ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் – எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மற்ற காம்யமான ஜபங்கள் கிடையாது.
தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் “வைத்யநாத தீக்ஷிதீயம் ஆசெளச காண்டம்” ஆகும். [/accordion] [accordion title=”தீட்டு என்றால் என்ன?”] இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப் படுகிறது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும் விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.
உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி, கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர் இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். காரில் செல்பவன் தனக்குள்ள பாதையை விடுத்து மற்ற பாதையில் சென்று கொண்டு நான் நடந்து செல்லவில்லையாதலால் எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.
அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும். [/accordion]
[accordion title=”தீட்டில் நியமங்கள்”]
தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.
ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.[/accordion] [accordion title=”மற்ற சில கவனிக்கத் தக்கவை”] ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு[/accordion] [accordion title=”தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?”] பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.
பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.
பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.
ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.
மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்
மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.
பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.
பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.
அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.
பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.
பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.
மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.
6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.
அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.
மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.[/accordion]
[accordion title=”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?”]
சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :
தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்
முகம், கழுத்து
இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.
கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.
கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.
இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.
மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.
இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.
தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.[/accordion] [accordion title=”ஜனனத்தால் (பிறப்பால்) ஏற்படும் தீட்டுகள்”] கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.[/accordion]
[accordion title=”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்”]
ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.
இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு —
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.
பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு: உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்
உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)
உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை
இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்) தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா
தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா
தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)
தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)
மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்
தந்தையின் தந்தை – பிதாமஹன்
தந்தையின் தாய் – பிதாமஹி
தாயின் தந்தை – மாதாமஹன்
தாயின் தாய் – மாதாமஹி
உடன் பிறந்த ஸஹோதரி
ஸஹோதரியின் பெண்கள்
மருமாள் (ஸஹோதரனின் பெண்)
கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்
ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)
ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்
ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்
ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்
ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண்[/accordion]
[accordion title=”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்”]
மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.
[tabs title=”” disabled=”false” collapsible=”true” active=”0″ event=”click”]
[tab title=”10 நாள்”]
10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
இறந்தவர் (குழந்தை)யின் தந்தை
தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்
மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.[/tab] [tab title=”3 நாள்”] 3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு. தாயின் தந்தை (மாதாமஹர்)
தாயின் தாய் (மாதாமஹி)
தாயின் ஸஹோதரன் (மாதுலன்)
மாமன் மனைவி (மாதுலானி)
மாமனார்
மாமியார்
தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)
தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)
ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்
உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)
ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)
கல்யாணமான பெண்
கல்யாணமான ஸஹோதரி
ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)
ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)
ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)
7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.
2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.
7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.[/tab]
[tab title=”90 நாழி”]
பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்). அத்தையின் பிள்ளை அல்லது பெண்
மாமனின் பிள்ளை அல்லது பெண்
தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்
தன்னுடைய ஸஹோதரியின் பெண்
தன் ஸஹோதரனின் மணமான பெண்
சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்
தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)
பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)
உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)
உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்) [/tab] [tab title=”1 நாள்”] கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்). ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி
ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.
ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை
ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா
கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.
ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்
ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.
குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால்.[/tab][/tabs][/accordion] [/accordions]
மச்சினருக்கு தீட்டு விவரம் தெரிவிக்கவும்
மச்சினருக்கு – 1 நாள் தீட்டு
——————————-
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் – எதோ கோளாறினால் உள் நுழைய இயலவில்லை.
(இளைய/மூத்த) சகோதரியின் மகன் மரணமுற்றால் எத்தனை நாள் தீட்டு என்ற விபரம் இதில் இல்லை தயவு கூர்ந்து விளக்கம் அளிக்கவும்.
1 நாள் மட்டும்.
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
எனக்கு பெண் குழந்தை 10/5/24 பிறந்தது. நான் அவசரமாக முதல் குழந்தையின் படிப்பிற்காக புது வீடு பால் காய்ச்சி குடிபோக வேண்டும் 10/6/24 பள்ளி தொடங்க உள்ளது. நாங்கள் பால் காய்ச்சி குடிபோகலாமா
மிகவும் அருமையான பதிவு நன்றி.
வளர்ந்து வரும் இளைய சமுதாயம் இது போன்ற பாரம்பரிய சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிக்க வழிகாட்டிகளாகிய தங்களுக்கு வணக்கங்களுடன் வந்தனம்..
அசோக்குமார்.மதுரை
nambiae
..
chandrayan poyachu… ava ava solluva . .. nee kelu
ilaya samuthayadhuku athiga kadai ulladhu
besha irunkoo..
EXCELLENT INFORMATION.
SIR,
I have one doubt .
My father expired 1987 and mother expired 2017. My CHITHAPPA (fathers BROTHER expired 2018 in USA) for all the above i have done kuzhi tharpanam, and never gone to any temple for one year.
Now 7 days back my grandma(97th year) (My grand fathers elder brothers wife) expired. in namakkal. As I was recommended to do kuzhi tharpanam, can i do.
My question is whether varusha theetu, will exist for my family? can i draw kolam after 13 th day
Expecting your guidance,
கணவரின் அத்தை (அப்பாவின் சகோதரி) இறந்தால் எத்தனை நாள் தீட்டு
13ம் நாள் சுபஸ்வீகாரமன்று அமாவாசை வந்தால் சுபஸ்வீகாரம் அமாவாசை யன்று செய்யலாமா
அமாவாசை தர்பணம அன்றுதான் செய்யவேண்டும்.
சுப ஸ்வீகாரம் அன்றே செய்யலாம் அல்லது வேறு நாளிலும் செய்யலாம்.
————————————–
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
1. ஐயா என்னுடைய பெரியப்பா (என் தந்தை சகோதரன்) இறந்து 1 மாதம் ஆகிறது. நாங்கள் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா?
2. பிரிதியங்கர தேவி கோவிலில் மிளகாய் ஹோமம் செய்யலாமா?
3. கடந்த 3 வருடங்களாக குலதெய்வம் கோவில் போகமுடியவில்லை. வருடாவருடம் ஒருவர் இறந்துவிடுகின்றனர்.
பொதுவாக ஒரு வருடம் எதுவும் செய்வதில்லை என்பது ஒரு மரபுதான்.
அதுவுமே ஒரு காலத்தில் பங்காளிகள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில்
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது மற்றவர் கேளிக்கையில் ஈடுபடக்கூடாது என்கிற ஒரு மனிதநேயம்தானே தவிர
இது சாஸ்த்ர விஷயமல்ல.
——————————-
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Plese print the details in tabular form with examples so that even an individual studied/ not studied can under stand these ?
Thank you Sir for your feedback
I don’t know how to make it as table in wordpress sir.
But it is available as table in other sites
http://vaideekam.ahobilam.com/marana-theetu
I request viewers to join our user forum to get the reply immediately:
at: http://www.brahminsnet.com/forums/
அத்தை இரசந்தால் 3 நாள் தீட்டு. அத்தை மகன் இறந்தால் ?
Namaskarams Mama
My Father’s Mother’s sister’s daughter passed away.
Asosham how many days?
For My mother and For Me
ஒருவருக்கு அதி காலை 05-00 மணிக்கு ப்ராண வ்யோஹம் ( மரணம்) ஏற்படுகின்றது. அன்று ஸூர்யோதயம் 06-15 க்கு ஏற்படுகின்றது. மரணம் முதல் நாள் என்பது அன்றிலிருந்து கணக்காகிறதா? அல்லது முதல் நாளிலிருந்தா?
2) மேலே பைஷ்டையை பற்றிய குறிப்பில் 270 நிமிடங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அது 270 விநாடிகள் என்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஒரு வருக்கு மரணம் நள்ளிரவு 2.45 மணிக்கு (சுமாராக) முன்னதாக ஏற்பட்டால் முதல் நாளும், அதற்கு மேல் என்றால் மறுநாளும் இறந்ததாகக் கணக்கு.
அவர் இறந்த கணக்கு எப்போதோ அப்போதிலிருந்தே தீட்டும் துவங்கிவிடும்.
————————————–
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
ஒருவருக்கு அதி காலை 05-00 மணிக்கு ப்ராண வ்யோஹம் ( மரணம்) ஏற்படுகின்றது. அன்று ஸூர்யோதயம் 06-15 க்கு ஏற்படுகின்றது. மரணம் முதல் நாள் என்பது அன்றிலிருந்து கணக்காகிறதா? அல்லது முதல் நாளிலிருந்தா?
2) மேலே பைஷ்டையை பற்றிய குறிப்பில் 270 நிமிடங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அது 270 விநாடிகள் என்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
3).ஜனன மரண வீட்டிலும் ஏகாதசி த்வாதசி வ்ரதங்கள் அனுஷ்டிக்க வேணுமாம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த விதி கர்த்தாக்களுக்கு பொருந்தாது என நினைக்கிறென். ஏனெனில் அவர்கள் நித்ய விதியில் ஏகோத்ர வ்ருத்தி நல் ச்ரார்த்தங்கள் பண்ணுவதாலும் பருப்பு பாயஸத்துடன் அன்ன போஜனம்தானே செய்ய வேண்டும்?
எந்த எந்த தீட்டுக்காரர்கள் ஒரு வருடத்திற்க்கு பண்டிகைகள் கொண்டாட கூடாது பற்றி விவரிக்கவும்.
தாய், தந்தைக்கு கர்மா செய்யும் பிள்ளைகள் அவருடன் வசிப்வர்கள் மட்டிலும் ஒரு வருடத்திற்கு பண்டிகையைத் தவிர்த்தால் போதுமானது.
மற்வர்கள் அபிமானத்தால் கொண்டாடாமல் இருப்பது அவர்கள் சுய விருப்பம். இது சாஸ்த்ர விஷயமல்ல ஒரு மரபுதான்.
————————————–
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
நான் மணமான பெண்.என் தந்தையின் அண்ணன் பையன் மரணித்தால் நான் கோத்ரம் மாறியதால் தீட்டு உண்டா.எத்தனை நாட்கள்.கோவிலுக்கு போகலாமா.என் மனைவிக்கு பதில் நான் எழுதுகிறேன்
மேலே குறிப்பிட்டுள்ள உறவுகள் தவிர மற்றவகை உறவுகளுக்கு மணமான பெண்களுக்குத் தீட்டு கிடையாது.
————————————–
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
ammavin sontha sithappa !!! theetu unda enaku
எனது அம்மாவின் பெரிய சகோதரியின் பெண்ணின் பெண் மரணம் அடைந்தா
எனக்கு எவ்வளவு நாள் தீட்டு
ஒன்றரை நாள் – மேலே பாரக்கவும்.
————————————–
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
Sir, Namaskaram. If Sister’s daughter dies, 1 1/2 days’ theettu is alright as mentioned by you earlier. However, for sister’s daughter’s daughter – no theettu, as I understand ( Sagothariyin Pennin Pen means sister’s daughter’s daughter is n’t it?) from your earlier write up. Please clarify.
Yes Sir,
There is only one day theetu mentioned for sister’s daughter and there will no theetu for sister’s daughter’s daughter.
மரண தீட்டுகள் யார்யாருக்கு எவ்வளவு. முழுவிவரம் பகிரவும்
என் அம்மாவின் தங்கையின் மரணத்தில் ஆறாவது பிள்ளையாகிற எனக்கு எத்தனை நாள் தீட்டு?
5 மாத குழந்தை இறந்தால் எத்தனை நாள் தீட்டு?
அத்தையின் பெண் இறந்தால் எத்தனை நாள் தீட்டு (ஆண் அல்லது பெண்)
I request viewers to join our user forum to get the reply immediately:
at: http://www.brahminsnet.com/forums/
வெளிநாட்டில் இருந்தாலும் தீட்டு இந்தியாவில் காக்கவேண்டும் அல்லவா?
உலகத்தில் எங்கிருந்தாலும் பங்காளிகளின் மரணச் செய்தி அறிந்தால் தீட்டுக் காக்கவேண்டும்.
ஆம் – உலகத்தில் எங்கிருந்தாலும் தீட்டுக் காக்கவேண்டும்.
————————————–
தாமதத்திற்கு மன்னிக்கவும் எதோ கோளாறினால் உள் நுழைந்து பதில் அளிக்க இயலவில்லை.
ஐயா வணக்கம்.
இன்று எனது தங்கை மாமியார் இருந்து விட்டார்
எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு..
சகோதரியின் மாமியார் இறந்தால் சகோதரிக்கு மட்டுமே 10 நாள் தீட்டு
தங்களக்கு ஏதும் தீட்டில்லை.
நமஸ்காரங்கள்
தாங்களது விளக்கங்களை அணுகுகிறேன்:
எனது தந்தை வழி சித்தப்பா மகன் இறந்தால் அனுஷ்டிக்க வேண்டிய கர்ம காரியங்களின் விதி முறைகள்விளக்கி கூறவும். இறந்தவரின் தாய் தந்தை ஜீவித்துள்ளனர். இறந்தவரின் பூணூல் போட்ட மகன் (கனடாவில் 10ம் வகுப்பு படிக்கிறான்) கர்ம காரியம் கோவிட் பிரச்னையால் செய்ய முடியாமல் புரோகிதரே சிங்கப்பூரில் 04-05-2020 அன்று பண்ணி வைத்தார். இறப்பு ஞாயிறு 3-05-2020 அன்று இரவு சிங்கப்பூரில் 9:30 நிகழ்ந்தது. இறந்தவர் எனது கோத்ர தாயாதி. நான் எனது தாய் தந்தைக்கு தர்ப்பணங்கள் கொடுத்து வருகிறேன். விதிப்படி நான் அனுஷ்டிக்க வேண்டிய விதிகளை விளக்கவும். ஒவ்வொருவரும் வேவ்வேறு இடத்தில் உள்ளனர். கோவிட்டால் பிரயாணம் இயலாது. மந்திரங்கள் தமிழில் அனுப்பித்தாலோ அல்லது ஒலி வடிவத்தில் அனுப்பித்தாலோ உபயோகமாயிருக்கும். உங்களது பாங்கு எண் ஐ எப்சி கோட் அனுப்பவும். சேவைகளுக்கு பணம் அனுப்புகிறேன். நன்றி நமஸ்காரங்கள். (வே. சந்திரசேகர் ஶ்ரீவஸ்த கோத்ரம், கோபி ஸ்மார்த்தா) vcaiyer@gmail.com
நமஸ்காரம்,
தாங்கள் எந்த ஊர் என்று குறிப்பிடவில்லை.
