SundaraKandam

।। श्रीमद्वाल्मीकिरामायणम् – सुन्दरकाण्डम्॥
प्रथमः सर्हः।। १ ।।

Sundara Kandam

हनुमतः समुद्रतरणम् – ஆஞ்சநேயர் ஸமுத்திரத்தைத் தாண்டுதல்.

ततोरावणनीतायाः सीतायाः शत्रुकर्शनः।
इयेष पदमन्वेष्टुं चारणाचरिते पथि।। १।।
ततः –– பிறகு
शत्रुकर्शनः —- சத்ருக்களின் உருவழிக்கும் அவர்
चारणाचरिते —- சாரணரென்னும் தேவர்கள் சஞ்சரிக்கின்ற
पथि —- மார்கத்தில்
रावणनीतायाः —- ராவணனால் (திருடிக்) கொண்டு போகப்பட்ட
सीतायाः —- ஸீதையின்
पदम् —– இருப்பிடத்தை
अन्वेष्टुं —– தேட
इयेष —– அவா கொண்டார்.

दुष्करं निष्प्रतिद्वनद्वं चिकीर्षन् कर्म वानरः।
समुदग्रशिरोग्रीवो गवां पतिरिवाभौ।।२।।
वानरः – வானரர்
निष्प्रतिद्वनद्वं – ஒப்பற்றதும்
दुष्करं – மற்றெவரும் செய்ய முடியாததுமான
कर्म – காரியத்தை
चिकीर्षन्। – செய்ய விரும்பியவராய்
समुदग्रशिरोग्रीवः – தலையையும் கழுத்தையும் உயர்த்தியவராய்
गवां पतिः इव – ஆணெருதுபோல்
आबभौ – விளங்கினார்.

—— End of 2 ——-
अथ वैडूर्यवर्णेषु शाद्वलेषु महाचलः।
धीरः सलिलकल्पेषु विचचार यथासुखम्।। ३ ।।
द्विजान् वित्रासयन् धीमानुरसा पादपान् हरन् ।
मृगांश्च सुबहून्निघ्नन् ग्रवृद्ध इव केसरी।
अथ – பிறகு
महाचलः – மஹா பலவானும்
धीरः – தீரனும்
धीमान् – புத்திமானும்
द्विजान् – பறவைகளை
वित्रासयन् – பயமுறுத்தியும்
पादपान् – மரங்களை
उरसा – மார்பினால்
हरन् – சாய்த்தும்
वैडूर्यवर्णेषु – வைடூர்ய நிறமுடையதான
सलिलकल्पेषु – குளிர்ந்த நீரையொத்த
शाद्वलेषु – பசும் புற்தரைகளில்
सुबहून् – அநேக
मृगान् – மிருகங்களை
निघ्नन् च – கொன்று கொண்டும்
प्रवृद्धः – மிக கொழுத்திருக்கிற
केसरी इव – சிங்கம் போல்
यथासुखम् – இஷ்டப்படி
विचचार – உலாவினார்
—- End of 3.5 —-
नीललोहितमाञ्जिष्ठपद्मवर्णैः सितासितैः।
स्वभावविहितैश्चित्रैर्धातुभिः समलंकृतम् ।। ४ ।।

स्वभावविहितैः – இயற்கையாய் அமைந்துள்ள
नीललोहितमाञ्जिष्ठपद्मवर्णैः – நீலம், சிவப்பு, மஞ்சள், பத்மவர்ணம்
இந்த வர்ணங்களோடும்
सितासितैः – வெளுப்பு, கறுப்புகளோடும்
चित्रैः – விசித்ரங்களான
धातुभिः – காவிக்கற்களாலும்
समलंकृतम् – அலங்கரிக்கப்பட்டு விளங்குவது.
————– End of 4 ———

कामरूपिभिराविष्टमभीक्ष्णं सपरिच्छदैः।
यक्षकिन्नरगन्धर्वैर्देवकल्पैश्च पन्नगैः।। ६ ।।

कामरूपिभिः – வேண்டிய ரூபமெடுக்கவல்ல
यक्षकिन्नरगन्धर्वैः – இயக்கர், கின்னரர், கந்தர்வர்கள் இவர்களாலும்
देवकल्पैः – தேவர்களையொத்த
सपरिच्छदैः – பரிவாரங்களோடு கூடிய
पन्नगैः च – பன்னகர்களாலும்
अभीक्ष्णं – இடைவிடாது
आविष्टम् – நிறைந்துள்ளது.
—-End of 6 ——
सेव्यमाने गिरिश्रेष्टे बहुनागवरायुते ।
तिष्ठन् गपिवरस्तत्र ह्रदे नाग इवाबभौ ।। ७ ।।

तत्र – அந்த
बहुनागवरायुते – அநேக சிறந்த யானை களால் நிறைந்த
सेव्यमाने – பூஜார்ஹமான
गिरिश्रेष्टे – கிரிச்ரேஷ்டத்தில்
तिष्ठन् – நிற்கும்
कपिवरः – வானரோத்தமர்
ह्रदे – மடுவில்
नागः इव – யானைபோல்
आबभौ – விளங்கினார்.
——- End of 7 ———————-
श्रीः
।। श्रीमद्वाल्मीकिरामायणम् – सुन्दरकाण्डम्॥
प्रथमः सर्गः। १ ।।
–––––––––––––––––––––––––––
स सूर्याय महेन्द्राय पवनाय स्वयंभुवे।
भूतेभ्यश्चाञ्जलिं कृत्वा चकार गमने मतिम् ।। ८ ।।
अञ्जलिं प्राङ्मुखःकुर्वन् पवनायात्मयोनये ।
मनसाऽऽबन्ध रामाय लक्ष्मणाय महाहरिः ।। ९ ।।
सरितः सागरांश्चापि प्रणम्य शिरसा हरिः ।
ज्ञातींस्तान् संपरिष्वज्य कृत्वा चापि प्रदक्षिणम् ।। १० ।।
सः – அந்த
हरिः – கபிலவர்ணரான
महाहिरः – வாரோத்தமர்
सूर्याय – சூர்யபகவானுக்கும்
महेन्द्राय – இந்திரனுக்கும்
पवनाय – வாயுபகவானுக்கும்
स्वयंभुवे – பிரம்மனுக்கும்
भूतेभ्यः – அடியார்களுக்கும்
अञ्जलिं कृत्वा – அஞ்சலிசெய்து
च – அதன் பின்னர்
प्राङ्मुखः – கிழக்கு முகமாய் இருப்பவராய்
आत्मयोनये – தனது தந்தையான
पवनाय – வாயுபகவானுக்கும்
अञ्जलिं – அஞ்சலி
कुर्वन् – செய்துகொண்டு
रामाय – ஸ்ரீராமருக்கும்
लक्ष्मणाय – ஸ்ரீலக்ஷ்மணருக்கும்
मनसा – மனதால்
आवन्द्य – நமஸ்கரித்து
अपि – பின்னர்
सरितः – நதிகளையும்
सागरान् च – ஸமுத்திரங்களையும்
शिरसा – தலையால்
प्रणम्य – வணங்கி
अपि – பின்னர்
ज्ञातीन् – ஞாதிகளை
संपरिष्वज्य – கட்டியணைத்து
च – அதோடு
तान् – அவர்களை
प्रदक्षिणम् – ப்ரதக்ஷிணம்
कृत्वा – செய்து
गमने – புறப்படுவதில்
मतिं चकार – புத்தியைச் செலுத்தினார்.
——- End of 10 ———
–––––––––––––––––––––––––––
अतिष्ठन्मार्गमावृत्य पुण्यं वायुनिषेवितम्।

पुनरागमनायेति वानरैरभिपूजितः।। ११ ।।

पुनः आगमनाय – க்ஷேமமாய் திரும்பி வருவதின் பொருட்டு
इति वानरैः – என்று வானரர்களால்
अभिपूजितः – அசீர்வதிக்கப்பட்டவராய்
पुण्यं – பரிசுத்தமானதும்
वायुनिषेवितं – வாயு சஞ்சரிப்பதுமான
मार्गे – இடத்தை
आवृत्य – நோக்கி
अतिष्ठत् – நின்றார்.
—— End of – 11 ————-
–––––––––––––––––––––––––––
इहैव तिष्ठतेत्युक्त्वा प्रदक्षिणमथाकरोत्।

