காயத்ரி ஜபம் - 2017


காயத்திரி ஜபம் ப்ரயோகம் மிக விபரமாக 4 தலைப்புகளில் 4 தனித்தனி "தாவு பகுதிகளில்" (tab section) வழங்கப்பட்டுள்ளன. தாவு பகுதிகள் பின்வரும் தலைப்புகளைக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளன.
 1. தயாராதல்
 2. தேவை
 3. குறிப்பு
 4. மந்திரம்
தயாராதல் என்ற பெயருடைய அடுத்தத் தாவுப்பகுதியில் தங்களை எப்படித் தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிற முக்கியமான சில விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாவதாகத் "தேவை" என்கிற தலைப்பின் கீழ் தேவையான பொருட்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
3வதான குறிப்பு என்கிற தலைப்பின் கீழ், அன்று செய்யவேண்டிய மற்ற அநுஷ்டானங்கள் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 3 விஷயங்களும் யாருக்கெல்லாம் அதிகமாக நேரம் இருக்கின்றதோ, அடிப்படையில் இருந்து அனைத்தையும் விரிவாகத் தெரிந்துகொள்வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்களுக்காகத் தரப்பட்டுள்ளன. ஆனால் கடைசியாக உள்ள மந்திரம் என்கிற தலைப்பில்தான் முக்கியமான பாகம் தொடங்குகிறது.
தவிரவும், பெருந்தலைப்புக்கு மேலே Home - Upakarma - Forum - Contact என நான்கு மெனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. Home மெனுவைப் பயன்படுத்தி இணைய தளத்த்தின் ஆரம்ப நுழைவு வாயில் மற்றும் மற்ற மற்ற தலைப்புகள் அவற்றின் உள்ளடக்கங்களைப் பார்வையிட இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் அடுத்து Upakarma என்கிற மெனுவின் கீழ் யஜூர், போதாயன, ஸாம, ருக் உபாகர்மாக்கள், காயத்திரி ஜபம் இவற்றுக்கான தமிழ், ஆங்கில பகுதிகளுக்குச் செல்வதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நமது இணைய தளம் 100 சதவீதம் பாதுகாப்பானது, எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாதது. சில இடங்களில் கூகிள் மூலமாக சில விளம்பரங்கள் வரலாம் அது தவிர்க்க இயலாதது. அவை பெரும்பாலும் வலது புறத்தில்தான் இருக்கும் எனவே மேல் புறம், இடது புறத்தில் உள்ள மெனு இணைப்புகளை தாராளமாகப் பயன்படுத்தி தளத்தின் எல்லா விபரங்களையும் உபயோகித்துப் பார்த்து, தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
Forum என்கிற மெனுவைப் பயன்படுத்தி எங்கள் தளத்தில் உறுப்பினராகி தளத்தில் ஏற்கனவே 18000 த்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ள ப்ராம்மண உறுப்பினர்களுக்கு உபயோகமாகத் தாங்கள் கருதக்கூடிய விஷயங்களைப் பதிவு செய்யலாம். மற்றவர்கள் பதிவைப் பார்வையிடலாம். பதிவுக்கு பின்னூட்டம் செய்யலாம். நிறைய மந்திரங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
மேலுள்ள Contact மெனுவை உபயோகித்து எங்களைத் தொடர்புகொண்டு ஈமெயில் வாயிலாகத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவலை அனுப்பலாம். ரகசியமாக வைக்கவேண்டிய இருவருக்குமேல் தெரிந்துகொள்ள அவசியமில்லாத தகவல்களுக்கு மட்டும் இந்த காண்டாக்ட் பார்ம்ஐ உபயோகிக்கவும். மற்ற தகவல்கள் அனைத்தையும் தளத்திலேயே பதிவிடவும்.
தாங்கள் நம்புவது சிரமம்தான் ஆனால் உண்மையில் மிகப்பெரும்பான்மையான சமயங்களில் தாங்கள் அனுப்பிய தகவலுக்கான மறுமொழி சில நிமிடங்களிலேயே தங்கள் இன்பாக்ஸ்ல் இருக்கக்காணலாம். மேலும், 48 மணி நேரத்திற்குமேல் மறுமொழி கிடைக்காவிட்டால் தங்கள் தகவல் எங்களை வந்தடையவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