12ம் தேதியன்று தாங்கள் குழி தர்பணம் செய்யவேண்டும்.
அது தவிர தங்களுக்கு வேறு ஏதும் கடமைகள் இல்லை.
கர்த்தா செய்யவேண்டிய வழிமுழறகள் குறித்து கர்த்தா தான் உள்ள பகுதியில் உள்ள
வைதீகர்களை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி செயல்படவேண்டும்.
சூழ்நிலை தெரியாமல் இங்கிருந்து ஆலோசனை வழங்குவது சரியாய் இராது.
தாங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
ஐயங்கார் (ஐயரும் செய்யலாம்) குழிதர்பணம் செய்யும் வழிமுறை கீழுள்ள இணைப்பில்
உறுப்பினராகிப் பெறலாம்.
குழி தர்பணம் செய்யத் தேவையான மந்திரங்கள் : http://www.brahminsnet.com/forums/showthread.php/15615-Kuzhi-Tharpana-Mantras
இணையத்தில் அனைத்து ஸேவையும் இலவசமே,
புண்ணியத்தைவிட இதன்மூலம் செய்த பாபம் ஏதாகிலும் இருந்து விலகி ப்ராயச்சித்தமாக அமைந்தால் அதுவே பெரிய பாக்கியம் ஆகும்.
நன்றி
தாஸன்.
Sir,
An old lady who was having only two married daughters has expired. Her husband is no more. Her husband has been adopted by his meternal grand father and there is also no Dayadhis.
It was advised by brahaspathi that her son in law after authorisation by her daughter ( PUL VANGI) can perform the rites. Also it wasd advised that after immersion of ashes (Sanchayanam) , the last three days rites can be performed immediately next day onwards and need not wait for 11th DAY. Please ADVISE
Sri:
Sir,
It can not be decided with the given details,
Shastram is very sukshamam, should be decide the correct one by analyzing all the factors.
Please read the following article about Kartha who is having the rights in order.
After deciding the correct kartha, then only we can decide the procedure how he can do.
Here we can not discuss more, pleas register at our user forum https://www.brahminsnet.com/forums/
and discuss there.
———————
கர்த்தா க்ரமம்
————-
கர்த்தா என்கிற வார்த்தைக்கு அடியேனுடைய புரிதல் :
ஒரு காரியத்தைச் செய்யவேண்டிய கடமை உள்ளவன். அந்தக் காரியத்தைச் செய்யாவிடில் அவன் சாஸ்திர விதியை மீறிய தண்டனைக்குரிய குற்றவாளி.
கர்த்தா என்கிற வார்த்தைக்கு உலகோர் புரிதல் :
ஒரு கர்மாவைச் செய்வதற்கு உரிமை உள்ளவன். அந்த உரிமை அவனுக்கு மதிப்பையும், சில சமயம் பொருளையும், சில விஷயங்களில் உரிமையையும் பெற்றுத் தரும்.
கர்மா என்கிற வார்த்தைக்கு அடியேனுடைய புரிதல்:
ஒருவரிடமிருந்து தான் பெற்ற கடனை, கடனளித்தவருக்குத் தேவையோ, இல்லையோ, கடன் பெற்றவன் திருப்பித்தந்தே ஆகவேண்டும். அதுபோல்,
மனிதப்பிறவியை அடையக் காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் அவர்களின் பிறப்பிற்கும், வாழ்விற்கும் காரணமாக இருந்த ரத்த சம்பந்தம் உடைய உறவினர் அனைவருக்கும் ப்ரதிஉபகாரமாக, பதிலாகச் செய்யவேண்டிய கடமையே கர்மா ஆகும்.
கர்மா என்கிற வார்த்தைக்கு உலகோர் புரிதல்:
(உலகை) நீத்தார், நல்லகதி அடைய, நல்ல உணவுவகைகளை பெற்று பசியற்றவர்களாய் திகழ, பிள்ளைகளால் செய்யப்படும் உதவி.
பிள்ளைகள் கர்மாவைச் செய்யாமல் விட்டால் அவர்கள் சபிப்பார்கள், நல்லகதி அடையமாட்டார்கள்.
ஒரு கர்மாவைச் செய்ய கடமை உள்ளவர்கள் வரிசைக் க்ரமமாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தனக்கு மேலுள்ளவன், செய்யும் நிலையில் இல்லாதபோது, அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் அந்தக் கர்மாவை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முறையில் செய்தே ஆகவேண்டும். அப்படிச் செய்யாமல் போனால் சாஸ்திரப்படி அவர்களுக்கு பாபம் – தோஷம் உண்டு.
செய்யவேண்டியவனை விட்டு அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்வதனால் அவர்களுக்கு பாபம் ஏதும் இல்லை, சிறிதளவு புண்ணியம் உண்டு. ஆனால், வேறுயாராலாவது கர்மா செய்யப்பட்டுவிட்டாலும், செய்யவேண்டிய கடமை நிலையில் உள்ளவன் செய்யாமைக்கு அவனுக்கு அதற்குண்டான தோஷம் கட்டாயம் உண்டு.
ஔரஸ புத்ரன்(ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் விவாஹம் மூலம் முறைப்படி பிறந்தவன்).
பலர் இருந்தால் மூத்தவன்
இரட்டைப் பிள்ளைகளாய் இருந்தால் பிந்திப் பிறந்தவனே மூத்தவன்
பல மனைவிகள் இருந்து, எல்லோருக்கும் பிள்ளைகள் இருநதால், வயதில் பெரியவனே மூத்தவன்
ஸ்வீகாரம் செய்துகொண்டபின், ஔரஸன் பிறந்தாலும், ஔரஸனே கர்த்தா ஆவான்
ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து, மூத்தவளை வைத்துக்கொண்டு ஸ்வீகாரம் செய்துகொண்டபிறகு, இளையவளுக்குப் பிள்ளை பிற்நதால், தகப்பன் விஷயத்திலும், இளையவள் விஷயத்திலும், (இளையவளுக்குப் பிறந்த) ஔரஸனே கர்த்தா என்பதில் சந்தேகமேயில்லை. மூத்தாள் விஷயத்திலும் அவனேதான் கர்த்தா ஸ்வீகார புத்ரன் அல்ல.
பௌத்ரன் (பிள்ளையின் பிள்ளை)
பௌத்ரனின் பிள்ளைகள்
ஸ்வீகாரமாகக் கொடுக்கப்பட்ட பிள்ளை
ஸ்வீகாரம் சென்றவனின் பிள்ளைகள்
சொத்துக்கு உரியவனான பெண்வழிப் பேரன்
பெண்வழிப் பேரர்கள் யாராயினும்
பத்னி (மனைவி)
பலர் இருந்தால் மூத்தவள்
பிரியாமல் ஒன்றாக வாழும் குடும்பமானால் ஸஹோதரன்
ஸ்த்ரீகள் (அம்மா) விஷயத்தில் அவரவர் வயிற்றில் பிறந்த பிள்ளை, ஸந்ததி இல்லாவிடில் ஸபத்னி (மற்றொரு மனைவியின்) புத்ரன்.
(மனைவிக்கு) கணவன் (பர்த்தா)
துஹிதா -(புத்ரி – மகள்)
ப்ராதா – ஸஹோதரன்(ஸ்த்ரீகள் விஷயத்தில் பர்த்தாவுடைய(கணவருடைய) என்று சேர்த்துக்கொள்வேண்டும்)
ஸஹோதரன் பிள்ளைகள்
அஸோதர ப்ராதா (அப்பாவழி பெரிய-சித்தப்பா பிள்ளைகள்)
மேற்படி அஸோதரர்களின் பிள்ளைகள்
பிதா – அப்பா (மேற்கண்ட 15பேர் இல்லாதபோதுதான் அப்பாவிற்கு கடமை வருவதை கவனிக்கவும்)
மாதா – அம்மா
ஸ்நுஷா – மருமகள்
பௌத்ரீ – பிள்ளையின் பெண்
தௌஹித்ரீ – பெண்ணின் பெண்
பௌத்ரஸ்ய பத்னி (பிள்ளைவழி பேரனின் மனைவி)
தத்புத்ரி – பிள்ளைவழிப்பேரனின் பெண்
தத்தனுடைய பத்னி (ஸ்வீகாரம் போனவன் மனைவி)
பகிநி (ஸஹோதரி)
பாகிநேய: (மருமான்)
ஸபிண்ட: (ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி)
ஸமாநோதக: (தாய் வழியில் 3 நாள் தீட்டுள்ளவர்கள்)(ஒவ்வொருவரும் தாய்வழியில் தாயின் தந்தை – தாத்தா – கொள்ளுத் தாத்தா என மூன்று தலைமுறைக்கு தர்பணம் செய்வார். அந்த வம்சம் ஸமாநோதகர்கள் எனப்படும்)
மாத்ரு ஸபிண்ட: (அடுத்து தாய்வழியில் 7 தலைமுறைக்கு உட்பட்டவர்கள்)
மேற்படி 7 தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஸமாநோதகர்கள்
ஜாமாதா (மாப்பிள்ளை)(மேற்சொன்ன 29 விதமான சொந்தங்கள் இல்லாதவருக்கே மாப்பிள்ளை கர்மா செய்ய கடமை உள்ளவர் ஆவார். ஆனால் இக்காலத்தில் மேற்சொன்ன அனைவரையும் விடுத்து மாப்பிள்ளையைக் கொண்டு கர்மா செய்வது அதிகரித்து வருகிறது. அது சாஸ்திர ஸம்மதம் ஆகாது.)
ஸகா (தோழன்)
தனஹாரீ (சொத்தை அடைபவன்)
ஐயா பிறரின் துக்கத்திற்கு சென்றுவந்து விட்டு வீட்டில் குளித்துவிட்டு வீட்டில் சாமி கும்பிடலாமா
தாராளமாகச் செய்யலாம் ஐயா.
குளிப்பது தூய்மைக்காகத்தான்,
துக்கம் நிகழ்ந்த இடத்தில் நோய் தொற்றுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கலாம்
அதனாலேயே துக்கத்திற்குச் சென்று வ்நதபின் குளித்து நன்கு தூய்மை செய்துகொள்வது
அவசியமாகிறது. மற்றபடி மரணம் கடவுளுக்கு எதிரானதல்ல,
மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர உயிருக்கு அல்ல.
நன்றி!
Namaskarams One of this our dhayadhi’s passed away last week. 10 days getting over this Sunday. When can we start Nithya pujai? Can we put kolam in vasal ? If so from when shall we put vasal kolam and when can we start going to temples? Kindly guide. Thank you
Dear Sir,
My Father elder brother’s second wife son (Periyappa son- Anna) died recently. but I can’t able to go on death due to Covid-19. Also I can’t attend kariyam, what can I do for that kariyam? sorry to say that today is kariyam, just now I caught you link. By forgotten In between 16 days I had eaten a nonveg outside not in my home, Pls help me to do further activity…
சகோதரியின் கணவர் இறந்தால் தீட்டு உண்டா இல்லையா அல்லது ஸ்நானம் மட்டும்தானா.
எனது தங்கை இறந்துவிட்டாள். எனக்கும் என் கலயாணமான பெண்ணிற்கும், கல்யாணமான பிள்ளைக்கும் எத்தனை நாள் தீட்டு. விளக்கு எப்போது ஏற்றலாம்.
அப்பாவின் அக்கா இறந்தால் வருட பண்டிகை செய்யலாமா?
Dear Sir,
I’m Satish Narasimhan – Vadakalai Iyengar
Enn Thata ven Annan Makan archarian thiruvadi Aadaithar.
Ennaku 10 Nal theetu vundu,
Kuzhi Tarpanam vunda,
10 nal kazhithu Malaiku sellama, Pandikai Vunda & Kulatheyvam Kovilluku sellama.
Nandri
Respected sir
Today my elder brother grand daughter (son child)(premature) only 57 days old expired
Kindly advise for how many days theetu for me I am bramachary 62 years old
நமஸ்காரம்,
எனக்கு மூன்று நாட்கள் மரண தீட்டு இருந்தது. அது ஆடி வெள்ளி அன்று முடிந்தது, தீட்டு போகும் அன்று பூணூல் மாற்ற வேண்டுமா?
எனக்கு இப்போது பிறப்பு தீட்டு உள்ளது.
நான் அம்பாள் விக்ரகம் வைத்துள்ளேன்.
அதற்கு நைவேத்தியம் இல்லாமல் வைக்கலாமா 10 நாள்.
முரளி
தூரத்து சொந்தம் இறந்தால், வேறு ஊரில் இருக்கும் நான், அன்று குளித்தபின்பு ஸ்வாமிக்கு நித்ய பூஜை செய்யலாமா?
ஒன்பதாம் மாதம் வயிற்றில் குழந்தை இறந்து போனால் தீட்டு உள்ளதா திதி தர வேண்டுமா
ஒன்பது மாதக் கருவில் குழந்தை இறந்தால்
புண்ணியதானம் திதி தீட்டு உள்ளதா
எனது பெரியப்பாவின் மருமகள் இறந்து விட்டால் அதாவது எனது பெரியப்பா பெரியம்மா உயிரோடு இருக்கிரர்கள்
பெரியப்பாவின் மகண் இருக்கிறார்
பங்காளி ஆகிய எனக்கு பிரம்மச்சாரி கு குழி தர்ப்பணம் உண்டா
என் அக்காவின் கணவர் இறந்து விட்டார் அதற்கு எத்தனை நாள் தீட்டு. அவர் இறந்ததில் இருந்து நான்காம் நாள் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யலாமா ஐயா?