ततो ववृधे गन्तुं दक्षिणो दक्षिणां दिशम्।। १२ ।।

दक्षिणः – நாகரீகமுடைய அவர்
इह एव – “இங்கேயே
तिष्ठत – இருங்கள்”
इति उक्त्वा – என்று சொல்லி
अथ – பின்னர்
प्रदक्षिणं – ப்ரதக்ஷிணத்தை
अकरोत् – செய்தார்
दक्षिणां – தெற்கு
दिशिं – திக்கை நோக்கி
गन्तुं हि – போகவும்
ततः – அங்கு
ववृधे – வளர்ந்தார்
—-End of 12 ———
–––––––––––––––––––––––––––
प्लवङ्गप्रवरैर्दृष्टः प्लवने कृतनिश्चयः।

ववृधे रामवृद्ध्यर्थं समुद्र इव पर्वसु ।। १३ ।।

प्लवङ्गप्रवरैः – வானரச்ரேஷ்டர்களால்
दृष्टः – பார்துக்கொண்டிருக்கப்பட்டவராய்
प्लवने – தாண்டுவதில்
कृतनिश्चयः – திடமாக மனதைச் செலுத்தியவராய்
पर्वसु – பர்வ தினங்களில்
समुद्रः – ஸமுத்திரம்
इव – போல்
रामवृद्ध्यर्थं – ஸ்ரீராமகார்யஸித்திக்காக
ववृधे – உயர்ந்தோங்கினார்.

—— End of – 13 ————-

निष्प्रमाणशरीरः सन् लिलङ्घयिषुरर्णवम् ।
प्रगृह्य बलवान् बाहू लङ्कामभिमुखः स्थितः।
बाहुभ्यां पीडयामास चरणाभ्यां च पर्वतम् ॥ १४ ॥।।
—————–www.brahminsent.com—————————
बलवान् – பலவானான அவர்
बाहू – முன்னங்கால்களிரண்டையும்
प्रगृह्य – முன் நீட்டிவைத்து
लङ्कां – லங்கையை
अभिमुिखः – நோக்கியவராய்
स्थितः – நின்றுகொண்டு
अर्णवं – ஸமுத்திரத்தை
लिलङ्घयिषुः – தாண்ட விரும்பியவராய்
निष्प्रमाण शरीरः सन् – அளவிலடங்காத
சரீரத்தையுடையவராய்
चरणाभ्यां – பின்னங்கால்களிரண்டாலும்
बाहुभ्यां च – முன்னங்கால்களிரண்டாலும்
पर्वतं – மலையை
पीडयामास – ஊன்றியமுக்கினார்.
—————–End of 14 —————————
–––––––––––––––––––––––––––
तेन पादपमुक्तेन पुष्पौधेण सुगन्धिना।
सर्वतः संवृतः शैलो बभौ पुष्पमयो यथा ॥ १५ ॥।।
—————–www.brahminsent.com—————————
पादपमुक्तेन – மரங்களிலிருந்து விழுந்த
तेन – அந்த
सुगन्धिना – நறுமணமுள்ள
पुष्पौधेण – மலர்க்குவியல்களால்
सर्वतः – இடைவெளியில்லாமல்
संवृतः शैलः – மூடுண்ட மலை
पुष्पमयः यथा – புஷ்பமயமாய்
बभौ – விளங்கிற்று

—————-End of 15 —————————
–––––––––––––––––––––––––––
पीड्यमानस्तु बलिना महेनद्रस्तेन पर्वतः ।
सलिलं संप्रसुस्राव मदमत्त इव द्विपः ॥ १६ ॥।।
—————–www.brahminsent.com—————————
बलिना – பலவானான
तेन – அவரால்
पीड्यमानः – ஊன்றப்பட்ட
महेन्द्रः – மஹேந்திர
पर्वतः तु – மலையும்
मदमत्तः – மதித்துக்கொழுத்த
द्विपः – யானை
इव – போல்
सलिलं – நீரை
संप्रसुस्राव – பெருக்கிற்று.

—————-End of 16 —————————
–––––––––––––––––––––––––––
तेन चोत्तमवीर्येण पीड्यमानः स पर्वतः।
रीतीर्निर्वर्तयामास काञ्चनाञ्जनराजतीः ॥ १८ ॥।।
—————–www.brahminsent.com——————
उत्तमवीर्येण – சிறந்த வீரமுடைய
तेन – அவரால்
पीड्यमानः – ஊன்றப்பட்ட
सः – அந்த
पर्वतः च – மலையும்
काञ्चनाञ्जनराजतीः – ஸுவர்ணம், மை,
வெள்ளி இவைகளில்
रीतीः – ரேகைகளை
निर्वर्तयामास – (பிளவுகளில்)
தெரியச்செய்தது.
—————-End of 18 —————————
मुमोच च शिलाः शैलो विशालाः समनःशिलाः।
मध्यमेनार्चिषा जुष्टो धूमराजीरिवानलः॥ १९ ॥।।
—————–www.brahminsent.com——————
च – மேலும்
शैलः – மலை
समनःशिलाः – மனோசிலையுடன் கூடிய
विशालाः – அகன்ற
शिलाः – கற்பாறைகளை
मध्यमेन – நடுத்தரமான
अर्चिषा – அக்னிஜ்வாலையோடு
जुषः – கலந்து கிளம்புகிற
अनलः – நெருப்பு
धूमराजीः – புகைப்படலங்களை
इव – போல்
मुमोच – வீழ்ந்தது.

—————-End of 19 —————————
हरिणा पीड्यमानेन पीड्यमानानि सर्वशः।
गुहाविष्टानि भृतानि विनेदुर्विकृतैः स्वरैः ॥ २० ॥।।
—————–www.brahminsent.com———–
हरिणा – வானரரால்
पीड्यमानेन – நெருக்குண்டதால்
गुहाविष्टानि – குகைகளில் புகுந்திருந்த
भूतानि – விலங்குகள்
सर्वशः – நாலாபக்கங்களிலும்
पीड्यमानानि – நெருக்குண்டவைகளாய்
विकृतैः – பரிதாபமான
स्वरैः – குரல்களில்
विनेदुः – அலறின.
—————–End of 20 ——————
स महासत्वसन्नादः शैलपीडानिमित्तज्ञः।
पृथिवीं पूरयामास दिशश्चोप वनानि च ॥ २१ ॥।।
———www.brahminsent.com———–
शैलपीडानिमित्तज्ञः – மலையைப் பீடித்த காரணத்தினால்
உண்டான கூக்குரல்
सः – அந்த
महासत्वसन्नादः – பெரிய ப்ராணிகளின்
पृथिवीं – பூமியையும்
दिशः च – திக்குகளையும்
उपवनानि च – சோலைகளையும்
पूरयामास – நிறைந்தொலித்தது.
——— End of 21 ———–
शिरोभिः पृथुभिः सर्पाः व्यक्तस्वस्तिकलक्षणैः ।
वमन्तः पावकं घोरं ददंशुर्दर्शनैः शिलाः ॥ २१ ॥।।
———www.brahminsent.com———–
सर्पाः – பாம்புகள்
व्यक्तस्वस्तिकलक्षणैः – ப்ரகாசமாக விளங்குகின்ற
ஸ்வஸ்திகமென்னும் வெண்கோடுகளுடைய
पृथुभिः शिरोभिः – பருத்த தலைகளால்
घोरं – கொடிய
पावकं – அக்னியை
वमन्तः – கக்கிக்கொண்டு
दशनैः – பற்களால்
शिलाः – கற்களை
ददंशुः – கடித்தன.
———––––– End of 22 ——————–
तास्तदा सविषैर्दष्टाः कुपितैस्तैर्महाशिलाः ।
जज्वलुः पावकोद्दीप्ता बिभिदुश्च सहस्रधा ॥ २३ ॥।।
———www.brahminsent.com———–
कुपितैः – சினங்கொண்ட
सविषैः – நஞ்சுடன் கூடிய
तैः – அவைகளால்
दष्टाः – கடிக்கப்பட்ட
महाशिलाः – பெரும் பாறைகள்
पावकोद्दीप्ताः – அனல் பிடித்து
ஜ்வலிக்கிறவைகளாய்
जज्वलुः – எரிந்தன
च – மேலும்
तदा – அப்பொழுது
सहस्रधा – ஆயிரம் துண்டங்களாக
ताः – அவைகள்
बिभिदुः – பிளந்து விழுந்தன.
———- End of 23 ———————–
श्रीः
।। श्रीमद्वाल्मीकिरामायणम् – सुन्दरकाण्डम्॥
प्रथमः सर्गः। १ ।।
–––––––––––––––––––––––––––

तस्मिन् – அந்த
पर्वते – மலையில்
जातानि – முளைத்திருந்த
औषधजालानि – பச்சிலை மூலிகைகள்
यानि च – எவைகளோ அவைகளும்
विषघ्नानि अपि – விஷத்தை நீக்குபவையாயினும்
नागानां – பாம்புகளின்
विषं शमितुं – விஷத்தை நீக்க
न शेकुः – வலிமையற்றவையாயிருந்தன.

