தாரா பலன் – தினப்பொருத்தம்
தினப்பொருத்தம் அவசியம் :-
ஜன்ம நக்ஷத்திரத்திற்கு-2,4,6,8,9ம் வீட்டு நக்ஷத்திரங்கள் தாராபலன் உள்ளவை. அதாவது 1|ஜன்மம், 2|சம்பத்து, 3|விபத்து, 4|க்ஷேமம், 5|பகை, 6|உதவி, 7|வதை, 8|நட்பு, 9|மிக நட்பு என பலன் கொள்க.
எனவே 2, 4, 6, 8, 9 ஆகிய நல்ல பலன் தரக்கூடிய வீடுகளில் உள்ள நக்ஷத்திரங்களிலும் ஆயில்யம், கேட்டை, பூரம், பூராடம், பூரட்டாதி, பரணி, கார்த்திகை ஆகிய நக்ஷத்திரங்கள் வரும் நாட்களையும் ஒதுக்கி மற்ற தினங்களில் சுப முஹூா்த்தங்களை வைத்துக்கொள்ளவேண்டும்.
கீழே உள்ள பட்டியலில் உங்கள் வசதிக்காக, மிக எளிமையாக ஒவ்வொரு நக்ஷத்திரக்காரருக்கும் தினப்பொருத்தம் உள்ள நல்ல நக்ஷத்திரங்களின் செட் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள நக்ஷத்திரம் உள்ள தினங்கள் அன்றைய தேதிக்கு கிழமை, திதி, மற்றும் மரண யோக பாதிப்பு இல்லாத முஹூா்த்த நாளா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
உதாரணமாக அஸ்விநி நக்ஷத்திரக்காரருக்கு 2,4,6,8,9 ஆகிய செட்டுகள் பொருந்தும் என்றால், 2ம் செட்டான பரணி, பூரம், பூராடம், 4ம் செட்டான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் என அந்த ஐந்து செட்களில் வழங்கப்பட்டுள்ள 15 நக்ஷத்திரங்களும் தாராபலன் உள்ளவை என அறியவேண்டும். பரணி,பூரம், பூராடம் இவற்றில் சுப முஹூர்த்தங்கள் குறிக்கமாட்டார்கள் எனவே, சுப முஹூர்தம் என குறிக்கப்பட்ட நாளில், உங்களுக்குப் பொருத்தமான நக்ஷத்திரம் (முஹூர்த்த நேரம் வரை) இருந்தால் அந்த முஹூர்த்தம் உங்களுக்குப் பொருந்தும். மற்றபடி பொருத்தமான நட்சத்திரம் உள்ளவரை எந்த முஹூர்த்த நேரமாக இருந்தாலும் உங்களுக்குப் பொருத்தமானதே என அறியவும்.
நிரந்தர தாராபலன் பட்டியல்
உங்கள் நக்ஷத்ரம் | செட் | பொருந்தும் செட்டுகள் |
அஸ்வி,மகம்,மூலம் | 1 | 2, 4, 6, 8, 9 |
பரணி,பூரம்,பூராட | 2 | 1, 3, 5, 7, 9 |
கார்த்,உத்ரம்,உத்ராட | 3 | 1, 2, 4, 6, 8 |
ரோகி,ஹஸ்த,திருஓ | 4 | 2, 3, 5, 7, 9 |
ம்ருக,சித்தி,அவிட் | 5 | 1, 3, 4, 6, 8 |
திருவா,ஸ்வாதி,சதய | 6 | 2, 4, 5, 7, 9 |
புனர்,விசாக,பூரட்டா | 7 | 1, 3, 5, 6, 8 |
பூசம்,அநுஷ,உத்ரட் | 8 | 2, 4, 6, 7, 9 |
ஆயில்,கேட்ட,ரேவதி | 9 | 1, 3, 5, 7, 8 |
மேலுள்ள பொருத்தமான செட் எண்களைக் குறித்து வைத்துக்கொண்டால் ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு முஹூர்த்த நாளிலும் இருதியில் ‘பொ’ என்ற தலைப்பின் கீழ் உள்ள எண், உங்களுக்குப் பொருந்தும் செட் எண்களில் ஒன்றானால் அந்த முஹூர்தம் (நேரம் உட்பட) தங்களுக்குப் பொருந்தும்.
இதே மேலுள்ள பட்டியலுக்கு பதிலாக இங்கே சக்கர வடிவில் கொடுத்துள்ளோம். யாருக்குப் பொருத்தம் பார்க்கவேண்டுமோ, அவருடைய நட்சத்திரம் இருக்கும் இடத்தை ஒன்று எனக்கொண்டு அதிலிருந்து ப்ரதக்ஷிணமாக எண்ணி வர 2, 4, 6, 8, 9ம் கட்டங்களில் உள்ள மும்மூன்று நட்சத்திரங்களும் பொருத்தமானவை என அறியவும்.
Seemandam for punarpoosam star girl.dates 15.09 21 to 17 .10.21
Usefull information. For marriage date fixing, which star will be considered ie)Bride star or bridegroom star or both stars will be taken as Tarapalan and date fixing.
Wherever a lady is involving in a vaideeka function
there should seek portham (thaaraa phalan) for that lady only
unless it is a star based Ayushya Homam of a male.
Grihapravesam after 5th Oct to 15th nov 22.
Wife star.Swathi. thula rasi.
Name Revathi