என் பெரிய மாமனார் இறந்து ஒரு வருடம் ஆகவில்லை. அதற்குள் அவருடைய திருமணம் ஆகாத அக்கா இறந்து விட்டார். அதே சமயம் அவர்கள் இறந்து இரண்டாம் நாள் என் பெரிய மாமனார் மகன் இறந்து விட்டார். ஒரு வருடத்திற்குள் 3 மரணம். தீட்டு எப்படி கடைப்பிடிப்பது
ஐயா வணக்கம் என் அப்பாவிற்கு
பெரியப்பா மனைவி இறந்தே விட்டார். 6 மாதங்களுக்கு வீடு மூடல் உள்ளது, நான் புதிய வீடுவாங்கலாமா.
Iyya
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு:
Male baby means what about Theettu?
நமஸ்காரம்
என்னுடைய தகப்பனாரின் தம்பி பையன்( எனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா) காலமாகி விட்டார். குழிதற்பணம் பண்ணி விட்டோம். தீட்டு ஒரு வடுடம் காக்க வேண்டுமா. தயவு செய்து பதில் அளிக்கவும்
Respected Sir,
I’m GopalaKrishnan. My Fathers’ brother’s daughter in law expired yesterday. How many days we need to keep ‘Theetu’? Pls reply immediately.
En appa feb 2020 irranthar atharakaaga oru varudam theetu anushti kondo irrukum podhu en annan iranthu vittar ippoludhu atharkaaga innum oru varaudam poojai seivathai thavirka venduma illayel appa vin theetu mudiyum varai irrunthal pothuma. Expecting ur answer
My father expired in Feb 2020. My brother expired a few days back in the same year. currently, we are not doing pooja for one year because of father’s death. Because of brother’s death gain we should not do pooja for one year or will it be over with father’s thala devasam? can you pls reply as soon as possible. thanks
Namaste, my Athai’s grand son expired. Do we have to observe theetu..for how many days. Pls let me know, thank you,
வணக்கம்
நான், ஆண் வாரிசு இல்லாத மூத்த சகோதரிக்கு, இறந்தவுடன் கொள்ளிவைத்து காரியங்கள் செய்தால், நான் கடைபிடிக்க வேண்டிய தீட்டு, கர்மாக்கள் என்ன? நான் கர்த்தாவா? ஓராண்டு கடைபிடிக்க வேண்டுமா?
குமார் ராஜா
தெலுங்கு பிராமணன்
My mother in law expired. Unable to visit there because of corona. How many days theetu for my wife? When should we take bath? Some people say the bath and cooking should happen only after the cremation is done. None of us could go.
My mother in law passed away. My wife and me could not travel due to corona. When should we cook. When should we take bath. The last rites are supposed to happen in the evening today.
எனக்குப் பேரன் பிறந்து 20 நாட்களாயிற்று. எனது தந்தையின் சிரார்த்தம் நாளையுள்ளது. நாளை சிரார்த்தம் தரலாமா?
ஏனென்றால், எனது உறவினர் ஒருவர், பேரன் பிறந்து ஒரு மாதம் ஆகி தீட்டுக்கழிந்த பின்னர் தான் சிரார்த்தம் தரவேண்டு கூறினார்.
பங்காளி தீட்டு பத்து நாட்களுள் அமாவாசை வந்தால் தர்ப்பணம் செய்யலாமா
என் அத்தை (அப்பா தங்கை)husband இறப்பு எங்களுக்கு தீட்டா.
வீட்டில் அம்மா அல்லது அப்பா இறந்தால் குலதெய்வம் கோவிலுக்கு எத்தனை நாட்கள் கழித்து செல்லவேண்டும்?
ஒரு வருடம் செல்ல கூடாதுனு சொல்றாங்க, அது உண்மையா?
ஐயா பங்காளி ஒருவர் இறந்தால் மலை கோவில் மற்றும் குலதெய்வ வழிபாடு எப்போது செய்யலாம்
என் சித்தப்பா-வின் மகன், மகள் பெற்று எடுத்துள்ளார். எனக்கு எத்தனை நாள் தீட்டு என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
நமஸ்காரம். என் தந்தை வழி சித்தப்பாவின் பெண் வயிற்று பேத்தி, கல்யாணம் ஆனவள், இறந்தால் எனக்கு தீட்டு உண்டா?
Namaskaram,
My fathers brother’s son expired. Can you help me to understand the following:
– How many days theetu for me ? (I think 10 days, please correct me if I am wrong)
– Is there any theetu for my daughters (15 and 10 Years) ?
my fathers brother’s son expired in canada on 28th Nov 2023. how many
days teetu for me. Is there any theetu for my son daughter-in-law.
ஐயா, என்னுடைய பெரியப்பா (என் தந்தை சகோதரன்) நேற்று (25.102020) இறந்து விட்டார். நான் 27.11.2020 கிரஹப்பிரவேசம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளேன்.
1. கிரஹப்பிரவேசம் செய்யாலாமா?
2. ஆம் எனில், கணபதி ஹோமம் முதலிய பிற ஹோமங்களை கிரஹப்பிரவேசம் அன்று செய்யாலாமா?
3.என் தந்தையருக்கு தீட்டு உள்ளதா அவர் என் வீட்டு ஹோமத்தில் பங்கேருக்கலாமா?
தாங்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை தந்து உதவ வேண்டும்.
நன்றி!
ஐயா ,
எனது தந்தையின் சகோதரர் (அண்ணன்) 25.10.2020 அன்று இறந்து விட்டார். அவர் உயிர் எப்போது பிரிந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. எப்போதும் காலை 5:00 மணிக்கு எழும் அவர் எழவில்லை அப்போது தான் அவர் இறந்தது தெரிய வந்தது.
சிலர் திருவோணம் நட்சத்திரத்தில் இறந்திருக்கலாம் என்கிறார்கள். சிலர் அவிட்டம் நட்சத்திரத்தில் இறந்திருக்கலாம் ஆகையால் ஆறு மாதம் அடைப்பு இருக்கிறது என்கிறார்கள்.
எனது உடன்பிறந்த அண்ணன் அடுத்த மாதம் 27.11.2020 அன்று கிருஹப்ரவேசம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளார். குலதெய்வ வழிபாடு, நெருங்கிய உறவினருக்கு பத்திரிக்கை வைப்பது முதலியவற்றை செய்துள்ளார். துக்க வீட்டிற்கு அவர் வந்திருந்தாலும் அவர் எந்த சம்பிரதாயங்களையும் செய்யவில்லை. எனது தந்தை, நான் மற்றும் எனது சித்தப்பா மகன் (தம்பி முறை) செய்தோம்.
1. எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு வரும்?
2. ஏதாவது பரிகார பூஜைகள் செய்ய வேண்டுமா?
3. எனது அண்ணன் 27.11.2020 அன்று கிருஹப்ரவேசம் செய்யலாமா அவ்வாறு செய்யும்போது ஹோமம் முதலிய பூஜைகளை செய்யலாமா
4. பெரியப்பா வீட்டில் இருப்பவர்கள் எனது அண்ணனை கிருஹப்ரவேசம் தள்ளி போட வேண்டாம், 27.11.2020 அன்று கிருஹப்ரவேசம் செய்யுங்கள் என்கிறார்கள்
தங்களின் மேலான ஆலோசனைகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி ஐயா!
அப்பாவின் மூத்த தாரத்தின் மைந்தன் 2 ஆம் மனைவி அதுவும் வேறு ஜாதி (கேரளா நாயர்) தவறியதில் என்ன தீட்டு ???
கர்ப்பத்தில் சிசு 5 மாதம் மேல் இறந்து பிறந்தால் பெற்றவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு உண்டு.
பத்து ஏகோஷ்டம் முதலியவை உண்டா
கர்ப்பத்தில் சிசு 5 மாதம் மேல் இறந்து பிறந்தால் பெற்றவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு உண்டு.
பத்து ஏகோஷ்டம் முதலியவை உண்டா
தாய் மாமாவின் மனைவி (மாமி) இறந்தால்; தாய்க்கு 1.1/2 நாள் தீண்டல் (சகோதரனின் மனைவி ) மற்றும் பிள்ளைகளுக்கு (தாயின்) எத்தனை நாள் என்று கொஞ்சம் சொல்லவும்
Thangaiyin kanavar iranthal, entha entha kariyangal annan agiya nan seiya kudathu. Oru varuda theetu kanaku enakum porunthum ah? Sabarai malai ku malaigal podalama? Thangai ipoluthu engaludan tan irukirar. Athanal veetil anaivarum theetu kaaka vendum ah?
vitil thanthai irunthuvittar….
1 year agula…
entha kovil pogakudathu….
entha kovil pogalam….
Ramesvarum…
thiruchenthur pogalama
Sir
My father passed away on August 31st 2020.
As a daughter what I have to do
When will I go to temple
Enaku ethanai nazh theetu
Nan koviluku ponal appa athma melulagam poha siramapaduma
Pls reply soon Sir.
My fathers Chitthappa daughter expired today… Do i have தீட்டு?
Iya,vanakkam,marana veetil thanneer kudithal veetil vilakku podalama?eththanai NAL theetu.
என் தாய் மறைவிற்கு முன் என்னுடைய புதிய வீடு கிரகபிரவேசம் தேதி முடிவுசெய்து ஐயர் கும் பேசியாச்சி தீடிர் னு என் அம்மா காலமாகிவிட்டார்.நான் எப்போதும் கிரகப்ப்ரவேசம் செய்யலாம்.
என் தாய் மறைவிற்கு முன் என்னுடைய புதிய வீடு கிரகபிரவேசம் தேதி முடிவுசெய்து ஐயர் கும் பேசியாச்சி தீடிர் னு என் அம்மா காலமாகிவிட்டார்.நான் எப்போதும் கிரகப்ப்ரவேசம் செய்யலாம்.
Reply
அண்ணன் இறந்தால் தம்பி மறுநாளையிலிருந்து கடவுளுக்கு பண்ணலாமா.5ம்நாள் அமாவாசை வந்தால்krishnan.hemavathy@ பெற்றவர்களுக்கு தர்பணம் பண்ணலாமா
என் மனைவியின் சகோதரன் இறந்துபோன என் மனைவிக்கு எத்தனை நாள் தேடு உண்டு?
என் மாமியாருடய மாமியார் இறந்ததால், எனக்கும் என் மனைவிக்கும் என் மாமியாருக்கு தீட்டு விவரம் தெரிவிக்கவும். என் மனைவிக்கு இறந்தவர் பாட்டி, என் குழந்தைகளுக்கு இறந்தவர் கொள்ளு பாட்டி. என் மாமியாருக்கு, இறந்தவர், கணவனின் தாயார்.
என் மாமனார் இறந்து ஒரு வருடம் ஆகவில்லை என் குழந்தைக்கு முதல் மொட்டை போடலாமா?
என் பெண்ணின் குழந்தை, பிரசவத்தின் போது இறந்து விட்டது. எனக்கும் என் கணவருக்கும் தீட்டு உண்டா? அவள் என்னுடனே இப்போது இருப்பதால் என் கணவரின் சகோதரர் வீட்டு விசேஷத்திற்கு குழந்தை இறந்த 10 நாட்களுக்குள் செல்லலாமா?
ஐயா, வணக்கம். தாய்க்கு கர்மம் செய்யும் ஒரே மகனின் மனைவி, அந்த மரண தீட்டின் போது, கூட தங்கியுள்ள நேரத்தில், வீட்டிற்கு தூரமாக நேர்ந்தால், மனைவி மேற்கொண்டு அந்த வீட்டில் தங்கலாமா? தினம் கணவரின் தாய்க்கு படைக்கும் உணவை மனைவி சமைக்கலாமா?
எனது மனைவியின் அம்மாவின் அம்மா இறந்துவிட்டார். அவருக்கு எனது மனைவி நீர்மாலை எடுத்தார். நான் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளலாமா. எத்தனை நாள் கழித்து செல்லலாம்.
என்னுடைய அண்ணா 6/12/20 இறந்துவிட்டார்.என் பேத்திக்கு 16/2/21 அன்று ஆயுஷ்ஹோமம் செய்யலாமா
தொந்தரவுக்கு மன்னிக்கவும். கல்யாணமான பெண்ணின் மாமி (தாய் மாமன் மனைவி) காலமானால் அவளுக்கு தீட்டு உண்டா?
கல்யாணமான பெண்ணின் மாமி (தாய் மாமன் மனைவி) காலமானால் அவளுக்கு தீட்டு உண்டா?
ஒன்றரை நாள் தீட்டு உண்டு.
Thayathiyin magan, udalnalan kundri bhramachariyaga 60 vayathuku mel maranithal theetu unnda?
எங்களின் வீட்டில் குடியிருந்தவர் தூக்கி விட்டு அகால மரணமடைந்தார்,வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டார் கள், இப்பொழுது என் வீட்டுக்கு சுத்தம் செய்ய தீட்டை கழிக்க என்ன செய்ய வேண்டும் ? மற்றும் ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா? ஆலோசனை எதிர் பார்க்கிறேன்
துர்மரணம் என்பவர் இறந்தவரைத்தான் பாதிக்கும் (நற்கதி அடைவதில் தடை உண்டாகும்) அன்றி
வீட்டிற்கு எல்லா மரணமும் ஒன்றுதான். ஆயினும், மனதில் உள்ள சில அச்ச உணர்வைத் தவிர்க்க
கணபதி ஹோமம் அல்லது சுதர்ஸன ஹோமம் செய்யலாம்.