———- End of 24 ———————–
अपरे तु महाकाया वमन्तोऽग्निं स्वतेजसा।
कन्दरेभ्यो विनिष्पेतुः कपिपादनिपीडिताः॥ २५ ॥।।
———www.brahminsent.com———–
महाकायाः – பெரும் சரீரமுடைய
अपरे – வேறுசில
स्वतेजसा – தங்கள் வீரியத்தால்
अग्निं – நெருப்பை
वमन्तः – கக்கிக்கொண்டு
कन्दरेभ्यः – குகைகளினின்றும்
विनिष्पेतुः – வெளியில் கிளம்பி விழுந்தன
तु – இந்த ஸ்திதியில்
कपिपादनिपीडिताः – வானரத்தின் கால்களால்
நசுக்குண்டன.
———- End of 25 ———————–
–––––––––––––––––––––––––––
गिरेराक्रम्यमाणस्य तरवस्तरुणाङ्कुराः ।
मुमुचुः पुष्पवर्षाणि व्यक्तमुत्पलगन्धिनः॥ २६ ॥।।
———www.brahminsent.com———–
आक्रम्यमाणस्य – அதிக பாரத்தினால் நெருக்குண்ட
गिरेः – பர்வதத்தினுடைய
तरुणांकुराः – இளங்குருத்துகளோடு கூடிய
तरवः – மரங்கள்
व्यक्तं – ஸ்பஷ்டமான
उत्पलगन्धिनः – செஞ்சந்தன வாசனையோடு
கூடினவைகளாய்
पुष्पवर्षाणि – புஷ்பமாரியை
मुमुचुः – பொழிந்தன
—————- End of 26 ———————–
गौरिकाञ्जनसंजुष्टा हरितालसमावृताः।
व्यदीर्यन्त गिरेस्तस्य शिलास्ताः समनःशिलाः ।। २७ ।।
———www.brahminsent.com———–
तस्य – அந்த
गिरः – பர்வதத்தின்
गौरिकाञ्जनसंजुष्टाः – சிவப்பு, கருப்பு கலந்த
हरितालसमावृताः – மஞ்சள் நிறம் கலந்த
ताः – அந்த
शिलाः – கற்கள்
व्यदीर्यन्त – வெடித்துச் சிதறின
—————- End of 27 ———————–
सचन्दनारुणस्ताम्रश्चित्रः काननधातुभिः ।
क्षिप्तः शिखिनिभैर्दीपैर्दीप्तगैरिकधातुभिः ।। २८ ।।
———www.brahminsent.com———–
दीप्तगैरिकधातुभिः – ப்ரகாசிக்கிற கற்களாலும்
काननधातुभिः – காட்டுக் கற்களாலும்
शिखिनिभैः – அக்னியை ஒத்த
दीपैः – ப்ரகாசங்களோடு
क्षिप्तः – பிளக்கப்பட்டதாய்
सचन्दनारुण – செஞ்சந்தன நிறத்தோடு கூடிய
ताम्रः – சிவந்ததாய்
चित्रः – அலங்கரிக்கப்பட்டது.
—————- End of 28 ———————–
भिद्यतेऽयं गिरिर्भूतैरिति मत्वा तपस्विनः ।
त्रस्ता विद्याधरास्तस्मादुत्पेतुः स्त्रीगणैः सह ।। २९ ।।
पानभूमिगतं हित्वा हैममासवभाजनम् ।
पात्राणिं च महार्हाणि करकांच हिरण्मयान् ।।३० ।।
लेह्यानुच्चावचान् भक्ष्यान् मांसानि विविधानि च ।
आर्षभाणि च चर्माणि खङ्गांश्च कनकत्सरून् ।। ३१।।
———www.brahminsent.com—————————
अयं – இந்த हिरण्मयान् – பொன்னாற் செய்த
गिरिः – பர்வதம் करकान् च – குடங்களையும்
भूतैः – பூதங்களால் उच्चावचान् – மேன்மையான
भिद्यते – பிளக்கப்படுகிறது लेह्यान् – லேஹ்யங்களையும்
इति – என்று भक्ष्यान् – பக்ஷணங்களையும்
मत्वा – எண்ணி विविधानि – பலவித
तपस्विनः – ரிஷிகளும் मांसानि च – இறைச்சிகளையும்
त्रस्ताः – பயந்த आर्षभाणि – எருதுத்தோலாலான
विद्याधराः च – வித்யார்த்திகளும் चर्माणि च – கேடயங்களையும்
पानभूमिगतं – குடிக்குமிடம் வந்த कनकत्सरून् – தங்கப்பிடியுடைய
हैमं – பொன்னாலான खङ्गान् च – வாள்களையும்
आसवभाजनम् – கள்தொட்டிகளையும் हित्वा – போட்டுவிட்டு
महार्हाणि – விலையுயர்ந்த स्त्रीगणैः सह – பெண்களோடு கூட
पात्राणि च – பாத்திரங்களையும் तस्मात् – அதிலிருந்து
उत्पेतुः – உயரக்கிளம்பினார்கள்.
—————- End of 31 ————————————–
कृतकण्ठगुणाः क्षीबा रक्तमाल्यानुलेपनाः।
रक्ताक्षाः पुष्कराक्षाश्च गगनं प्रतिपेदिरे ।। ३२ ।।
———www.brahminsent.com———–
च – மேலும்
कृतकण्ठगुणाः – கழுத்தில் மாலை அணிந்தவர்களும்
पुष्कराक्षाः – வெண்தாமரை போன்ற
கண்களையுடையவர்களும்
क्षीबाः – மதிமங்கினவர்களும்
रक्तमाल्यानुलेपनाः – சிவப்பு மாலை, சந்தனம்
இவைகளை அணிந்தவர்களும்
रक्ताक्षाः – சிவந்த கண்களை உடையவர்களும்
गगनं – ஆகாசத்தை
प्रतिपेदिरे – அடைந்தார்கள்.
—————- End of 32 ———————–
हारनूपुरकेयूरपारिहार्यधराः स्त्रियः।
विस्मिताः सस्मितास्तस्थुराकाशे रमणैः सह।। ३३ ।।
———www.brahminsent.com———–
हारनूपुरकेयूर – முத்துமாலை, சிலம்பு, தோள்வளை,
पारिहार्यधराः – முதலிய ஆபரணங்களணிந்த
स्त्रियः – பெண்கள்
रमणैः, सह – கணவர்களோடு கூட
विस्मिताः – ஆச்சர்யமடைந்தவர்களாய்
सस्मिताः – புன்னகைத்துக்கொண்டு
आकाशे – ஆகாயத்தில்
तसथुः – நின்றார்கள்.
—————- End of 33 ———————–
दर्शयन्तो महाविद्यां विद्याधरमहर्षयः ।
सहितास्तस्थुराकाशे वीक्षाञ्चक्रुश्च पर्वतम् ॥ ३४ ॥
———www.brahminsent.com———–
सहिताः – ஒன்று சேர்ந்த்
विद्याधरमहर्षयः – வித்யாதரர்களும்
மஹர்ஷிகளும்
महाविद्यां – மஹாமந்திரஞானத்தை
दर्शयन्तः – காண்பித்துக்கொண்டு
आकाशे – ஆகாயத்தில்
तस्थुः – நின்றார்கள்
पर्वतं च – மலையையும்
वीक्षाञ्चक्रुः – பார்த்தார்கள்.
—————- End of 34 ———————–
शुश्रुवुश्च तदा शब्दमृषीणां भावितात्मनाम् ।
चारणानाञ्च सिद्धानां स्थितानां विमलेऽम्बरे॥ ३५ ॥
———www.brahminsent.com———–
तदा – அப்பொழுது
विमले – நிர்மலமான
अम्बरे – ஆகாயத்தில்
स्थितानां – நின்றுகொண்டிருந்த
सिद्धानां – ஸித்தர்களுடையவும்
चारणानां च – சாரணர்களுடையவும்
भावितात्मनां – பரமாத்ம த்யாநிஷ்டர்களான
ऋषीणां च – ரிஷிகளுடையவும்
शब्दं शुश्रुवुः – சொல்லைக் கேட்டார்கள்.
—————- End of 35 ———————–
एष पर्वतसङ्काशो हनुमान् मारुतात्मजः ।
तितीर्षति महावेगः समुद्रं मकरालयम् ॥ ३६ ॥
———www.brahminsent.com———–
मारुतात्मजः – வாயுகுமாரராகிய
पर्वतसङ्काशो – மலைபோன்ற
महावेगः – மிக்க உறுதியுடைய
एषः – இந்த
हनुमान् – ஹநுமார்
मकरालयम् – மகரமீன்களுக்கு
இருப்பிடமாகிய
समुद्रं – ஆழ்கடலை
तितीर्षति – தாண்ட எண்ணுகிறார்.
—————- End of 36 ———————–
–––––––––––––––––––––––––––
रामार्थं वानरार्थं च चिकीर्षन् कर्म दुष्करम् ।
समुद्रस्य परं पारं दुष्प्रापं प्राप्तुमिच्छति ॥ ३७ ॥
———www.brahminsent.com———–
रामार्थं – ஸ்ரீராமருக்காகவும்
वानरार्थं च – வானரர்களுக்காகவும்
दुष्करम् – மற்றெவரும் செய்யதற்கரிய
कर्म – செயலை
चिकीर्षन् – செய்ய விரும்பியவராய்
दुष्प्रापं – கிட்டுதற்கரிய
समुद्रस्य – கடலின்
परं पारं – எதிர்கரையை
प्राप्तुं – அடைய
इच्छति – எண்ணுகிறார்.
—————- End of 37 ———————–
इति विद्याधराः श्रुत्वा वचस्तेषां तपस्विनाम् ।
तमप्रमेयं ददृशुः पर्वते वानरर्षभम् ॥ ३८ ॥
———www.brahminsent.com——————
इति – இப்படி
तेषां – அந்த
तपस्विनाम् – ரிஷிகளுடைய
वचः – சொல்லை
श्रुत्वा – கேட்டு
तं – அந்த
अप्रमेयं – அளவற்ற ஆற்றலுடைய
वानरर्षभम् – வானரோத்தமரை
पर्वते – மலையில்
विद्याधराः – வித்யாதரர்கள்
ददृशुः – கண்டார்கள்.
—————- End of 38 ———————–
दुधुवे च स रोमाणि चकम्पे चाचलोपमः ।
ननाद सुमहानादं सुमहानिव तोयदः ॥ ३९ ॥
———www.brahminsent.com——————
अचलोपमः – மலைக்கு நிகரான
सः – அவர்
चकम्पे – குலுங்கினார்
रोमाणि च – ரோமங்களையும்
दुधुवे – சிலிர்கச்செய்தார்
सुमहान् – மிகப்பெருத்த
तोयदः – நீர்கொண்ட மேகம்
इव च – போலவும்
सुमहानादं – பேரொலியை
ननाद – முழக்கினார்.
—————- End of 39 ———————–
–––––––––––––––––––––––––––—————
आनुपूर्व्येण वृत्तश्च लाङ्गूलं लोमभिश्चितम् ।
उत्पतिष्यन् विचिक्षेप पक्षिराज इवोरगम् ॥ ४० ॥
———www.brahminsent.com——————
उत्पतिष्यन् – மேலெழும்ப எண்ணங்கொண்ட அவர்
आनुपूर्व्येण – அடிமுதல் நுனிவரையில் முறையே
वृत्तं – நீண்டும் சுருண்டும்
रोमभिः – மயிர்களால்
चितं च – செறிந்தும் இருக்கின்ற
लांगूलं – வாலை
पक्षिराजः – கருடர்
उरगं – பாம்பை
इव – சுழற்றுவதுபோல
चिक्षेप – சுழற்றி உதறினார்.
—————- End of 40 ———————–
तस्य लाङ्गूलमाविद्धमतिवेगस्य पृष्ठतः ।
ददृशे गरुडेनेव ह्रियमाणो महोरगः ॥ ४१ ॥
———www.brahminsent.com——————
अतिवेगस्य – மிக வேமுடையவரான
तस्य – அவருடைய
पृष्ठतः – பின்புறத்தில்
आविद्ध – சுழற்றி உதறப்பட்ட
लाङ्गूलं – வால்
गरुडेन – கருடரால்
ह्रियमाणः – இழுக்கப்படும்
महोरगः – பெரும் பாம்பு
इव – போல்
ददृशे – தோன்றிற்று.
—————- End of 41 ———————–
बाहू संस्तम्भयामास महापरिघसन्निभौ ।
ससाद च कपिःकठ्यां चरणौ सञ्चुकोच च ॥ ४२ ॥
———www.brahminsent.com——————
कपिः – வானரர்
महापरिघसन्निभौ – பெரிய கணையமரங்கள் போன்ற
बाहू – கைகளை
संस्तंभयामास – அசையாமல் ஊன்றினார்
कठ्यां च – இடையையும்
ससाद – சுருக்கினார்
चरणौ च – கால்களையும்
सञ्चुकोच – மடக்கினார்.
—————- End of 42 ———————–
संहृत्य च भुजौ श्रीमांस्तथैव च शिरोधराम् ।
तेजः सत्त्वं तथा वीर्यमाविवेश स वीर्यवान् ॥ ४३ ॥
———www.brahminsnet.com——————
वीर्यवान् – வீர்யவானான
सः – அந்த
श्रीमान् – ஸ்ரீமான்
भुजौ – தோள்களையும்
तथा एव – அப்படியே
शिरोधरां – கழுத்தையும்
संहृत्य – சுருக்கி
तेजः – தேஜஸ்ஸையும்
सत्त्वं च – ஆண்மையையும்
वीर्यं च – வீரத்தையும்
तथा – அப்படியே
आविवेश – மேற்கொண்டார்.
—————- End of 43 ———————–
मार्गमालोकयन्दूरादूर्ध्वं प्रणिहितेक्षणः ।
रुरोध हृदये प्राणानाकाशमवलोकयन् ॥ ४४ ॥
———www.brahminsnet.com——————
ऊर्ध्वं – மேல்
प्रणिहितेक्षणः – நோக்கிய கண்களையுடையவராய்
दूरात् – தூரத்தினின்று
मार्गं – வழியை
आलोकयन् – பார்த்துக்கொண்டு
आकाशं – ஆகாசத்தையும்
अवलोकयन् – உற்றுநோக்கியவராய்
हृदये – நெஞ்சினுள்ளே
प्राणान् – மூச்கை
रुरोध – அடக்கினார்.

