Beneficiaries of a Shradham

ச்ராத்தத்தால் யார்யாருக்குப் பலன்?

shradhamஒரு ச்ராத்தம் (பித்ருக்களுக்குச் செய்யும் வருடாந்திர திவசம்) செய்வதால் – அதில் எந்தெந்த அங்கங்கள் யார் யாருக்கு அல்லது எப்படிப்பட்ட பித்ருக்களுக்குப் போய்ச்சேருகிறது என தர்ம சாஸ்த்ரத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்லோகம்: –

அக்நௌ ஹுதேந தேவாச்ச – ஸ்வர்கஸ்தா விப்ரபோஜநாத்
யமஸ்தா: பிண்டதாநேந மாநுஷா பூரிபோஜநாத்
உச்சிஷ்டேந பிசாச்சாத்யா: நாரகா விகிரேணது

அஜ்ஞாதா: காகபிண்டேந ச்ராத்தே த்ருப்தி ஸப்ததா!!

ச்ராத்தத்தில்:- அக்நியில் செய்யப்படும் ஹோம ஹவிஷ் (ப்ரசாதம்) தேவநிலையை அடைந்த பித்ருக்களுக்கும்;
ப்ராம்மணர்களுக்கு இடப்படும் போஜனமானது ஸ்வர்கத்தில் இருக்கும் பித்ருக்களுக்கும்;

பிண்டப்ரதானமாக வைக்கப்படுவது யமலோகத்தை அடைந்த பித்ருக்களுக்கும்;
ச்ராத்ததினத்தின் மறுதினத்தில் அதிதிகளை அழைத்து பூரிபோஜனம் என்று போஜனம் செய்விக்கவேண்டும் இவை மனிதர்களாக பிறந்திருக்கும் பித்ருக்களுக்கும்;
மிகுதியான எச்சில் இலையில் இருப்பவை எந்தகதியையும் அடையாத பிசாசங்களாக இருக்கும் பித்ருக்களுக்கும்;
சாப்பிடும் இலைக்கு முன் வைக்கப்படும் உதிரி சாதமானாது நரகலோகத்தை அடைந்த பித்ருக்களுக்கும்;
காகத்திற்கு வைக்கப்படும் அன்னமானது ப்ரசவத்திலேயே இறந்தவர்களும், சரியான முறையில் ஸம்ஸ்காரங்கள் பண்ணப்படாத, சிறு வயதில் இறந்துபோனவர்களான பித்ருக்களுக்கும் – சென்றடைவதாக தர்மசாஸ்த்ரத்தில் உள்ள இந்த ச்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.