தந்தையின் சகோதரர் இற்ந்துவிட்டார். எத்தனை நாள் வாசல் கோலம் போடக் கூடாது.
ஒருவருடம் கோலம் போடக் கூடாது என்று கூறுகின்றனர். விளக்கம் கூறவும்
ஒரே குடும்பமாக வசித்தால்தான் அந்த ஒரு வருடம் பொருந்தும்.
மற்றபடி கர்த்தாக்கள் மட்டும் ஒருவருடம் அனுட்டித்தால் போதுமானது.
i have a doubt. I read in a book that 7 thalaimurai is the person who died his brothers as base and his above 3 generations father grand father great grand father ( all their brothers) and son, grand son and great grand son . So seven generations. is it correct. please advice
Yes you are correct.
ஐயா
ஒன்றைஒஅறை நாள் தீட்டுக்காலத்தில்
நித்ய பூஜை அபிஷேகங்கள் பண்ணலமா
அன்று பிரதோஷமாக இருந்தால். வீட்டில் பிரதோஷ பூஜை பண்ணலாமா
தீட்டு என்பதே தெய்வ வழிபாடு, பூஜை போன்றவைகளுக்கு அருகதை இல்லை என விலக்கி வைப்பதற்காகவே
ஏற்பட்டுள்ளது என்பதை அறியவும்.
பெரியம்மாவின் மகளின் கணவர் இறந்தால் தீட்டு எத்தனை நாள் ஆலயம் செல்ல கூடாது plz replay
அப்பாவழியா அம்மாவழியா எனக் குறிப்பிடவில்லை.
எப்படியிருந்தபோதும் திருணமான பெண் வழியாக பெற்றோர் தவிர மற்றவர்களுக்கு எந்தத் தீட்டும் வராது.
ஆலயம் செல்ல தடை இல்லை.
ஐயா வணக்கம் .எனது தந்தையின் அண்ணனின் மனைவி இறந்துவிட்டார் .எனக்கும் எனது மனைவி ,குழந்தைகளுக்கும் தீட்டு உண்டா ?அப்படி இருந்தால் எத்தனை நாட்களுக்கு தீட்டு உண்டு ?தயவு செய்து விளக்கவும் .
குழுந்தைகளக்குத் தீட்டில்லை.
பெரியவர்களுக்கு மட்டும் பத்துநாள் தீட்டு
அருமையான பதிவு ஐயா
என் அக்கா மகளுக்கு 24.02.21 அன்று கல்யாணம் முடிந்தது. என் அக்காவின் மாமியார் 01.03.21 அன்று இறந்து விட்டார். பாட்டியின் துக்க நிகழ்வில் என்னுடைய அக்கா மகளை தீட்டு என்ற காரணத்தை காட்டி மாப்பிள்ளை வீட்டார் என் அக்கா மகளையும் மாப்பிள்ளையும் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை இந்த முறை சரியானதா தெரிவிக்கவும்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
—–
சரியில்லைதான்.
அத்தை இறந்தால் 3 நாள் தீட்டு. அத்தை மகன் இறந்தால் ? தயவு செய்து கூறவும்
அத்தை இறந்தால் 3 நாள் தீட்டு. அத்தை மகன் இறந்தால் ? தயவு செய்து கூறவும்
—–
ஒன்றரை நாள்
ஐயா,
அத்தை பெண் இறந்தால் மாமா பிள்ளைகளுக்கு தீட்டு உண்டா என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன். சிலர் தீட்டு கிடையாது என்கிறார்கள்.
அத்தை பெண் இறந்தால் ஒனறரை நாள் தீட்டு உண்டு.
ஐயா, எனது தந்தையின் அண்ணனின் பேரன் மனைவி 25 நாட்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்கள். நான் ஒரு மாதம் முடிவதற்கு முன்னால் திருப்பதி கோவிலுக்கு சென்றுவரலாமா?
சுபஸ்வீகாரம் – சுபம் முடிந்தால் செல்லலாம்.
அல்லது வெவ்வேறு ஊர்களில் தனித்தனியாக வசித்து வருபவர்கள் தீட்டு முடிந்தவுடனேயே செல்லலாம்.
ஐயா
பங்காளிகள் இறந்தால் மலைக்கோவில்களுக்கு செல்லலாமா?
சுபஸ்வீகாரம் முடிந்தால் கர்த்தா தவிர மற்றவர்கள் மலைக்கோவிலுக்குப் போவதில் தவறில்லை.
ஒரே குடும்பமா்க சேர்ந்து வசிப்பவர்கள் செல்வதில்லை.
i am vadakalai iyengar family my brother expired on 16th march 2021 might 1.30 am due to corona onthat day anything not done (sasthiram) straight burial ground. his wife also admitted in hospital due to corona she is also not to give power to brother
he have only 2 daughters one elder brother
two younger brother. one iyengar sastrigal said first you do kuzhi tharpanam next day theetu ovet after manny discharge 9day to 13thday function do. So i request you theetu over means what are we are do ie. pooja kolam subhafunction koil etc thanks adiyen
இறப்பு தீட்டு ஒரு குடும்பத்தில் இருக்கும் பட்சத்தில் தீட்டு இல்லாமல் இருக்கும் குழந்தைகள் ஆத்து சாமிக்கு நைவேத்தியம் பன்னலாமா(அவர்களே சமைத்து)
ஒரு குடும்பத்திற்கு தீட்டு உண்டானால் அவருடைய பொருள்களுக்கும் தன்னடைவே தீட்டு வந்துவிடும்.
மேலும் மணமாகாத பெண்ணோ, உபநயனமாகாத பையனோ சாமிக்கு நைவேத்தியம் பண்ணுவதில் பலனில்லை.
அண்ணா நமஸ்காரம். அடியேன் ஸ்ரீலங்கா ப்ராமணர் எனது பேரனாரின் பபேரனின் மனைவி(அண்ணி) இறந்தால் எனதுஆண்பிள்ளைகளிற்கு ஆசௌசம் உள்ளதா எனக்கு சற்றுவிளக்கம்தந்துதவுங்கள் நன்றிச
நமஸ்காரம் அண்ணா,
பேரனுக்கு பேரன் என்றால் 6 தலைமுறைகளைத் தாண்டிவிடுவதால் தீட்டில்லை.
ஏழு தலைமுறை என்பது கீழே மூன்று மேலே நான்கு தலைமுறைகள் ஆகும்.
துக்கம் விசாரிக்க எந்த நாட்களில் செய்யலாம்?!.
இறந்து பத்து நாட்களில் எல்லா நாட்களிலும் விசாரிக்கலாமா. விவரம் தெரிவிக்கவும். நன்றி.
துக்கம் விசாரிக்க திங்கள் கிழமை மற்றும் 9ம் நாள் தவிர மற்ற நாட்களில் விசாரிக்கலாம்.
எனது தாய் வழி தம்பி இறந்து விட்டான் .எனக்கு எத்தனை நாள் தீட்டு.
எனது தாய் வழி தம்பி இறந்து விட்டான் .எனக்கு எத்தனை நாள் தீட்டு.
—————-
ஒன்றரை நாள் தீட்டு
மனைவின் சகோதரன் மனைவி மன்னி இறந்தால் அண்ணனின் சகோதரிகளுக்கு எத்தனை நாள் தீட்டு உண்டு
மனைவியின் சகோதர்ன என்பவன் மைத்துனன் இறந்தால் ஒருநாள் தீட்டு
மைத்துனன் மனைவியின் மரணத்தில் ஸ்நானம் மட்டுமே.
இங்கே அண்ணனின் சகோதரிகள் இறந்தவருக்கு என்ன உறவு எனத் தெரிந்தால்தான் சொல்ல இயலும்.
ஐயா என் அப்பாவின் தந்தை வழி சகோ தரன் பிள்ளை இறந்தால எனக்கு திட்டு உண்டா. நான் மணமான பெண்s
உங்களுக்கு மட்டும் ஒன்றரை நாள் தீட்டு உண்டு. கணவருக்கு இல்லை.
தாஸன். அடியேன் ஶ்ரீமத் ஆண்டவன் ஸிஷ்மன்.
ப்ரம்மசாரிகளுக்கு அவர்கள் அண்ணணுக்குப் பேரன் பிறந்தால் ஆசௌசமா(தீட்டு ) உண்டா ஸ்வாமி?
My mail id is
idmadhavan@yahoo.com
தாஸன்.
தாமதாக பதிலளிப்பதற்கு க்ஷமிக்கவும்.
ப்ரமச்சாரிகளுக்கும், மணமாகாத பெண்களுக்கும் எந்தவிதமான தீட்டும் கிடையாது.
அத்தையின் மரணத்தில் 3 நாள் தீட்டு முடிந்த பின்பு பூணுல் மாற்ற வேண்டுமா? தீர்த்தமாடுதல் மட்டும் போதுமா? (வேறு ஊரிலிருப்பதனால் உடலைப் பார்க்கவும் முடியவில்ஸை)
குழி தர்பணம் பண்ணும் அவசியம் உள்ள தீட்டு தவிர மற்றபடி எந்தத் தீட்டிற்கும்
சவத்தையோ, எலும்பையோ, ஸ்மாசனத்தில் உள்ள பொருட்களையோ நேரடியாகத் தொடாத வரை
பூணல் மாற்ற வேண்டிய அவசியமில்லை.
கல்யாணமான ஒருவளின் (அக்கா)சகோதரியின் கணவர் (அத்திம்பேர்) இறந்துவிட்டார். இவளுக்கு தீட்டு உண்டா
ஸ்நானம் மட்டுமே.
மைத்துனர் மனைவி இறப்பினால் தீட்டுஉண்டா.
மைத்துனர் மனைவி இறப்பினால் தீட்டுஉண்டா. – பதில்- ஸ்நானம் மட்டும்.
ஐயா இறந்தவர்களுக்கு அடைப்பு குறித்த விவரங்களை தெளிவுபடுத்தவும். மேலும் அந்நாட்களில் பங்காளிகள் கோயிலுக்கும் வீட்டில் தெய்வ வழிபாடுகள் செய்யலாமா???
இந்த இறந்தவர்களுக்கான அடைப்பு என்பது எல்லாருக்கும் பொருந்தாது.
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நக்ஷத்திரங்களில் மரணிப்போருக்கு மட்டுமே அடைப்பு சொல்லியுள்ளது.
அதையும் தற்காலத்தில் எண்ணை பாத்திரத்தில் முகம்பார்த்து தானம் செய்வது போன்ற சில எளிய பரிகாரங்கள் செய்து விலக்கிக்கொள்கின்றனர்.
யோகி ராம்சுரத்குமார். நமஸ்காரம். உபயோகமுள்ள பகுதி. ஒரு கேள்வி, என் தாத்தாவின் மகன்( அப்பாவை விட வயதில் சிறியவர், சித்தப்பா) இறந்த பத்து நாள் தீட்டு இருக்கும்போது, 7 ம் நாள் , இதேபோல் இன்னொரு சித்தப்பாவின் மருமகள் இறந்துவிட்டாள். நான் மேலும் என்ன செய்ய வேண்டும்?
முன்வந்த தீட்டு முடியும்போது பின்வந்த தீட்டும் முடிந்துவிடும்.
ஒரு தீட்டில் இருக்கும் போது, வேறொரு துக்க செய்தி கேட்டால், தீட்டில் இருப்பவர் துக்கம் விசாரிக்கலாமா?
தீட்டிருக்கும்போது துக்கம் விசாரிக்கத் தட்டில்லை.
வணக்கம் ஐயா!
நான் புது வீடு வாங்குவதற்காக ஏப்ரல் இருபத்திரண்டாம் தேதி “சேல் அக்ரீமெண்ட்” செய்திருந்தேன் மேலும் அடுத்து வரும் மே பதினேழாம் தேதி “பத்திரப்பதிவு” செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் கோவிட நோய் பரவலால் பத்திரப்பதிவு தள்ளி போனது. மேலும் கடந்த மே பதினோராம் தேதி எனது அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பன்னிரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு பலனில்லாமல் மே இருபத்துமூன்றாம் தேதி இயற்கை மரணம் அடைந்துவிட்டார். வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி காரியம் செய்ய உள்ளோம். அதன் பிறகு, ஏற்கனவே பேசியபடி அக்ரீமெண்ட் செய்த வீட்டை பதிவு செய்யலாமா? அல்லது ஒரு வருட காலத்திற்கு பத்திரப்பதிவை தள்ளிப்போட வேண்டுமா?
தாயரின் மரணத்திற்கு இரங்கல்கள்.
பார்வைக்கு வரதாததால் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.
அம்மாவின் காரியங்கள் முடிந்தபிறகு தாராளமாக பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம். தவறில்லை.
ஐயா கணவர் மிகவும் குடிகாரன் ஆதலால் குழந்தைகளை அவரிடமே விட்டுவிட்டு வேறு ஒருவரிடம் வாழ்கிறாள் அவள் இறந்தால் முதல் கவணவிர் குழந்தைகளூக்கு தீட்டு உண்டா!
சரியாகப் புரியவில்லை.
ஆனால் குடிகாரரோ எதுவோ, அவருடன் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும்
திருமண பந்தந்தால் ஏற்பட்ட கணவரின் மரணத்தில் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக தீட்டு உண்டு.
பிறப்பு, இறப்பு , பிரயாணம் ,மாதவிலக்கு, படுக்கை தீட்டு மற்றும் விழிப்பு தீட்டு எப்படி அகற்றுவது ?குளியல் மற்றும் வேறு என்ன செய்ய வேண்டும்? உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு தீட்டு உண்டா? எந்த பொருட்களுக்கு விலக்கு உண்டு? தினசரி கடை பிடிப்பது எப்படி?
எல்லா தீட்டுகளுக்குமே தலை முழுகுவதுதான் தீட்டு விலக்கு.
