ருக் உபாகர்மா - 2017


உபாகர்மா ப்ரயோகம் மிக விபரமாக 4 தலைப்புகளில் 4 தனித்தனி "தாவு பகுதிகளில்" (tab section) வழங்கப்பட்டுள்ளன. தாவு பகுதிகள் பின்வரும் தலைப்புகளைக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளன.
 1. தயாராதல்
 2. தேவை
 3. குறிப்பு
 4. மந்திரம்
தயாராதல் என்ற பெயருடைய அடுத்தத் தாவுப்பகுதியில் உபாகர்மாவுக்குத் தங்களை எப்படித் தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிற முக்கியமான சில விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாவதாகத் "தேவை" என்கிற தலைப்பின் கீழ் உபாகர்மாவுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
3வதான குறிப்பு என்கிற தலைப்பின் கீழ், உபாகர்மா அன்று செய்யவேண்டிய மற்ற அநுஷ்டானங்கள் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 3 விஷயங்களும் யாருக்கெல்லாம் அதிகமாக நேரம் இருக்கின்றதோ, அடிப்படையில் இருந்து அனைத்தையும் விரிவாகத் தெரிந்துகொள்வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்களுக்காகத் தரப்பட்டுள்ளன. ஆனால் கடைசியாக உள்ள மந்திரம் என்கிற தலைப்பில்தான் உபாகர்மாவுக்கான முக்கியமான பாகம் தொடங்குகிறது.
தவிரவும், பெருந்தலைப்புக்கு மேலே Home - Upakarma - Forum - Contact என நான்கு மெனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. Home மெனுவைப் பயன்படுத்தி இணைய தளத்த்தின் ஆரம்ப நுழைவு வாயில் மற்றும் மற்ற மற்ற தலைப்புகள் அவற்றின் உள்ளடக்கங்களைப் பார்வையிட இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் அடுத்து Upakarma என்கிற மெனுவின் கீழ் யஜூர், போதாயன, ஸாம, ருக் உபாகர்மாக்கள், காயத்திரி ஜபம் இவற்றுக்கான தமிழ், ஆங்கில பகுதிகளுக்குச் செல்வதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நமது இணைய தளம் 100 சதவீதம் பாதுகாப்பானது, எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாதது. சில இடங்களில் கூகிள் மூலமாக சில விளம்பரங்கள் வரலாம் அது தவிர்க்க இயலாதது. அவை பெரும்பாலும் வலது புறத்தில்தான் இருக்கும் எனவே மேல் புறம், இடது புறத்தில் உள்ள மெனு இணைப்புகளை தாராளமாகப் பயன்படுத்தி தளத்தின் எல்லா விபரங்களையும் உபயோகித்துப் பார்த்து, தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
Forum என்கிற மெனுவைப் பயன்படுத்தி எங்கள் தளத்தில் உறுப்பினராகி தளத்தில் ஏற்கனவே 18000 த்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ள ப்ராம்மண உறுப்பினர்களுக்கு உபயோகமாகத் தாங்கள் கருதக்கூடிய விஷயங்களைப் பதிவு செய்யலாம். மற்றவர்கள் பதிவைப் பார்வையிடலாம். பதிவுக்கு பின்னூட்டம் செய்யலாம். நிறைய மந்திரங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
மேலுள்ள Contact மெனுவை உபயோகித்து எங்களைத் தொடர்புகொண்டு ஈமெயில் வாயிலாகத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவலை அனுப்பலாம். ரகசியமாக வைக்கவேண்டிய இருவருக்குமேல் தெரிந்துகொள்ள அவசியமில்லாத தகவல்களுக்கு மட்டும் இந்த காண்டாக்ட் பார்ம்ஐ உபயோகிக்கவும். மற்ற தகவல்கள் அனைத்தையும் தளத்திலேயே பதிவிடவும்.
தாங்கள் நம்புவது சிரமம்தான் ஆனால் உண்மையில் மிகப்பெரும்பான்மையான சமயங்களில் தாங்கள் அனுப்பிய தகவலுக்கான மறுமொழி சில நிமிடங்களிலேயே தங்கள் இன்பாக்ஸ்ல் இருக்கக்காணலாம். மேலும், 48 மணி நேரத்திற்குமேல் மறுமொழி கிடைக்காவிட்டால் தங்கள் தகவல் எங்களை வந்தடையவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

உபாகர்மாவுக்கு தயாராதல்

எல்லா நாட்களிலுமே அதிகாலையில் எழுவதுதான் உத்தமம் என்றும் அதனால் உடல் நலம், மனநலம் போன்ற மிக அதிகமான நன்மைகள் உள்ளன என்று தற்போது விஜ்ஞானவாதிகளும் நம்புகிறார்கள். இதையேதான் புராண காலம் தொட்டு நம் முன்னோர்கள் சாஸ்த்ரமாக வகுத்து வைத்துள்ளனர்.


