ஒரு சொம்பு அல்லது குவளையில் தீர்த்தம் வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் அளவிற்கு வலது
உள்ளங்கையில் சேர்த்துக்கொண்டு கீழ் உள்ள ஒவ்வொரு மந்திரத்தையும் சொல்லி முடிவிலும்
ஒவ்வொரு முறை தீர்த்தம் உட்கொள்ளவும். |
1. அச்சுதாய நம: 2. அநந்தாய நம: 3. கோவிந்தாய நம:
கை அலம்பி, வாயை தீர்த்தம் தொட்டு துடைத்து, மீண்டும் கையலம்பி பின் கீழ்கண்ட
படி விரல்களால் அந்தந்த அங்கத்தைத் தொட்டு மந்திரம்சொல்லவும். |
வலது - விரல் |
தொடவேண்டிய இடம் |
சொல்லவேண்டிய திருநாமம் |
கட்டைவிரல் |
வலது கன்னம் |
கேஸவாய நம: |
கட்டைவிரல் |
இடது கன்னம் |
நாராயணாய நம: |
மோதிர விரல் |
வலது கண் (புருவம்) |
மாதவாய நம: |
மோதிர விரல் |
இடது கண் (புருவம்) |
கோவிந்தாய நம: |
ஆட்காட்டி விரல் |
வலது மூக்கு |
விஷ்ணவே நம: |
ஆட்காட்டி விரல் |
இடது மூக்கு |
மதுசூதனாய நம: |
சுண்டு விரல் |
வலது காது |
த்ரிவிக்ரமாய நம: |
சுண்டு விரல் |
இடது காது |
வாமநாய நம: |
நடு விரல் |
வலது தோள் |
ஸ்ரீதராய நம: |
நடு விரல் |
இடது தோள் |
ருஷீகேஸாய நம: |
கட்டை விரல் தவிர மற்ற 4விரல்கள் |
நாபி (வயிறு) |
பத்மநாபாய நம: |
ஐந்தும் குவித்து |
உச்சந்தலை |
தாமோதராய நம: |
வீடியோ காட்சி கீழே
|
வலக்கட்டை விரலால் வலமூக்குத்துவாரம் அடைத்து
அடுத்திரண்டு (ஆள்காட்டி, நடு) விரல் உள் மடக்கி
இட மூக்குத்துவாரம் வழி முடிந்தமட்டும் மூச்சிழுத்து,
அடுத்திரண்டு (மோதிர,சுண்டு) விரலால்
இடமூக்குத்துவாரம் அடைத்து
வாய், மூக்கு எவ்வழியும் காற்று வெளியேறாக் காத்து
பின் மந்திரம் மனதிற்குள் ஜபித்து,
வலமூக்குத் துவாரம் வழி காற்றை சீராக வெளியிட்டு,
முடிவில் சுண்டுவிரலால் வலக்காதை தொடுக.
"ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம்
ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி த்யோயோந: ப்ரசோதயாத்
ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்."
கைதட்டுவதுபோல் இடதுகைமேல் வலதுகை வைத்து
"ஸ்ரீபகவதாக்ஞயா ஸ்ரீமந்நாராயணப் ப்ரீத்யர்த்தம் (அல்லது பகவத் கைங்கர்ய ரூபம்)
மாத்யர்ஹ்நிக ஸந்த்யாம் உபாசிஷ்யே."
வடகலையார் மட்டும் :- "மாத்யாஹ்நிக ஸந்தியாவந்தனாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரயதி."
தலையைத் தொட்டு ‘ஆபோஹிஷ்டா இதி மந்த்ரஸ்ய சிந்துத்வீப ருஷி:”
மூக்கைத் தொட்டு ‘அநுஷ்டுப் சந்த:”
மார்பைத் தொட்டு ‘ஆபோ தேவதா - அபாம் ப்ரோக்ஷணே விநியோக: ” எனக்கூறி
4 விரல்களின் நுனிகளால் ஒவ்வொரு மந்திரத்திற்கும் தலையில் தீர்த்தம் ப்ரோக்ஷித்துக்கொள்ளவும்
ஆபோஹிஷ்டா மயோபுவ:
தானஊர்ஜே ததாநா
மஹேராணாய க்ஷக்சஸே
யோவஸ்சிவதமோ ரஸ:
தஸ்யபாஜயதேஹந:
உசதீரிவ மாதர:
தஸ்மா அரங்கமாமவ:
அடுத்த மந்திரத்திற்கு மட்டும் முழங்கால்களில் ப்ரோக்ஷணம்
யஸ்யக்ஷயாய ஜிந்வதா
பின் மீண்டும் தலையில்
ஆபோஜநயதாஜந:
தலையைச்சுற்றி ‘ஓம் பூர்புவஸ்சுவ:” என்று தீர்த்தம் விடறது.