உபயோத்தில் இல்லாத தீட்டின்போது தீண்டப்படாத பொருள் எதற்கும் தீட்டில்லை.
உள்ளுக்குச் சாப்பிடும் பொருட்கள் (சமைத்தது – சமைக்காதது) எல்லாவற்றுக்கும் தீட்டு உண்டு.
உபயோகித்து மிகுந்ததை குப்பையில் சேர்த்துவிடலாம்.
நீரில் கழுவக்கூடியவற்றை அலம்பி எடுத்து உபயோகிக்கலாம்.
மற்றவற்றை வெய்யலில் உலர்த்தி எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.
தீட்டு மற்றும் சுத்தி செய்வது பற்றிய புத்தகங்கள் உள்ளனவா?
எங்களிடம் இது சம்பந்தமக புத்தகங்கள் எதுவும் இல்லை.
Dear sir,
Theetu samayathil slogam sollalama? Theetu 3 days la mudinchachuna, veetil vilaketri slogam sollalama or should we wait till 13 days subha karyam is over?
தீட்டு உள்ளவரை மட்டுமே ஸ்லோகம் சொல்லுதல், விளக்கேற்றுதல் போன்ற தெய்வீக காரியங்கள் எதையும் செய்யக்கூடாது.
தீட்டு முடிந்தால் செய்ய ஆரம்பிக்கலாம், காரியம் நடக்கும் வீடாக அல்லாமல் வேறு இடமாக இருந்தால் சுபஸ்வீகாரம் வரை காத்திருக்கத் தேவையில்லை.
ஐயா பங்காளி முறை உள்ளவர்க்கு கோடி போட்டால் எத்தனை நாள் தீட்டு {ஆறு மாதம் அடைப்பு உள்ளது} தயவு செய்து கூறவும்
மன்னிக்கவும் இதுபற்றி அடியேனுக்குத் தெரியவில்லை
தீட்டு நாட்கள் முடிந்தாலும் பிரேத ஸம்ஸ்காரம் செய்ய வில்லை என்றால் தகனத்திற்கு பிறகுதான் தீட்டு விலகும?
கர்த்தாக்கள் தவிர மற்றவர்களுக்கு தீட்டு தகனம் ஆனாலும் ஆகாவிட்டாலும் முடிந்து்விடும்.
என் மனைவியின் அம்மாவின் உடன் பிறந்த தங்கை கணவர் (அம்மா வழி சித்தப்பா ) இறந்து விட்டார் .என் மனைவிக்கு, எனக்கு மற்றும் எங்கள் மகள்களுக்கு எவ்வளவு நாள் வீட்டு? திருமணமான என் மற்றொரு மகளுக்கும் வீட்டு உண்டா? நன்றி.வெங்கட்ராமன். காராக்குடி.
மனைவிக்கு அவருடைய சித்தியின் கணவர் மரணத்தில் ஒன்றரைநாள் தீட்டு – கணவரான உங்களுக்கு இல்லை.
மகள்கள் அவர்களுடைய அம்மாவழி சிறிய தாத்தா என்றால் தீட்டு எதுவும் இல்லை.
ஐயா பங்காளி இறந்தால் மகளுக்கு சீமந்தம் செய்யலாமா ?
சீமந்தத்தை எந்த காரணத்திற்காகவும் நிறுத்தத் தேவையில்லை, தீட்டு முடிந்தவுடன் சரியான காலத்தில்
உரிய நாளில் செய்யவேண்டும்.
அம்மாவின் தங்கை மாட்டுப்பெண் இறந்தால் தீட்டு உண்டா
இல்லை
நல்ல கருத்து ஐயா.. மிக்க நன்றி. ஒரு சின்ன சந்தேகம். ஐயா என் மாமனார் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆண் பிள்ளை இல்லை என்பதால் நான் தான் கொள்ளி வைத்தேன். நான் எங்கள் குல தெய்வ கோயிலுக்கு போகலாமா கூடாதா என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா.
நன்றி.
கொள்ளி வைத்தததால் கர்தாவாக ஆகமாட்டீர்கள்.
மனைவி, பெண் வயிற்றும் பிள்ளை, பெண்கள் என படிப்படியாக 30 வேரைக் கடந்து
அதன்பிறகுதான் மாப்பிள்ளைக்கு நேரடியாக கர்தாவாகும் கடமை உள்ளது.
வணக்கம்
We Planned to conduct naming function andபுண்ணிய dhanam to newly born girl child on 16th day. We heard the news that one of my pangali brother died (13th day) from the child born in different city. Whether we can proceed with punniya dhanam function. Please advice. .
Nandri
Sorry, I was not able to check this post early.
மனைவி இறந்த பின் கணவன் எத்தனை நாள் தீட்டு காக்க வேண்டும்
பத்து நாள்.
எனது தந்தையின் தம்பி மகனுக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளது நாங்கள் குழதெய்வ வழிபாடு செய்யலாமா
பிறப்புத் தீட்டு முடிந்தபின் தாராளமாகச் செய்யலாம்.
ஐயா கணவரின் அக்கா கணவர் இறந்தால் எத்தனை நாட்கள் தீட்டு.பண்டிகைகள் கொண்டாடலாமா? வரலட்சுமி விரதம் நோன்பு செய்யலாமா?
ஸ்நானம் மட்டும். தீட்டு இல்லை
அப்பாவின் சித்தப்பா இறந்தால் கல்யாணமான பையனுக்கு எத்தனை நாள் தீட்டு?
மூன்று தலைமுறைக்குள் இருந்தால் மணமானவருக்கு அப்பா்வழி ஆண் மரணத்தில்
பத்து நாட்கள் தீட்டு.
திருமணத்திற்கு 10 நாள் முன்னதாக தாய் இறந்துவிட்டார்
இப்ப 1 வருடம் பிறகு தான் திருமண பன்னவேன்டுமா
தேவையில்லை 45 நாட்களுக்குப்பின் தாயாரின் திதி விஷயங்களுக்குத் தடையின்றி திருமணத்தை நடத்தலாம்.
்அக்கா அத்திம்பேர் நாங்கள்
எனது தம்பியின் மனைவி இறந்தால் எவ்வளவ தீட்டு
ஸ்நானம் மட்டும்.
Yennudaya varathu 33 yennudaya paiyanuku 5 vayathu avan 28/8/21 antruiranthuvitan na yenna panna vaendum avan erantha natchithram thithi nallatha avanuku amma nan yenna parigaram panna vaendum tells details in sollunga ayya
புரியவில்லை மன்னிக்கவும்.
Ayya enaku Pen Kulandhai pirandhulladhu ethanai nal theettu irukum veetil yethanai naal kalithu poojai seiyalam.
pangaligal pen pillai poopeyarndhu vittal ethanai nall theetu and veetil yethanai naal kalithu poojai seiyalam. ( idhil udan pangaligalukku ethanai naal matra pangaligalukku ethanai naal theetu.
வணக்கம் ஐயா நேற்றைய தினம் அதாவது 07.09.21 அன்று காலை 7 மணி அளவில் அம்மா இறந்து விட்டார்கள் நான் நான் அவர்களது மூன்றாவது பெண் குழந்தை வரும் விநாயகர் சதுர்த்தியை நான் கொண்டாடலாமா என் வீட்டில் என்பதை தயவு கூர்ந்து விரைவாக தெளிவுபடுத்த முடியுமா
எத்தனை எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கொஞ்சம் தெளிவு படுத்துமாறு கொஞ்சம் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி
Sir, My Father’s brother’s (Periyappa) Mapillai, has expired. How many days Theetu for my mother and myself. My father and Periyappa already expired. We are Iyengar.
பங்காளி வீட்டு துக்கம் நடந்து 15 நாள் ஆகிறது .இதற்கு பின் சுவாமி அய்யப்பணுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து மலையேரலாமா??
பங்காளி வீட்டு துக்கம் நடந்து 17 நாள் ஆகிறது .
அய்யப்பன் மாலை அணிந்து கோயில் செல்லலாமா
வணக்கம் ஐயா,
அப்பாவின் அண்ணி (பெரியம்மா) இறந்து , காரியம் செய்த பிறகு, பங்காளி முறையாகிய நான் , எத்தனை மாதம் கோவில்களுக்கு செல்ல கூடாது?, வீட்டில் எத்தனை மாதம் பண்டிகை, சுப காரியங்கள் செய்ய கூடாது?, மலை ஏறுதல் செய்யலாமா, மலை கோயில் போகலாமா?,எல்லை தாண்டிய கோவிலுக்கு போகலாமா?.
தயவு கூர்ந்து தெளிவு படுத்தவும்
Hi Sir
My kollu thatha thambi wife died in my father’s side, How long the theetu will be?
We have been providing annathanam starting puratasi, whether it can be continued?
ரோகிணி நக்ஷ்த்திரத்தில் இறந்தால் நான்கு மாதம் அந்த ஆத்மாவிற்கு சாந்தி கிடையாது அது நான்கு மாத அடைப்பு நட்சத்திரம் என்று சொல்கிறார்களே ஐயங்காருக்கும் இது பொருந்துமா?
மிக்க அவசியம் அருமையாக விளக்கினார். நன்றி.
கேள்வி.. 5 சகோதரர்கள் நாங்கள். 3வது சகோதரர் கல்யாணம் ஆகாத அண்ணன் பகவத் கதிஅடைந்துவிட்டார்.
சிலர் 3 நாள் காரியம் என்கிறார்கள்.
சிலர் 10 நாள் காரியம் என்கிறார்கள்.
வழி நடத்தவும்..
அப்ராமண மனைவி
உள்ள பிராமண
தயாதிக்கு குழு தர்ப்பணம் உண்டா
ஒருவருக்கு பத்து நாட்கள் விருத்தி தீட்டு இருந்தால் நடுவில் அமாவாசை அல்லது மகாளய அமாவாசை வந்தால் அவர் தர்ப்பணம் செய்யலாமா என்று தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
.
தீட்டு வ்ருத்தியானாலும், க்ஷயமானாலும் தீட்டு தீட்டுதான்
எந்தவித வைதீக கார்யம், தைவீக கார்யமும் செய்வதற்கில்லை.
பெரியப்பா மகன் இறந்து (2/10/21) விட்டார். எத்தனை நாள் தீட்டு. மலைக்கு செல்லாமா?
அப்பாவின் பெரியப்பா மனைவி இறந்தற்கு அப்பா கொல்லி வைத்தார் 6 மாதம் ஆகிறது நான் சபரிமலை மாலை போடலமா
அப்பாவின் பெரியப்பா மனைவி இறந்தற்கு அப்பா கொல்லி வைத்தார் இறந்து 7 மாதம் ஆகிறது நான் ஐயப்பன் சபரிமலைக்கு மாலை போடலமா
Sollunga sir
அப்பாதானே கொள்ளி வைத்தார், அதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு, நீங்கள் தாராளமாக மாலை போடலாம்.
என்னுடைய மாமி (My metarnal uncle wife) இறந்து விட்டார். எனக்கு எவ்வளவு நாள் தீட்டு. நான் கோவிலுக்கு போகலாமா ?
3 நாள் தீட்டு முடிந்த பிறகு கோயிலுக்குப் போகலாம்.
மதிப்பிற்குரிய ஐயா
எனது மாமனார் (கணவரின் தகப்பனார் ) இறையடி சேர்ந்து 10 மாதங்கள் ஆயிற்று.நாங்கள் 108 வைணவ திவ்ய தளங்களுக்கு பாரம்பரியம் மிக்க புராண கோவில்களுக்கு சென்று தெய்வ தரிசனம் அர்ச்சனைகள் செய்யலாமாஅய்யா
மதிப்பிற்குரிய அம்மணி,
ஒரு வருட ஆப்தீக காரியம் முடிந்த பிறகு 108 வைணவ திவ்யதேசங்களுக்குத் தாங்கள் திவ்யமாய் சென்று தரிசனம் செய்யலாம்.
மாமனார் இறந்து10 மாதம் ஆயிற்று
இராமேச்வரம் திருச்செந்தூர் செல்லலாமா
ஏழு தலைமுறை இறப்பு தீட்டு உண்டு என்றால் மனிதர்கள் கோவிலுக்கே செல்ல முடியாது. இப்போ வேண்டுமானால் 1 அல்லது 2 பிள்ளைகள் இருக்கலாம். எங்கள் காலம் போல் 10, 12,9,15 போன்ற எண்ணிக்கையில் இருந்தால் 1 தலைமுக்கே பாதி நாட்கள் கோவில், பூஜை கிடையாது, இதில் 7 தலைமுறை என்றால் இந்த ஜென்மத்தில் கிடையாது.
Hi, I’m Kannan i have 1 elder brother. My dad and mom expired 4 gets ago. Noe my grandpa (dad’s dad) expired and my brother did all funeral activities. Now we need to follow 1 year or no need.
என் தாயின் சகோதரி கணவர் அதாவது என் பெரியப்பா இறந்து விட்டார். எத்தனை நாள் தீட்டு நான் கல்யாணமான பெண்.
Sir,
Thanks for the detailed write-up. However, I do not find step by step details of 10 days, 3 days, Pakshini and 1 day theettu details for Men. My sister’s husband died How many day’s theettu for me. I am male brahmin
Balan
Ayya enathu mamanarin (thanthai vazhi)sithapavin manaivi eranthu avargaluku 3 matham adapu ullathu en magaluku 11 matham agi vittathu mottai adikalama nangal koviluku sellalama thayavuseithu sollungal
ஐயா என் தாயார் 10 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.அவர் இறப்புக்கு முன் நான் புதிதாக வீடு கட்ட பூமி பூஜை செய்து விட்டேன் தற்போது வீடு கட்டும் பணியை செய்யலாம். என் தாயருக்கு நாங்கள் மூன்று மகன்கள் நான் இளைய மகன் இறுதி சடங்கு களை என் மூத்த சகோதரர் செய்தார்.