—————- End of 44 ———————–
पद्भ्यां दृढमवस्थानां कृत्वा स कपिकुञ्चरः ।
निकुञ्ज्य कर्णौ हनुमानुस्पतिष्यन् महाबलः ॥
वानरान् वानरश्रेष्ठ इदं वचनमब्रवीत् ॥ ४५ ॥
———www.brahminsnet.com——————
कपिकुञ्चरः – வானரச்ரேஷ்டர்
पद्भ्यां – இரண்டு கால்களையும்
इदं – திடமாக
अवस्थाने कृत्वा – ஊன்றி
कर्णौ निकुञ्ज्य – காதுகளை வளைத்து
उत्पतिष्यन् – ஆகாயத்தில் பறக்கக் கருதிய
महाबलः – மஹா பலவானான
वानरश्रेष्ठः – வானரர்களில் சிறந்த
सः हनुमान् – அந்த ஹநுமார்
वानरान् – வானரர்களைப் பார்த்து
इदं – இந்த
वचनं – சொல்லைச்
अब्रवीत् – சொன்னார்.
—————- End of 45 ——————–
यथा राघवनिर्मुक्त्तः शरः श्वसनविक्रमः ।
गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम् ॥ ४६ ॥
———www.brahminsnet.com——————
राघवनिर्मुक्त्तः – ஸ்ரீராமர் விட்ட
शरः – பாணம்
श्वसनविक्रमः – வாயுவேகமுடையதாய்
यथा – எப்படி
गच्छेत् – போகுமோ
तद्वत् – அதுபோலவே
रावणपालितां – ராவணனால் பாதுகாக்கப்பட்ட
लङ्कां – லங்கையை நோக்கி
गमिष्यामि – போவேன்.
—————- End of 46 ——————–
न हि द्रक्ष्यामि यदि तां लङ्कायां जनकात्मजाम् ।
अनेनैव हि वेगेन गमिष्यामि सुरालयम् ॥ ४७ ॥
———www.brahminsnet.com——————
लङ्कायां – லங்காபுரியிலே
तां जनकात्मजां – அந்த ஜானகியை
न द्रक्ष्यामि – காணேன்
यदि हि – ஆகில்
अनेन – இந்த
वेगेन एव – வேகத்துடனேயே
सुरालयं हि – தேவருலகத்திற்கும்
गमिष्यामि – செல்வேன்.
—————- End of 47 ——————–
यदि वा त्रिदिवे सीतां न द्रक्ष्याम्यकृतश्रमः ।
बद्ध्वा राक्षसराजानम् आनयिष्यामि रावणम् ॥ ४८ ॥
———www.brahminsnet.com——————
त्रिदिवे वा – தேவருலகத்திலும்
सीतां – சீதையை
न द्रक्ष्यामि यदि – காணேனாகில்
अकृतश्रमः – மனம் வருந்தாதவனாய்
राक्षसराजानं – அரக்கர்களின் அரசனான
रावणं – ராவணனை
बद्ध्वा – பிடித்துக்கட்டி
आनयिष्यामि – கொண்டு வருவேன்.
—————- End of 48 ——————–
सर्वथा कृतकार्योऽहमेष्यामि सह सीतया ।
आनयिष्यामि वा लङ्कां समुत्पाट्य सरावणम् ॥ ४९ ॥
———www.brahminsnet.com——————
सर्वथा- – – – -எவ்விதத்திலும்
अहं – – – – –நான்
कृतकार्यः – – -கார்யத்தை முடித்தவனாய்
सीतया सह – -சீதையோடுகூடவே
एष्यामि- — -வருவேன்;
वा- – – – – -இல்லையெனில்
सरावणं- — -ராவணனுடன் கூடிய
लङ्कां- – — -லங்காபுரியை
समुत्पाट्य- -அடியோடு பிடுங்கி
आनयिष्यामि- கொண்டு வருவேன்.

