|
அநுஷ்டானம் - ஸ்நாந விதி |
|
கால்அலம்பி இருமுறை ஆசமனம்
பண்ண வேண்டும். |
ப்ராணாயாமம் பண்ணி "ஓம் அஸ்மத்
குருப்யோ" முதல் "தமாச்ரயே வரையிலும்" பின் "ஹரிரோம் தத்" முதல் அன்றைய திதி
வார நக்ஷத்திரங்கள் கூறி "ஸ்ரீ பகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்" வரையில்
சொல்லிக் கொண்டு
"அக்ருத்யகரண க்ருத்யாகரண பகவதபசார பாகவத அபசாராதீனாம்
நாநாவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபநோதன த்வாரா நித்ய நைமித்திக கர்மண்யதா ஸித்யர்த்தம்
* ... ப்ராத: ஸ்நாநம் அஹம் கரிஷ்யே".
|
* இந்த இடத்தில் விசேஷமாக : "க்ஷேத்ரே ... விமானச் சாயாயாம் ... ஸ்வாமி ஸந்நிதெள ...
மஹா நத்யாம் அல்லது புஷ்கரிண்யாம் " என்று க்ஷேத்ராடனங்களில் அந்தந்த க்ஷேத்திரத்து
பெருமாள் திருநாமம், புஷ்கரிணி திருநாமங்களை விசேஷமாகச் சேர்த்துச் சொல்லலாம். |
வழக்கம்போல் வடகலையார் மட்டும் ஸாத்விகத்யாகம். |
மேற்கொண்டு ஸ்நாநத்தில் உள்ள விசேஷ மந்திரங்கள் பிறகு சேர்க்கப்படும். இதுவரை சொன்னவற்றைச்
செய்வதே விசேஷ ஸ்நாநமாகக் கொள்ளலாம். |
|
|
|
|
|
|
|
|