ஐயா, தாயாதி வழியில் 10 நாள் துக்கம் அனுசரிக்கும் போது மாமனாருக்கு வருட திவசம் செய்யலாமா 10 நாள் கழித்து தான் செய்ய வேண்டுமா திதி மாறிவிடும் என்ன செய்வது
என் சித்தப்பா மகன்(நம்பி) இறந்து 6 மாதம் ஆகிறது.நான் தல யாத்திரை போகலாமா
பிராமண பெண் ஒரு சுத்திரனை மணந்தாள் அவள் இறப்பில் பெண் ஆத்துக்கு மூன்று நாள் தீட்டு உண்டா.
பிராமண பெண் ஒரு சூத்திரனை மணந்தாள்
அவளின் இறப்பில் பெண் ஆத்துக்கு மூன்று நாள் தீட்டு உண்டா ?
ஆணோ, பெண்ணோ, (தொடர்பில் இருந்தாலும், இலலாவிட்டாலும்)
பிறந்த ஒருவருக்கு அவரின் மரண பர்யந்தம் அந்தந்த உறவுகளுக்கான
தீட்டு முறையில் (வர்ண பேத உறவுகள் ஏற்பட்டதனால்) எந்த மாற்றமும் ஏற்படாது.
எனது நண்பர் ஒரு வாரம் முன் தகப்பனாரை இழந்தார். அவரிழந்த நாலாவது நாளில் தாயாரும் இரந்தார். இவரோ ஒரே மகன். பிதாகாரிய மத்தியில் மற்றொரு நிகழ குழப்பம் கூடியது. கர்தா இரண்டு காரியங்களை யும் தனித்தனியாக செய்யவேண்டுமா. ஒரே க்ருஹத்தில் கல் வெவ்வேறு இடத்தில் ஊணவேண்டுமா? சற்றே விளக்கவும். இடம் பதுச்சேரி.
எனது நண்பர் ஒரு வாரம் முன் தகப்பனாரை இழந்தார். அவரிழந்த நாலாவது நாளில் தாயாரும் இரந்தார். இவரோ ஒரே மகன். பிதாகாரிய மத்தியில் மற்றொரு நிகழ குழப்பம் கூடியது. கர்தா இரண்டு காரியங்களை யும் தனித்தனியாக செய்யவேண்டுமா. ஒரே க்ருஹத்தில் கல் வெவ்வேறு இடத்தில் ஊணவேண்டுமா? சற்றே விளக்கவும். இடம் பதுச்சேரி.
அடியேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
முன்னதாக வந்த தீட்டுடன் பின்னால் வந்த தீட்டு முடிந்துவிடும் என ஒரு விதி உள்ளது.
அதன்படி தந்தையாரின் கர்மாவுடன் சேர்த்தே தாயாரின் கர்மாவையும் ஒன்றாக ஒரே நாளில்
ஒரே இடத்தில் ஆனால் தனித்தனியாக் கல் ஊன்றி செய்யவேண்டும்.
தாயரின் க்ருத்யங்களை முதலாவதாகவும், தந்தையாரின் க்ருத்யங்களை அடுத்ததாகவும் செய்யவேண்டும்.
எனது கணவரின் சிறிய தகப்பன் இறந்துவிட்டார் கணவர் வௌிநாட்டில் உள்ளார் எமது வீட்டில் விளக்கு வைத்து சாமியை வணங்கலாமா தூபம் போடலாமா என்பதை எனக்கு தெரிவிக்கவும் நான் இலங்கை நாட்டை சேர்ந்தவர்
எத்தனை நாட்கள் ஆகிறது எனக் குறிப்பிடவில்லை.
கருமம் முடிந்துவிட்டால் அதன் பிறகு எந்த வழிபாடும் செய்யலாம்.
ஒரு வருடத்திற்கு நேர்த்திக்கடன் போன்றவை மட்டும் தவிர்க்கவும்.
Good write up
மிக்க நன்றி
எதோ நம்மால் இயன்ற நமக்குத் தெரிந்த ஸமுதாயப்பணி
இறைவன் எல்லோரும் நல்ல மார்க்கத்தில் சென்று நல்வழியடைய அருள்புரியவேண்டும்.
நமஸ்க்காரம் எங்களது அப்பாவின் சிரியதகப்பனாரின் மனைவி இறந்துவிட்டார் எங்களுக்கு பத்துநாள் தீட்டுஉண்டா
நமஸ்காரம்
அதவாது உங்களுக்கு தந்தை வழியில் பாட்டி முறை என்பதால் பத்து நாள் தீட்டு உண்டு.
எனது தந்தையின் பெரியம்மா பிள்ளை நேற்று காலமாகிவிட்டார். என் தந்தை இப்போது உயிருடன் இல்லை. எங்களுக்கு தீட்டு/ஸ்நானம் உண்டா?
பெரியம்மா என்றால் அப்பா வழியா அம்மா வழியா எனக் குறிப்பிடவில்லை
அப்பா வழி என்றால் தீட்டு உண்டு.
அப்பா்வுக்கு அம்மா வழி என்றால் தீட்டு இல்லை.
அய்யா என்னுடைய கணவர் இறந்நது இரண்டு வருடம் ஆகிறது, என் பெண் குழந்தைக்கு இன்னும் மொட்டை அடிக்கவில்லை, சமிபத்தில் எண் மாமனார் மறற்றும் அவருடைய தகப்பனாரும் இறந்து இரண்டு மாதம் ஆகிறதது, எண் பெண் குழந்தைக்கு இப்போது மொட்டை அடிக்கலாமா. முடி அதிகமாய் இருக்கிறது அய்யா
குழந்தைக்கு என்ன வயது என்று குறிப்பிடவில்லை.
9 வயதிற்குப்பிறகு பெண் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கத்தேவையில்லை பூ முடி எடுத்தால் போதும்.
எனது ஒன்று விட்ட மாமா 12/02/2022 இறந்தார். அவரின் மனைவி 19/02/2022 இறந்தார். அவர்களுக்கு ஆண் பிள்ளை இல்லை. ஒரேயொரு பெண் தான். இருவருடைய காரியங்கள் பெண்ணின் கணவர் செய்யப் போகிறார். ஒன்றிலிருந்து எப்படி செய்ய வேண்டும். இந்த இரண்டு இறப்பு சென்னை யில் நடந்தது.
எனது ஒன்று விட்ட மாமா 12/02/2022 இறந்தார். அவரின் மனைவி 19/02/2022 இறந்தார். அவர்களுக்கு ஆண் பிள்ளை இல்லை. ஒரேயொரு பெண் தான். இருவருடைய காரியங்கள் பெண்ணின் கணவர் செய்யப் போகிறார். என்றிலிருந்து எப்படி செய்ய வேண்டும். இந்த இரண்டு இறப்பு சென்னை யில் நடந்தது.
உங்கள் ஸம்ப்ரதாயம் என்ன எந்த குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியாமல் பொதுவாக இந்தக்கேள்விக்கு பதில் தர இயலாது.
மேலும், தங்கள் ஊரில் இதையெல்லாம் பற்றி சொல்லக்கூடிய பெரியவர்கள் யாரும் இல்லையா?!
தங்கள் பதிலுக்கு நன்றி.
என் ஒன்று விட்ட மாமா பாரத்வாஜ கோத்ரத்தில் பிறந்தவர். நாங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர்கள். பெரியவர்கள் யாரும் இல்லை. பொதுவாக இப்படி நடந்தால் எப்படி செய்ய வேண்டும் என்று விவரிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
வெங்கடாசலம்.
எனது ஒன்று விட்ட மாமா 12/02/2022 இறந்தார். அவரின் மனைவி 19/02/2022 இறந்தார். அவர்களுக்கு ஆண் பிள்ளை இல்லை. ஒரேயொரு பெண் தான். இருவருடைய காரியங்கள் பெண்ணின் கணவர் செய்யப் போகிறார். என்றிலிருந்து எப்படி செய்ய வேண்டும். இந்த இரண்டு இறப்பு சென்னை யில் நடந்தது.
———————-
ப்ராமண குலத்தில்
ஆண் வாரிசு இல்லாதபோது
கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் கர்தா ஆவார்கள்
கணவன் அல்லது மனைவி இல்லாவிட்டால்
பெற்ற பெண்ணுக்கு பிள்ளை – பெண் வயிற்றுப் பேரன் உபநயனமாகியிருந்தால்
அவனே நேரடியாகவும், உபநயனம் ஆகாவிட்டால் அவனிடம் பில் வாங்கியும் பண்ணவேண்டும்.
பெண்ணுக்கும் ஆண் வாரிசு இல்லாவிட்டால்
பெண்ணிடம் கைப்பில் வாங்கி – மாப்பிள்ளையோ யாராவது ஒரு ப்ராமணரோ பண்ணலாம்
கைப்பில் வாங்கி பண்ணும்போது மாப்பிள்ளை பண்ணியதாக ஆகாது.
கர்த்தா க்ரமம் பட்டியல் கீழே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
The order is:
1. Elder son
2. If Twins, second born is considered as elder.
3. If sons for more than one wife, elder by age to be considered.
4. If get a male child after having a boy as sweekaram, own child
should be the kartha.
5. Son’s son – Powthran
6. Powthran’s son
7. A son who given up as sweekaram – Dhattan.
8. His (Dhattan’s) son
9. Daughter’s son (Tauhitran) having right in property.
10. Tauhitran (even if there is no property).
11. Brother if joint family continues.
12. Wife (Pathni)
13. If demised is a lady, if there is no issues, son of the co-wife
if any.
14. Husband (Bhartha)
In the case of a lady, for all mentioned relations should add “Husband’s” as prefix.
15. Dhuhita – Daughter
16. Brother (Braatha )
17. Brother’s sons
18. Asotara bhraatha – Sitappa, periyappa sons and their sons.
19. Pita – Father
20. Matha – Mother
21. Snusha – Daughter in law.
22. Powthri – Son’s daughter
23. Dhowhitri – Daughter’ daughter
24. Powthrasya pathni – Son’s son’s wife.
25. Their (24) daughter.
26. Sweekaram given (dhattan) son’s wife.
27. Bhagini (elder or younger sister)
28. Bhagineyan (Marumaan, sister’s son)
29. Sapindan (any one of our 7 generation pangali)
30. Samanodhagan (three generation from mother side)
31. Matru Sapindan (Mother’s 7 generation pangali)
32. Mother’s mother side three generation.
33. Jaamatha (Son in law) ?? !!
[This is called Dharma shastra ?!]
34. Sakha – any friend.
35. Dhanahaari – Any person who gets the property.
enadhu chithapa iranthu oru matham aagiradhu. (9-2-2022)
puthu veedu pal kaichalama (homam illamal.)
ஐயா எனது தந்தைவழி பெரியப்பா இறந்து ஒரு மாதம் ஆகிறது இந்நிலையில் நான் மலை கோவில்களுக்கு செல்லலாமா, நான் கேள்விப்பட்ட வரை அந்த காலத்தில் இந்த சாஸ்திரங்கள் கோட்பாடுகள் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு வேகமாக இடம்பெயரும் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத நிலையில் உருவாக்கப்பட்டு இருப்பதனாலும் மக்கள் மலை கோயில்களை தரிசிக்க நடைவழி பயணம் மட்டுமே செய்வார்கள் என்ற நோக்கிலும் கோவிலுக்கு சென்று வர பல நாட்கள் ஆகும் அதற்கிடையில் அம்மாவாசை காரியங்கள் தடைபடலாம் என்ற எண்ணத்திலும் இந்த நியதிகளை உருவாக்கியுள்ளனர் என்று கருதுகிறேன். இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஒரு மாதம் ஆன இந்தநிலையில் நான் மலை கோயில்களுக்கும் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாமா?
உங்கள் பதிவுக்கு நன்றி
ஐயா,
தங்கள் கருத்து பலராலும் ஏற்கக்கூடியதே ஆயினும் அது ஊகம்தானே தவிர அதற்கு ஏதும் ஆதாரம் இல்லை.
தற்போதைய காலக்கட்டத்தில் பங்காளிகள் ஒரே வீட்டில் அல்லது குறைந்த அளவு ஒரே ஊரில் ஒரே தெருவில்கூட வசிக்காமல்
விலகி வசிப்பதால், பெற்ற பிள்ளைகள் தவிர மற்றவர்கள் இந்த நியமங்களை பின்பற்றுவதிலிருந்து அவசியத்தேவைக்காக
சில சமயங்களில் விலகலாம் என்பதே அடியேன் கருத்தும்கூட.
(தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்)
மிக்க நன்றி.
எனது ஒன்று விட்ட சம்பந்தி இறந்தால் எங்களுக்கு தீட்டு உண்டா?
ஒன்று விட்ட சம்பந்தி இறந்தால் உங்களுக்கு தீட்டு – இல்லை
Sir, I’m a married woman.. my chithi (my father’s brother’s wife) passed away tday.. do I hav theettu.. if yes then for how many days?
பெண்கள் வயதிற்கு வந்தால் யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு
ருதுவான பெண்ணுக்கு மட்டும்தான் தீட்டு
வேறு யாருக்கும் இல்லை. மேலும் கன்னித்தீட்டு என்பதால்
தீட்டின் வலிமை குறைவு அதனால் யாருக்கும் பாதகம் இல்லை.
எள்ளு தாத்தாவின் ஸ்வீகார புத்ரன் இறப்புக்கு 10 நாள் தீட்டு என்பது புரிகிறது.
ஆனால் இறந்தவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. மனைவி முன்னர் இறந்து போனார்.
ஒரு சொந்தக்கார பெண்ணை ஸ்வீகாரம் எடுக்காமல் வளர்த்தார். அந்த பெண் நம் கோத்ரமாக கருத முடியாது.
கூடுதல் விவரம் அந்த பெண் அபிராமணனை கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.