—————- End of 49 ——————–
एवमुक्त्वा तु हनुमान् वानरान् वानरोत्तमः ।
उत्पपाताथ वेगेन वेगवानविचारयन् ॥
सुपर्णमिव चात्मानं मेने स कपिकुञ्चरः ॥ ५० ॥
———www.brahminsnet.com——————
वानरान्…….. – வானரர்களைப் பார்த்து
एवं…………. – இவ்வாறு
उक्त्वा तु……. – சொல்லிவிட்டு
वानरोत्तमः ….. – வானரச்ரேஷ்டரான
हनुमान् …….. – ஹனுமார்
वेगवान् …….. – அதிவேகமுடையவராய்
अविचारयन् …. – மனக்கவலையற்றவராய்
आत्मानं …….. – தம்மை
सुपर्णं इव …… – கருடனைப்போலவே
मेने …………. – நினைத்தார்
अथ …………. – ஸந்தேஹமின்றி
सः ………….. – அந்த
कपिकुञ्चरः …… – வானரவீரர்
च ……………. – உடனே
वेगेन ………… – விரைவாக
उत्पपात ……… – மேலே பாய்ந்தார்
—————- End of 50 ——————–
समुत्पतति तस्मिंस्तु वेगात्ते नगरोहिणः ।
संहृत्य विटपान् सर्वान् समुत्पेतुः समन्ततः ॥ ५१ ॥
———www.brahminsnet.com——————
तस्मिन्…………….இ- அந்த
वेगात्……..இ………– வேகத்தோடு
समुत्पति …………..- உயரக்கிளம்புகையில்
ते नगरोहिणः तु..- அந்த மலையில் முளைத்துள்ள
…………………………..மரங்கள் யாவும்
सर्वान्……………….- எல்லா.
विटपान्……………- கிளைகளையும்……………..
संहृत्य………………- சுருக்கிக்கொண்டு…….
समन्ततः………….- நான்கு புறத்திலும்….
समुत्पेतुः………….- மேலெழுந்தன……..
—————- End of 51 ——————–
स मत्कोष्टिभकान् पादपान् पुष्पशालिनः ।
उद्वहन्नूरुवेगेन जगाम विमलेऽम्बरे ॥ ५२ ॥
———www.brahminsnet.com——————
मत्तकोयष्टि……….- கொழுத்த
भकान्……………- நாரைகளோடு கூடின
पुष्पशालिनः…….- புஷ்பம் நிறைந்த……
पादपान्…………- வ்ருக்ஷங்களை
ऊरुवेगेन……….- தொடை வேகத்தால்
उद्वहन्…………..- இழுத்துக்கொண்டு
विमले……………- நிர்மலமான
अम्बरे……………- ஆகாயத்தில்
सः जगाम………- அவர் சென்றார்…..
—————- End of 52 ——————–
ऊरुवेगोद्धता वृक्षा मुहूर्तं कपिमन्वयुः ।
प्रस्थितं दीर्घमध्वानं स्वबन्धुमिव बान्धवाः॥ ५३ ॥
———www.brahminsnet.com——————
ऊरुवेगोद्धताः….- தொடைவேகத்தால்
……………….. உயரக்கிளம்பிய
वृक्षः………………- மரங்கள்
दीर्घं अध्वनां …..- நெடுவழி
प्रस्थितं………….- செல்லப்புறப்பட்ட……
स्वबनधुं………..- தம்சுற்றத்தாரை
बान्धवाः ……….- உறவினரைப்
इव ……………..- போல
मुहूर्तं …………..- முஹூர்தநேரம்
कपिं ……………- வானரரின்
अन्वयुः …………- பின்தொடர்ந்தன…..
—————- End of 53 ——————–
तदूरुवेगोन्मथिताः सालाश्चानये नगोत्तमाः ।
अनुजग्मुर्हनूमन्तं सैन्या इव महीपतितम् ॥ ५४ ॥
———www.brahminsnet.com——————
तदूरु…,,,,,,,,,.- அவருடைய தொடையின்
वेगोन्मथिताः..- வேகத்தினால் பிடுங்கப்பட்ட
सालाः ………- ஆச்சா மரங்களும்
अन्ये…………- மற்ற……
नगोत्तमः च..- நன்மரங்களும்
महीपतिं …..- மஹீபதியை
सेन्याः ……..- போர்வீரர்கள்
इव …………- பின்தொடர்வதுபோல்
हनूमन्तं ……- ஹநுமாரைப்
अनुजग्मुः ….- பின்தொடர்ந்து சென்றன…..
—————- End of 54 ——————–
सुपुष्पिताग्रैर्बहुभिः पादपैरन्वितः कपिः ।
हनुमान् पर्वताकारो बभूवाद्भुतदर्शनः ॥ ५५ ॥
———www.brahminsnet.com——————
पर्वताकारः….- மலைபோன்ற
कपिः………..- வானரரான
हनुमान् ……- ஹநுமான்
सुपुष्पिताग्रैः.- நன்கு பூத்துச்செறிந்த……
बहुभिः……..- பற்பல
पादपैः …….- மரங்களால்
अन्वितः …..- சூழப்பட்டவராய்
अद्भुत …..- வியக்கத்தக்க
दर्शनः …….- தோற்றமுடையவராய்
बभूव ……..- ஆகினார்….
—————- End of 55 ——————–
सारवन्तोऽथ ये वृक्षा न्यमज्जन् लवणांभसि।
भयादिव महेन्द्रस्य पर्वता वरुणालये ॥ ५६ ॥
———www.brahminsnet.com——————
अथ……………- பிறகு
सारवन्तः…….- வயிரமான
वृक्षाः …………- மரங்கள்
ये………………- எவையோ அவை……
महेन्द्रस्य……..- இந்திரனுடைய
भयात् ………..- பயத்தினால்
पर्वताः ………..- லைகளைப்
इव …………….- போல
लवणांभसि ….- உப்புநீருள்ள
वरुणालये…….- ஆழ்கடலில்
न्यमज्जन्……..- வீழ்ந்து மூழ்கின….
—————- End of 56 ——————–
स नानाकुसुमैः कीर्णः कपिः साङ्कुरकोरकैः।
शुशुभे मेघसङ्काशः खद्योतैरिव पर्वतः॥ ५७ ॥