காயத்ரி ஜபம் தயாராதல்

காலை தீர்த்தமாடி மடி உடுத்தி திருமண் இட்டுக்கொண்டு சந்தியாவந்தனம் பண்ணி கூடத்தில் வந்து கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் (பலகையில்) அமரவும்

பஞ்சகச்ச வேஷ்டி உடுத்திக்கொள்வது எப்படி

காயத்ரி ஜபம் தேவையானவை

 1. திருமண்பெட்டி அல்லது விபூதிப்பெட்டி
 2. தாம்பாளம்
 3. ஆசமனத்துக்கு ஒரு டம்ளர் ஜலம்
 4. காயத்ரி ஜப மந்திரக் குறிப்பு
 5. பவித்திரம் இடுக்குப்பில்
 6. மணைப்பலகை
 7. எண்ணுவதற்கு மணிகள் அல்லது பாக்கு அல்லது கொட்டைகள்

காயத்ரி ஜபம் குறிப்புகள்

காயத்ரீ மகிமை

ப்ரணவ வியாஹ்ருதிகளோடு காயத்ரீயை இரு ஸந்தியைகளிலும் ஜபிப்பவன் வேத பாராயண புண்ய பலனை அடைகிறான்.
- மனு
பிரம்மசர்ய விரதத்துடனும் மிதா ஹாரியாயும் பூததயையுடனும் லக்ஷ காயத்ரி ஜபம் செய்பவன் ஸகல பாவங்களினின்றும் விடுபடுகிறான்.
- ஸம்வர்த்தர்
மூவேந்தர்களையும் அனுஷ்டிக்க வேண்டிய ஸகல கர்மங்களையும் விட்ட போதிலும் காயத்ரீயை மட்டும் ஜபித்து வருபவன் பாப பயம் அற்றவனாகிறான்.
- விஸ்வாமித்திரர்
எவ்வப்பொழுது தான் பாவஞ் செய்துவிட்டதாக கருதுகிறானோ அப்பொழுதெல்லாம் நெய் கலந்த திலங்களால் அக்னியில் காயத்ரீயைச் சொல்லி ஹோமமோ, காயத்ரீ ஜபமோ செய்யச் சுத்தமாகிறான்.
- வஸிஷ்டர்
காயத்ரி ஜபம் செய்தால்தான் மற்ற அனைத்து வைதீக கர்மங்களையும் செய்வதற்கு யோக்யதை உண்டாகும். ஸந்த்யாவந்தனம் காயத்ரி ஜபம் செய்யாதவர்கள் செய்யும் எந்த வைதீகக் கர்மா, பூஜை, வழிபாடு எதுவும் நல்ல பலனைத் தராது என்று சாஸ்த்ரம்.
காயத்ரியை மாதாவை வழிபடுவதுபோல் வழிபடவேண்டும். கடவுள் தன் பக்தர்களுக்கு பல விததங்களில் அருள்பாலிக்கிறார். மற்ற யாரைக்காட்டிலும் நம் தாய்தான் நம்மை அதிகமாக அன்புகாட்டி தேவைகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்வாள். அதுபோல் காயத்ரி மாதா ஆனவள் தன்னைத் துதிக்கும் பக்தனுக்கு பல மடங்கு பலன்களை அள்ளிக்கொடுப்பவள் ஆகும். காயத்ரி ஜபம் செய்யாதவன் பண்ணும் புண்ணிய காரியங்களுக்கு பலன் ஒருபங்கு என்றால், காயத்ரி ஜபம் பண்ணபவனுக்கு 100 பங்கு பலன் கிட்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. காயத்ரி ஜபத்தை விடாமல் அநுஷ்டிப்பவன் வாழ்க்கையில் எல்லாவித மேன்மைகளையும் மிகச் சுலபமாக அடைவான்.

