அபரம் -அசுபகாரியங்கள் |
பலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள்.
தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள்
போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால்
ஒருவர் இதுபற்றி அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது
என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். |
தஹனம் :- இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப்
பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா. |
சஞ்சயனம் : தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது. |
நக்ன ச்ராத்தம் : இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம்
ஏற்பட செய்யப்படுவது. |
பாஷாண ஸ்தாபனம் : தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை
கல்லில் ஆவாஹனம் செய்வது. |
நித்யவிதி : ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள்
ஸமர்ப்பிப்பது. |
ஏகோத்திர வ்ருத்தி ச்ராத்தம் :- பத்தாம் நாள் வரை தினமும் பண்ணவேண்டிய ச்ராத்தம். |
நவ ச்ராத்தம் :- பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில்
பண்ண வேண்டிய ச்ராத்தம். |
10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து
10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும். |
க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும்.
கர்தாக்கள் பிறகு... |
ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, .... இவைகளை படைத்து உபசரிப்பது. |
சுமங்கலி விஷயம் :- இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள். |
புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும்
மனைவிக்கு புடவை போடுவபற்றி |
பாஷணாண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது. |
பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :- |
சாந்தி, ஆனந்த ஹோமம் :- |
சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்: |
11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய
மாஸிகம் இத்யாதிகள் |
12ம் நாள் : புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம். |
ஸேவா காலம் : வேத, ப்ரபந்த பாராயணங்கள் |
13ம் நாள் : சுப ஸ்வீகாரம் |
ஊனங்கள், மாஸ்யங்கள் : |
புண்யகால தர்ப்பணங்கள்: |
வருஷாப்தீகம், ச்ராத்தம் : |
வருஷாப்தீக ததியாராதனம் : |