———www.brahminsnet.com——————
मेघसङ्काशः…….- மேகம் போன்ற
सः कपिः……….- அந்த வானரர்
नानाकुसुमैः ….- பல்வகைமலர்களாலும்
सांकुरकोरकैः..- குருத்து,மொட்டுகளாலும்……
खद्योतैः………..- மின்மினிப்பூச்சிகளால்
कीर्णः …………- வியாபிக்கப்பட்ட
पर्वतः …………- மலை
इव …………….- போல
शुशुभे ………..- விளங்கினார்
—————- End of 57 ——————–
विमुत्त्कास्तस्य वेगेन मुक्त्वा पुष्पाणि ते द्रुमाः ।
अवाशीर्यन्त सलिले निवृत्ताः सुहृदो यथा ॥ ५८ ॥
———www.brahminsnet.com——————
तस्य………….- அவனுடைய
वेगेन…………- வேகத்தால்
विमुक्ताः …..- விடுபட்ட
ते द्रुमाः……..- அந்த மரங்கள்……
पुष्पाणि…….- புஷ்பங்களை
मुक्त्वा ……..- உதிர்த்து
निवृत्ताः ……- வழிவிட்டுத் திரும்பி
सुहृदः यथा .- நண்பரைப் போல
सलिले ……..- நீரில்
अवाशीर्यन्त.- வீழ்ந்து பரவின.
—————- End of 58 ——————–
लघुत्वेनोपपन्नां तद्विचित्रं सागरेऽपतत् ।
द्रुमाणां विविधं पुष्पं कपिवायुसमीरितम् ॥ ५९ ॥
———www.brahminsnet.com——————
द्रुमाणां…………..- மரங்களின்
विचित्रं ………….- பலவர்ணமுள்ளதும்
विविधं……….- விதவிதமானதும்……
लघुत्वेन उपपन्नं- மிகலகுவானதும்
कपिवायुसमीरितं- வானரரின் காற்றினால்
………………………சிதறுண்ட
तत् ……………….- அந்த
पुष्पं ……………..- புஷ்பம்
सागरे ……………- ஸமுத்திரத்தில்
अपतत्…………..- விழுந்தது.
—————- End of 59 ——————–
ताराचितमिवाकाशं प्रबभौ स महार्णवः ॥ ६० ॥
पुष्पौघेणानुबद्धेन नानावर्णेन वानरः।
बभौ मेघ इवोद्यन् वै विद्युद्गणविभूषितः ॥ ६१ ॥

———www.brahminsnet.com——————
सः……………..- அந்த
महार्णवः ……..- பெருங்கடல்
ताराचितं……- நக்ஷத்திரங்கள் நிரம்பிய……
आकाशं इव ..- ஆகாசம் போல
प्रबभौ ………..- திகழ்ந்தது
अनुबद्धेन …..- பின்தொடர்ந்து மேலேபடிந்த
नानावर्णेन ….- பற்பலநிறமுள்ள
पुष्पौघेण …….- மலர்க்குவியலால்
विद्युद्गण ……- மின்னல்கொடிகளால்
विभूषितः…….- அலங்கரிக்கப்பட்ட
उद्यन्…………- மேலெழுந்த
मेघः इव………- மேகம் போலவே
वानरः बभौ वै.- வானரர் விளங்கினர்.
—————- End of 61 ——————–
तस्य वेगसमाधूतैः पुष्पैस्तोयमदृश्यत ।
ताराभिरभिरामाभिरुदिताभिरिवाम्बरम्॥ ६२ ॥

———www.brahminsnet.com——————
तस्य…………..- அவருடைய
समाधूतैः ……..- விசையால் சிதறுண்ட
पुष्पैः………….- பூக்களால்……
तोयं ………….- ஜலம்
अभिरामाभिः.- மிக அழகுற்று
उदिताभिः ….- உதித்த
ताराभिः …….- நக்ஷத்திரங்களினால்
अम्बरम् …….- ஆகாயம்
इव …………..- போல
अदृश्यत……- காணப்பட்டது.
—————- End of 62 ——————–
प्रचकर्ष महामेघं समुपोद्धातविद्युतम् ।
प्रबलः कपिराजस्य वायुर्मार्गे विनिस्सृतः॥ ६३ ॥

———www.brahminsnet.com——————
कपिराजस्य…- வானரச்ரேஷ்டருடைய
मार्गे ………….- வழியில்
विनिःसृतः….- புறப்பட்ட….
प्रबलः ……..- பெரிய
वायुः………..- காற்று
समुपोद्धात..- அடிக்கடிஉண்டான
विद्युतं ……- மின்னலோடுகூடிய
महामेघं …..- பெருமேகத்தை
प्रचकर्ष ……- இழுத்தது.
—————- End of 63 ——————–
समुत्पतितमेघस्य समुद्धूतजलस्य च ।
सममासीत्तदा रूपं सागरस्याम्बरस्य च॥ ६४ ॥

———www.brahminsnet.com——————
समुत्पतित..- உயரேஎழுந்த
मेघस्य …….- மேகத்தினுடைய
अम्बरस्य च- ஆகாசத்தினுடையவும்
समुध्दूत….- ஓங்கிஎழுந்த….
जलस्य …..- ஜலத்தினுடைய
सागरस्य च- ஸமுத்திரத்தினுடையவும்
रूपं ……..- தோற்றம்(ங்கள்)
तदा………- அப்பொழுது
सममं ……- ஸமமானதாக
आसीत् ….- இருந்தது.
—————- End of 64 ——————–
तस्याम्बरगतौ बाहू ददृशाते प्रसारितौ ।
पर्वताग्राद्विनिष्क्रान्तौ पञ्चास्याविव पन्नगौ॥ ६५ ॥

———www.brahminsnet.com——————
तस्य……………- அவருடைய
अम्बरगतौ …..- ஆகாசமார்கத்தில்
प्रसारितौ……..- நீட்டப்பட்டிருந்த
बाहू…………..- இரு கைகளும்….
पर्वताग्रात् …..- மலைஉச்சியிலிருந்து
विनिष्क्रान्तौ…- வெளிக்கிளம்பும்
पञ्चास्यौ ……..- ஐந்துதலையுடைய
पन्नगौ…………- இரு நாகங்கள்
इव ……………- போல
ददृशाते ……..- காணப்பட்டன.
—————- End of 65 ——————–

तस्य विद्युत्प्रभाकारे वायुमार्गानुसारिणः ।
नयने विप्रकाशेते पर्वतस्थाविवानलौ॥ ६७ ॥

———www.brahminsnet.com——————
वायुमार्ग……..- காற்றின் மார்கத்தை
अनुसारिणः ..- தொடர்ந்து செல்கின்ற
तस्य………….- அவருடைய
विद्युद्………- மின்னல்….
प्रभाकारे …..- ஒளிக்கு நிகரான
नयने…………- கண்கள் இரண்டும்
पर्वतस्थौ …..- மலைமேல் எரிகின்ற
अनलौ………- தீக்கள்
इव ………….- போல
विप्रकाशेते…- விளங்கின.
—————- End of 67 ——————–
पिङ्गे पिङ्गाक्षमुख्यस्य बृहती परिमण्डले।
चक्षुषी संप्रकाशेते चन्द्रसूर्याविवोदितौ॥ ६८ ॥

