இடது பக்கத்தில் கண்டுள்ள மெனுவின் தலைப்புகள் பற்றிய சிறு குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
மேலே உள்ள மெனுவை சொடுக்கினால்
அதன் உள்ளடக்கங்கள் இடதுபுறம் மெனுவில் காணப்படும். மீண்டும் இந்த பக்கத்தில் உள்ள மெனுவை பயன்படுத்த மேலே உள்ள ஹோம் என்ற இணைப்பை
பயன்படுத்தி இந்தப் பக்கத்திற்கு வரவும்.
குறிப்பு:- ஆங்கிலத்தில் பார்க்கவும் "Look in English View" என்ற வாசகம் காணப்படும் பகுதி தவிர மற்றவை அனைத்தும் தமிழில் மட்டுமே உள்ளது என்பதை அறியவும்.
"உறுப்பினர்-ஸேவை" - பார்வையாளர்கள் உறுப்பினராவதன் மூலம் புதுவருட பஞ்சாங்கம் போன்றவை வெளியிடும்போதும், உபாகர்மா போன்ற
சில பண்டிகைகள் குறித்த தகவல்கள் வெளியிடும்போதோ ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர் ஆகி அடிக்கடி தொடர்பு கொண்டால்
அவுர்களை எளிதில் ஞாபகம் வைத்துக்கொண்டு ஒரு நட்புறவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.மற்றபடி உறுப்பினர் உறுப்பினர் அல்லாதார் என
எந்த பாகுபாடும் இன்றி அனைத்துப் பக்கங்களையும் அனைவரும் பார்க்கலாம். அனைத்து தகவல்களையும் பெறலாம்.
திருமணத்திற்கு ஐயர், ஐயங்கார் உட்பட அனைத்து ஹிந்து மதத்தினரும் பதிவுசெய்துகொள்வதன் மூலம்
பதிந்தவுடன் தாங்கள் தெரிவித்துள்ள விருப்பத்திற்கேற்ற துணை பதிவிலிருந்தால் உடனே பொருத்தமான துணைகளின்
விபரங்களை பார்வையிட்டு அனைத்துத் தகவல்களையும் பெறலாம். தற்போதைக்கு பதிவு உட்பட அனைத்தும் இலவசம்...
more ...
திதி,வார,நக்ஷத்திர குறிப்புகள் மற்றும் சுப முஹூர்த்தங்கள் பற்றிய தகவல்கள். இது டேட்டாபேஸில்
ஸ்டோர் செய்யப்பட்டு தேவையான நாளை தேர்வுசெய்யும்போது அந்தநாளின் தகவலை அளிக்கும்விதமாக ப்ரோகிராம் செய்யப்படவுள்ளது.
தற்போதைக்கு
இது செயல்பாட்டில் இல்லை ஆயினும் வெகுவிரைவில் இது செயல்படத் துவங்கும். more ...
லாபம் வரக்கூடிய வியாபாரம் செய்பவுர்கள் தங்கள் ஸேவைகள் மற்றும் பொருட்களை பற்றிய விளம்பரங்களை நிறைய பொருட்செலவில் செய்தித்தாள்கள் மற்றும்
ஊடகங்களில் வெளியிடலாம். ஆனால் அந்த அளவிற்கு வருமானம் - லாபம் எதுவுமற்றவுர்கள் தங்கள் ஸேவைகளைப் பற்றி பிறருக்கு அறியச்செய்ய இதுபோன்ற
இணைய தளங்களே உதவியாகும்.