எனவே இந்த உபா கர்மா நாளிலாவது அதிகாலையில் எழுந்து, முறைப்படி தீர்த்தமாடி, பஞ்ச கச்ச வஸ்த்ரம் உடுத்தி, துவாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்து, ஸந்தியாவந்தனம் செய்து உபாகர்மாவுக்குத் தேவையான வஸ்துக்களைத் தயாராக எடுத்துக் வைத்துக்கொண்டு தயாராக வேண்டியது.


சூரிய உதயத்திற்குப் பிறகுதான் காமோகார்ஷீத் ஜபம் செய்யவேண்டும் என்றிருப்பதால் அதன்பிறகு ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு மற்ற அலுவல்களைச் செய்யவேண்டியது.

பஞ்சகச்ச வேஷ்டி உடுத்திக்கொள்வது எப்படி

உபாகர்மாவுக்குத் தேவையானவை

 1. ஒரு குடத்தில் ஜலம்
 2. திரும்ண் பெட்டி
 3. தாம்பாளங்கள்
 4. சொம்பு, டம்ளர்
 5. அக்ஷதை (அரிசி)
 6. கறுப்பு எள்
 7. உபாகர்மா மந்திரம்
 8. பூணல்கள், பவித்ரங்கள்
 9. மணைப்பலகை, மற்றவை

உபாகர்மா குறிப்புகள்

உபாகர்மாவில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன.

 1. நித்ய கர்மா
 2. காமோகார்ஷீத் ஜபம்
 3. காண்டருஷி தர்பணம்
 4. வேதாரம்பம்

1. நித்ய கர்மா :-

சந்த்யாவந்தனம் போன்ற தினமும் செய்யவேண்டிய வைதீக கடைமைகளே நித்யகர்மா எனப்படும். ப்ரஹ்மசாரிகளுக்கு: ப்ராதஸ்ஸ்நான, மௌஞ்சி -மேகலா -அஜின - தண்டதாரண, ஸந்தியாவந்தன, ஸமிதாதான, குருகுலவாஸ, ப்ரஹ்மயஜ்ஞ, பிக்ஷாசரண போன்றவை நித்ய கர்மாக்களாகும். க்ருஹஸ்தர்களுக்கு: ப்ராதஸ்ஸ்நான, (பஞ்சகச்ச) வஸ்த்ர தாராண, புண்ட்ர தாரண, ஸந்த்யாவந்தன, நித்ய ஔபாஸன, தேவயஜ்ஞ(பகவதாராதன), ப்ரஹ்மயஜ்ஞ, பித்ரு யஜ்ஞ, பூதயஜ்ஞ, மநுஷ்ய யஜ்ஞ இத்யாதி நித்ய கர்மாக்களாகும்.

2. காமோ கார்ஷீத் ஜபம் :

சாஸ்த்ரப்படி பார்த்தால் காமோகார்ஷீத், காயத்ரி ஜபம் போன்ற ஜபங்கள் சூரிய உதயத்திற்கு பிறகுதான் செய்யவேண்டும். தலை ஆவணியவிட்டம் செய்யும் ப்ரம்மச்சாரிக்கு மட்டும் காமோகார்ஷீத் ஜபம் கிடையாது. உபாகர்மம் என்றால் ஆரம்பம் என்றும் உத்ஸர்ஜனம் என்றால் முடித்தல் என்றும் பொருள். தை மாதத்தில் உத்ஸர்ஜனம் செய்யப்பட்ட வேதம் திரும்பவும் ஆவணி மாதத்தில் உபாகர்மாவுடன் தொடங்குவதாகும். இந்த உத்ஸர்ஜனத்தை தை மாதத்தில் செய்யாமைக்குப் ப்ராயச்சித்தமாக காமோகார்ஷீத் ஜபம் செய்யப்படுகிறது என பெரியோர் கூறுவர்.
நேரம் இருந்தால் 1008 முறை செய்வது சிறப்பு. எண்ணிக்கைக்கு தர்பத்தை உபயோகிக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை அணிந்துள்ள பூணல் பழுதாகி - அறுந்துபோனதாக இரந்தால் காமோகார்ஷீத் ஜபத்திற்கு முன்னதாகலே ஒரு முறை பூணல் மாற்றிக்கொண்டு, மீண்டும் காண்டரிஷி தர்பணத்தில் ஒரு முறை மாற்றிக்கொள்ளலாம்.
காமோகார்ஷீத் ஜபம் முடிந்ததும், அமிழந்து ஸ்நானம் பண்ணக்கூடிய ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் ஸ்நானம் செய்வது மிகச் சிறந்தது. ஸ்நானம் செய்து, மாத்யாஹ்நிகம் முடித்துவிட்டு காண்டரிஷி தர்பணம் செய்யவேண்டும். தளிகை சித்தமாகியிருந்து, காண்டரிஷி தர்பணம் செய்ய கால தாமதம் ஏற்பட்டு, இடையில் நேரம் இருக்குமானால், பெருமாள் திருவாராதனத்தை முடித்து, பர்யங்காஸனத்தில் பெருமாளை ஏளப்பண்ணிவிட்டு, தீர்த்தம் மட்டும் எடுத்துக்கொள்ளாமல் பின்னர் காண்டரிஷி தர்பணத்தை முடித்துவிட்டு வந்து பெருமாள் ஸேவித்து தீர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.
ஆவணி அவிட்டம் - உபாகர்மா செய்து மறுநாள் காயத்ரி ஜபம் இருப்பதால் சுத்த உபவாசம் இருக்கவேண்டும் என்று சிஷ்டாசாரம். ஆனால் பலர் காண்டருஷி தர்பணம் பண்ணுவதற்கு முன்னதாகவே இட்லி, அப்பம் எல்லாம் எடுத்துக்கொண்டு பின்னர் உபாகர்மா செய்கின்றனர். அது மிகத் தவறானதாகும்.