———www.brahminsnet.com——————
पिङ्गाक्षमुख्यस्य…- வானரச்ரேஷ்டருடைய
पिङ्गे ………………- பிங்களவர்ணமான
बृहती……………..- பெரிய
चक्षुषी…………….- இரு கண்கள்….
परिमण्डले ……..- பரிமண்டலத்தில்
उदितौ……………- உதயமான
चन्दरसूर्यौ ……..- சந்திரஸூர்யர்கள்
इव ………………- போல
संप्रकाशेते …….- நன்கு விளங்கின.
—————- End of 68 ——————–
मुखं नासिकया तस्य ताम्रया ताम्रमाबभौ।
सन्ध्यया समभिस्पृष्टं यथा सूर्यस्य मण्डलम् ॥69 ॥

———www.brahminsnet.com——————
तस्य…………….- அவருடைய
ताम्रया ………..- சிவந்த
नासिकया…….- மூக்கினால்
ताम्रं मुखं…….- சிவந்த முகம்….
सन्ध्यया …….- சந்தியின்செம்மையினால்
समभिस्पृष्टं….- வ்யாபிக்கப்பட்ட
सूर्यस्य ………- சூரிய
मण्डलं ……..- மண்டலம்
यथा आबभौ..- போல விளங்கிற்று.
—————- End of 69 ——————–
लाङ्गूलञ्च समाविद्धं प्लवमानस्य शोभते।
अम्बरे वायुपुत्रस्य शक्रध्वज इवोच्छ्रितः ॥७० ॥

———www.brahminsnet.com——————
प्लवमानस्य…- தாவுகிற
वायुपुत्रस्य ….- வாயுகுமாரருடைய
समाविद्धं……- உயரேஎடுத்த
लांगूलं च……- வாலும்….
अम्बरे ……..- ஆகாயத்தில்
उच्छ्रितः…….- உயர்த்தி நாட்டப்பட்ட
चक्रध्वजः …- இந்த்ர த்வஜம்
इव ………..- போல
शोभते……..- திகழ்ந்தது.
—————- End of 70 ——————–
लाङ्गूलचक्रेण महान् शुक्लदंष्ट्रोऽनिलात्मजः।
व्यरोचत महाप्राज्ञः परिवेषीव भास्करः॥७१ ॥

———www.brahminsnet.com——————
शुक्लदंष्ट्रः……..- வெளுத்த கோரைப்பற்களை
…………c………..உடையவரும்
महान् ………..- மஹிமையுடையவரும்
महाप्राज्ञः……..- மிகச்சிறந்த புத்திமானும்
अनिलात्मजः..- வாயுகுமாரர்….
लांगूलचक्रेण..- வாலின் வட்டத்தினால்
परिवेषी………- பரிவேடம் சூழ்ந்த
भास्करः ……- ஸூரியனைப்
इव …………..- போல
व्यरोचत……..- விளங்கினார்.
—————- End of 71 ——————–
स्फिग्देशेनाभिताम्रेण रराज स महाकपिः ।
महता दारितेनेव गिरिर्गैरिकधातुना॥७१ ॥

———www.brahminsnet.com——————
सः महाकपिः..- அப்பெரியவானரர்
अभिताम्रेण …- மிகச்சிவந்த
स्फिग्देशेन….- வாலின் அடியினால்
महता………..- பெரிய…
दारितेन…….- பிளக்கப்பட்ட
गौरिक……..- கைரிகமென்னும்
धातुना ……- காவிக்கல்லினால்
गिरिः इव ..- மலைபோல
रराज………- விளங்கினார்.
—————- End of 72 ——————–
तस्य वानरसिंहस्य प्लवमानस्य सागरम् ।
कक्षान्तरगतो वायुर्जीमूत इव गर्जति ॥ ७३ ॥
———www.brahminsnet.com——————
सागरं………….- ஸமுத்திரத்தை
प्लवमानस्य …- தாண்டுகின்ற
तस्य…………..- அந்த
वानरसिंहस्य..- வானரசிம்மத்தின்…
कक्षान्तरगतः.- கட்கங்களினூடேசெல்லும்
वायुः………….- காற்று
जीमूतः ……..- கருமுகில்
इव ………….- போல
गर्जति……….- கர்ஜித்தது.
—————- End of 73 ——————–
खे यथा निपतन्त्युल्का ह्युत्तरानताद्विनिस्सृता ।
दृश्यते सानुबन्धा च तथा स कपिकुञ्चरः ॥ ७४ ॥

———www.brahminsnet.com——————
खे……………- ஆகாயத்தில்
उत्तरान्तात् ..- வடதிசையிலிருந்து
विनिस्सृता…- தோன்றி
निपतन्ती च.- விழுகிறதும்…
सानुबन्धा….- வாலுடன்கூடியதுமான
उल्का यथा.- கொள்ளி எப்படியோ
तथा हि …..- அப்படி
सः …………- அந்த
कपिकुञ्चरः.- வானரவீரர்
दृश्यते…….- காணப்பட்டார்.
—————- End of 74 ——————–
पतत्पतङ्गसङ्काशो व्यायतः शुशुभे कपिः ।
प्रवृद्ध इव मातङ्गः कक्ष्यया बध्यमानया ॥ ७५ ॥

———www.brahminsnet.com——————
पतत्पतङ्गसङ्काशः….- உதிக்கும்
……………………………ஸூரியனுக்கு நிகரான
व्यायतः कपिः………- நெடிய வானரர்
बध्यमानया…………- கட்டிக்கொண்டிருக்கிற
कक्ष्यया……………..- அரைக்கச்சையால்…
प्रवृद्धः……………….- மதங்கொண்ட
मातङ्गः इव………..- யானைபோல்
शुशुभे………… …..- விளங்கினார்.
—————- End of 75 ——————–
उपरिष्टाचछरीरेण छायया चावगाढया ।
सागरे मारुताविष्टा नौरिवासीत्तदा कपिः ॥ ७६ ॥

———www.brahminsnet.com——————
उपरिष्टात्…..- மேலே
शरीरेण ……- சரீரத்தாலும்
सागरे………- ஸமுத்திரத்தில்
अवगाढया..- அழுந்தியிருக்கிற…
छायया च…- நிழலினாலும்
मारुताविष्टा- காற்றினால் மோதப்பட்ட
नौः इव……- மரக்கலம் போல
कपिः …….- வானரர்
तदा ……..- அப்பொழுது
आसीत्….- தோன்றினார்.
—————- End of 76 ——————–
यं यं देशं समुद्रस्य जगाम स महाकुपिः ।
स स तस्याङ्गवेगेन सोन्माद इव लक्ष्यते ॥ ७६ ॥

———www.brahminsnet.com——————
समुद्रस्य……..- ஸமுத்திரத்தின்
यं यं देशं ……- எவ்வெவ்விடத்தை
सः महाकपिः.- அப்பெரிய வானரர்
जगाम……….- அடைந்தாரோ…
सः सः……….- அவ்வவ்விடமும்
तस्य………..- அவருடைய
अङ्गवेगेन…..- சரீரவேகத்தால்
सोन्माद ……- மிகவும்கலங்கியதைப்
इव ………….- போல
लक्ष्यते………- காணப்பட்டது.
—————- End of 77 ——————–
सागरस्योर्मिजालानि उरसा शैलवर्ष्मणा ।
अभिघ्नंस्तु महावेगः पुप्लुवे स महाकुपिः ॥ ७८ ॥
———www.brahminsnet.com——————
महावेगः………- அதிவேகமுடைய
सः महाकपिः..- அந்த வானரச்ரேஷ்டர்
शैलवर्ष्मणा….- மலைக்கு நிகரான…
उरसा तु……..- (தன்) மார்பினாலேயே
सागरस्य…….- ஸமுத்திரத்தின்
ऊर्मिजालानि- அலைகளை
अभिघ्नन् …..- மோதித்தள்ளிக்கொண்டு
पुप्लुवे ………- தாவிச்சென்றார்.