ஆக, இறந்தவருக்கு யாரோ கோவிந்தா கொல்லி போடும் சூழ்நிலையில் எனக்கு எத்தனை நாள் தீட்டு?
3-ம் நாள் அப்பா சிராத்தம் வரது. அதன் கதி என்ன?
மத்தபடி 11-ம் நாள்தான் சிராத்தம் செய்யனுமா?
10 நாள் தீட்டு உண்டா?
தங்கள் கேள்வியைப் புரிந்துகொள்ளச் சிரமமாக இருந்தது.
அடியேன் புரிந்துகொண்டவரை,
ஸ்வீகாரமாக வந்த சித்தப்பா, அல்லது பெரியப்பா இறந்தால்
(தங்களுக்குத்) தீட்டு உண்டா என கேட்பதாகப் படுகிறது.
ஸ்வீகாரமாக வந்தவர், ரத்த சம்பந்தம் உள்ளவராயின் அதற்கேற்பத் தீட்டு வரும்.
மற்றவரானால் தீட்டு வராது எனப் படுகிறது.
எனது கணவரின் அத்தை மகன் இறந்து விட்டார் என் கணவருக்கு பக்ஷிணி தீட்டு. எனக்கு உண்டா?
கணவருக்கான தீட்டு எப்போதும் மனைவிக்கு உண்டு.
தீட்டு நாட்களில் குளிப்பது எப்போது
தீட்டு நாட்களில் எப்பவும்போல உடல் தூய்மைக்காக் குளிக்கலாம்
ஐயா வணக்கம் என் தங்கச்சிக்கு கல்யாணம் இன்னும் 14 தான் இருக்கிறது ஆனா அதுக்குள்ள மாப்பிள்ளை அப்பாவின் அம்மா இறந்து விட்டாங்க பத்திரிகை எல்லாம் கொடுத்தாச்சு இப்ப 16 நாள் காரியம் முன் கல்யாணம் பண்ணலாமா எந்த பிரச்சனையும் இல்லை தானே ஐயா இதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா
ஐயா வணக்கம்,
எதோ காராணத்தால் திருணம் தடைப்பட்டுள்ளது.
அதை ஒரு நல்லதற்காக எடுத்துக்கொண்டு, கருமம் முடிந்தபிறகு
வேறு ஒரு நல்ல நாளில் பண்ணுவதே சிறப்பு.
My mother’s younger brother (mathulen) met with an accident and died.
He is bachelor
I am doing this karma love and affection with mama.
I did 2 days karma at kumbakonam
9th to 12th karma i am going to do. But 12th day ceremony to be done as Narayanabali or savandikarna sardham to be done. Kindly advice.
Most urgent.
Sri:
Narayana Bhali will be perfect as he is a brahmachari.
My husband’s grand mother( Father’s mother )died 18 days before. Sixteenth day kariyam is done. Can we indulge in buying a property or should we wait for 1 year. Please tell me after how many days we can involve in such things.
Sri:
Actually, these type of things will not get restrictions under any circumstances. Because these are not any type of ritualistic or religious items.
But, if you are living together with your father in law and he is having some opinion on this, please oblige.
ஐயா வணக்கம் எனது தந்தையின் அம்மா காலமாகிவிட்டார் அடைப்பு காலம் எதுவுமில்லை எத்தனை நாள் தீட்டு மலை கோயிலுக்கு எப்போது செல்ல வேண்டும்
எனது தந்தை காலமாகி இரண்டு வருடம் ஆகப்போகிறது அதனால் எனது பாட்டிக்கு காரியம் செய்தது அண்ணன்
வணக்கம் ஐயா,
காரியம் முடியும் வரைதான் தீட்டு, அதற்குப்பிறகு தீட்டு என்பது இல்லை.
பொதுவாக காரியம் செய்த கர்த்தா இறந்தவர்களின் நினைவாக ஒருவருடம் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல்
இருப்பது நமது இந்து கலாசாரம்.
ஆனால் இதில் மலைக் கோயில்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது என்பது
மாதா மாதம் திதி கொடுக்கக்கூடிய ப்ராமணர்களுக்கான நியமம்.
ஒரு வருடாந்திர பித்ரு காரியம் செய்பவர் ஒரு வருடத்திற்குள்
ப்ரார்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றும் வழிபாடுகளைச் செய்தால்
அது நிறைவடையாது என்பதாலும்,
அதிலும் மலைகளுக்குச் க்ஷேத்ராடனம் செய்து வர கால தாமதமாகித்
திதிகொடுக்கும் காரியத்திற்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கையே அன்றி
மலைக்கோயிலுக்குச் செல்வதனால் குற்றம் ஏதும் இல்லை என்பது அடியேன் கருத்து.
மற்றபடி விழாக்களைக் கொண்டாடுவது வேறு, தெய்வ வழிபாடு என்பது வேறு என்பதை
உணர்ந்துகொண்டு செயல்படவேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.
நன்றி.
Ayya, My dad’s mother died. No adappu…My brother did rituals…..After 16 days kaariyam shall we goto hill temples like Tirupati, Palani….
வணக்கம்,
ஒரே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளீர்கள்
முன்னரே பதில் தந்துவிட்டமையால் இதற்கான பதிலை முந்தைய பதிவில் பார்த்து அறிந்துகொள்ளவும்.
நன்றி.
ஐயா எனது தாயாருக்கு இரண்டு கன்வர். முதல் கனவருக்கு இரண்டு பிரதான ஒரு ஆண் இரண்டவது பெண் 8.6வயது உள்ளபோதே அவரது தந்தை காலமானார் பின்பு தான் தந்தை திருமணம் செய்து கொண்டார். பிறகு நாங்கள் முன்று பேர் பிறந்தும். ஒரு பெண் இரண்டு ஆண்கள்.. முதல் தந்தைக்குபிறந்த பெண் இறந்து விட்டார். நான் தனிமையில் வாழ்ந்து வறுகிறேன் நான் எந்த நல்லது கெட்டது வந்தாலும் போவதில்லை இந்த நிலையில் எனக்கு தீட்டு உண்டா நான் என்ன செய்யவேன்டும.
ஐயா,
ஸனாதன தர்மத்தின் அளவுகோல்படி ஒரு பெண்ணிற்கு இரு கணவர்கள் என்பது ஏற்புடையது அல்ல.
ஆனால் சந்தர்ப சூழ்நிலைகளால் ஏற்படும் இதுபோன்ற உறவு முறைகளுக்கு சாஸ்த்ர ரீதியான தீர்வுகள் இல்லை
ஆயினும். தர்ம சூக்ஷ்மத்தின்படி பதில் தருகிறேன்.
தாயாரின் முன்னாள் கணவரின் வாரிசுகளின் ஜனன மரணத்தால் ஏற்படும் தீட்டு தங்களைப் பாதிக்காது என்றே தோன்றுகிறது.
தங்களோடு உடன் பிறந்தவர்களின் ஜனன மரணங்கள் மட்டுமே தங்களை பாதிக்கும்.
ஐயா
எனது தந்தையின் தாயார் இறந்துவிட்டார் அடைப்புக் காலம் எதுவும் இல்லை 16 நாட்கள் முடிந்து கோவிலுக்கு சென்று வந்து விட்டோம் இருந்தாலும் வீட்டிற்கு விசாரிக்க வருவார்கள் அதனால் அந்த வீடு காரியம் நடந்த வீடு போலத்தான் அதனால் மூன்று மாதத்திற்கு கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள் இது சரியா
எனது மாமியார் இறந்து 18 நாட்கள் ஆகின்றன. எனது மகனுக்கு தலை ஆவணி அவிட்டம் பண்ணலாமா
நமஸ்காரங்கள். அடியேனுடைய அத்தை நேற்று காலமாகிவிட்டார். 3 நாள் தீட்டு காரணம்காகி ஆவணி அவிட்டம் மற்றும் காயத்ரி செய்யமுடியவில்லை. எப்போது செய்யலாம்.
3 நாள் தீட்டு முடிந்த பிறகு கோயிலுகளுக்கு
My mother in law expired on 08.06.2022 can we perform normal amavasai pooja for other ancestors who expired before by offering padayal.
அய்யா சென்ற ஆனி மாதம் எனது தாய்வழி பாட்டி காலமாகிவிட்டார். அவருக்கான(கொல்லி வைத்தது முதலியன) காரியங்கள் அனைத்தையும் பேரணாகிய நான் செய்தேன். அதனால் வரும் ஒரு வருடத்திற்கு யாத்திரை முதலியன மேற்கொள்ளக் கூடாது என கூறப்படுகிறது. நான் குலதெய்வ வழிபாடுகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யலாமா, கோவில் குடமுழுக்கு விழாக்களில் கலந்துகொள்ளலாமா, என்பதை விளக்கவும்.
நமஸ்காரம்
என் அண்ணா மகனுக்கு இன்று மதியம் பையன் பிறந்துள்ளான் நான் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்று அரியவிரும்பி தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன். நன்றி
ஐயா வணக்கம், நான் திருமணம் ஆனவள். எனது தாயார் இறந்து ஒரு மாதம் ஆகிறது. ஆறு மாதம் அடைப்பு உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்.
வணக்கம் ஐயா. என் கணவர் கடந்த ஏப்ரல் மாதம் இறந்துவிட்டார், அக்டோபர் மாதத்தில் என் மாமியார் (என் கணவரின் அம்மா) இறந்துவிட்டார் ஒரே வருடத்தில் இவ்வாறு இறந்தால் தீட்டு என்பது யார் இறந்ததை வைத்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
எப்போது தீட்டு காலம் முடியும்
எப்போது தீட்டு காலம் முடியும்
NO 1 Brother unmarried son have put fire to second brother dead.
Funeral FIRE WHOM TO WHOM PLEASE DETAILS
என்னோட பெரியம்மா பையன் அதாவது அம்மாவின் அக்கா மகன் எனது அண்ணன் நேற்று இரவு தவறி விட்டார். எனக்கு எவ்வளவு நாள் திட்டு கூறுங்கள். நன்றி
அய்யா வணக்கம் என்னோட பெரியம்மா பையன் அதாவது அம்மாவின் அக்கா மகன் எனது அண்ணன் நேற்று இரவு தவறி விட்டார். எனக்கு எவ்வளவு நாள் திட்டு கூறுங்கள். நன்றி
தினமும் புதிய கமெண்டுகள் வந்துள்ளனவா எனப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்ன காரணத்தாலோ பதிவிடும் கமெண்டுகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கின்றன. அதனால் பதில் தந்து உபயோகமில்லை என்பதால் பதில் அளிக்காமல் விடுகிறேன்.
நன்றி.
அப்பாவின் தம்பி (சின்ம்மா) இறந்து , காரியம் செய்த பிறகு, பங்காளி முறையாக நான் , எத்தனை மாதம் கோவிலுக்கு செல்ல கூடாது?, வீட்டில் எத்தனை மாதம் பண்டிகை, சுப காரியங்கள் செய்ய கூடாது?, மலை ஏறுதல் செய்யலாமா, மலை கோயில் போகலாமா?,எல்லை தாண்டிய கோவிலுக்கு போகலாமா? .
தயவு கூர்ந்து தெளிவு படுத்தவும்
பதில்
ஐயா வணக்கம் எனது மாமனாரின் பெரியப்பா பெரியம்மா இறந்து அவர்களுக்கு 6மாதம் அடைப்பு உள்ளது எங்கள் குழதெய்வம் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து விட்டது நாங்கள் மண்டலம் பூஜை செய்யலாமா கூடாதா வேரு கோவில்களுக்கு போகலாமா
சார் வணக்கம்.
என் தந்தையினுடைய தம்பி ஆறு மாதங்கள் முன் காலமானார்.ஆனால் காரியங்கள் செய்தது இறந்தவருடைய மகன்.நான் பெரிய ஸ்தலங்களுக்கு செல்லலாமா?
எங்களது குல தெய்வம் கோவிலில் பூஜை செய்பவர் நோயால் இறந்து விட்டார் அவருக்கு வயது 27 திருமணம் ஆனவர் .அவர்களது வீடு கோவிலில் எல்லை கு உள் தான் உள்ளது . எத்தனை நாட்கள் கழித்து கோவில் திறக்கலாம். வேறு ஒருவரை வைத்து பூஜை செயலமா அடுத்த நாள். இல்லையெனில் எத்தனை நாட்கள் கழித்து கோவில் திறக்கலாம்.தயவு செய்து பதில் அளிக்கவும்.
iya yanathu akka mamanar iranthu vittar yannaku yathanai nall theetu
எனது பெரியப்பா 82 வயது
இயற்கை எய்தினார்.
18 ஆம் தேதி…
அவர் வேறு ஊர் நாங்கள் வேறு ஊர்..
பங்காளி தீட்டு எத்தனை நாள்…
மலை ஏற்றம் எத்தனை நாள் கழித்து வைத்து கொள்ளலாம்
எனது பெரியப்பா 82 வயது
இயற்கை எய்தினார்.
18 ஆம் தேதி…
அவர் வேறு ஊர் நாங்கள் வேறு ஊர்..
