அநுஷ்டானம்
காலை முதல் இரவு வரை (கண் விழித்தது முதல் தூங்கச் செல்லும் வரை)
அநுஷ்டிக்கப்படவேண்டிய சாஸ்த்ர ஸம்ப்ரதாய விஷயங்கள் அநுஷ்டானம்
என்ற இத்தலைப்பில் இடம்பெறும்.
ஸ்நாநம் செய்வதற்கு முன் முடிக்க வேண்டிய காலைக் கடன்களில் கடைபிடிக்கப்படவேண்டிய சாஸ்திர வழி முறைகளைப்பற்றியது.
ஸ்நாந விதி க்ரமப்படி ஸ்நாநம் செய்ய சங்கல்பம் இத்யாதி.
வஸ்த்ர தாரணம் வைதீக முறைப்படி துணி உடுத்திக் கொள்ள உதவி.
திருமண் காப்புத் தரித்துக்கொள்ள உதவி.
குரு பரம்பரை த்யானம் வைதீக கடமையைத் துவங்கும் முன் ஸம்ப்ரதாயப்படி தன்னுடைய ஆசார்யன் அவருக்கு ஆசார்யன் என எம்பெருமான் வரையிலான குரு பரம்பரையை த்யானிக்க வேண்டும்.
ப்ராம்மணனாக இருக்க அடிப்படை இந்த த்ரிகால ஸந்தியாவந்தனமே. ஸந்தியாவந்தனம் செய்யாதவன் தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவன்.
ப்ரஹ்மச்சாரிகளுக்குறிய ப்ரத்யேக அநுஷ்டானங்கள்: ப்ரஹ்மச்சாரிகளுக்கு மிஞ்சி மேகலை அணிதல், தண்டம் தரித்தல், ஸமிதாதானம் போன்ற கடமைகள்பற்றியது.
க்ருஹஸ்தர்கள் கடைபிடிக்கவேண்டியவை: க்ருஹஸ்தர்கள் அவசியம் செய்யவேண்டிய வைதீக கடமைகள். செய்ய முடியாதவற்றுக்கு பரிஹாரம் இருந்தால் அதுபற்றி.
மணமான ஸ்த்ரீகள் அநுஷ்டானம்: ஸ்த்ரீகளுக்கென்று சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மூன்று ரஹஸ்ய மந்த்ரங்கள்: சமாச்ரயணம் ஆன வைஷ்ணவர்கள் ஜபிக்கவேண்டிய முக்கிய மூன்று மந்திரங்களும் தாத்பர்யமும்.
பாகவதன் என்பவன் பெருமாளுக்குப் பிரியமானவன். தான் உபயோகிக்கும் எந்த வஸ்துவையும் எம்பெருமானுக்குச் ஸமர்ப்பித்து அவனுடைய ப்ரசாதமாக ஏற்றுக் கொண்டு பின் அநுபவிப்பவனே உண்மையான பக்தனும் பாகவதனும் ஆவான். அவனுக்கு பகவதாராதனம் மிக முக்கியம்.
பாதுகா ஆராதனம்: வைஷ்ணவர்கள் (சிலர்) தன் ஆசார்யனின் பாதுகைகளுக்கும் நைவேத்யம் செய்த உணவையே எடுத்துக் கொள்வர்.
பங்காளிகள், தாயாதிகள் க்ருஹங்களில் ஏற்படும் பிறப்பு, இறப்பு இவற்றால் உறவின் நெருக்கத்தைப் பொருத்து குறிப்பிட்ட நேரம் அல்லது நாட்கள் சில வைதீக காரியங்களைச் செய்ய இயலாத தீட்டுக் காலம் பற்றி அறிவது.