—————- End of 78 ——————–
कपिवातश्च बलवान् मेघवातश्च निस्सृतः ।
सागरं भीमानिर्घोषं कम्पयामासतुर्भृशम् ॥ ७९ ॥
———www.brahminsnet.com——————
बलवान्………..- மிக வலிமையுடையதாய்
निस्सृतः……….- தோன்றிய
कपिवातः च….- வானரரின் காற்றும்…
मेघवातः च……- மேகத்தின் காற்றும்
भीमानिर्घोषं….- அச்சமூட்டும் ஒலியுடைய
सागरं …………- ஆழ்கடலை
भृशम् …………- மிகவும்
कम्पयामासतुः.- அலைத்துக் கலக்கின.

—————- End of 79 ——————–
विकर्षन्नूर्मिजालानि ब्रृहन्ति लवणांभसि ।
पुप्लुवे कपिशार्दूलो विकिरन्निव रोदसी ॥ ८० ॥
———www.brahminsnet.com——————
लवणांभसि……- உப்புநீர் கடலில்
बृहन्ति…………- பருத்துயர்ந்த
ऊर्मिजालानि..- அலைகளின் ஜாலங்களை…
विकर्षन्………- இழுத்துச்செல்கின்ற
कपिशार्दूलः…- வானரச்ரேஷ்டர்
रोदसी ………- ஆகாயத்தையும் பூமியையும்
विकिरन् इव – பிரிப்பவர் போல
पुप्लुवे………..- தாவினார்.

—————- End of 80 ——————–
मेरुमन्दरसङ्काशानुद्गतान् स महार्णवे ।
अत्यक्रामन्महावेगस्तरङ्गान् गणयन्निव ॥ ८१ ॥
———www.brahminsnet.com——————
महावेगः सः.- மிகவேகமுடைய அவர்
महार्णवे……- மஹார்ணவத்தில்
उद्गतान्……- மேலெழுந்த…
मेरुमन्दर….- மேருமந்தரமலைக்கு
सङ्काशान्…- நிகராக உயர்ந்த
तरङ्गान् …..- அலைகளை
गणयन् ……- எண்ணுபவரை
इव………….- போல
अत्यक्रामत्.- தாண்டினார்.
—————- End of 81 ——————–
तस्य वेगसमुद्धूतं जलं सजलदं तदा ।
अम्बरस्थं विबभ्राज शारदाभ्रमिवाततम् ॥ ८२ ॥
———www.brahminsnet.com——————
तस्य………….- அவருடைய
वेग…………..- வேகத்தால்
समुद्धूतं……- உயரேகிளப்பப்பட்ட.
स जलं……..- மேகத்துடன் கூடிய
जलं…………- ஸமுத்ரஜலம்
तदा ………..- அப்பொழுது
अम्बरस्थं …- ஆகாயத்தில் உள்ள
आततं………- அகன்ற
शारदाभ्र इव- கார்மேகம்போல
विबभ्राज…..- விளங்கிற்று.
—————- End of 82 ——————-
तिमिनक्रझषाः कूर्मा दृश्यन्ते विवृतास्तदा ।
वस्त्रापकर्षणेनेव शरीराणि शरीरिणाम्॥ ८३ ॥
———www.brahminsnet.com——————
तदा……………..- அப்பொழுது
विवृताः…………- வெளிப்பட்டுத்தோன்றிய
तिमिनक्रझषाः..- பெரு,சிறுமீன்கள்,முதலைகள்.
कूर्माः…………..- ஆமைகளும்
वस्त्र……………- உடையை
अपकर्षणेन ….- நீக்குவதனால்
शरीरिणां …….- உயிரினங்களின்
शरीरिणि……..- அவயவங்கள்
इव-………… – போல
दृश्यन्ते……….- காணப்பட்டன.
—————- End of 83 ——————–

प्लवमानं समीक्षयाथ भुजङ्गास्सागरालयाः ।
व्योस्म्नि तं कपिशार्दूलं सुपर्ण इति मेनिरे ॥ – 84
अथ – இப்பொழுது
सागरालयाः – கடலிடையில் வாழும்
भुजङ्गाः – பாம்புகள்
व्योम्नि – ஆகாயத்தில்
प्लवमानं – தாவுகின்ற
तं – அந்த
कपिसार्दूलं – வானர வீரரை
समीक्ष्य – கண்டு
सुपर्णः इति – கருடர் என்று
मेनिरे – எண்ணின.

दशयोजनविस्तीर्णा त्रिंशद्योजनमायता ।
छाया वानरसिंहस्य जले चारुतराऽभवत् ॥ – 85
—SamskrutaSeva ——
वानरसिंहस्य – வானரச்ரேஷ்டரின்
छाया – நிழல்
दशयोजन – பத்து யோஜனை
विस्तीर्णा – அகலமும்
त्रिंशद्योजनं – முப்பது யோஜனை
आयता – நீளமாகவும்
जले – நீரில்
चारुतरा – மிகஅழகானதாகவும்
अभवत् – தோன்றிற்று.

श्वेताभ्रधनराजीव वायुपुत्रानुगामिनी ।
तस्य सा शुशुभे छाया वितता लवणांभसि ॥ 86
—SamskrutaSeva ——
लवणांभसि – உவர்க்கடலில்
वितता – விஸ்தாரமான
वायुपत्र – வாயுபுத்ரரரை
अनुगामिनि – பின்தொடர்பவள்
तस्य – அவருடைய
सा छाया – அந்த நிழல்
श्वेताभ्रधनराजी – வெண்மேகங்களின்
அடர்ந்த வரிசை
इव – போல
शुशुभे – விளங்கிற்று

शुशुभे स महातेजा महाकायो महाकपिः।
वायुमार्गे निरालम्बे पक्षवानिव पर्वतः ॥ – 87
—SamskrutaSeva ——
महातेजा – சிறந்த தேஜஸ் உடையவரும்
महाकायः – மிகப்பெரும் திருமேனி
உடையவரும்
महाकपिः – சிறந்த வானரருமான
सः – அவர்
निरालम्बे – பிடிப்பில்லாத
वायुमार्गे – வாயுமார்கத்தில்
पक्षवान् – சிறகுகளுடன் கூடிய
पर्वतः – மலை
इव – போல
शुशुभे – விளங்கினார்.

येनासौ याति बलवान् वेगेन कपिकुञ्चरः ।
तेन मार्गेण सहसा द्रोणिकृत इवार्णवः ॥ – 88
——SamskrutaSeva – Dr NVS —–
बलवान् – பலவானும்
कपिकुञ्चरः – வானரச்ரேஷ்டருமான
असौ – இவர்
येन मार्गेण – எந்த வழியினால்
सहसा – விரைகிறாரோ
तेन – அந்த (வழியிலேயே)
द्रोणिकृतः इव – பெரும் கொப்பரையில்
செய்யப்பட்டது போன்ற
अर्णवः – ஸாகரம் (வழியாய்)
वेगेन – வேகமாய்
याति – செல்கின்றார்.

आपाते पक्षिसङ्घानां पक्षिराज इव व्रजन् ।
हनुमान् मेघजालानि प्रकर्षन् मारुतो यथा ॥ – 89
–SamskrutaSeva – Dr. NVS —
हनुमान् – ஹநுமார்
पक्षिसङ्घानां – பறவைக்கூட்டங்களின்
आपाते – மார்க்கத்தில்
पक्षिराजः इव – பக்ஷிராஜரைப்போல்
व्रजन् – போய்க்கொண்டு
मारुतः यथा – வாயுவைப்போல்
मेघजालानि – முகிற்கூட்டங்களையும்
प्रकर्षन् – இழுத்துச் சென்றார்.

प्लवमानन्तु तं दृष्ट्वा प्लवङ्गं त्वरितं तदा ।
ववर्षुः पुष्पवर्षाणि देवगन्धर्वदानवाः ॥ – 92
--SamskrutaSeva - Dr. NVS --
तदा     –   அப்பொழுது
त्वरितं     –   விரைவாக
प्लवमानं        –   தாவிச்செல்கிற
तं प्लवङ्गं –   அந்த வானரரை
देवगन्धर्वदानवाः    –   தேவ,கந்தர்வ,தானவர்கள்
तु      –   இச்சந்தர்பத்தில்
दृष्ट्वा        –   கண்டு
पुष्पवर्षाणि    –   பூமாரிகளை
ववर्षुः     –   பொழிந்தார்கள்

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.