மண்டல தேவதா தர்பணம்ஈ ஆசார்ய தர்பணம்:

இதை ருஷி தர்பணம், பித்ரு தர்பணம் என மேலும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவை அனைவரும் செய்யவேண்டும், இரண்டாவது தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும் செய்யவேண்டும். ஆனால், இதில் சொல்லப்பட்டுள்ள தர்பணங்கள் முன்னோர்களான பித்ருக்களுக்குக் கிடையாது. பித்ருக்களுக்கு அநுகூலமாக உள்ள தேவதைகளுக்கான தர்பணம் இது என்பதால் இதை அனைவரும் செய்வதால் எந்தத் தீமையும் இல்லை. காண்டருஷி தர்பணம செய்வதற்கு முன்னால், உபாகர்மாவுக்கு அங்கமாக பூணல் மாற்றிக்கொள்ளவவேண்டும்.

4. வேதாரம்பம் :-

உபாகர்மாவின் இறுதி அங்கம். இந்த நாளில் வேதத்தை அத்யயனம் செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்பதால், வேதத்தின் எல்லா பாகங்கங்களிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஜபம் செய்வது வேதாரம்பம் ஆகும். லௌகீகர்களான நாம், ஒவ்வொரு வருடமும் உபாகர்மா அன்று மட்டும் 4 வாக்கியங்களைச் சொல்லிவிட்டு அத்துடன் மறந்தும்விடுகிறோம். அதனால் மீண்டும் மீண்டும் அதே 4 வாக்கியங்களைச் சொல்கிறோம்.

வேதாரம்பம் இங்கு முழுமையாகக்கொடுக்கப்பட்டுள்ளது. நேரம் இல்லாதவர்கள் எப்போதும்போல 4 வாக்கியங்களை மட்டும் சொல்லி முடித்துக்கொள்ளவும்.

கீழே ஶ்ரீஶ்ரீக்ருஷ்ணப்ரேமி அண்ணா அவர்கள் உபாகர்மா பற்றி மிக விளக்கமாக அளித்துள்ள உபந்யாஸத்தைக் கேட்டால் அனைவருக்கும் இதில் ச்ரத்தையும் ஈடுபாடும் வரும் என்பதால் அந்த உபந்யாஸத்தை இத்துடன் இணைத்துள்ளோம். உபாகர்மாவுக்கு முன்னர் ஒரு முறையும். உபாகர்மா ஆனபிறகு அனைவரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கும்போது ஒருமுறையும் போட்டுக் கேட்கவும்.
வைதீக, சாஸ்த்ர, ஸம்ப்ரதாய விஷயங்களில் எந்த ஸந்தேஹமாக இருந்தாலும் அடியேனைத் தயங்காமல் ஈமெயில் மூலம் தொடர்புகொள்ளவம்.

Rig Upakrma Videos

வழங்கப்பட்டுள்ள வீடியோக்களில் தேதி போன்றவை ஏதேனும் பிழையிருந்தால் பொருட்படுத்தாமல் சரியான விஷயங்களை உபயோகித்து பின்பற்றவும்.

ஶ்ரீஶ்ரீஅண்ணா உபாகர்மா பற்றி உபந்யாஸம்

ருக் உபாகர்மா ஸங்கல்பம் - தர்பணம் மட்டும்

ஆசமனம்

இந்தக் குறிப்பைப் பயன்படுத்தி ஆசமனம் செய்து பழகிக்கொள்ளவும். ஆசமனம் அடிக்கடி செய்யவேண்டிய விஷயம் என்பதால், ஒவ்வொரு முறையும் குறிப்பைத் தேடிக்கொண்டிருப்பது நன்றாயிராது.

ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:

ஒவ்வொரு வைதீக கர்மாவின் ஆரம்பத்திலும் இந்த ஆசமனம் இரு முறை செய்யப்படவேண்டும்

ப்ராணாயாமம்

கிழக்கு நோக்கி அமர்ந்து இரு கட்டை தர்பங்களை கால்களுக்கு அடியில் போட்டுக்கொள்ளவும்.
வலது கை மோதிர விரலில் இருபில் பவித்திரம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, அதனுடன் இரு தர்பங்களை இடுக்கிக்கொள்ளவும்.
வலது கை கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அழுத்தி மூடவம்.
சுட்டு விரல், நடுவிரல் இரண்டையும் உட்புறமாக மடித்துக்கொள்ளவும். சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இடது நாசித் துவாரத்தையும் அழுத்தி மூடிக்கொள்ளவும்.
வாயையையும் இறுக மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 3 முறை மனதிற்குள் ஜபிக்கவம்.

ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம், தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.

இந்த மந்திரம் 3 முறை ஜபித்தால் ஒரு ப்ராணாயாமம் ஆகும்.

வடகலை ஆரம்பம்:

ஓம் அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேசரி வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி குருப்ய: தத்குருப்யஸ்ச்ச நமோவாகம் அதீமஹே வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ஸ்வசேஷ பூதேநமயா ஸ்வீயை: ஸர்வபரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்.

(தென்கலை, ஸ்மார்த்தா ஆரம்பம் வடகலை தொடர்ச்சி)

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேது ஸர்வவிக்னோபசாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே.
வலது தொடையில் இடதுகைமேல் வலது கைவைத்து
ஹரிரோம்தத்
ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத: மஹாபுருஷ்ஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே ஸ்ரீ ஸ்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே
இந்தியாவில் இருப்பவர்கள் :ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே
வெளிநாட்டில் இருப்பவர்கள் : த்வீபம் வர்ஷம் கண்டம் தெரியாதவர்கள் விஷ்ணு என்பதை உபயோகித்துக்கொள்ளலாம். அதாவது விஷ்ணு த்வீபே விஷ்ணு வர்ஷே விஷ்ணு கண்டே என்று சொல்லலாம்
எல்லோரும் சொல்லவும் சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்சவே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே

28-07-2017க்கான ஸங்கல்பம்:

ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் (10.37 வரை) சுப திதௌ வாஸர: ப்ருகு வாஸர யுக்தாயாம், (8.55 வரை உத்ரபல்குனி) ஹஸ்த (நக்ஷத்ர யுக்தாயாம் சிவ யோக பாலவ (10.37 வரை) கரண யுக்தாயாம் அஸ்யாம் பஞ்சம்யாம் சுப திதௌ -

யஜ்ஞோபவீத தாரண ஸங்கல்பம்:

மம ச்ரௌத ச்மார்த்த விதி விஹித நித்ய கர்மாநுஷ்டாந யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்தியர்த்தம் யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே. (என்று சங்கல்பித்து)
இடுக்கு தர்பம் இருந்தால் அதை வடக்கே (இடது புறம்) சேர்க்கவும்.

யஜ்ஞோபவீத தாரண ந்யாஸம்:

தலையைத் தொடவும்

யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி:
மூக்கைத் தொடவும்
அநுஷ்டுப் சந்த:
மார்பைத் தொடவும்
த்ரயீ வித்யா தேவதா
இரு கைகளையும் மார்பின் உட்புறமாகச் சுழற்றி:
யஜ்ஞோபவீத தாரணே விநியோக:
(பூணலில் ப்ரம்ம முடிச்சின் பசுமுகம் போன்ற இரண்டு நுனிகளுடன் கூடிய பாகம் கட்டைவிரலை பார்த்திருக்கும்படி வலது கையில் வைத்து, இடது கையால் பூணலின் கீழ்ப் பாகத்தின் உள்ளே வைத்து தளர்வின்றி பிடித்துக்கொண்டு மந்திரம் முடிந்தவுடன் தலையில் மாட்டி வலதுகை உள்ளே நுழைத்து இடது கையை வெளியே எடுத்துவிடவும்)
யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:
என்று சொல்லி போட்டுக்கொள்ளவேண்டியது.

(கல்யாணமானவர்கள் மட்டும் 2வது பூணலுக்கு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணி பின் பவித்ரம் போட்டு ப்ராணாயமம்)

வலது கை கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அழுத்தி மூடவம்.
சுட்டு விரல், நடுவிரல் இரண்டையும் உட்புறமாக மடித்துக்கொள்ளவும். சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இடது நாசித் துவாரத்தையும் அழுத்தி மூடிக்கொள்ளவும்.
வாயையையும் இறுக மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 3 முறை மனதிற்குள் ஜபிக்கவம்.

ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம், தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.
ஸ்ரீ-ம் க்ருஹஸ்த ஆச்ரமார்த்தம் த்விதீய யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
தலையைத் தொடவும்

யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி:
மூக்கைத் தொடவும்
அநுஷ்டுப் சந்த:
மார்பைத் தொடவும்
த்ரயீ வித்யா தேவதா
இரு கைகளையும் மார்பின் உட்புறமாகச் சுழற்றி:
யஜ்ஞோபவீத தாரணே விநியோக:
(பூணலில் ப்ரம்ம முடிச்சின் பசுமுகம் போன்ற இரண்டு நுனிகளுடன் கூடிய பாகம் கட்டைவிரலை பார்த்திருக்கும்படி வலது கையில் வைத்து, இடது கையால் பூணலின் கீழ்ப் பாகத்தின் உள்ளே வைத்து தளர்வின்றி பிடித்துக்கொண்டு மந்திரம் முடிந்தவுடன் தலையில் மாட்டி வலதுகை உள்ளே நுழைத்து இடது கையை வெளியே எடுத்துவிடவும்)
யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:

என்று சொல்லி போட்டுக்கொள்ளவேண்டியது.