எண்ணற்ற தலைப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ள விளம்பர அமைப்பில் தங்கள் வியாபார
மற்றும் சொந்தத் தகவல்களை இலவசமாக வெளியிடுவது மிக மிகச் சுலபம். அதுபோல் தாங்கள்
விரும்பும் விஷயத்தை அல்லது பொருளை ஒன்று அல்லது இரண்டு வார்த்தகளைக் கொண்டே தேடி
அது சம்பந்தமான விளம்பரங்கள் அனைத்தையும் வெகுவிரைவில் பார்வையிட்டு தேவையானவர்களுடன்
நேரடியாகத் தொடர்ப கொள்ளலாம்.
dharma-sastra
தர்மசாஸ்த்ரத்தில் முக்கியமான பகுதிகளான "வர்ணாச்ரமம், ஆசௌசம், ஆஹ்நிகம், ச்ராத்தம் ஆகியவற்றிலிருந்து மிகவும் முக்கியமான விஷயங்களைத்
தொகுத்து பி.டி.எப் ஆக தயாரித்து வெளியிட்டுள்ளோம். தேவையான பகுதிகளை பார்வையிடவோ டவுண்லோட்செய்துகொள்ளவோ செய்யலாம்.
more ...
108 திவ்யதேசங்கள் பற்றிய தகவலைக் கொடுக்கக்கூடிய எண்ணற்ற இணைய தளங்கள் உள்ளன. ஆனால் நம் இணை தளத்தில் மட்டுமே
மிக எளிமையாக தேவையான தகவல்களை சுருக்கமாகவும், விரைவாக பெறும்படியும் அனைத்து திவ்ய தேசங்களுக்கும் நல்ல
படங்கள், இருப்பிட வரைபடங்கள் (கூகிள் மேப்ஸ்) இவற்றுடன் பெரும்பாலான திவ்ய தேசங்களுக்கு வீடியோ காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரே பக்கத்தில் 108 திவ்ய தேசங்களுக்கும் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தல புராண விளக்கங்கள் விரிவாக ஸம்ஸ்க்ரு ச்லோகங்களுடன் இணைக்கப்படவுள்ளன.
more ...
4000 திவ்ய ப்ரபந்தம் முழுமையாக அளிக்கக்கூடிய நிறைய இணைய தளங்கள் உள்ளன.
நம் தளத்தில் மிக நீண்ட நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது. யுனிகோட் எழுத்துரு வருவதற்கு முன்பே நாம் இவற்றை
டைனமிக் பான்ட் என்ற முறையில் வெளியிட்டிருந்தோம். தற்போது யுனிகோட் எழுத்துருவிற்கு மாற்றி வெளியிடப்பட்டு
வருகிறது. நம் தள பார்வையாளர்கள் இதற்காக வேறு தளத்திற்குச் செல்ல தேவையில்லை என்பதற்காகவும்.
சுலபமான மெனுவைக்கொண்டு விரைவாக அணுக ஏதுவாக உள்ளமையாலும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. more ...
இது மிகவும் கட்டுக்கோப்பான குழு. இதில் தேவையற்ற மற்றும் ஸம்பந்தமற்ற ஒரு ஈமெயில் கூட அனுமதிக்கப்படமாட்டாது.
ஒரே ஒரு விளம்பரம் கூட இடம்பெறாது. அதுபோல் டொனேஷன் கேட்டு அனுப்பப்படும் எந்த ஈமெயிலும் அனுமதிக்கப்படமாட்டாது.
தற்போது இதில் 1000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தினமும் உறுப்பினர்களால் எழுப்பப்படும் வைதீக சந்தேகங்கள்
உடனுக்குடன் பதில் அளித்து தீர்த்துவைக்கப்படுகிறது.
இதுவரை சுமார் 4500 கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினராக இணைய கீழ்க்கண்ட
முகவரிக்குச் செல்லவும்.
நம் இணைய தளம் ப்ரபலமாக உள்ளதோ இல்லையோ ஆனால் நம் ஈகுழு "வைதீகம்" உலக ப்ரசித்தம்.
இது 5 மார்ச் 2000மாவது ஆண்டு யாகு குரூப்ஸ்ஸில் தொடங்கப்பட்டது. ஆனால் இதற்கும் சில வருடங்களுக்கு முன்னரே
ஈகுரூப்ஸ்.காம் என்ற இணையதளத்தில் செயல்பட்டு வந்தது.
