்.
2. குளிகை காலத்தில் செய்யத் தக்கவை – தகாதவை
3. நாழிகை – மணி – மணி -நாழிகை மாற்ற எளிய கணக்கு
3. மரணத்தில் தீட்டு விஷயம் (யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு)
4. அதுபோல் ஜனனத்தில் யார் யாருக்கு எவ்வளவு நாள் தீட்டு
5. தீட்டு, தோஷம் போக – பஞ்சகவ்ய ஸம்மேளனம் செய்யும் முறை மந்திரத்துடன்.
6. தனிஷ்டா பஞ்சமி, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் விபரங்கள்.
7. அக்னி நக்ஷத்திர காலங்களில் செய்யத் தகுந்தவை, தகாதவை.
8. ஒரு வருடம் முழுமைக்கும் அமாவாசை, மாதப் பிறப்பு, மஹாளய தர்பண சங்கல்பங்களில் மாற்றிக்கொள்ளவேண்டிய தகவல்கள்
– கையடக்கமாக ஒரே பக்கத்தில் (இதை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து லேமினேட் செய்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்கும் உபயோகமாக இருக்கும்).
9. யஜூர் உபாகர்மா மந்த்ரங்கள் அந்தந்த வருடத்திற்குறிய மாற்றங்களுடன், சங்கல்பம் மற்றும் காண்டருஷி தர்பண மந்த்ரங்கள்.
10. காயத்ரி ஜப சங்கல்பம்.
11. நடப்பு வருடத்திற்குறிய முஹூர்த்தங்கள் அந்தந்த மாதத்திற்கான பக்கங்களிலேயே வழங்கப்பட்டிருப்பதுடன்,
அடுத்த ஒரு வருடத்திற்கான முஹூர்த்தங்கள் 19ம் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும். (இந்தத் தகவலை வழங்கும் ஒரு சில பஞ்சாங்கங்கள் கூட கார்த்திகை (டிசம்பர்) மாதம் வரைதான் முஹூர்தங்களை வழங்குகின்றன. ஆனால் நாம் அடுத்த பங்குனிவரை முஹூர்த்தங்களை வழங்குவதுடன். அடுத்த வருட 12 மாதங்களுக்கான க்ரஹ நிலைக் கட்டங்களையும் க்ரஹபாத சாரத்துடன் வழங்குகிறோம் என்பது மிக மிக குறிப்பிடத்தக்கதாகும்.
12. நமது சொந்தக் கண்டுபிடிப்பான ச்ராத்த திதி அட்டவணை, இதுவரை வேறு எந்த பஞ்சாங்கத்திலும் காண இயலாது. ச்ராத்த திதியை கண்டுபிடிப்பதில் பெரும்பான்மை ஆஸ்திகர்களுக்கும் மிக சிரமம் உள்ளது. எனவே சுக்ல – க்ருஷ்ண – ப்ரதமை முதல் பௌர்ணமி – அமாவாசை வரை இடது பக்கம் மேலிருந்து கீழாகவும், சித்திரை முதல் பங்குனி வரை மேலே இடமிருந்து வலமாகவும் குறிப்பிட்டு, அந்தந்த திதி அந்தந்த மாதத்தைச் சந்திக்கும் இடத்தில் ச்ராத்திற்கான சரியான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் இதனால் சுலபமாக ச்ராத்த திதியைக் கண்டறியலாம். சில சமயம் ஒரு ச்ராத்தத்தின் திதி அந்த மாதத்தில் இடம்பெறாமல் முன் மாதம் அல்லது அடுத்த மாதத்தில்கூட பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், சில சமயம் மாதத்தின் ஆரம்பத்திலும், மாதத்தின் கடைசியிலும் இரு முறை ச்ராத்த திதி குறிப்பிடப்பட்டு உள்ளே உள்ள விபர பகுதியில் இது அடுத்த மாதத்திற்குறியது என்று குறிப்பிட்டிருப்பார்கள், அதை கவனிக்கத் தவறினால் குழப்பமே மிஞ்சும்.
மேலும் தாயார், தகப்பனார் மாஸ்யங்களைச் செய்யும் கர்த்தாக்களுக்கும், வாத்யார்களுக்கும் இது மிக மிக உதவிகரமாக அமையும். ஏனெனில் ஒருவர் க்ருஷ்ண அஷ்டமியில் பரமபதித்தால் அவருக்கான ஒரு வருடத்திற்கான திதிக்குறிய தேதிகளை ஒரு வரியில் உள்ளதால் சில நொடிகளில் குறித்துக்கொள்ளலாம்.
அப்பாவின் பெரியப்பா மனைவி இறந்தற்கு அப்பா கொல்லி வைத்தார் இறந்து 7 மாதம் ஆகிறது நான் ஐயப்பன் சபரிமலைக்கு மாலை போடலமா
அப்பாவின் பெரியப்பா மனைவி என்றால் 3 தலைமுறை ஆகிறது.
அதனால் தாஙகள் தாராளமாக மாலை போடலாம்.
மேலும் கொள்ளி வைத்த அல்லது கர்மா செய்யக்கூடிய கர்த்தாவுக்கு மட்டும்தான் ஒரு வருட நிர்பந்தங்களே தவிர அவர்களுடைய பிள்ளைகளுக்கு அந்த நிபந்தனைகள் பொருந்தாது.
வேறு பக்கத்தில் கேட்கப்பட்டுள்ளதால் கால தாமதமாக பதில் தநதமைக்கு மன்னிக்கவும்.