ஸ்ரீ பாஷ்யம்
அன்புடையீர்,
வைணவத்தில் இங்கு தலைப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களிலும் ஓரளவு கட்டுரைகள் கைவசம் உள்ளன
அதனால் தைரியமாக தலைப்புகளை மட்டும் வழங்கிவிட்டேன்.
ஆனால் அந்த விஷயங்களை தகுந்த முறையில் பார்மேட் செய்து, யுனிகோட் பான்ட்ல் மாற்றி
அதை இந்தப் பக்கங்களில் இணைத்து இயைதளத்தில் பதிவு செய்யவேண்டும். சிறிது காலம் பிடிக்கும்.
தயவு செய்து பொருத்தருளவும்.
‘அகலகில்லேன் இறையுமென்ற”
ஆழ்ந்த பர தத்துவத்தை
இப்புவனம் உய்வதற்காய்
ஈந்திட்ட எம் குருக்காள்‚
உண்மை உறைப்பதற்காய்
ஊணுறக்கம் ஒழிந்திட்டீர்
எம்மையும் போன்றதொரு
ஏதிலனும் பயன்பெறவே
ஐயன்மீர் வந்துதித்தீர்‚
ஒழிவில் காலமெல்லாம்
ஓயாமல் உமதுபுகழ்
ஓதும் வண்ணமதாய்
அ‡(ஹ)ம் அருள்வீரே‚
நாதன் வகுத்தளித்தான்
நல்லாள் நங்கையிடம்
நங்கை ஈன்றாளே
நற்சேனை நாதனிடம்
நற்சேனை நாதனவன்
நம்மாழ்வார் திரமீந்தான்
நம்மாழ்வார் தாமீந்தார்
நாதமுனி கரங்களிலே‚
நாதமுனிசீடரதை உய்யக்கொண்டாரே
நாதமுனி பேரர் யாமுனராமவர்க்கு
நடுவில்வந்தவராம் மணற்கால்நம்பியும்தான்
நயமாயதைச் சேர்த்தார் ஆளவந்தாரவற்கே‚
ஆளவந்தாரதனை ‘ஆம்முதல்வனு”க்கீயும்படி
ஆளவந்தார் சீடர் பெரியநம்பிவசம்மீந்தார்
ஆளவந்தார் சீடர் அளித்த பொக்கிஷத்தை
ஆளவந்தாரவரே எம்பெருமானானாரே‚
எம்பெருமானாரின் இட்டவழக்காக
எம்பாரும் இயல்பாக இங்கேவந்துதித்தார்
எம்பாரின் சீடரிலே ஏற்றமிகு பட்டரவர்
எளிதில் வேதாந்தியை நஞ்ஜீயராக்கினரே‚
நஞ்ஜீயர் நம்மதத்தில் நன்கு கற்றறிந்த
நல்ல உரைகளெல்லாம் நம்பிள்ளைக்கீந்தாரே
நம்பிள்ளை நவின்றதனை நல்லோலை தனிலிட்டு
நமக்காயளித்தவரே வட திருவீதிப்பிள்ளை‚‚
இன்னம் வந்ததொரு
இணையில்லா குருக்களவர்
இன்னமுதத் திருவடிகள்
இறைஞ்சி இருமனமே‚
ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
மேற்படி ஆச்சார்ய மாலா தீவ@ர் N.ஏ. ஸ்ரீநிவாஸனால் இயற்றப்பட்டது.