பின் க்ருஹஸ்தாள் ப்ருஹ்மச்சாரி அனைவரும்
"உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் விஸ்ருஜாமி ஜலேப்ரஹ்மண்ணு வர்ச்ச: தீர்காயு: அஸ்துமே"

என்று சொல்லி பழைய பூணலை எடுத்துவிட்டு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணவும்.

ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:

உபாகர்மா மண்டல தேவதா தர்பணம்

மண்டல தேவதா தர்பணம் உபாகர்மாவின் முக்கிய பாகமாகும். சாஸ்த்ரப்படி நதி, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று (சிலர் ஸ்நாந மஹா சங்கல்பமும் செய்துகொள்வர்) அமிழ்ந்து தீர்த்தமாடி, மடி உடுத்தி, திருமண் காப்புகள் தரித்து, மாத்யாஹ்நிகம் செய்து, சங்கல்பம் செய்துகொண்டு புதுப்பூணல் மாற்றிக்கொண்டு பிறகு தர்ப்பிக்கவேண்டும். பொதுவாக இது அனைவரும் சேர்ந்து ஒரு பொது இடத்தில் பண்ணப்படுவதாகும். தற்போது கால சூழலுக்கேற்ப அவரவர் தாம் உள்ள இடத்திலேயே பண்ணிக்கொள்வதால் சில முக்கிய அம்சங்களை விரிவாகப் பண்ண முடிவதில்லை.
பிறருக்காக காத்திருக்கவேண்டியதிருந்தால் இடைப்பட்ட நேரத்தில் பெருமாள் திருவாராதனத்தை முடித்துக்கொள்ளலாம், அனைத்தும் முடிந்தபிறகு தீர்த்தம் ஸ்வீகரித்துக்கொள்ளவேண்டும்.


வடகலை : ஶ்ரீபகவதாஜ்ஞயா ஶ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்
தென் கலை: ஶ்ரீ பகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம்
ஸ்மார்த்தா : மமோபாத்ததுரிதக்ஷயத்வாரா ஶ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்தம்

இங்கு சில தெய்வங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவரவருக்கு விருப்பமான தெய்வத்தின் பெயர்களையும் சேர்த்து சொல்லிக்ககொள்ளலாம்.

எல்லோரும் சொல்லவும்:ஶ்ரீரங்க க்‌ஷேத்ரே ஶ்ரீரங்கநாயிகா ஸமேத ஶ்ரீரங்கநாத ஸ்வாமி ஸந்நிதென
ஶ்ரீஅலர்மேல்மங்க நாயிகா ஸமேத ஶ்ரீஶ்ரீநிவாஸ ஸ்வாமி ஸந்நிதௌ
ஶ்ரீபெருந்தேவி நாயிகா ஸமேத ஶ்ரீதேவாதிராஜ ஸ்வாமி ஸந்நிதௌ
ச்ராவண்யாம் ச்ரவண நட்சத்ரே அதிதாநாம் சந்தஸாம் அயாத் யாமாத்வாய வீர்யவத்தா ஸித்தியர்த்தம் அத்யாய உபாகர்மா கரிஷ்யே. ததங்கம் காவேரி ஸ்நாநமஹம் கரிஷ்யே. ததங்கம் யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே. ததங்கம் மண்டல தேவதா தர்பணாதீநாம் ச கரிஷ்யே.
ப்ரஹ்மசாரிகள் மட்டும் : ததங்கம் மௌஞ்சி, அஜின, தண்ட தாராணாநி ச கரிஷ்யே

என்று சங்கல்பித்துக்கொண்டு, இடுக்கு தர்பம் இருந்தால் இடது புறம் வடக்கே எறிந்துவிடவம்.

ப்ரஹ்மசாரிகள் மேகலை அணிய மந்த்ரம் :

ப்ரவேபாமா ப்ருஹதா மாதயந்தி ப்ரவா தேஜா ஹரிணே வவ்ருதாநா:
ஸோமஸ்யேவ மௌஜவதஸ்ய பக்க்‌ஷோ விபீதகோ ஜாக்ருவிஅயஹ்லயஅயயசாந்

ப்ரஹ்மாசாரிகள் மான்தோல் அணிய மந்த்ரம் :

ருக் ஸாமாப்யாம் அபிஹிதவ் காவவ் தே ஸாமாநாவித:
ஷ்ரோத்ரம் தே சக்ரே ஆஸ்தாம் திவி பந்தா: சராசர:

ப்ரஹ்மாசாரிகள் தண்டம் ஏந்திக்கொள்ள மந்த்ரம் :

ஏஷா க்க்‌ஷேதி ரதவீதிர் மகவா கோமதீர்ணௌ

அனைவரும் தர்பணம் செய்ய மந்த்ரம்:

நிறைய தீர்த்தம் சேர்த்து தர்பணம் செய்ய தோதான இடத்தை தேர்வு செய்துகொள்ளவும். ருஷி தர்பணம், தேவ தர்பணம், ப்ரஹ்ம தர்பணம், பித்ரு தர்பணம் எப்படிச் செய்வது என கீழே காட்டப்பட்டுள்ள படத்தைப் பார்த்து புரிந்துகொண்டு அந்தந்த தர்பணத்தை அந்தந்த முறையில் பண்ணவும்.
நான்கு விதமான தீர்த்தங்கள் (தர்பண முறை) :
1. தேவ தீர்த்தம் : உள்ளங்கையில் இருந்து கிழக்கு நோக்கி 4 விரல் நுனிகள் வழியாக தீர்த்தம் வழிந்தோடுவது
2. பித்ரு தீர்த்தம் : குழிவான உள்ளங்கையில் இருந்து வலது கட்டை விரல் - ஆட்காட்டி விரல் இடைப்பட்ட வழியாக தெற்கு நோக்கி வழியவிடுவது.
3. ப்ரஹ்ம தீர்த்தம் : இரு கை நிறைந்த தீர்த்தத்தை முன் கையை உயரே தூக்குவதன் மூலம் மேற்கில் மணிக்கட்டு, முட்டிப் பகுதியை நோக்கி வழியவிடுவது
4. ருஷி தீர்த்தம் : இரு கை நிறைந்த தீர்த்தத்தை, இரு கைகளின் சுண்டு விரலுக்குக் கீழாக ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அதன்வழியாக விடுதல், வலது கையினால் மட்டும் விடும்போது தீர்த்தம் வடக்கு நோக்கி வழியும்.

ஒவ்வொரு தர்பணமும் மும்மூன்று முறை செய்யவேண்டும்

Mandala Devata Tharpanam

ச்ராவண்யாம் ச்ரவண நட்சத்ரே அதிதாநாம் சந்தஸாம் அயாத் யாமாத்வாய வீர்யதா ஸித்தியர்த்தம்
ஸ்வாத்யாய - ஆத்மக - தேவ ருஷி பித்ரு ப்ரீத்யர்த்தம் ஸாவித்ரியாதி நவ ப்ரதான தேவதானாம், அக்நியாதி விம்சதி மண்டல தேவதாநாம், ப்ரஹ்மயஜ்ஞ தேவதாநாம் ச தர்பணம் கரிஷ்யே.

நவ ப்ரதான தேவதானாம் தர்பணம் - தேவ தர்பணம் - உபவீதி

 1. ஸாவித்ரீம் தர்ப்பயாமி
 2. ப்ரஹ்மாணாம் தர்பயாமி
 3. ச்ரத்தாம் தர்பயாமி
 4. மேதாம் தர்பயாமி
 5. ப்ரஜ்ஞாம் தர்பயாமி
 6. தாரணாம் தர்பயாமி
 7. சதஸஸ்பதிம் தர்பயாமி
 8. அநுமதீம் தர்பயாமி
 9. சந்தோபய: ருஷிப்ய: தர்பயாமி
 10. அக்நியாதி விம்சதி மண்டல தேவதா தர்பணம் - உபவீதி - தொடர்ச்சி

 11. அக்நிம் தர்பயாமி
 12. ஆப: த்ருப்யந்து
 13. அக்நிம் தர்பயாமி
 14. மருத: த்ருப்யந்து
 15. அக்நிம் தர்ப்பயாமி
 16. வர்மாணாம் தர்பயாமி
 17. அக்நிம் தர்பயாமி
 18. மித்ரா வருணௌ த்ருப்யேதாம்
 19. அக்நிம் தர்பயாமி
 20. இந்த்ர ஸோமௌ த்ருப்யேதாம்
 21. இந்த்ரம் தர்பயாமி
 22. அக்நி மருதௌ த்ருப்யேதாம்
 23. பவமான ஸோமௌ த்ருப்யேதாம்
 24. ஸோமம் தர்பயாமி
 25. அக்நிம் தர்பயாமி
 26. ஸம்ஜ்ஞானம் தர்பயாமி
 27. விஸ்வேதேவா: த்ருப்யந்து:
 28. தேவதா: த்ருப்யந்து
 29. அக்நிஸ் த்ருப்யந்து
 30. விஷ்ணுஸ் த்ருப்யந்து
 31. ப்ரஜாபதிஸ் த்ருப்யந்து
 32. ப்ரஹ்மா த்ருப்யது
 33. வேதா: த்ருப்யந்து
 34. தேவதா: த்ருப்யந்து
 35. ருஷய: த்ருப்யந்து
 36. ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து
 37. ஓம்காரா: த்ருப்யந்து
 38. வஷட்காரா: த்ருப்யந்து:
 39. வ்யாஹ்ருதய: த்ருப்யந்து
 40. ஸாவித்ரீ த்ருப்யது
 41. யஜ்ஞா: த்ருப்யந்து
 42. த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்
 43. அந்தரிக்ஷம் த்ருப்யந்து
 44. அஹோராத்ராணி த்ருப்யந்து
 45. ஸங்க்யா: த்ருப்யந்து
 46. ஸாங்க்யா: த்ருப்யந்து
 47. ஸித்தா: த்ருப்யந்து
 48. ஸாத்யர்: த்ருப்யந்து
 49. ஸமுத்ரா: த்ருப்யந்து
 50. நத்ய: த்ருப்யந்து
 51. காவ: த்ருப்யந்து
 52. கிரய: த்ருப்யந்து
 53. ஷேக்தர ஓஷதி வநஸ்பதய: த்ருப்யந்து
 54. கந்தர்வா: அப்ஸரஸ: த்ருப்யந்து
 55. நாகா: த்ருப்யந்து
 56. வயாம்ஸி த்ருப்யந்து
 57. விப்ரா: த்ருப்யந்து
 58. யக்ஷா: த்ருப்யந்து
 59. பூதாநி த்ருப்யந்து
 60. ஏவமந்தாநி த்ருப்யந்து
 61. ருஷி தர்பணம் - ருஷிதீர்த்தத்தில் விவேண்டும் - பூணல் மாலை