ஜபவிதி

வாசிகம், உபாம்சு, மானஸமென ஜபம் மூவகையாகும். இவை முறையே ஒன்றுக்கொன்று சிறந்ததாகும்.
நடந்து கொண்டும், சிரித்துக் கொண்டும், பக்கங்களைப் பார்த்து கொண்டும், ஊன்றி, சார்ந்து கொண்டும், வம்புகள் பேசி (கேட்டு) க் கொண்டும், தலையை மூடிக் கொண்டும், கால்களை மாறிமாறிப் பூமியில் ஊன்றிக் கொண்டும், கைகளால் பூமியைத் தொட்டுக் கொண்டும், ஏகாத்ர சித்தமின்றியும், உரத்தும் ஜபிக்கக் கூடாது.
பவித்ரமின்றியும், தீட்டோடும், உரத்தும், கைகளை மூடிக் கொள்ளாமலும், தலையை மூடிக் கொண்டும் ஜபம் செய்யக் கூடாது.

How to do Gayathri Japam - காயத்ரி ஜப வீடியோ

ஆசமனம்

இந்தக் குறிப்பைப் பயன்படுத்தி ஆசமனம் செய்து பழகிக்கொள்ளவும். ஆசமனம் அடிக்கடி செய்யவேண்டிய விஷயம் என்பதால், ஒவ்வொரு முறையும் குறிப்பைத் தேடிக்கொண்டிருப்பது நன்றாயிராது.

ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:

ஒவ்வொரு வைதீக கர்மாவின் ஆரம்பத்திலும் இந்த ஆசமனம் இரு முறை செய்யப்படவேண்டும்

ப்ராணாயாமம்

கிழக்கு நோக்கி அமர்ந்து இரு கட்டை தர்பங்களை கால்களுக்கு அடியில் போட்டுக்கொள்ளவும்.
வலது கை மோதிர விரலில் இருபில் பவித்திரம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, அதனுடன் இரு தர்பங்களை இடுக்கிக்கொள்ளவும்.
வலது கை கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அழுத்தி மூடவம்.
சுட்டு விரல், நடுவிரல் இரண்டையும் உட்புறமாக மடித்துக்கொள்ளவும். சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இடது நாசித் துவாரத்தையும் அழுத்தி மூடிக்கொள்ளவும்.
வாயையையும் இறுக மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 3 முறை மனதிற்குள் ஜபிக்கவம்.

ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம், தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.

இந்த மந்திரம் 3 முறை ஜபித்தால் ஒரு ப்ராணாயாமம் ஆகும்.

வடகலை ஆரம்பம்:

ஓம் அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேசரி வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி குருப்ய: தத்குருப்யஸ்ச்ச நமோவாகம் அதீமஹே வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ஸ்வசேஷ பூதேநமயா ஸ்வீயை: ஸர்வபரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்.

(தென்கலை, ஸ்மார்த்தா ஆரம்பம் வடகலை தொடர்ச்சி)

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேது ஸர்வவிக்னோபசாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே.
வலது தொடையில் இடதுகைமேல் வலது கைவைத்து
ஹரிரோம்தத்
ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத: மஹாபுருஷ்ஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே ஸ்ரீ ஸ்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே
இந்தியாவில் இருப்பவர்கள் :ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே
வெளிநாட்டில் இருப்பவர்கள் : த்வீபம் வர்ஷம் கண்டம் தெரியாதவர்கள் விஷ்ணு என்பதை உபயோகித்துக்கொள்ளலாம். அதாவது விஷ்ணு த்வீபே விஷ்ணு வர்ஷே விஷ்ணு கண்டே என்று சொல்லலாம்
எல்லோரும் சொல்லவும் சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்சவே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே

08-08-2017க்கான ஸங்கல்பம்:

ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே, க்ரீஷ்ம ருதௌ, கடக மாஸே க்ருஷ்ண பக்‌ஷே ப்ரதமாயாம் சுப திதௌ, வாஸர: பௌம வாஸர யுக்தாயாம் ச்ரவிஷ்டா நக்‌ஷத்ர யுக்தாயாம் சௌபாக்ய யோக, பாலவ கரண யுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சுப திதௌ

ஸ்ரீ-ம் (குறிப்பு:- இதுபோல் ஸ்ரீ-ம் என்று உள்ள இடங்களிலெல்லாம் வடகலையார் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்றும், தென்கலையார் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீபகவத் கைங்கர்யம் என்றும், ஸ்மார்த்தா மமோ பார்த்த சமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்றும் சொல்லிக் கொள்ளவும்)