தலையைத் தொட்டு "ஆபபுநந்து இதி அநுவாகஸ்ய ஆப: ரிஷி:"
மூக்கைத் தொட்டு "அநுஷ்டுப் சந்த:
மார்பைத் தொட்டு "ப்ரஹ்மணஸ்பதிர் தேவதா அபாம் ப்ராசனே விநியோக: " எனக் கூறி
வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தம் எடுத்து மந்திரம் முடிந்ததும் அருந்தவும்
"ஆப புநந்து இதி அநுவகஸ்ய ஆப: ருஷி: - அநுஷ்டுப் சந்த: - ப்ரம்மணஸ்பதி: தேவதா அபாம் ப்ராசநே விநியோக:
"ஆபபுநந்து ப்ருத்வீம் - ப்ருத்வீ பூதா புநாதுமாம் - புநந்து ப்ரும்மணஸ்பதி: ப்ரஹ்மபூதா புநாதுமாம். யதுச்சிஷ்டம் அபோச்யம் - யத்வாதுச்சரிதம் மமா - ஸர்வம்புநந்துமாம் - ஆபோஸதாஞ்ச - ப்ரதிக்ரஹம் - ஸ்வாஹா."
தலையைத் தொட்டு ‘ததிக்ராவ்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவ ருஷி:”
மூக்கைத் தொட்டு ‘அநுஷ்டுப் சந்த:” மார்பைத் தொட்டு ‘ததிக்ராவா தேவதா
- அபாம் ப்ரோக்ஷணே விநியோக:” எனக் கூறி
ப்ரதி மந்த்ரம் தலையில் தீர்த்தம் ப்ரோக்ஷித்துக்கொள்ளவேண்டும்
‘ஓம் ததிக்ராவிண்ணோ அகாருஷம் “
‘ஜிஷ்ணோரஸ்வஸ்ய வாஜிந:“
‘ஸுரபிநோ முகாகரத் “
‘ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத் “
‘ஆபோஹிஷ்டா மயோபுவ: “
‘தானஊர்ஜே ததாநா “
‘மஹேராணாய க்ஷக்சஸே”
‘யோவஸ்சிவதமோ ரஸ: “
‘தஸ்யபாஜயதேஹந: “
‘உசதீரிவ மாதர:”
‘தஸ்மா அரங்கமாமவ:
“ அடுத்த மந்திரத்திற்கு மட்டும்
முழங்கால்களில் ப்ரோக்ஷணம் பின் மீண்டும் தலையில்
‘யஸ்யக்ஷயாய ஜிந்வதா”
‘ஆபோஜநயதாஜந:”
தலையைச்சுற்றி ‘ஓம் பூர்புவஸ்சுவ:” தீர்த்தம் விடறது.
தலைப்பு 2ன் படி - ப்ராணாயாமம்.
"ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் மாத்யாஹ்நிக ஸந்த்யா அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே."
தலையைத் தொட்டு "அர்க்யப்ரதான மந்த்ரஸ்ய விச்வாமித்ர ருஷி:"
மூக்கைத் தொட்டு "தேவீ காயத்ரீ சந்த: "
மார்பைத் தொட்டு "ஸவிதா தேவதா- அர்க்யப்ரதானே விநியோக: "
என்று ந்யாசம் செய்து, தீர்த்த பாத்திரத்தை இடதுகை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரல்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு
மந்திரம் முடிந்ததும் சாய்த்து உள்ளங்கையில் தீர்த்தம் பெற்றுக்கொண்டு, இரண்டு கைகளின் நுனிவிரல்கள் வழியாக விடவேண்டும்.
"ஓம் பூர் புவஸ்ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந:ப்ரசோதயாத் " (இதுபோல் 2 தரம்)
வலது கையில் தீர்த்தம் வாங்கி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு விடவும் "அஸாவாதித்யோ ப்ரஹ்மா "
ஆசமனம் (தலைப்பு 1ல் உள்ளபடி)
|
|
தீர்த்த பாத்திரத்திலிருந்து தீர்த்தம் சரித்து வலது நுனிவிரல்கள் வழியாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு முறை தரையில் விடவும்
‘ஒம் கேசவம் தர்பயாமி”
‘ஓம் நாராயணம் தர்பயாமி”
‘ஓம் மாதவம் தர்பயாமி”
‘ஓம் கோவிந்தம் தர்பயாமி”
‘ஒம் விஷ்ணும் தர்பயாமி”
‘ஓம் மதுசூதனம் தர்பயாமி”
‘ஓம் திரிவிக்ரமம் தர்பயாமி”
‘ஓம் வாமனம் தர்பயாமி”
‘ஓம் ஸ்ரீதரம் தர்பயாமி “
‘ஓம் ருஷிகேசம் தர்பயாமி”
‘ஓம் பத்மநாபம் தர்பயாமி”
‘ஓம் தாமோதரம் தர்பயாமி.”
ஆசமனம். (தலைப்பு 1ல் உள்ளபடி)
ஜபம் பண்ண உட்காரும் இடத்தை ‘ஓம் பூர்புவஸ்சுவ:” என்று ப்ரோக்ஷித்து அங்கே நின்று கொண்டு
தலையைத் தொட்டு ‘ஆஸந மந்த்ரஸ்யா ப்ருதிவ்யா மேருப்ருஷ்ட ருஷி:
“ மூக்கைத் தொட்டு ‘சுதலம் சந்த:”
மார்பைத் தொட்டு ‘ஸ்ரீகூர்மோ தேவதா - ஆஸநே விநியோக:” எனக் கூறி
‘கூர்மாஸனாய நம: கமலாஸனாய நம:
விமலாஸனாய நம: யோகாஸனாய நம:
ப்ருதிவித்வயா த்ருதா லோகா தேவித்வம் விஷ்ணுநாத்ருதா
த்வம்ச தாரயமாம் தேவி பவித்ரம் குருசாஸநம்“
என்று ந்யாசம் செய்து அவ்விடத்தில் சம்மணமிட்டு உட்காரவும்
தலைப்பு 2ன்படி ப்ராணாயாமம்.
"ஸ்ரீ-ம் மாத்யாஹ்நிகஸந்த்யா காயத்ரீ மந்த்ர ஜபம் கரிஷ்யே."
தலை-தொட்டு "ப்ரணவஸ்ய ருஷி ப்ரஹ்மா"
மூக்கு-தொட்டு "தேவி காயத்ரி சந்த:"
மார்-தொட்டு "பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா"
தலை-தொட்டு "பூராதி ஸப்த வ்யாஹ்ருதீநாம் அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப, ஆங்கிரஸ ருஷய:"
மூக்கு-தொட்டு "காயத்ரி, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதி, பங்த்தி, த்ருஷ்டுப், ஜகத்ய: சந்தாகும்ஸி"
மார்-தொட்டு "அக்நி, வாயு, அர்க்க, வாகீச, வருண, இந்த்ர, விச்வேதேவா தேவதா:"
தலை-தொட்டு "ஸாவித்ரியா ருஷி: விஸ்வாமித்ர:"
மூக்கு-தொட்டு " தேவீ காயத்ரீ சந்த: "
மார்-தொட்டு "ஸவிதா தேவதா"
தலை-தொட்டு "காயத்ரி சிரஸ: ப்ரஹ்மா ருஷி:"
மூக்கு-தொட்டு" அநுஷ்டுப் சந்த: "
மார்-தொட்டு "பரமாத்மா தேவதா"
"ஸர்வேஷாம் ப்ராணாயாமே விநியோக:"
தலைப்பு 2ன் படி 3 தரம் ப்ராணாயாமம்
த - தொ "ஆயாது இதி அநுவாகஸ்ய வாமதேவ ருஷி:"
மூ - தொ " அநுஷ்டுப் சந்த: " மா - தொ " காயத்;ரி தேவதா - காயத்ரி ஆவாஹநே விநியோக:"
என்று ந்யாசம் பண்ணி கை கூப்பிக்கொண்டு காயத்ரி ஆவாஹனம்
"ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வந: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விஸ்வமஸி விஸ்வாயு: ஸர்மஸி ஸர்வாயு: அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி"
என்று ஆவாஹனம் பண்ணி பின் கை கூப்பிக்கொண்டு
"மத்யந்திநேது ஸாவித்ரீம் - ரவிமண்டல மத்யகாம் - யஜுர்வேதம் வ்யாஹரந்தீம் - ஸ்வேதம் சூலகராம் சிவாம். யுவதீம் ருத்ர தைவத்யாம் - த்யாயாமி வ்ருஷ வாஹநாம்" என்று சொல்லி
த - தொ "ஸாவித்ரியா ருஷி: விஸ்வாமித்ர:"
மூ - தொ "தேவீ காயத்ரீ சந்த: "
மா - தொ "ஸவிதா தேவதா" என்று ந்யாசம் பின் கைகூப்பி
"சங்கச்சக்ர தரம் தேவம் கிரீடாதி விபூஷிதம் சூர்ய மண்டல மத்யஸ்த்தம் த்யாயேத் ஸ்வர்ண ருசிம் ஹரிம். யோ தேவ: ஸவிதா அஸ்மாகம் த்யோதர்மாதி கோசரா: ப்ரேரயேத் தஸ்ய யத்பர்க்க: தத்வரேண்யம் உபாஸ்மஹே"
கீழ்க்கண்டவாறு 5 பாகமாகப் பிரித்து
1.‘ஓம்”
2.‘பூர்புவஸ்ஸுவ:”
3.‘தத்ஸவிதுர்வரேண்யம்“
4.‘பர்கோதேவஸ்யதீமஹி”
5.‘தியோயோந: ப்ரசோதயாத்”
(10 / 28 / 108 / 1008 தரம் பண்ணவேண்டியது)
தலைப்பு 2ன்படி ப்ராணாயாமம் பண்ணி
"ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீமந் நாராயணப் ப்ரீத்யர்த்தம் காயத்ரி உத்வாஸனம் கரிஷ்யே." எனக் கூறி
த - தொ "உத்தம இதி அநுவாகஸ்ய வாமதேவ ருஷி:"
மூ - தொ "அநுஷ்டுப் சந்த:"
மா - தொ "காயத்ரி தேவதா - காயத்ரி உத்வாஸநே விநியோக:"
என்று ந்யாசம் பண்ணி பின் கை கூப்பிக்கொண்டு
"உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத ழூர்தநி ப்ராஹ்மணேப்யோ ஹ்யநுக்ஞானம் கச்சதேவி யதாசுகம்" என்று சொல்லி
"ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீமந் நாராயணப் ப்ரீத்யர்த்தம் மாத்யாஹ்நிகஸந்த்யா உபஸ்தானம் கரிஷ்யே." எனக் கூறி
த - தொ "ஆஸத்யேந இத்யாதி மந்ராணாம் ஹிரண்யஸ்து}ப ருஷி:"
மூ - தொ "த்ருஷ்டுப் காயத்ரி - ஜகத்யுஷ்ணிக் த்ருஷ்டுப் சந்தாம்ஸி"
மா - தொ "ஸவிதா தேவதா மாத்யாந்நிக சந்த்யோபஸ்தாநே விநியோக:" என்று ந்யாசம் பண்ணி
பின் எழுந்து நின்று கைகூப்பிக்கொண்டு (படத்தில் கண்டுள்ளபடி)
"ஓம் ஆஸத்யேந ரஜஸா வர்த்தமாநோ நிவேசயந் அம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்யயேந ஸவிதா ரதேந தேவோயாதி புவநாவிபச்யந்நு. உத்வயம் தமஸஸ்பரி பச்யந்த: ஜ்யோதிருத்தமம். தேவம் தேவத்ராஸூர்யம் அகந்ம ஜ்யோதிருத்தமம். உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருசே விச்வாய ஸூர்யம்ம்ம். சித்ரம் தேவாநாம் உதகாதநீகம் சக்ஷுர் மித்ரஸ்ய வருணஸ்யாக்நே: ஆப்ரா த்யாவா ப்ருத்வீ அந்தரிக்ஷகும் சூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துசஷ்ச்ச. தத்சக்ஷு: தேவஹிதம் புரஸ்தாது சுக்ரமுச்சரது. (சூர்ய நமஸ்காரம்) பச்யேம சரதஸ்சதம் - ஜீவேம சரதஸ்சதம் - நந்தாம சரதஸ்சதம் - மோதாம சரதஸ்சதம் - பவாம சரதஸ்சதம் - ச்ருணவாம சரதஸ்சதம் - ப்ரப்ரவாம சரதஸ்சதம் - அஜீதாஸ்யாம சரதஸ்சதம் - ஜ்யோக்ச ஸூர்யம் த்ருசே. ய உதகாந் மஹதோர்ணவாத் - விப்ராஜமாந: ஸரிரஸ்ய மத்யாத் - ஸமாவ்ருஷபோ லோஹிதாக்ஷ: - ஸூர்யோவிபச்சிந் மநஸா புநாது"
வடக்கே பார்த்து கைகூப்பி "ஓம் ஸந்த்யாயை நம:"
கிழக்கே பார்த்து கைகூப்பி "ஸாவித்ரியை நம:"
தெற்கே பார்த்து கைகூப்பி " காயத்ரியை நம:"
மேற்கே பார்த்து கைகூப்பி "ஸரஸ்வத்யை நம:"
மேற்கே கைகூப்பி "ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:"
மேற்குப்பார்த்து 4தரம் (தென்கலை 1 தரம்) சாஷ்டாங்கமாக ஸேவித்து
"காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத் நமோ நம:" என்று கூறி
அபிவாதி. பண்ணவேண்டும்.
கிழக்கே பார்த்து "ஓம் ப்ராச்யை திசே நம:"
தெற்கே பார்த்து "தக்ஷிணாயை திசே நம: "
மேற்கே பார்த்து "ப்ரதீச்யை திசே நம:"
வடக்கே பார்த்து "உதீச்யை திசே நம:" பின் கிழக்கே திரும்பி
மேலே பார்த்து "ஊர்த்வாய நம:"
கீழே பார்த்து "அதராய நம:"
மேலே பார்த்து "அந்தரிக்ஷாய நம:"
பூமி பார்த்து "பூம்யை நம:"
நேரே பார்த்து "விஷ்ணவே நம: த்யேயத்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி நாராயண சரசிஜாஸந: ஸந்நிவிஷ்ட: கேயூரவாநு மகர குண்டலவாநு கிரீடி ஹாரி ஹிரண்மயவபு: த்ருத சங்கச்சக்ர: சங்கச்சக்ர கதாபாணே த்வாரகா நிலையாஸ்ச்சுதா கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷமாம் சரணாகதம்.
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மண ஹிதாயசா ஜகத்ஹிதாய ஸ்ரீக்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:"
என்று 4 தரம் ஸேவித்து அபிவாதி
ஜபம் பண்ணின இடத்தில் "ஓம் பூர்புவஸ்ஸுவ:" என்று ப்ரோக்ஷித்து
தலைப்பு 1ன் படி ஆசமனம்.
வடகலையார் மட்டும்: "பகவாநேவ ஸ்வசேஷ பூதமிதம் மாத்யாஹ்நிக ஸந்த்யாவந்தநாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸவப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவாந்"
பாக்கி தீர்த்தத்தை துளசி அல்லது ஏதேனும் செடிக்கடியில்
"காயேந வாசா மநஸே இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ரஹ்ருதே: ஸ்வபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி." என்று விட்டுவிடவேண்டியது.
"ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்பணமஸ்து - அச்யுத: ப்ரீயதாம்" -
மாத்யாஹ்நிக - ஸந்தியாவந்தனம் இத்துடன் முடிந்தது.
தளத்தில் பார்வையில் உள்ள இந்த மந்திரங்களில்
ஏதேனும் குறையிருந்தால் தெரிவிக்கவும்
டவுன்லோட் இணைப்பு தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ளவை - யஜூர்வேதிகளுக்கான மந்திரம்
சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ளவும்