பங்காளி தீட்டு எத்தனை நாள்…
மலை ஏற்றம் எத்தனை நாள் கழித்து வைத்து கொள்ளலாம்
எனது தூரத்தில் ஒருவினர் ஒருவருடைய வீட்டில் நடைபெறும் ததாஸ்த்து சென்று வந்த பிறகு குளிக்க வேண்டுமா
ஐயா எனது மனைவியின் தாத்தா(அப்பாவின் அப்பா) இறந்து விட்டார் எனக்கு எத்தனை நாள் தீட்டு ஐயா
கல்யாணம் ஆன பெண்ணின் தந்தையின் பங்காளி இறந்தால் அந்த பெண்ணிற்கு எத்தனை நாட்கள் தீட்டு?
thirumanam pesi mudinthu pathirikai adithu ellavaridamum kodutha piragu kanavaraga pogiravarin thanthai vazhi thatha iranthu vittar 16 nal kazhinthirukirathu ipothu thirumanam seyyalama
என் பாட்டி இறந்த போது (அம்மாவின் அம்மா) என்னுடைய இரண்டு தாய்மாமா கொள்ளி வைப்பதற்கு பதில் ஒரு மாமாவும் என்னுடைய தம்பி இரண்டு பேரும் கொள்ளி வைத்தனர். இது சரியான இல்லை தவறா??? கொள்ளி வைத்த இரண்டு பேரும் ரொம்ப கஷ்டப்படுகிறவர்கள். இது தவறு என்றால் இதற்கான பரிகாரம் என்ன???? please reply
மாமனாரின் ஒன்று விட்ட தங்கை இறந்தால் எவ்வளவு நாள் தீட்டு
மாத திதி கொடுத்த பின் தெரிய வந்த துக்க வீட்டுக்கு அன்று செல்லலாமா
அக்காள் கணவர் இறந்தால் தீட்டு விவரம் சொல்லவும். please
தாய் உயிருடன் இருக்கும் போது தாயின் தங்கை (சித்தி, சின்னம்மா) இறந்துவிட்டால் தாய்க்கு( இறந்தவரின் மூத்த சகோதரி) எத்தனை நாள் தீட்டு? தாயின் பசங்களுக்கு (பிள்ளைகளுக்கு) எத்தனை நாள் தீட்டு? கல்யாணமான பெண்களுக்கு எத்தனை நாள் தீட்டு? கல்யாணம் ஆகாத பெண் இருந்தால் தீட்டு எப்படி?
நமஸ்காரம். என் ஸபத்னீ மாதாவின் பிள்ளை (என் அண்ணன்) காலமானார் 4 நாள் ஆகிறது. தீர்த்த யாத்ரா க்ஷேத்ராடனம் கிரி ப்ரதக்ஷணம் பஞ்சாயதன பூஜை ஏகாதசி வ்ரதம் இவைகள் குறித்து விளக்கவும். நமஸ்காரம்.
Hello sir,
yennudaya mami thavarivital enaku yavalo naal theettu
Hello sir,
yennudaya Amma vaali mami thavarivital enaku yavalo naal theettu
My would-be’s(future wife) grandfather passed away on last 05th of February. How long we’ve to wait for our wedding. Can we hold our wedding on next January?
My would-be’s(future wife) grandfather(father’s father) passed away on last 05th of February. How long we’ve to wait for our wedding. Can we hold our wedding on next January?
ஐயா, மனைவி இறந்தால் கணவருக்கு தீட்டு உண்டா? மனைவி இறந்து ஒரு வருடத்திற்குள் மறுமணம் செய்யலாமா?
பாலசுந்தரம்.
apkbala1@gmail.com
Namaskarams.
During [marana] theetu, if we unknowingly touch some cloths in shelves , is it required that all those cloths to be washed ? [because it is not practically possible.]
ஐயா வணக்கம் என் தாய் இறந்து 50 நாட்கள் ஆகிறது நான் தான் இறுதி காரியம் செய்தேன் நான் கோவிலுக்கு செல்லலாமா பழனி மலை பாதயாத்திரை செல்லலாமா
எனது தந்தையின் சகோதரர் தவறிவிட்டார் எனது தாய் தந்தைக்கு திதி கொடுக்கலாமா இப்போது இல்ல அடுத்த ஆண்டு தான் கொடுக்க வேண்டுமா…..
my elder brother in laws wife died . we are living separately can we go to our kuladeiva kovil within a year.
நமஸ்காரம் நான் நடராஜன் அகோரம் மதுரையில் இருந்து என்னுடைய கேள்வி என்னுடைய அப்பாவின் தம்பி (சித்தப்பா) இறந்து விட்டால் என்னுடைய மகனுக்கு எந்த விதமான தீட்டு இருக்கும் ❓
swamin Adiyen Dasan. Thiruvikraman. How many days for mother’s sister ( Chitti)
please reply me
Sir appa erthathu 6matham achu ammavasai anru avaru puthitha edathel poi avarukku peditha unavuvaithu kumbeduvathu nallatha katttatha sir
sisu kalaindhal alladhu kalaithal enna theetu enna prayachitham
வெள்ளிக்கிழமை அன்று துக்கம் விசாரிக்க போகலாமா (உறவினர் இல்லை ஆனால் அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகிறது) ஆகவே வெள்ளிக்கிழமை அன்று துக்கம் விசாரிக்க போகலாமா
என் கணவரின் தம்பி இறந்து 6 மாதம் ஆகிறது, நாங்கள் எப்போது குல தெய்வ கோவில் செல்லலாம், பதில் அளிக்கவும் ??
எனது தந்தையின் தகப்பனின் இரண்டாவது மனைவி இறந்து விட்டார்கள் எனக்கு எத்தனை நாள் தீட்டு புது வீடு பால் காய்ச்சலால் சொல்லுங்கள் அய்யா
எனது தந்தையின் தகப்பனின் இரண்டாவது மனைவி இறந்து விட்டார்கள் எனக்கு எத்தனை நாள் தீட்டு புது வீடு பால் காய்ச்சலாமா சொல்லுங்கள் அய்யா
எனது தந்தையின் தந்தையின் இரண்டாவது மனைவி இறந்து விட்டார்கள் எங்களுக்கு எத்தனை நாட்கள் தீட்டு எனது புதிய வீடு கிரகபிரவேசம் காரியம் முடிந்து எத்தனை நாட்கள் கழித்து செய்ய வேண்டும்.
தந்தை இறந்து 30 நாட்கள் கழித்து கோவில் செல்லலாமா? சொல்லுங்கள்
நமஸ்காரம். எனது சித்தப்பா (அப்பாவின் தம்பி) இறந்து வருஷாப்தீகம் புரட்டாசி மாதம் கிருஷ்ணபக்ஷம் பிரதமை திதியில் முடிகிறது. எனக்கு ஆவணி ஆவட்டம், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை உண்டா.
நமஸ்காரம். என் கணவரின் அண்ணாவின் மனைவி (மன்னி) காலமாகி விட்டார். எனக்கும், என் கணவருக்கும் 10 நாட்கள் தீட்டு. என் கல்யாணமாகாத மகனுக்கு/ கல்யாணமான மகனுக்கு எத்தனை நாள் தீட்டு?
பெண்குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் இறந்தால் .அவர்களுக்கு சிராத்தம் மகஆளயம் உண்டா அடியேன்.
adiyen ,clarifying many doubts.But then one more doubt.
can a non achowcham person staying with a achowcham house person , perform her pooja to her deity which are kept in her room.,where she following separately on daily basis, could perform in the same way during this achowcham period.
ஸ்வீகாரம் சென்றவரின் மகன்கள் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் இறந்தால் குழி தர்ப்பணம் செய்ய வேண்டுமா?
வணக்கம் ஐயா…ஆலயங்களுக்கு சென்று வந்த மறுநாளில் துக்க காரியங்களுக்கு செல்லலாமா…
தாத்தாவிற்கு மகன்கள் இல்லாத போது மருமகன்கள் அனுமதியில் பேரன் கொள்ளி வைப்பதால் ஏதும் தவறுகள் இருக்கின்றனவா…இதைப்பற்றியும் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்…நன்றி
ஆலயங்களுக்கு சென்று வந்த மறுநாளில் துக்க காரியங்களுக்கு செல்லலாமா —- பதில்- தராளமாகச் செல்லலாம்.
தாத்தாவிற்கு மகன்கள் இல்லாத போது மருமகன்கள் அனுமதியில் பேரன் கொள்ளி வைப்பதால் ஏதும் தவறுகள் இருக்கின்றனவா…இதைப்பற்றியும் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதில் — மகன்கள் இல்லாத பெற்றோருக்கு மகளின் மகனான பேரன்தான் கொள்ளிவைக்கவேண்டும். மருமகன்களின் அனுமதி தேவையில்லை. தவறொன்றுமில்லை. கடமையைத் தவறினால்தான் தவறு.
Sir, என் கணவரின் தம்பி இறந்து 10 மாதம் ஆகிருச்சு, ஆனால் அதற்குள், என் கணவரின் சித்தப்பா மருமகள் தவறி விட்டார், நாங்கள் என் கொழுந்தநாருக்கு முதல் வருட திதி கொடுக்கலாமா, எவ்வாறு செய்ய வேண்டும்,31/12/2022 இறந்த தேதி, எப்போது வருடம் கும்பிட வேண்டும், தயவு செய்து கூறுங்கள்
இடையில் வெப் சர்வர் கோளாறால் இந்தப் பக்கத்தைத் திறக்க இயலவில்லை. அதனால் பதிலளிக்கக் கால தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்.
இறந்த ஒருவருக்கு அவர் எந்தத் தமிழ் மாதத்தில் இறந்த திதி வளர்பிறையானால் வளர்பிறை, தேய்பிறையானால் தேய்பிறை அதே தமிழ்மாதம், அதே வளர் அல்லது தேய்பிறை திதியில் திதி கொடுக்கவேண்டும். இடையில் வேறொருவர் மரணத்தினால் திதி கொடுப்பதைத் தவிர்க்கவேண்டியதில்லை. (அடுத்த மரணித்தவர் இறந்து 16 நாட்களுக்குள் கர்மா முடிவதற்குள் வந்தால் அடுத்து வரும் அமாவாசை திதிதியில் திதி கொடுக்கவும்).
My younger brother (53) died on 19.11.2023 10.47 am US time. I recieved news on 10.15 pm , am in Madurai India. I have been at kumbakonam mahamaha pond for snanam at 6.00 am that day , gone to visit thillai kali for him, thillai nataraja. At thillai nataraja temple the deekshit asked me to give all the pooja item (1 kg javvadhu, 2kg dravaya powder ) to him as if lord shiva asking give here, as i told i was going to thirukadyur kala samhara moorthy to give part of pooja items. But he demanded to give all here “same siva there , give all siva asking” so i give all there. Alas that night on my way back to madurai i heard he is no more. What is the sakuna ie omen. I am afraid , already we are affected by abichara prayoga. I always pray, chanating. Now without chanting i feel bad and afraid. How many days of theettu for me. Please reply sir
Sir my son-in-law’s Chiththi (paternal side) passed away three months back. (same gothram). How long theettu period is there for my son-in-law and my daughter. Can my daughter visit and pray at Tirupati Balaji temple now? please let me know. thanks
இறந்து பிறந்த பெண் குழந்தைக்கு தீட்டு உண்டா என தெரிய யுத்தங்கள் தம்பி மகளுக்கு
பெற்றோருக்கு மட்டும் தீட்டு உண்டு.
Aiyya…. என் மாமனார் இறந்துவிட்டார். 16 ஆம் நாள் காரியம் நடக்க இன்னும் 2 நாட்கள் உள்ளன. ஆனால் திடீர் என்று நான் தூரம் ஆகி விட்டேன் . 16 ஆம் நாள் அன்று எனக்கு மாதவிலக்கு வந்து 4 வது நாள் ஆகும். அப்பொழுது நடக்கும் காரியங்களில் நான் பங்கு கொள்ளலாமா?’ நான் ஒரே மருமகள்…. என் கணவருக்கு உடன்பிறப்புகள் இல்லை … குழப்பமாக உள்ளது..
உரிய காலத்தில் பதில் அளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்.
16 நாட்களுக்குள் ஏற்படும் மாத விலக்குக்கு இரு நாட்கள் விலகியிருந்தால் போறும்.
ஆகையால் எண்ணைதேய்த்து ஸ்நானம் செய்து கலந்து கொள்வதில் தவறில்லை
ஒன்று விட்ட சித்தப்பா மகன் இறந்தால் எனக்கு தீட்டு எத்தனை நாளைக்கு.?
இறந்த 3 நாட்களுக்குள் சிதம்பரம் கோவிலுக்கு போகலாமா ?
ஒரே கோத்திர பங்காளி 7 தலைமுறைக்குள்ளாக இருந்தால் பத்து நாள் தீட்டு உண்டு.
குழிதர்பணம் பண்ணவேண்டும். பத்துநாள் வரை பூஜை, விளக்கேற்றல், கோலமிடுதல்,
கோயில் செல்லுதல் உள்ளிட்ட எந்த சுபகாரியமும் செய்யக்கூடாது.
Namaskaram! My maamiyar sister’s daughter passed away. How many days theetu for my in-laws and us
Namaskaram,
Your maamiyaar only will get theetu for a period of 1.5 days (90 kadigaas or nazhigai)
No theetu will affect for all others.
Sir,
Namaskaram
I need a clarification on ‘Irappu Theetu’ as per details given below:
We are Tamil brahmin (Iyengar) family. Just a few months back my husband’s sister aged 80 years left us. Her husband already passed away around 20 years back. She doesn’t have any children and nobody from her late husband’s side was available to perform the cremation and other rituals. Due to this, my husband (as her brother) did the cremation and 13 days rituals to depart the soul.
My question is whether we have One Year Theetu (being blood relation), since the late sis ter belong to other gothram after marriage.
Please advise our applicable ‘Theetu period’ as I my husband did the complete rituals including cremation as a “Kartha”.
Extremely sorry to bother you sir.
Please inform.
Thanks, Vasumathy.
Namaskaram,
Kindly remember,
The maximum theetu for any one is 10 days only on any circumstance .
Even if a death occurs to give 10 days theetu while keeping 10 days theetu also will end on the 10th day of the previous theetu.
I hope you are asking about the restrictions for karthas for one year after the death of their parents or pangalis.
If this is the case,
the kartha who is doing an year long ceremony like masikams for their parents are restricted to celebrate festivals, making pilgrimage visits etc. This will not applicable only for the sons / karthas and it will not applicable to pangalis residing separately.
In your case there is no continuation of the karma and your husband is not a real kartha so there is no restrictions for your family.
Celebrate all festivals , best wishes.