இது மிகவும் கட்டுக்கோப்பான குழு. இதில் தேவையற்ற மற்றும் ஸம்பந்தமற்ற ஒரு ஈமெயில் கூட அனுமதிக்கப்படமாட்டாது.
ஒரே ஒரு விளம்பரம் கூட இடம்பெறாது. அதுபோல் டொனேஷன் கேட்டு அனுப்பப்படும் எந்த ஈமெயிலும் அனுமதிக்கப்படமாட்டாது.
தற்போது இதில் 1000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தினமும் உறுப்பினர்களால் எழுப்பப்படும் வைதீக சந்தேகங்கள்
உடனுக்குடன் பதில் அளித்து தீர்த்துவைக்கப்படுகிறது.
இதுவரை சுமார் 4500 கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினராக இணைய கீழ்க்கண்ட
முகவரிக்குச் செல்லவும்.
Clik here to go to Vaideekam Yahoo Groups!
more ...
ஶ்ரீவைஷ்ணவ கேந்திரத்தின் வைதீக மற்றும் பிற ஸேவைகள்
பூர்வ - அபர வைதீக காரியங்களுக்கு வாத்யார், ஸ்வாமிகள் மற்றும் தளிகை ஏற்பாடு செய்துகொடுக்கப்படுகிறது.
இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் வாத்யார் கிடைக்காத இடங்களில், இன்டர்நெட், வெப்கேம் வசதி உள்ளவர்களுக்கு,
இன்டர்நெட் மூலமாக இங்கிருந்தே ஆன்லைனில் மந்திரம் சொல்லி அனைத்து வைதீக காரியங்களும் பண்ணி வைக்கப்படுகிறது.
கல்யாணம், உபநயனம், ஸீமந்தம் போன்றவற்றிற்கு வடகலை, தென்கலை அவரவர் ஸம்ப்ரதாயப்படி முறையாக
பத்திரிகை தயார் பண்ண உதவி செய்யப்படுகிறது.
ஈமெயில் வாயிலாக அனைத்து வைதீக ஸந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்படுகிறது.
அமாவாசை தர்பணம், உபார்மா போன்ற விரும்பிய மந்திரங்கள், ப்ரயோகங்கள் பி.டி.எப் முறையில் தமிழ், ஆங்கிலம் மற்றும்
ஸம்ஸ்க்ருதத்தில் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
ஸம்ப்ரதாய வடமொழி வார்த்தைகள் அதிகம் இடம்பெறும் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், ஸம்ஸ்க்ருத மொழிகளில் டைப்செட் செய்து
தேவையான சைஸ் புத்தகமாக டி.டி.பி செய்து கொடுக்கப்படுகிறது.
திருமணத்திற்கு துணை தேடுபவர்களுக்கு ஜாதகம் வாங்கிக்கொண்டு தகுந்த ஜாதகம் கொடுத்து உதவிசெய்யப்படுகிறது.
ஸ்தோத்திர பாடங்கள் அனைத்தும் இந்தப் பகுதயில் ஒவ்வொன்றாக இணைக்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் நம்முடைய இணைய தளத்தை உபயோகித்து உபகர்மாவை
சிறப்பாகச் செய்துகொள்கின்றனர். யஜூர், ஸாம, ருக், போதாயன உபாகர்மா பற்றிய அனைத்துத் தகவல்களும் இப்பகுதியில் இடம்பெறும்.
பெரும்பான்மையானவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் தகவல்கள் அனைத்தும் இப்பகுதியில் அறிவித்து இணைப்பு
வழங்கப்படும்.
வைணவம் பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக இந்த பகுதியில் சேர்க்க உத்தேசம். இதில் பலர் எழுதிய கட்டுரைகளும்
என்.வி.எஸ் வைணவம் படித்தபோது எழுதிய கட்டுரைகளும் வெளியிடப்படும்.
வேதத்தில் உபயுக்தமான அன்றாட வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய பகுதிகள் மட்டும் வெளியிடப்படும்.