 62. சதார்சிநா: த்ருப்யந்து
 63. மாத்யமா: த்ருப்யந்து
 64. க்ரிஷ்நமத: த்ருப்யது
 65. விஸ்வாமித்ர: த்ருப்யது
 66. வாமதேவா: த்ருப்யது
 67. அத்ரி: த்ருப்யது
 68. பாரத்வாஜ: த்ருப்யது
 69. வாசிஷ்டா: த்ருப்யது
 70. ப்ரகத: த்ருப்யது
 71. பாவமாந்ய: த்ருப்யந்து
 72. க்ஷுத்ர சூக்தா: த்ருப்யந்து
 73. மஹா சூக்தா: த்ருப்யந்து
 74. ஆசார்யாளுக்குத் தர்பணம். ஒவ்வொன்றும் மும்மூன்று முறை. பித்ரு தீர்த்தம் - ப்ராசீனாவீதி இது நமது பெற்றோருக்கான பித்ரு தர்பணம் அல்ல, ஆசார்யர்கள் அவர்களின் பித்ருக்கள் மனித வர்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ப்ராசீனாவீதியில் எள் சேர்த்து பண்ணப்படுகிறது. இதை தந்தை உயிருடன் உள்ளவர்களும் பண்ணுவதே சிறப்பு. ஆயினும் தந்தை இல்லாதவர்கள் மட்டுமே செய்கிறார்கள்.

 75. ஸமந்து, ஜைமினி, வைசம்பாயன, பைல, ஸூத்ர பாஷ்ய, பாரத-மஹாபாரத தர்மாசார்யா: த்ருப்யந்து:
 76. ஜானந்தி, பாஹவி, கார்க்ய, கௌதம, ஷாகல்ய, பாப்ரவ்ய, மாண்டூக்யமாண்டூக்யா: த்ருப்யந்து
 77. கார்கி, வாசக்னவி த்ருப்யந்து
 78. படபா, ப்ராதிதேயீ த்ருப்யந்து
 79. ஸுலபா, மைத்ரேயீ த்ருப்யந்து
 80. ககோளம் தர்பயாமி
 81. கௌஷீதகம் தர்பயாமி
 82. மஹாகௌஷீதகம் தர்பயாமி
 83. பாரத்வாஜம் தர்பயாமி
 84. பைங்கம் தர்பயாமி
 85. மஹா பைங்கம் தர்பயாமி
 86. ஸுஜனம் தர்பயாமி
 87. ஸாங்க்யாநம் தர்பயாமி
 88. ஐதரேயம் தர்பயாமி
 89. மஹாஐதரேயம் தர்பயாமி
 90. பாஷ்கலம் தர்பயாமி
 91. கார்க்யம் தர்பயாமி
 92. கௌதமம் தர்பயாமி
 93. ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி
 94. ஔதவாஹிம் தர்பயாமி
 95. மஹாஔதவாஹிம் தர்பயாமி
 96. ஔஜாமிம் தர்பயாமி
 97. சௌநகம் தர்பயாமி
 98. ஆச்வலாயநம் தர்பயாமி
 99. யே சே அந்ய ஆசார்யா: தே ஸர்வே த்ருப்யந்து, த்ருப்யந்து த்ருப்யந்து

என்று தர்பித்தபின் பூநூலை உபவீதமாகப் போட்டுக்கொண்டு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணவேண்டியது.


ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:

வேதாரம்பம்

கிழக்குமுகமாக அமர்ந்து பவித்ரம் போட்டுக்கொண்டு வலது தொடையில் இடதுகைமேல் வலது கைவைத்து "வேதாரம்பம் கரிஷ்யே" என்று ஸங்கல்பம் செய்து கொண்டு கீழே உள்ள வேத மந்திரங்களை (தெரிந்தால் ஸ்வரத்துடன்) ஜபிக்கவும்.

"ஹரி:ஓம் அக்நிமீளே ப்ரோஹிதம் யக்ஞஸ்ய தேவம்ருத்விஜம் ஹோதாரம் ரத்நதாதமம் ஹரி: ஓம் (ருக் வேதம்)
ஹரி: ஓம் இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த்த உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே ஹரி: ஓம் (யஜூர் வேதம்)
ஹரி: ஓம் அக்நஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸிபர்ஹிஷி ஹரி: ஓம் (ஸாம வேதம்)
ஹரி: ஓம் சந்நோதேவீ: அபிஷ்டயே ஆபோபவந்து பீதயே ச(ம்)யோரபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் (அதர்வ வேதம்)"

பவித்திரம் இருந்தால் பிரித்துப் போட்டு ஆசமனம் பண்ணவும்.


ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:
வடகலையார்: பகவாநேவ ...ஸ்வசேஷ பூதமிதம் அத்யாய உபாகர்மாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவாந். என்று ஸாத்வீக த்யாகம் சொல்லவேண்டியது.

எல்லோரும் கை கூப்பிக்கொண்டு சொல்லவும்

காயேநவாசா மனஸே இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ருஹ்ருதே: ஸுபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாயேதி ஸமர்ப்பயாமி. ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்து, அச்யுதப் ப்ரீயதாம்.
பொதுவான இடத்தில் சென்று உபாகர்மா முடித்து ஆத்துக்கு வருபவர்களுக்கு ஆரத்தி எடுப்பது வழக்கம். அனைவரும் பெருமாள் ஸேவித்து ஆத்தில் தெருவில் ஊரில் உள்ள மரியாதைக்குரிய பெரியவர்களையும் ஸேவித்து ஆசீர்வாதம் பெறவேண்டியது. இத்துடன் ஆவணியவிட்டம் முற்றுப்பெற்றது.

எமது விண்ணப்பம்:

இந்த உபாகர்மா கைபேசி செயலியாக வழங்கப்பட்ட ஸேவையில் தாங்கள் த்ருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தால் உங்கள் மகிழ்ச்சியை ஒரு ஈமெயில் வழியாக பகிர்ந்துகொண்டால் இதை உருவாக்குவதில் முயற்சி, ஈடுபாட்டுடன் அரிதான நேரத்தையும், பொருளையும் செலவிட்டவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வோம். தங்கள் நிறை, குறை, எதிர்பார்ப்பு, சந்தேஹ விளக்கக் கேள்வி எதையும் drnvs@outlook.com என்கிற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும்.

அநுஷ்டானம், வைதீகம், சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் பற்றிய மிகவும் அரிதான, உபயோககரமான தகவல்களுடன் எண்ணற்ற பக்ககங்களைக் கொண்ட 1999ம் வருடத்தில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் இணையதளத்தை அடிக்கடி பார்வையிட்டு, தங்கள் அனைத்து தேடல்களையும் கண்டுகொள்ளலாம். அடிக்கடி விஜயம் செய்க: http://www.ahobilam.com
அதேபோல 2011ம் ஆண்டில் அனைத்துலக ப்ராம்மணர்களும் பங்கேற்று, அநுஷ்டானம், வைதீகம், சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், மற்றும் வீட்டு உபயோகக் குறிப்புகள், ஆன்மீகத் தகவல்கள், நகைச்சுவைகள் என அனைத்துத் தகவல்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக போரம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் தற்போதும் 180000 த்துக்கும் அதிகமான ப்ராம்மண உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இணைந்து பயனளித்து, பயன்பெற்று வருகின்றனர். தாங்களும் இணைந்து தங்களிடமுள்ள அரிதான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விஜயம் செய்க:
more than 18000 genuine brahmin members in Tamil and English, Sanskrit, question Answers from experts, everything for all brahmin community including vaishnavites:
http://www.brahminsnet.com/forums/forum.php

இந்த ஸேவை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே இதை தேவையுள்ள அனைவருக்கும் தெரியும்படிச் செய்வதன் மூலம் தாங்கள் பயன் அடைந்ததுபோல் மேலும் பலர் பயன் அடைய உதவிய புண்ணியம் தங்களுக்கு உண்டாகும். எனவே இந்த ஸேவையையும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் தங்கள் நட்பு வட்டாரத்தில் அறியும்படிச் செய்யவேண்டுமாய் இருகரம் கூப்பி விண்ணப்பித்துக்கொள்கிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள், குடும்பத்தாருடன், நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நீண்ட ஆயுளுடன், நிம்மதியாக வாழ எம்பெருமான் அருள்புரிய, ஆசீர்வாதங்களுடன்
தாஸன்,
Dr.NVS

இந்த கைபேசி உபாகர்மா ஆவணம் ஒரு ப்ருஹபதி (வாத்யார்) இல்லாத குறை தெரியாத அளவிற்கு மிக உதவியாக இருந்தது, வாத்யார் ஸம்பாவனையும் பண்ணினால் மனதுக்குத் திருப்தியாக இருக்கும் என எண்ணுகிறவர்கள், கீழுள்ள டொனேஷன் பட்டனை அழுத்தி ஸமர்ப்பிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல. ஆனால் இந்த முறையில் வழங்கப்படும் டொனேஷனில் 3ல் இரண்டு பங்கு மட்டுமே எங்களை வந்தடையும். முழுமையாக எங்களை வந்தடைய எங்கள் இணைய தளங்களைப் பார்வையிட்டு மற்ற முறைகளில் அனுப்பி வைக்கலாம்.

Please Save and Share my Card: