Vaideekam Introduction

பூா்வம்- கல்யாண சுபகாரியங்கள்

வைதீக அடிப்படை :

இது ஒரு விரிவான வைதீக ப்ரயோகம் பற்றிய பகுதி. இது சாதாரணமாக வைதீக விஷயங்களையும் அதன்
முக்கியத் துவத்தையும் அறிந்து கொள்பவர்களுக்காக மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாத்யார்கள்
கிடைக்காத பகுதியில் தாங்களாகவே எல்லாவிதமான வைதீக காரியங்களையும் தாங்களே நடத்திக்கொள்ள
– உதவி.


ப்ரஸவ புண்யாஹம் -பீஜதானம்

ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும்.


ஆயுஷ்யஹோமம்

ஒரு வயது நிறைவு (ஆண்டு நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும்.


அங்குரம்

உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும்.


ப்ரதிசரம்

உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம்
பண்ணவேண்டும்.


ஜாதகர்மா

பெண்ணுக்குகல்யாணத்தன்றும் ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா
செய்யப்படுகிறது.


நாந்தி

பித்ருக்களைஉத்தேசித்து பூர்வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷpணைகள்
கொடுக்கவேண்டும்.


நாமகரணம்

வைதீக ரீதியாக பெயர் வைக்கும் கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும்
செய்யப்படுகிறது.


அன்னப்ராசனம்

வைதீக ரீதியாக அன்னம் கொடுப்பது. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும்
செய்யப் படுகிறது.


சௌளம்

ஆணுக்கு உபநயனத்துக்கு முன் சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில்
செய்யப்படுகிறது.


உபநயனம்

ப்ரஹ்மத்தின் அருகில் அழைத்துச் செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு
மட்டும்.


ப்ரஹ்மோபதேசம்

உபநயனமான பையனுக்கு காயத்திரி மந்திர உபதேசம் செய்வது.


அஷ்டவ்ரதம்

விவாஹம் செய்ய முடிவெடுத்த ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும்
நிகழ்ச்சி


பெண்-ஜாதகாதி

விவாஹத்தன்றோ முதல் நாளோ பெண்ணுக்குச் செய்யப்படும் ஜாதகர்ம, நாமகரண, அன்னப்ராசன, சூடாகர்மாக்கள்


விவாஹம்

நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம்
.


க்ருஹப்ரவேசம்

விவாஹம் முடிந்தவுடன் செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது
நு}தன க்ருஹ ப்ரவேசம்.


பும்ஸவனம்

கர்பவதியானவளுக்கு 4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது.


ஸீமந்தம்

கர்பவதியானவளுக்கு 6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து
ப்ராஹ்மணதன்மை ஏற் படுத்துவது.


மனை முஹூர்த்தம்

புதிய மனையில் வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது.


ஷஷ்டியப்த பூர்த்தி :

60 வயது முடிந்து  61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த
பாப காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட
நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால்  தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.


சதாபிஷேகம்

60 வது போலவே 80 முடிந்து 81வது  83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால்
ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால்  தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம்
உண்டாகும்.

அபரம் -அசுபகாரியங்கள்

அபரம் -அசுபகாரியங்கள்

பலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள் போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால் ஒருவர் இதுபற்றி அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

அபரம் -அசுபகாரியங்கள்

பலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள் போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால் ஒருவர் இதுபற்றி அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.


தஹனம் :-

இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப்
பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா.


சஞ்சயனம் :

தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது.


நக்ன ச்ராத்தம் :

இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம்


பாஷாண ஸ்தாபனம் :

தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை


நித்யவிதி :

ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள்


நவ ச்ராத்தம் :-

பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில்


10ம்நாள் பங்காளி தர்ப்பணம் :

பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து


க்ஷவரம் :-

இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும். 
கர்தாக்கள் பிறகு…


புடவை போடுவது:-

கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும்


பாஷணாண உத்தாபனம் :

ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.


சாந்தி, ஆனந்த ஹோமம் :-

ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.


சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:

ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.


11ம் நாள் :-

புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய


12ம் நாள் :

புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம்.


ஊனங்கள், மாஸ்யங்கள் :


புண்யகால தர்ப்பணங்கள்:


வருஷாப்தீக ததியாராதனம் :

யஜூர், ஸாம ச்ராத்தங்கள், தர்பணங்கள், க்ரஹண தர்பணங்கள் போன்றவை.
சுதர்ஸன ஹோமம், நவக்ரஹ ஹோமம், கணபதி ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்தரி ஹோமம்,
மஹாலக்ஷ்மி ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், மற்றும் பல ஹோமங்கள்-விளக்கங்கள்.


RITUAL SERVICES
Ritual
Services can be divided into five main headings: 1)Anushtanam, 2)Poorvam, 3)Homams,
4)Aparam, 5)Shraddham
1)Anushtanam: Day to day practices
to be performed by human as per shastram according to their Varnam and Ashramam.
Example: Sandhya Vandhanam, Aradhanam, Abhivadhi etc. There are four Varnams and
four Ashramams: Brahmana, Kshathriya, Vaisya Sutra are the Varnams and Brahmacharya,
Gruhasta, Sanyasa and Vanaprasta are the Ashramams. Details for these headings will
be given later in the url http://www.ahobilam.com/DharmaSastram/Default.aspx which
is now available in Tamil View
.
2) Poorvam :- It can be called
in other word as "Shubham" like Vivaham (marriage), Seemantam, Upanayanam,
Grihapravesam etc. 
3)Homams
:- This type of ritual is performed as a special pooja with offering to a particular
(set) of devadas to get their asirvadhams in a particular matter.
4) Aparam :-
It is also called as "Ashubham" which is done for the sake of demised
persons, to make them to the state of ptiru.
Dhahanam (day of death), Sanjayanam – Collecting the bones and disposing them in
a sacred place,

Paashaana Sthapanam, Nityavidhi – Daily karmas to be done up to 9th day,

Prabudha bali, – 10th day ceremony.

Ekaham – 11th day ceremony

Sapindikarnam – 12th day ceremony

Subha sweekaram – This is not a Ashubha karma but it turns the Ashubham into Shubham.
5) Shraaddham :-
It is also called as "Ashubham" This is done for pitrus; like Shraaddham
done on the same tithi every year, mothly Amavasai tarpanam, Grahana Tarpanam, Mahalaya
Tarpanam, Masikams, Sodakumbhams etc. are come under this category. These are all
will explained in detail under seperate pages.