ஸாம உபாகர்மா - 2017


உபாகர்மா ப்ரயோகம் மிக விபரமாக 4 தலைப்புகளில் 4 தனித்தனி "தாவு பகுதிகளில்" (tab section) வழங்கப்பட்டுள்ளன. தாவு பகுதிகள் பின்வரும் தலைப்புகளைக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளன.
 1. தயாராதல்
 2. தேவை
 3. குறிப்பு
 4. மந்திரம்
தயாராதல் என்ற பெயருடைய அடுத்தத் தாவுப்பகுதியில் உபாகர்மாவுக்குத் தங்களை எப்படித் தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிற முக்கியமான சில விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாவதாகத் "தேவை" என்கிற தலைப்பின் கீழ் உபாகர்மாவுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
3வதான குறிப்பு என்கிற தலைப்பின் கீழ், உபாகர்மா அன்று செய்யவேண்டிய மற்ற அநுஷ்டானங்கள் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 3 விஷயங்களும் யாருக்கெல்லாம் அதிகமாக நேரம் இருக்கின்றதோ, அடிப்படையில் இருந்து அனைத்தையும் விரிவாகத் தெரிந்துகொள்வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்களுக்காகத் தரப்பட்டுள்ளன. ஆனால் கடைசியாக உள்ள மந்திரம் என்கிற தலைப்பில்தான் உபாகர்மாவுக்கான முக்கியமான பாகம் தொடங்குகிறது.
தவிரவும், பெருந்தலைப்புக்கு மேலே Home - Upakarma - Forum - Contact என நான்கு மெனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. Home மெனுவைப் பயன்படுத்தி இணைய தளத்த்தின் ஆரம்ப நுழைவு வாயில் மற்றும் மற்ற மற்ற தலைப்புகள் அவற்றின் உள்ளடக்கங்களைப் பார்வையிட இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் அடுத்து Upakarma என்கிற மெனுவின் கீழ் யஜூர், போதாயன, ஸாம, ருக் உபாகர்மாக்கள், காயத்திரி ஜபம் இவற்றுக்கான தமிழ், ஆங்கில பகுதிகளுக்குச் செல்வதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நமது இணைய தளம் 100 சதவீதம் பாதுகாப்பானது, எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாதது. சில இடங்களில் கூகிள் மூலமாக சில விளம்பரங்கள் வரலாம் அது தவிர்க்க இயலாதது. அவை பெரும்பாலும் வலது புறத்தில்தான் இருக்கும் எனவே மேல் புறம், இடது புறத்தில் உள்ள மெனு இணைப்புகளை தாராளமாகப் பயன்படுத்தி தளத்தின் எல்லா விபரங்களையும் உபயோகித்துப் பார்த்து, தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
Forum என்கிற மெனுவைப் பயன்படுத்தி எங்கள் தளத்தில் உறுப்பினராகி தளத்தில் ஏற்கனவே 18000 த்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ள ப்ராம்மண உறுப்பினர்களுக்கு உபயோகமாகத் தாங்கள் கருதக்கூடிய விஷயங்களைப் பதிவு செய்யலாம். மற்றவர்கள் பதிவைப் பார்வையிடலாம். பதிவுக்கு பின்னூட்டம் செய்யலாம். நிறைய மந்திரங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
மேலுள்ள Contact மெனுவை உபயோகித்து எங்களைத் தொடர்புகொண்டு ஈமெயில் வாயிலாகத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவலை அனுப்பலாம். ரகசியமாக வைக்கவேண்டிய இருவருக்குமேல் தெரிந்துகொள்ள அவசியமில்லாத தகவல்களுக்கு மட்டும் இந்த காண்டாக்ட் பார்ம்ஐ உபயோகிக்கவும். மற்ற தகவல்கள் அனைத்தையும் தளத்திலேயே பதிவிடவும்.
தாங்கள் நம்புவது சிரமம்தான் ஆனால் உண்மையில் மிகப்பெரும்பான்மையான சமயங்களில் தாங்கள் அனுப்பிய தகவலுக்கான மறுமொழி சில நிமிடங்களிலேயே தங்கள் இன்பாக்ஸ்ல் இருக்கக்காணலாம். மேலும், 48 மணி நேரத்திற்குமேல் மறுமொழி கிடைக்காவிட்டால் தங்கள் தகவல் எங்களை வந்தடையவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

உபாகர்மாவுக்கு தயாராதல்

எல்லா நாட்களிலுமே அதிகாலையில் எழுவதுதான் உத்தமம் என்றும் அதனால் உடல் நலம், மனநலம் போன்ற மிக அதிகமான நன்மைகள் உள்ளன என்று தற்போது விஜ்ஞானவாதிகளும் நம்புகிறார்கள். இதையேதான் புராண காலம் தொட்டு நம் முன்னோர்கள் சாஸ்த்ரமாக வகுத்து வைத்துள்ளனர்.


எனவே இந்த உபா கர்மா நாளிலாவது அதிகாலையில் எழுந்து, முறைப்படி தீர்த்தமாடி, பஞ்ச கச்ச வஸ்த்ரம் உடுத்தி, துவாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்து, ஸந்தியாவந்தனம் செய்து உபாகர்மாவுக்குத் தேவையான வஸ்துக்களைத் தயாராக எடுத்துக் வைத்துக்கொண்டு தயாராக வேண்டியது.

பஞ்சகச்ச வேஷ்டி உடுத்திக்கொள்வது எப்படி

உபாகர்மாவுக்குத் தேவையானவை

ஒரு குடத்தில் தண்ணீர்
திருமண் பெட்டி அல்லது விபூதி, சந்தனம், குங்கும்
தாம்பாளம்
சொம்பு, டம்ளர்
அக்ஷதை (அரிசி)
எள் உபாகர்மா மந்திரங்கள், குறிப்புகள்
தேவையான பூணல், பவித்ரம்
மணைப் பலகை

உபாகர்மா குறிப்புகள்

உபாகர்மாவில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன.

 1. நித்ய கர்மா
 2. காண்டருஷி தர்பணம்
 3. வேதாரம்பம்
 4. ,யஜ்ஞோபவீத தாரணம்

1. நித்ய கர்மா :-

சந்த்யாவந்தனம் போன்ற தினமும் செய்யவேண்டிய வைதீக கடைமைகளே நித்யகர்மா எனப்படும். ப்ரஹ்மசாரிகளுக்கு: ப்ராதஸ்ஸ்நான, மௌஞ்சி -மேகலா -அஜின - தண்டதாரண, ஸந்தியாவந்தன, ஸமிதாதான, குருகுலவாஸ, ப்ரஹ்மயஜ்ஞ, பிக்ஷாசரண போன்றவை நித்ய கர்மாக்களாகும். க்ருஹஸ்தர்களுக்கு: ப்ராதஸ்ஸ்நான, (பஞ்சகச்ச) வஸ்த்ர தாராண, புண்ட்ர தாரண, ஸந்த்யாவந்தன, நித்ய ஔபாஸன, தேவயஜ்ஞ(பகவதாராதன), ப்ரஹ்மயஜ்ஞ, பித்ரு யஜ்ஞ, பூதயஜ்ஞ, மநுஷ்ய யஜ்ஞ இத்யாதி நித்ய கர்மாக்களாகும்.
ஆவணி அவிட்டம் - உபாகர்மா செய்து மறுநாள் காயத்ரி ஜபம் இருப்பதால் சுத்த உபவாசம் இருக்கவேண்டும் என்று சிஷ்டாசாரம். ஆனால் பலர் காண்டருஷி தர்பணம் பண்ணுவதற்கு முன்னதாகவே இட்லி, அப்பம் எல்லாம் எடுத்துக்கொண்டு பின்னர் உபாகர்மா செய்கின்றனர். அது மிகத் தவறானதாகும்.

2.ருஷி தர்பணம்:

இதை ருஷி தர்பணம், பித்ரு தர்பணம் என மேலும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவை அனைவரும் செய்யவேண்டும், இரண்டாவது தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும் செய்யவேண்டும். ஆனால், இதில் சொல்லப்பட்டுள்ள தர்பணங்கள் முன்னோர்களான பித்ருக்களுக்குக் கிடையாது. பித்ருக்களுக்கு அநுகூலமாக உள்ள தேவதைகளுக்கான தர்பணம் இது என்பதால் இதை அனைவரும் செய்வதால் எந்தத் தீமையும் இல்லை. காண்டருஷி தர்பணம செய்வதற்கு முன்னால், உபாகர்மாவுக்கு அங்கமாக பூணல் மாற்றிக்கொள்ளவவேண்டும்.

3. வேதாரம்பம் :-

ஸாம வேத வேதாரம்பம் நிறைய உள்ளது. அத்யயனம் செய்யாதவர்களால் ஸாம கானம் செய்ய இயலாது. அத்யயனம் செய்தவர்கள் மட்டுமே ஸாமம் சொல்லலாம் என்று கட்டுப்பாடு உள்ளது. எனவே கீழுள்ள கடைசீ பகுதி வீடியோவில் ஒரு சிறிய அளவு ஸாம கானம் இணைக்கப்பட்டுள்ளது அதை கவனமாக கேட்கவும்.

4.யஜ்ஞோபவீத தாரணம்


ஸாமவேதிகள் ருஷி பூஜை, கடபூஜை, உபாகர்மா ஹோமங்கள் அனைத்தும் முடித்தபின் ருஷிகளுக்குச் சாற்றியிருந்த யஜ்ஞோபவீதத்தை எடுத்து கடைசியாகத்தான் போட்டுக்கொள்வது வழக்கம். இல்லத்தில் ருஷி தர்பணம் மட்டும் பண்ணுகிற பக்ஷத்தில் யஜ்ஞோபவீதத்தை ஆரம்பத்திலேயே தரித்துக்கொண்டும் ருஷி தர்பணங்களைப் பண்ணலாம் என்பது சில பெரியோர் கருத்து. உசிதம்போல் செய்துகொள்ளவும்.

ஸாம உபாகர்மா முழு வீடியோ

ஸங்கல்பம் வரையில் :

பாகம் -2 04-09-2016க்கான ஸங்கல்பம்

பாகம் -3 தொடர்ந்து இறுதி வரை

ஆசமனம்

இந்தக் குறிப்பைப் பயன்படுத்தி ஆசமனம் செய்து பழகிக்கொள்ளவும். ஆசமனம் அடிக்கடி செய்யவேண்டிய விஷயம் என்பதால், ஒவ்வொரு முறையும் குறிப்பைத் தேடிக்கொண்டிருப்பது நன்றாயிராது.

ஒரு டம்ளரில் ஜலம் எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கயில் ஒரு மில்லி லிட்டர் (மிகக் குறைவாக) ஜலம் எடுத்துக்கொண்டு 3 மந்திரங்களுக்கு 3 முறை உட்கொண்டு,

 1. ஓம் அச்சுதாய நம:
 2. ஓம் அனந்தாய நம:
 3. ஓம் கோவிந்தாய நம:

ஜலம் தொட்டு வாயைத் துடைத்து, கையை அலம்பிக்றது. அந்தந்த இடங்களைத் தொட்டு அந்தந்த பகவன் நாமாக்களைச் சொல்லவும்.

கேஸவாய நம:
நாராயணாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:
விஷ்ணவே நம:
மதுசூதநாய நம:
திரிவிக்ரமாய நம:
வாமநாய நம:
ஶ்ரீதராய நம:
ருஷீகேஸாய நம:
பத்மநாபாய நம:
தாமோதராய நம:

ஒவ்வொரு வைதீக கர்மாவின் ஆரம்பத்திலும் இந்த ஆசமனம் இரு முறை செய்யப்படவேண்டும்

ப்ராணாயாமம்

கிழக்கு நோக்கி அமர்ந்து இரு கட்டை தர்பங்களை கால்களுக்கு அடியில் போட்டுக்கொள்ளவும்.
வலது கை மோதிர விரலில் இருபில் பவித்திரம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, அதனுடன் இரு தர்பங்களை இடுக்கிக்கொள்ளவும்.
வலது கை கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அழுத்தி மூடவம்.
சுட்டு விரல், நடுவிரல் இரண்டையும் உட்புறமாக மடித்துக்கொள்ளவும். சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இடது நாசித் துவாரத்தையும் அழுத்தி மூடிக்கொள்ளவும்.
வாயையையும் இறுக மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை 3 முறை மனதிற்குள் ஜபிக்கவம்.

ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம், தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம்.

இந்த மந்திரம் 3 முறை ஜபித்தால் ஒரு ப்ராணாயாமம் ஆகும்.

வடகலை ஆரம்பம்:

ஓம் அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேசரி வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி குருப்ய: தத்குருப்யஸ்ச்ச நமோவாகம் அதீமஹே வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ஸ்வசேஷ பூதேநமயா ஸ்வீயை: ஸர்வபரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்.

(தென்கலை, ஸ்மார்த்தா ஆரம்பம் வடகலை தொடர்ச்சி)

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேது ஸர்வவிக்னோபசாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே.
வலது தொடையில் இடதுகைமேல் வலது கைவைத்து
ஹரிரோம்தத்
ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத: மஹாபுருஷ்ஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே ஸ்ரீ ஸ்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே
இந்தியாவில் இருப்பவர்கள் :ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே
வெளிநாட்டில் இருப்பவர்கள் : த்வீபம் வர்ஷம் கண்டம் தெரியாதவர்கள் விஷ்ணு என்பதை உபயோகித்துக்கொள்ளலாம். அதாவது விஷ்ணு த்வீபே விஷ்ணு வர்ஷே விஷ்ணு கண்டே என்று சொல்லலாம்
எல்லோரும் சொல்லவும் சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்சவே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே

25-08-2017க்கான ஸங்கல்பம்:

1-ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயினே, 2-வருஷ ருதௌ, 3- ஸிம்ஹ மாஸே, சுக்ல பக்ஷே, 4 - சதுர்த்தியாம் சுப திதௌ வாஸர: 5- ப்ருகு வாஸர யுக்தாயாம், 6 - ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், 7- சுப யோக யுக்தாயாம், 8 - வணிஜ கரண யுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்தியாம் சுப திதௌ

ஸ்ரீ-ம் (குறிப்பு:- இதுபோல் ஸ்ரீ-ம் என்று உள்ள இடங்களிலெல்லாம் வடகலையார் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்றும், தென்கலையார் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீபகவத் கைங்கர்யம் என்றும், ஸ்மார்த்தா மமோ பார்த்த சமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்றும் சொல்லிக் கொள்ளவும்) மம ச்ரௌத ஸ்மார்த்த விதி விஹித நித்ய கர்ம அநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம் உபாகர்மாங்கம் யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பித்துக்கொண்டு
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி: (தலையைத் தொடவும்)
அநுஷ்டுப் சந்த: (மூக்கைத் தொடவும்)
த்ரயீ வித்யா தேவதா (மார்பைத் தொடவும்)
யஜ்ஞோபவீத தாரணே விநியோக:
(பூணலில் ப்ரம்ம முடிச்சின் பசுமுகம் போன்ற இரண்டு நுனிகளுடன் கூடிய பாகம் கட்டைவிரலை பார்த்திருக்கும்படி வலது கையில் வைத்து, இடது கையால் பூணலின் கீழ்ப் பாகத்தின் உள்ளே வைத்து தளர்வின்றி பிடித்துக்கொண்டு மந்திரம் முடிந்தவுடன் தலையில் மாட்டி வலதுகை உள்ளே நுழைத்து இடது கையை வெளியே எடுத்துவிடவும்)
யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: (கல்யாணமானவர்கள் மட்டும் 2வது பூணலுக்கு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணி பின் பவித்ரம் போட்டு ப்ராணாயமம்)
ஸ்ரீ-ம் க்ருஹஸ்த ஆச்ரமார்த்தம் த்விதீய யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி: (தலையைத் தொடவும்)
அநுஷ்டுப் சந்த: (மூக்கைத் தொடவும்)
த்ரயீ வித்யா தேவதா (மார்பைத் தொடவும்)
யஜ்ஞோபவீத தாரணே விநியோக:
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:" என்று சொல்லி போட்டுக்கொள்ளவேண்டியது. பின் க்ருஹஸ்தாள் ப்ருஹ்மச்சாரி அனைவரும் உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் விஸ்ருஜாமி ஜலேப்ரஹ்மண்ணு வர்ச்ச: தீர்காயு: அஸ்துமே" என்று சொல்லி பழைய பூணலை எடுத்துவிட்டு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணவும். பவித்ரம் காதில் இருந்தால் எடுத்து வலது மோதிர விரலில் போட்டுக்கொண்டு ப்ராணாயாமம் பண்ணவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம்; ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந:ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம். ஶ்ரீபகவதாஜ்ஞயா ..... ம் ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்க்ஷே தைஷ்யாம் பௌர்ணமாஸ்யம் கர்தவ்ய அத்யாய உத்ஸர்ஜன கர்மாங்கம் தேவருஷி பித்ரு ப்ரீத்யர்த்தம் தேவருஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே! இடுக்குப் பில்லை (இருந்தால்) இடது பக்கம் வடக்கே எரிந்துவிடவும்.
  தேவ தர்பணம் உபவீதி (வழக்கம்போல்)
  1. அக்நிஸ் த்ருப்யது
  2. ப்ரஹ்மா த்ருப்யது
  3. ஸோமஸ் த்ருப்யது
  4. சிவஸ் த்ருப்யது
  5. ப்ரஜாபதிஸ் த்ருப்யது
  6. ஸவிதா த்ருப்யது
  7. இந்த்ரஸ் த்ருப்யது
  8. ப்ருஹஸ்பதிஸ் த்ருப்யது
  9. துவஷ்டா த்ருப்யது
  10. விஷ்ணுஸ் த்ருப்யது
  11. யமஸ் த்ருப்யது
  12. வாயுஸ் த்ருப்யது
  13. ஆதித்யஸ் த்ருப்யது
  14. சந்த்ரமா த்ருப்யது
  15. நக்ஷத்ராணி த்ருப்யந்து
  16. ஸஹதேவதாபி: வஸவ: த்ருப்யந்து
  17. ருத்ராஸ் த்ருப்யந்து
  18. ஆதித்யாஸ் த்ருப்யந்து
  19. ப்ருகவஸ் த்ருப்யந்து
  20. அங்கிரஸஸ் த்ருப்யந்து
  21. ஸாத்யாஸ் த்ருப்யந்து
  22. மருதஸ் த்ருப்யந்து
  23. விஸ்வேதேவா: த்ருப்யந்து
  24. ஸர்வே தேவா: த்ருப்யந்து
  25. வாக்ச்ச த்ருப்யது
  26. மநஸ்ச்ச த்ருப்யது
  27. ஆபஸ்ச்ச த்ருப்யது
  28. ஓஷதயஸ்ச்ச த்ருப்யது
  29. இந்த்ராக்நீ த்ருப்யேதாம்
  30. தாதா த்ருப்யது
  31. அர்யமா த்ருப்யது
  32. ஸார்த்தமாஸர்தவ: த்ருப்யந்து
  33. திதி: த்ருப்யது
  34. அதிதி: த்ருப்யது
  35. இந்த்ராணி த்ருப்யது
  36. உமா த்ருப்யது
  37. ஸ்ரீஸ்ச்ச த்ருப்யது
  38. ஸர்வாஸ்ச்ச தேவபத்ந்ய: த்ருப்யந்து!
  39. ருத்ரஸ் த்ருப்யது
  40. ஸ்கந்தவிசாகௌ த்ருப்யேதாம்
  41. விச்வகர்மா த்ருப்யது
  42. தர்சஸ்ச்ச த்ருப்யது
  43. பௌர்ணமாஸச்ச த்ருப்யது
  44. சாதுர்வேத்யம் த்ருப்யது
  45. சாதுர்ஹெளத்ரம் த்ருப்யது
  46. வைஹாரிகாஸ் த்ருப்யந்து
  47. பாகயக்ஞாஸ் த்ருப்யந்து
  48. ஸ்தாவர ஜங்கமே த்ருப்யேதாம்
  49. பர்வதாசிஷஸ் த்ருப்யந்து
  50. பவ்யஸ் த்ருப்யது
  51. நத்யஸ் த்ருப்யந்து
  52. ஸமுத்ரஸ் த்ருப்யது
  53. அபாம்பதிஸ் த்ருப்யது
  54. யஜமாநா: யேதேவாஸ்து ஏகாதசகா:
  த்ரயஸ்ச்ச த்ரீணீச சதா:
  த்ரயஸ்ச்ச த்ரீணீச ஸஹஸ்ரா: த்ருப்யந்து
  55. த்விபவித்ர்யா தேவா: த்ருப்யந்தாம்
  56. ஏகபவித்ர்யா தேவா: மநுஷ்ய
  ப்ரப்ருதய: த்ருப்யந்து
  57.ஸங்கர்ஷண வாசுதேவெள த்ருப்யேதாம்
  58. தந்வந்த்ரிஸ் த்ருப்யது
  59. ஸாதுகாரா: த்ருப்யது
  60. உதரவைச்ரவண பூர்ணபத்ர
  மாணிபத்ரா: த்ருப்யந்து
  61. யாதுதாநா: த்ருப்யந்து
  62. யக்ஷhஸ் த்ருப்யந்து
  63. ரக்ஷhகும்ஸி த்ருப்யந்து
  64. இதர கணா: த்ருப்யந்து
  65. த்ரைகுண்யம் த்ருப்யது
  66. நாமாக்யாத உபஸர்கநிபாதா: த்ருப்யந்து
  67. தேவருஷய: த்ருப்யந்து
  68. மஹா வ்யா ;ருதய: த்ருப்யந்து
  69. ஸாவித்ரீ த்ருப்யது
  70. ருசஸ் த்ருப்யந்து
  71. யஜூகும்ஷி த்ருப்யந்து
  72. ஸாமாநி த்ருப்யந்து
  73. காண்டாநி த்ருப்யந்து
  74. ஏஷாந்தைவதாநி த்ருப்யந்து
  75 ப்ராயஸ்சித்தாநி த்ருப்யந்து
  76. சுக்ரியோபநிஷத: த்ருப்யந்து
  77. சோகீஸ் த்ருப்யது
  78. சுகஸ் த்ருப்யது
  79. சாகல்யஸ் த்ருப்யது
  80. பாஞ்சாலஸ் த்ருப்யது
  81. ருசாபிஸ் த்ருப்யது

  (ருஷி தர்பணம் பூணல் மாலை)
  82. வ்யாஸஸ் த்ருப்யது
  83. பாராசாயஸ் த்ருப்யது
  84. தாண்டீ த்ருப்யது
  85. குகீஸ் த்ருப்யது
  86. கௌசிகீ த்ருப்யது
  87. படபா த்ருப்யது
  88. ப்ராதிதேயீ த்ருப்யது
  89. மைத்ராயணீ த்ருப்யது
  90. தாக்ஷhயணீ த்ருப்யது
  91. ஸர்வாச்சார்யா: த்ருப்யந்து
  92. குலாச்சார்யா: த்ருப்யந்து
  93. குருகுலவாசிந: த்ருப்யந்து
  94. கந்யா த்ருப்யது
  95. ப்ரம்ஹச்சாரி த்ருப்யது
  96. ஆத்மார்த்தீ த்ருப்யது
  97. யாக்ஞ்யவல்க்ய: த்ருப்யது
  98. ராணாயநீ த்ருப்யது
  99. ஸாத்ய முக்ரீ த்ருப்யது
  100. துர்வாசா: த்ருப்யது
  101. பாகுரீ த்ருப்யது
  102. கௌருண்டீ த்ருப்யது
  103. கௌல்குலவீ த்ருப்யது
  104. பகவாந் ஒளபமந்யவ: த்ருப்யது
  105. தாராளஸ் த்ருப்யது
  106. கார்கிஸாவர்ணீ த்ருப்யது
  107. வர்ஷகண்யச்ச த்ருப்யது
  108. குதுமிச்ச த்ருப்யது
  109. ஸாலிஹோத்ரச்ச த்ருப்யது
  110. ஜைமிநிச்ச த்ருப்யது
  111. சடி: த்ருப்பயது
  112. பால்லபவி த்ருப்யது
  113. காலபவி த்ருப்யது
  114. தாண்ட்யஸ் த்ருப்யந்து
  115. வ்ருச்ச த்ருப்யது
  116. வ்ருஷாணகச்ச த்ருப்யது
  117. ருருகிச்ச த்ருப்யது
  118. அகஸ்த்யஸ் த்ருப்யது
  119. பட்கசிரா: த்ருப்யது
  120. குஹ_ஸ்ச த்ருப்யது
  தசஇத்யேதே ப்ரவசன கர்தார:
  ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:
  ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:
  இனி தேவ தர்பணம் உபவீதி (பூணல் நேர்)
  121. அக்நிஸ் த்ருப்யது
  122. ப்ரஹ்மா த்ருப்யது
  123. தேவாஸ் த்ருப்யந்து
  124. வேதாஸ் த்ருப்யந்து
  125. ஓங்காரஸ் த்ருப்யது
  126. ஸாவித்ரி த்ருப்யது
  127. யக்ஞாஸ் த்ருப்யந்து
  128. த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்
  129. அஹோராத்ராணி த்ருப்யந்து
  130. ஸங்க்யாஸ் த்ருப்யந்து
  131. ஸமுத்ராஸ் த்ருப்யந்து
  132. க்ஷேத்ரௌஷதி வநஸ்பதய: த்ருப்யந்து
  133. கந்தர்வாஸ் த்ருப்யந்து
  134. அப்ஸரஸஸ் த்ருப்யந்து
  135. நாகாஸ் த்ருப்யந்து
  136. யக்ஷhஸ் த்ருப்யந்து
  137. ரக்ஷhகும்ஸி த்ருப்யந்து
  பூதாகும்சைவ அநுமந்யந்தாம்
  ருஷி தர்பணம் (பூணல் மாலை)
  138. ஸுமந்துஸ் த்ருப்யது
  139. ஜைமிநிஸ் த்ருபய்து
  140. விஸ்வாமித்ரஸ் த்ருப்யது
  141. வசிஷ்டஸ் த்ருப்யது
  142. பராசரஸ் த்ருப்யபது
  143. ஜாநந்துஸ் த்ருப்யது
  144. பாஹவஸ் த்ருப்யது
  145. கௌதமஸ் த்ருப்யது
  146. சாகல்யஸ் த்ருப்யது
  147. பாப்ரவ்யஸ் த்ருப்யது
  148. மாண்டவ்யஸ் த்ருப்யது
  149. படபா த்ருப்யது
  150. ப்ராதிதேயீ த்ருப்யது
  யேச்சாந்யே ஆச்சார்யா:
  தேப்யஸ்ச்ச ஸ்வதேதி
  தேப்யஸ்ச்ச ஸ்வதேதி
  இனி தேவ தர்பணம் உபவீதி (பூணல் நேர்)
  151. ஒம் நமோ ப்ரஹ்மணே த்ருப்திரஸ்து
  152. ஓம் நமோ ப்ராஹ்மணேப்ய: த்ருப்திரஸ்து
  153. ஓம் நமோ ஆச்சார்யேப்ய: த்ருப்திரஸ்து
  154. ஓம் நமோ ருஷிப்ய: த்ருப்திரஸ்து
  155. ஓம் நமோ தேவேப்ய: த்ருப்திரஸ்து
  156. ஓம் நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து
  157. ஓம் நமோ வாயவேச த்ருப்திரஸ்து
  158. ஓம் நமோ ம்ருத்யவேச த்ருப்திரஸ்து
  159. ஓம் நமோ விஷ்ணவேச த்ருப்திரஸ்து
  160. ஓம் நமோ வைச்ரவணாயச த்ருப்திரஸ்து
  ருஷி தர்பணம் (பூணல் மாலை)

  (இனி வருபவற்றில் இறுதியில் ... புள்ளிகள் உள்ள இடத்தில் "உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து" என்பதை சேர்த்துக்கொள்ளவும்.)


  161. ஸர்வதத்தாது கார்க்யாது
  உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
  162.ஸர்வதத்த: கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே:...
  163.ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாது ஐஷ{மாதது...
  164.த்ராத: ஐஷ{மத: நிகடாது பார்ணவல்கே: ...
  165.நிகட: பார்ணவல்கி: கிரிசர்மண: காண்டேவித்தே:...
  166.கிரிசர்மா காண்டேவித்தி:
  ப்ரம்மவ்ருத்தே: சந்தோக மாஹகே:...
  167.ப்ரம்மவ்ருத்தி: சந்தோகமா கி: மித்ரவர்ச:
  ஸ்தைரகாயநாது ....
  168.மித்ரவர்ச்சா: ஸ்தைரகாயந:
  சுப்ரதீதாது ஒளலுந்த்யாது
  169.ஸுப்ரதீத: ஒளலுந்த்ய: ப்ருஹஸ்பதி
  குப்தாது சாயஸ்தே:
  170. ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி:
  பவத்ராதாது சாயஸ்தே:
  171.பவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாது
  சார்க்கராக்ஷhது
  172.குஸ்துக: சார்க்கராக்ஷ: ச்ரணவதத்தாது
  கௌஹலாது
  173.ச்ரவணதத்த: கௌஹல: சுசாரதாது
  சாலங்காயநாது
  174.சுசாரத: சாலங்காயந: ஊர்ஜயத:
  ஒளபமந்யவாது
  175.ஊர்ஜயநு ஒளபமந்யவ: பாநுமத:
  ஒளபந்யவாது
  176.பாநுமாநு ஒளபமந்யவ: ஆனந்தஜாது
  சாந்தநாயநாது 177.ஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாது சார்க்கராக்ஷhது காம்போஜாச்ச ஒளபமந்யவாது
  178.சாம்ப: சார்க்கராக்ஷ: காம்போஜஸ்ச்ச ஒளபமந்யவ: மத்ரகாராது சௌங்காயநே:
  179.மத்ரகார: சௌங்காயநி: ஸ்வாதே: ஒளஷ்ட்ராக்ஷே:
  180.ஸ்வாதி: ஒளஷ்ட்ராஷ்டி: ஸுஸ்ரவஸ:
  வார்ஷகண்யாது
  181.சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்நாது கௌஹலாது
  182.ப்ராதரஹ்ந: கௌஹல: கேதோ: வாஜ்யாது
  183.கேதுர்வாஜ்ய: மித்ரவிந்த்யாது கௌஹலாது 184.மிந்த்ரவிந்த: கௌஹல: ஸுநீதாது காபடவாது
  185.ஸுநீத: காபடவ: ஸுதேமநஸ: சாண்டில்யாயநாது
  186.ஸுதேமநஸ: சாண்டில்யாயந: அகும்சோ:
  தாநஞ்ஜய்யாது
  187.அகும்சு: தாநஞ்ஜய்ய: அமாவாஸ்யாது
  சாண்டில்யாயநாது ராதாஸ்ச்ச கௌதமாது
  188.ராத: கௌதம: காது: கௌதமாது பிது:
  189.காதா கௌதம: ஸம்வர்கஜித: லாமகாயநாது
  190.ஸம்வர்க்கஜிது லாமகாயந: ஸாகதாஸாது பாடிதாயநாது
  191.ஸாகதாஸ: பாடிதாயந: விசக்ஷணாது தாண்டியாது பிது:
  192.விசக்ஷண: தாண்டிய: கர்தபீமுகாது
  சாண்டில்யாயநாது
  193.கர்தபீமுக: சாண்டில்யாயந: உதரசாண்டில்யாது பிது:
  194.உதரசாண்டில்ய: அதிதந்வநஸ்ச்ச
  சௌநகாது மஸகாஸ்ச்ச கார்க்யாது
  195.மசக: கார்க்ய: ஸ்திரகாது கார்க்யாது பிது:
  196.ஸ்திரக: கார்க்ய: வாசிஷ்டாது சைகிதாநேயாது
  197.வாசிஷ்ட: சைகிதாநேய: வாசிஷ்டாது
  ஆரைஹண்யாது ராஜன்யாது
  198.வாசிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய:
  ஸுமந்த்ராது பாப்ரவாது கௌதமாது
  199.ஸுமந்த்ர: பாப்ரவ: கௌதம: ஸூஷாது
  வாந்ஹேயாது பாரத்வாஜாது 200.ஸூஷ: வாந்ஹேய: பாரத்வாஜ: அராலாது
  தார்த்தேயாது சௌநகாது
  201.அரால: தார்த்தேய: சௌநக: த்ருதே:
  ஐந்த்ரோதாது சௌநகாது பிது: 202.த்ருதி: இந்த்ரோத: சௌநக:
  இந்த்ரோதாது சௌநகாது பிதுரேவ
  203.இந்த்ரோத: சௌநக: வ்ருஷசுஷ்ணாது
  வாதாவதாது
  204.வ்ருஷசுஷ்ண: வாதாவத: நிகோதகாது
  பாயஜாத்யாது
  205.நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே:
  தேவதரதாது
  206. ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ:
  சாவஸாயநாது பிது:
  207. தேவதரா: சாவஸாயந: சவஸ: பிதுரேவ
  208.சவா: அக்நிபுவ: காச்யபாது
  209.அக்நிபூ: காச்யப: இந்த்ரபுவ: காச்யபாது
  210.இந்த்ரபூ: காச்யப: மித்ரபுவ: காச்யபாது
  211.மித்ரபூ: காச்யப: விபண்டகாது காச்யபாது பிது:
  212.விபண்டக: காச்யப: ருச்யச்ருங்காது
  காச்யபாது பிது:
  213.ருச்யச்ருங்க: காச்யப: கச்யபாது பிதுரேவ
  214.கச்யப: அக்நே:
  தேவதர்ப்பணம் உபவீதி (பூணல் நேர்)
  215.அக்நி: இந்த்ராது
  216.இந்தர: வாயோ:
  217.வாயு: ம்ருத்யோ:
  218.ம்ருத்யு: ப்ரஜாபதே:
  219.ப்ரஜாபதி: ப்ரஹ்மண:
  220.ப்ரஹ்மா ஸ்வயம்பூ: தஸ்மை நம:
  தேப்யோ நம:
  ருஷி தர்ப்பணம் நிவீதி (பூணல் மாலை)
  221.அர்யமபூதே: காலபவாது ....
  222.அர்யமபூதி: காலபவ: பத்ரசர்மண: கௌசிகாது .....
  223.பத்ரசர்மா கௌசிக: புஷ்யயசஸ: ஒளதவ்ஜே: ....
  224.புஷ்யயசஸ: ஒளதவ்ரஜி: ஸங்கராது கௌதமாது .....
  225.ஸங்சர: கௌதம: அர்மராதாச்ச
  கோபிலாது பூஷமித்ராச்ச கோபிலாது.....
  226.பூஷமித்ர: கோபில: அஸ்வமித்ராது கோபிலாது .....
  227.அஸ்வமித்ர: கோபில: வருணமித்ராது கோபிலாது .....
  228.வருணமித்ர: கோபில: மூலமித்ராது கோபிலாது.....
  229.மூலமித்ர: கோபில: வத்ஸமித்ராது கோபிலாது....
  230.வத்ஸமித்ர: கோபில: கொளல்குலவீபுத்ராது கோபிலாது.....
  231.கௌல்குலவீபுத்ர: கோபில:
  ப்ருஹத்வஸோ: பிது:...
  232. ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ.....
  233.கோபில: ராதாச்ச கௌதமாது .....
  234.ராத: கௌதம: காது: கௌதமாது பிது:
  235.காதா கௌதம: ஸம்வர்கஜித: லாமகாயநாது .....
  236.ஸம்வர்க்கஜிது லாமகாயந: ஸாகதாஸாது பாடிதாயநாது.....
  237.ஸாகதாஸ: பாடிதாயந: விசக்ஷணாது தாண்டியாது.....
  238.விசக்ஷண: தாண்டிய: கர்தபீமுகாது சாண்டில்யாயநாது.....
  239.கர்தபீமுக: சாண்டில்யாயந: உதரசாண்டில்யாது பிது: .....
  240.உதரசாண்டில்ய: அதிதந்வநஸ்ச்ச
  சௌநகாது மஸகாஸ்ச்ச கார்க்யாது.....
  241.மசக: கார்க்ய: ஸ்திரகாது கார்க்யாது பிது:....
  242.ஸ்திரக: கார்க்ய: வாசிஷ்டாது சைகிதாநேயாது....
  243.வாசிஷ்ட: சைகிதாநேய: வாசிஷ்டாது
  ஆரைஹண்யாது ராஜன்யாது .....
  244.வாசிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய:
  ஸுமந்த்ராது பாப்ரவாது கௌதமாது .....
  245.ஸுமந்த்ர: பாப்ரவ: கௌதம: ஸூஷாது
  வாந்ஹேயாது பாரத்வாஜாது .....
  246.ஸூஷ: வாந்ஹேய: பாரத்வாஜ: அராலாது
  தார்த்தேயாது சௌநகாது .....
  247.அரால: தார்த்தேய: சௌநக: த்ருதே:
  ஐந்த்ரோதாது சௌநகாது பிது: .....
  248.த்ருதி: இந்த்ரோத: சௌநக:
  ஐந்த்ரோதாது சௌநகாது பிதுரேவ .....
  249.இந்த்ரோத: சௌநக: வ்ருஷசுஷ்ணாது வாதாவதாது....
  250.வ்ருஷசுஷ்ண: வாதாவத: நிகோதகாது பாயஜாத்யாது....
  251.நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாது....
  252.ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ:
  சாவஸாயநாது பிது:....
  253. தேவதரா: சாவஸாயந: சவஸ: பிதுரேவ
  254. சவா: அக்நிபுவ: காச்யபாது .....
  255.அக்நிபூ:காச்யப: இந்த்ரபுவ: காச்யபாது .....
  256.இந்த்ரபூ: காச்யப: மித்ரபுவ: காச்யபாது....
  257.மித்ரபூ: காச்யப: விபண்டகாது
  காச்யபாது பிது:.....
  258.விபண்டக: காச்யப: ருச்யச்ருங்காது காச்யபாது பிது:.....
  259.ருச்யச்ருங்க: காச்யப:
  கச்யபாது பிதுரேவ....
  260.கச்யப: அக்நே: .....
  தேவதர்ப்பணம் உபவீதி (பூணல் நேர்)
  261.அக்நி: இந்த்ராது
  262.இந்தர: வாயோ:
  263.வாயு: ம்ருத்யோ:
  264.ம்ருத்யு: ப்ரஜாபதே:
  265.ப்ரஜாபதி: ப்ரஹ்மண:
  266.ப்ரஹ்மா ஸ்வயம்பூ: தஸ்மை நம: தேப்யோ நம:

தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும் இரண்டுபில் பவித்திரத்தை அவிழ்த்து அடையாளமாக வைத்துவிட்டு ஒரு 3 பில் பவித்திரத்தைப் போட்டுக்கொண்டு பூணலை ப்ராசீனாவீதமாக போட்டுக்கொண்டு, 3 எருக்கு இலை மேல் 3 தர்பங்களை வைத்துக்கொண்டு எள் சேர்த்துக்கொண்டு பின் வரும் தர்பணங்கசச் செய்யவும்.
1.பித்ரூணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
2.பிதாமஹாணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
3.ப்ரபிதாமஹாணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
4.மாத்ரூணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
5.பிதாமஹாணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
6.ப்ரமாதாமஹாணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
7.ஆச்சார்யாணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
8.ப்ராச்சார்யாணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
9.ஸகும்ஹிதாகார பதகார ஸூத்ரகார
ப்ராஹ்மணகாராணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
10.ப்ராஹ்மணாநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து (3 முறை)
11.ப்ராஹ்மணீநாம் ஏகபத்நீநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து (3 முறை)
12.ஸர்வேஷாஞ்ச ப்ரஹ்மசாரிணாம் த்ருப்திரஸ்து (3 முறை)
தர்ப்பித்தபின் பூணல் சரியாக போட்டுக்கொண்டு 3 பில் பவித்திரத்தை கழற்றி போட்டுவிட்டு ஆசமனம்.

ஆரம்பத்தில் பூணல் போட்டுக்கொள்ளாதவர்கள் மட்டும் தர்ப்போது மீண்டும் இரணண்டுபில் பவித்திரத்தப் போட்டுக்கொண்டு ப்ராணாயாமம் செய்து,
ஸ்ரீ-ம் (குறிப்பு:- இதுபோல் ஸ்ரீ-ம் என்று உள்ள இடங்களிலெல்லாம் வடகலையார் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்றும், தென்கலையார் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீபகவத் கைங்கர்யம் என்றும், ஸ்மார்த்தா மமோ பார்த்த சமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்றும் சொல்லிக் கொள்ளவும்)

மம ச்ரௌத ஸ்மார்த்த விதி விஹித நித்ய கர்ம அநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம் உபாகர்மாங்கம் யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பித்துக்கொண்டு
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி: (தலையைத் தொடவும்)
அநுஷ்டுப் சந்த: (மூக்கைத் தொடவும்)
த்ரயீ வித்யா தேவதா (மார்பைத் தொடவும்)
யஜ்ஞோபவீத தாரணே விநியோக:
(பூணலில் ப்ரம்ம முடிச்சின் பசுமுகம் போன்ற இரண்டு நுனிகளுடன் கூடிய பாகம் கட்டைவிரலை பார்த்திருக்கும்படி வலது கையில் வைத்து, இடது கையால் பூணலின் கீழ்ப் பாகத்தின் உள்ளே வைத்து தளர்வின்றி பிடித்துக்கொண்டு மந்திரம் முடிந்தவுடன் தலையில் மாட்டி வலதுகை உள்ளே நுழைத்து இடது கையை வெளியே எடுத்துவிடவும்)
யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: (கல்யாணமானவர்கள் மட்டும் 2வது பூணலுக்கு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணி பின் பவித்ரம் போட்டு ப்ராணாயமம்)
ஸ்ரீ-ம் க்ருஹஸ்த ஆச்ரமார்த்தம் த்விதீய யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி: (தலையைத் தொடவும்)
அநுஷ்டுப் சந்த: (மூக்கைத் தொடவும்)
த்ரயீ வித்யா தேவதா (மார்பைத் தொடவும்)
யஜ்ஞோபவீத தாரணே விநியோக:
"யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:" என்று சொல்லி போட்டுக்கொள்ளவேண்டியது. பின் க்ருஹஸ்தாள் ப்ருஹ்மச்சாரி அனைவரும் "உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் விஸ்ருஜாமி ஜலேப்ரஹ்மண்ணு வர்ச்ச: தீர்காயு: அஸ்துமே" என்று சொல்லி பழைய பூணலை எடுத்துவிட்டு பவித்ரம் பிரித்துப்போட்டு ஆசமனம் பண்ணவும்.
வடகலையார் மட்டும் கை கூப்பி "பகவாநேவ ஸ்வசேஷ பூதமிதம் உபாகர்மாக்கயம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்"
என்று சொல்லவும் வடகலையார் உட்பட அனைவரும் காயேந வாசா மநஸே இந்த்ரியைர் வா புத்யா ஆத்மநாவா ப்ரஹ்ருதே: ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி."
என்று சொல்லவும்.
பெருமாள் ஸேவிக்கவும்.
பெரியவாளைச் ஸேவித்து ஆசீர்வாதம் பெறவும்.

எமது விண்ணப்பம்:

இந்த உபாகர்மா கைபேசி செயலியாக வழங்கப்பட்ட ஸேவையில் தாங்கள் த்ருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தால் உங்கள் மகிழ்ச்சியை ஒரு ஈமெயில் வழியாக பகிர்ந்துகொண்டால் இதை உருவாக்குவதில் முயற்சி, ஈடுபாட்டுடன் அரிதான நேரத்தையும், பொருளையும் செலவிட்டவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வோம். தங்கள் நிறை, குறை, எதிர்பார்ப்பு, சந்தேஹ விளக்கக் கேள்வி எதையும் drnvs@outlook.com என்கிற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும்.

அநுஷ்டானம், வைதீகம், சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் பற்றிய மிகவும் அரிதான, உபயோககரமான தகவல்களுடன் எண்ணற்ற பக்ககங்களைக் கொண்ட 1999ம் வருடத்தில் ஶ்ரீவைஷ்ணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் இணையதளத்தை அடிக்கடி பார்வையிட்டு, தங்கள் அனைத்து தேடல்களையும் கண்டுகொள்ளலாம். அடிக்கடி விஜயம் செய்க: http://www.ahobilam.com
அதேபோல 2011ம் ஆண்டில் அனைத்துலக ப்ராம்மணர்களும் பங்கேற்று, அநுஷ்டானம், வைதீகம், சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், மற்றும் வீட்டு உபயோகக் குறிப்புகள், ஆன்மீகத் தகவல்கள், நகைச்சுவைகள் என அனைத்துத் தகவல்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக போரம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் தற்போதும் 180000 த்துக்கும் அதிகமான ப்ராம்மண உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இணைந்து பயனளித்து, பயன்பெற்று வருகின்றனர். தாங்களும் இணைந்து தங்களிடமுள்ள அரிதான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விஜயம் செய்க:
more than 18000 genuine brahmin members in Tamil and English, Sanskrit, question Answers from experts, everything for all brahmin community including vaishnavites:
http://www.brahminsnet.com/forums/forum.php

இந்த ஸேவை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே இதை தேவையுள்ள அனைவருக்கும் தெரியும்படிச் செய்வதன் மூலம் தாங்கள் பயன் அடைந்ததுபோல் மேலும் பலர் பயன் அடைய உதவிய புண்ணியம் தங்களுக்கு உண்டாகும். எனவே இந்த ஸேவையையும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் தங்கள் நட்பு வட்டாரத்தில் அறியும்படிச் செய்யவேண்டுமாய் இருகரம் கூப்பி விண்ணப்பித்துக்கொள்கிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள், குடும்பத்தாருடன், நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நீண்ட ஆயுளுடன், நிம்மதியாக வாழ எம்பெருமான் அருள்புரிய, ஆசீர்வாதங்களுடன்
தாஸன்,
Dr.NVS

இந்த கைபேசி உபாகர்மா ஆவணம் ஒரு ப்ருஹபதி (வாத்யார்) இல்லாத குறை தெரியாத அளவிற்கு மிக உதவியாக இருந்தது, வாத்யார் ஸம்பாவனையும் பண்ணினால் மனதுக்குத் திருப்தியாக இருக்கும் என எண்ணுகிறவர்கள், கீழுள்ள டொனேஷன் பட்டனை அழுத்தி ஸமர்ப்பிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல. ஆனால் இந்த முறையில் வழங்கப்படும் டொனேஷனில் 3ல் இரண்டு பங்கு மட்டுமே எங்களை வந்தடையும். முழுமையாக எங்களை வந்தடைய எங்கள் இணைய தளங்களைப் பார்வையிட்டு மற்ற முறைகளில் அனுப்பி வைக்கலாம்.

Please Save and Share my Card: