ஸ்ரீ வைஷ்ணவம் என்றால் என்ன?
ஸ்ரீ வைஷ்ணவம் என்பது 'அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா" என ஆழ்வார் அருளியது போல, ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே பரம் பொருள், அவன் 'ஸ்ரீ" எனும் மஹாலக்ஷ;மியை எப்போதும் தன்னகத்தே கொண்டவனாகவே விளங்குகிறான். அதாவது இவ்வண்ட சராசரங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் ஸ்ரீமந் நாராயணன். எனவே இங்கு காணப்படும் அனைத்து பொருட்களிலும் உள்ள ஆண் தன்மை உள்ளவை ஸ்ரீமந் நாராயணனையும், பெண் தன்மை கொண்டவை ஸ்ரீ மஹா லக்ஷ;மியையும் குறிக்கும். இதை எளிதில் விளக்கவல்ல நற்றிணை காப்புச் செய்யுளை இங்கே காண்போம்.
மாநிலம் ஸேவடியாக து}நீர்;
வளைநரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாக திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிறியோனே.
இப்பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரால் இயற்றப்பட்டது. இது மிகத் தெளிவாக ஸ்ரீமந் நாராயணனின் பரத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
ஸ்ரீ வைஷ்ணவம் என்பது 'விசிஷ்டாத்வைதம்" என்ற கொள்கையைப் பின்பற்றுவது.
த்வைதம், அத்வைதம் என்ற மற்ற கொள்கைகளையும் இது உள்ளடக்கியது.
த்வைதம் 'ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு" என, அத்வைதம் 'பரமாத்மா ஒன்றே உண்மை உலகில் காணும் அனைத்தும் பொய், அதாவது ப்ரம் ஸத்யம் ஜகத் மித்யை" என்ற கொள்கைகளை உடையன.
ஆனால் விசிஷ்ட அத்வைதமோ, ஜீவாத்மா, பரமாத்மாவை மட்டும் கூறாமல் ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய விசிஷ்டமானவன் பரமாத்மா என்கிறது. அத்வைதத்தின் பரமாத்மா ஒன்றே மெய் என்பது வரை எடுத்துக்கொண்டு த்வைதத்தில் கூறப்பட்டுள்ளபடி அந்த ஒன்று தானே ஜீவாத்மா, பரமாத்மாவாக மட்டுமின்றி மற்ற ஜடப்பொருள்களாகவும் இருக்கின்றது என்பதை வேதங்களையே ஆதாரமாக எடுத்துக்கொண் நிரூபிக்கிறது.
த்வைதம் வேதத்தில் - பேத ச்ருதிகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டது
அத்வைதம் வேதத்தில் - அபேத ச்ருதிகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டது.
விசிஷ்ட அத்வைதம் - வேதத்தின் கடக ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்டது.
பரமாத்மா ஒன்றுதான் மெய் என்ற அத்வைதம் ப்ரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் பொய் என்றது. என்றால் இதைச் சொன்னவனும் பொய், சொல்லப்பட்ட விஷயமும் பொய் என்று அந்த ஒரு கருத்திலேயே நம் ஆச்சார்யர்களை இதைத் தள்ளுகின்றனர்.
அத்வைதத்தின்படி பரமாத்மா எனும் அந்தக் கடவுளுக்கு எந்த குணமுமே கிடையது அது "நிர்குண ப்ரம்மம்" என்கிறார்கள்? எந்த குணமுமே இல்லாத ஒன்று ஒரு பொருளாகவே இருக்க முடியாதல்லவா? பின் எப்படி பரமாத்மாவாக இருக்க முடியும்? கண்ணில் தெரியும் இத்தனை பெரிய ப்ரபஞ்சத்தை பொய் என்று பொய் சொல்ல எப்படித் துணிந்தார்கள் தெரியவில்லை?
இதற்குச் சரியான சமாதானம் சொல்ல விரும்பும் அத்வைதிகள் யாரேனும் இருந்தால் அவர்கள் கருத்து சிறிதும் மாற்றாமல் இங்கு வெளியிடப்படும். நல்ல கருத்துக்கள் வெளிவரவேண்டும் என்று இதை ஆரம்பித்து வைக்கிறேன். இது வெறும் கருத்து மோதல் தவறாக எண்ண வேண்டாம்.