காயத்ரீ ஜப ஸங்கல்பம்:

வடகலையார் : ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்

தென்கலையார் : ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீபகவத் கைங்கர்ய ரூபம்
ஸ்மார்த்தா : மமோ பார்த்த சமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

எல்லோரும் சொல்லவும்

மித்யாதீத ப்ராயச்சித்தார்த்தம் ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தம்
1008 பண்ணுகிறவர்கள் :அஷ்டோத்ர ஸஹஸ்ர சங்க்யயா
108 பண்ணுகிறவர்கள் :அஷ்டோத்ர சத சங்க்யயா
காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே.

ஸாமவேதிகள் மட்டும் "ததங்கம் யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே" என்று சேர்த்து சங்கல்பம் பண்ணிக்கொண்டு முன்பக்கம் கண்டுள்ளபடி பூணலும் போட்டுக் கொள்ளவும்

இடுக்குப்பில் இருந்தால் அதை இடது புறம் (வடக்கே) எறிந்து விட்டு

(வடகலையார் மட்டும் : கை கூப்பிக்கொண்டு பகவாநேவ ஸ்வசேஷ பூதமிதம் காயாத்ரீ ஜபாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரயதி என்று ஸாத்வீக த்யாகம் பண்ணிக் கொள்ளவும்).
குறிப்பு:-தினமும் காயத்ரீ ஜபம் க்ரமமாக பண்ணுகிறவர்கள் கீழ்கண்ட மந்திரம் தவிர சிறப்பாக ஏதேனும் ஸ்லோகங்கள் சொல்லும் வழக்கம் இருந்தால் அதன்படி பண்ணிக்கொள்ளவும். ருஷி என்று வரும்போது தலையையும் சந்த: என்று வரும்போது மூக்கையும் தேவ: என்று சொல்லும்போது மார்பையும் தொடவும். இதற்கு ந்யாஸம் என்று பெயர்.

எல்லோரும் சொல்லவும்

எழுந்து நின்று ஜபம் பண்ண உட்காரப்போகும் சுத்தமான இடத்தை சிறிது தீர்த்தத்தால் "பூர்புவஸ்ஸுவ:" என்று ப்ரோக்ஷிக்கவும்.
ஆஸன மந்த்ரஸ்ய ப்ருதிவ்யா மேருப்ருஷ்ட ருஷி:
ஸுதலம் சந்த:
ஸ்ரீ கூர்மோ தேவதா
ஆஸநே விநியோக:
கை கூப்பிக்கொண்டு "ப்ருத்வித்வயா தேவா லோகா தேவி த்வம் விஷ்ணுநா த்ருதா த்வம்ச தாரயமாம் தேவி பவித்ரம் குருசாஸநம்"
"கூர்மாசனாய நம: கமலாசனாய நம: விமளாசனாய நம: பத்மாசனாய நம:"
ஆஸனத்தில் உட்கார்ந்து பின் ந்யாஸம் பண்ணவும்.

மஹா ந்யாஸம் :

ப்ரணவஸ்ய ருஷி ப்ரஹ்மா
தேவி காயத்ரி சந்த:
பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தேவதா
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கௌதம காச்யப ஆங்கீரஸ ருஷய:

காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய: சந்தா(கு)ம்ஸி

அக்நி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வே தேவா தேவதா:

ஸாவித்ரியா ருஷி: விச்வாமித்ர:

தேவி காயத்ரி சந்த:

ஸவிதா தேவதா

காயத்ரீ சிரஸ: ப்ரஹ்மா ருஷி:

அநுஷ்டுப் சந்த:

பரமாத்மா ஸ்ரீமன்னாராயணோ தேவதா

ஸர்வேஷாம் ப்ராணாயாமே விநியோக:

பத்து அல்லது 3 ப்ராணாயாமம் பண்ணவும்

வலது கை கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அழுத்தி மூடவம்.
சுட்டு விரல், நடுவிரல் இரண்டையும் உட்புறமாக மடித்துக்கொள்ளவும். சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இடது நாசித் துவாரத்தையும் அழுத்தி மூடிக்கொள்ளவும்.
வாயையையும் இறுக மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 3 முறை மனதிற்குள் ஜபிக்கவம்.

ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம், தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.
ஆயாது இதி அநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
அனுஷ்டுப் சந்த:
காயத்ரீ தேவதா
காயத்ரீ ஆவாஹனே விநியோக:

கை கூப்பிக்கொண்டு காயத்ரி ஆவாஹனம் "ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம் காயத்ரீம் சந்தஸாம் மாதா இதம் ப்ரஹ்ம்ம ஜுஷஸ்வந: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்மஸி ஸர்வாயு: அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி" (என்று காயத்ரீயை ஆவாஹனம் பண்ணிக்கொண்டு)

ஸாவித்ரியா ருஷி: விஸ்வாமித்ர:
தேவி காயத்ரி சந்த:
ஸவிதா தேவதா

கை கூப்பிக்கொண்டு "சங்கச்சக்ர தரம் தேவம் கிரீடாதி விபூஷிதம் ஸூர்ய மண்டல மத்யஸ்த்தம் த்யாயேத் ஸ்வர்ணருசிம் ஹரிம் யோதேவ: ஸவிதா அஸ்மாகம் த்யோ தர்மாதி கோசரா: ப்ரேரயேத் தஸ்ய யத்பர்க்க: தத்வரேண்யம் உபாஸ்மஹே."
என்று த்யானித்து காயத்ரியை 5 பாதங்களாக மனதிற்குள் 1008 அல்லது 108 தரம் மனதிற்குள் ஜபிக்கவேண்டும்.
1. ஓம் 2. பூர்புவஸ்ஸுவ: 3. தத்ஸவிதுர்வரேண்யம் 4. பர்க்கோதேவஸ்ய தீமஹி 5. தியோயோந: ப்ரசோதயாத் (என 5 இடங்களில் நிறுத்தி) காயத்ரீ ஜபம் பண்ணவும்


ஜபம் ஆனதும் ப்ராணாயாமம்

கிழக்கு நோக்கி அமர்ந்து இரு கட்டை தர்பங்களை கால்களுக்கு அடியில் போட்டுக்கொள்ளவும்.
வலது கை மோதிர விரலில் இருபில் பவித்திரம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, அதனுடன் இரு தர்பங்களை இடுக்கிக்கொள்ளவும்.
வலது கை கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அழுத்தி மூடவம்.
சுட்டு விரல், நடுவிரல் இரண்டையும் உட்புறமாக மடித்துக்கொள்ளவும். சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இடது நாசித் துவாரத்தையும் அழுத்தி மூடிக்கொள்ளவும்.
வாயையையும் இறுக மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 3 முறை மனதிற்குள் ஜபிக்கவம்.

ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம், தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.

காயத்ரி உத்வாஸன ஸங்கல்பம்:

வடகலையார் : ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்
தென்கலையார் : ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீபகவத் கைங்கர்ய ரூபம்

ஸ்மார்த்தா : மமோ பார்த்த சமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
எல்லோரும் சொல்லவும் காயத்ரீ உத்வாஸனம் கரிஷ்யே
உத்தம இதி அநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
அநுஷ்டுப் சந்த:
காயத்ரீ தேவதா
காயத்ரீ உத்வாஸநே விநியோக:

கை கூப்பிக்கொண்டு
"உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வதமூர்தநி ப்ராம்மணேப்ய: ஹ்யநுக்ஞானம் கச்சதேவி யதாசுகம்"
எழுந்திருந்து ஸேவித்து அபிவாதனம் பண்ணவேண்டியது.
பவித்ரம் பிரித்துப்போட்டு ஆசமனம் பண்ணறது

ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:

(வடகலையார் மட்டும் கையைக் கூப்பிக்கொண்டு பகவாநேவ ஸ்வசேஷபூதமிதம் காயத்ரீ ஜபாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாநு ஸ்வயமேவ காரிதவாநு. என்று ஸாத்வீக த்யாகம் பண்ணவேண்டியது)

எல்லோரும் கை கூப்பிக்கொண்டு சொல்லவும்

"காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வ புத்யா ஆத்மனாவா ப்ரஹ்ருதே: ச்வபாவாது கரோமி யத்யது சகலம் பரஸ்மை ஸ்ரீமன்னாராயணாயேதி சமர்பயாமி"
பெருமாள் ஸேவித்து, பெரியவாளையும் ஸேவிக்கறது.

எமது விண்ணப்பம்:

இந்த உபாகர்மா கைபேசி செயலியாக வழங்கப்பட்ட ஸேவையில் தாங்கள் த்ருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தால் உங்கள் மகிழ்ச்சியை ஒரு ஈமெயில் வழியாக பகிர்ந்துகொண்டால் இதை உருவாக்குவதில் முயற்சி, ஈடுபாட்டுடன் அரிதான நேரத்தையும், பொருளையும் செலவிட்டவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வோம். தங்கள் நிறை, குறை, எதிர்பார்ப்பு, சந்தேஹ விளக்கக் கேள்வி எதையும் drnvs@outlook.com என்கிற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும்.

அநுஷ்டானம், வைதீகம், சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் பற்றிய மிகவும் அரிதான, உபயோககரமான தகவல்களுடன் எண்ணற்ற பக்ககங்களைக் கொண்ட 1999ம் வருடத்தில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் இணையதளத்தை அடிக்கடி பார்வையிட்டு, தங்கள் அனைத்து தேடல்களையும் கண்டுகொள்ளலாம். அடிக்கடி விஜயம் செய்க: http://www.ahobilam.com
அதேபோல 2011ம் ஆண்டில் அனைத்துலக ப்ராம்மணர்களும் பங்கேற்று, அநுஷ்டானம், வைதீகம், சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், மற்றும் வீட்டு உபயோகக் குறிப்புகள், ஆன்மீகத் தகவல்கள், நகைச்சுவைகள் என அனைத்துத் தகவல்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக போரம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் தற்போதும் 180000 த்துக்கும் அதிகமான ப்ராம்மண உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இணைந்து பயனளித்து, பயன்பெற்று வருகின்றனர். தாங்களும் இணைந்து தங்களிடமுள்ள அரிதான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விஜயம் செய்க:
more than 18000 genuine brahmin members in Tamil and English, Sanskrit, question Answers from experts, everything for all brahmin community including vaishnavites:
http://www.brahminsnet.com/forums/forum.php

இந்த ஸேவை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே இதை தேவையுள்ள அனைவருக்கும் தெரியும்படிச் செய்வதன் மூலம் தாங்கள் பயன் அடைந்ததுபோல் மேலும் பலர் பயன் அடைய உதவிய புண்ணியம் தங்களுக்கு உண்டாகும். எனவே இந்த ஸேவையையும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் தங்கள் நட்பு வட்டாரத்தில் அறியும்படிச் செய்யவேண்டுமாய் இருகரம் கூப்பி விண்ணப்பித்துக்கொள்கிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள், குடும்பத்தாருடன், நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நீண்ட ஆயுளுடன், நிம்மதியாக வாழ எம்பெருமான் அருள்புரிய, ஆசீர்வாதங்களுடன்
தாஸன்,
Dr.NVS

இந்த கைபேசி உபாகர்மா ஆவணம் ஒரு ப்ருஹபதி (வாத்யார்) இல்லாத குறை தெரியாத அளவிற்கு மிக உதவியாக இருந்தது, வாத்யார் ஸம்பாவனையும் பண்ணினால் மனதுக்குத் திருப்தியாக இருக்கும் என எண்ணுகிறவர்கள், கீழுள்ள டொனேஷன் பட்டனை அழுத்தி ஸமர்ப்பிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல. ஆனால் இந்த முறையில் வழங்கப்படும் டொனேஷனில் 3ல் இரண்டு பங்கு மட்டுமே எங்களை வந்தடையும். முழுமையாக எங்களை வந்தடைய எங்கள் இணைய தளங்களைப் பார்வையிட்டு மற்ற முறைகளில் அனுப்பி வைக்கலாம்.

Please Save and Share my Card: