ஸ்ரீ வைஷ்ணவம் என்றால் என்ன?
ஸ்ரீ வைஷ்ணவம் என்பது 'அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா" என ஆழ்வார் அருளியது போல, ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே பரம் பொருள், அவன் 'ஸ்ரீ" எனும் மஹாலக்ஷ;மியை எப்போதும் தன்னகத்தே கொண்டவனாகவே விளங்குகிறான். அதாவது இவ்வண்ட சராசரங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் ஸ்ரீமந் நாராயணன். எனவே இங்கு காணப்படும் அனைத்து பொருட்களிலும் உள்ள ஆண் தன்மை உள்ளவை ஸ்ரீமந் நாராயணனையும், பெண் தன்மை கொண்டவை ஸ்ரீ மஹா லக்ஷ;மியையும் குறிக்கும். இதை எளிதில் விளக்கவல்ல நற்றிணை காப்புச் செய்யுளை இங்கே காண்போம்.
மாநிலம் ஸேவடியாக து}நீர்;
வளைநரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாக திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிறியோனே.
‘அகலகில்லேன் இறையுமென்ற”
ஆழ்ந்த பர தத்துவத்தை
இப்புவனம் உய்வதற்காய்
ஈந்திட்ட எம் குருக்காள்‚
உண்மை உறைப்பதற்காய்
ஊணுறக்கம் ஒழிந்திட்டீர்
எம்மையும் போன்றதொரு
ஏதிலனும் பயன்பெறவே
ஐயன்மீர் வந்துதித்தீர்‚
ஒழிவில் காலமெல்லாம்
ஓயாமல் உமதுபுகழ்
ஓதும் வண்ணமதாய்
அ‡(ஹ)ம் அருள்வீரே‚
நாதன் வகுத்தளித்தான்
நல்லாள் நங்கையிடம்
நங்கை ஈன்றாளே
நற்சேனை நாதனிடம்
நற்சேனை நாதனவன்
நம்மாழ்வார் திரமீந்தான்
நம்மாழ்வார் தாமீந்தார்
நாதமுனி கரங்களிலே‚
நாதமுனிசீடரதை உய்யக்கொண்டாரே
நாதமுனி பேரர் யாமுனராமவர்க்கு
நடுவில்வந்தவராம் மணற்கால்நம்பியும்தான்
நயமாயதைச் சேர்த்தார் ஆளவந்தாரவற்கே‚
ஆளவந்தாரதனை ‘ஆம்முதல்வனு”க்கீயும்படி
ஆளவந்தார் சீடர் பெரியநம்பிவசம்மீந்தார்
ஆளவந்தார் சீடர் அளித்த பொக்கிஷத்தை
ஆளவந்தாரவரே எம்பெருமானானாரே‚
எம்பெருமானாரின் இட்டவழக்காக
எம்பாரும் இயல்பாக இங்கேவந்துதித்தார்
எம்பாரின் சீடரிலே ஏற்றமிகு பட்டரவர்
எளிதில் வேதாந்தியை நஞ்ஜீயராக்கினரே‚
நஞ்ஜீயர் நம்மதத்தில் நன்கு கற்றறிந்த
நல்ல உரைகளெல்லாம் நம்பிள்ளைக்கீந்தாரே
நம்பிள்ளை நவின்றதனை நல்லோலை தனிலிட்டு
நமக்காயளித்தவரே வட திருவீதிப்பிள்ளை‚‚
இன்னம் வந்ததொரு
இணையில்லா குருக்களவர்
இன்னமுதத் திருவடிகள்
இறைஞ்சி இருமனமே‚
ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
மேற்படி ஆச்சார்ய மாலா தீவ@ர் N.ஏ. ஸ்ரீநிவாஸனால் இயற்றப்பட்டது.