இந்த ச்ராத்தம் என்ற பகுதியில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றுள்ளன
என்பதற்கான பட்டியலும் அவை பற்றிய சிறு குறிப்புகளும் இங்கே வழங்கப்படுகின்றன.
குறிப்புகளைக்கொண்டு அந்தப் பக்த்தை பார்வையிடவேண்டுமா அல்லது பிறகு
பார்த்துக்கொள்ளலாமா என தீர்மானிக்க உதவியாக இருக்கும். மேலும்
அந்தப்பக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்ற தகவலும் இந்த பக்கத்தில்
வெளியிடப்படும்.
ச்ராத்தத்தின் ஒரு முக்கியமான அம்சமாக அக்நிசந்தானம் ஔபாஸனம் இருப்பதால்
அது ஒரு பூா்வ காரியமாக இருந்தாலும் இப்பகுதியில் வெளியிடப்படுகிறது.
யஜூா்வேதம், ஸாமவேதம் இரண்டு அக்நிஸந்தான மந்த்ரங்களும் டைப்
செய்யப்பட்டு தயாரக உள்ளன, ஆனால் அதை இணைய தளத்திற்கு ஏற்றவாறு
வடிவமைத்து வெளியிட சில நாட்கள் தேவைப்படலாம்.
ச்ராத்தம் சம்பந்தமாக சாஸ்த்ரம் என்ன சொல்கிறது என்பதுபற்றி
இப்பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மற்றும் கடந்த வருடத்திற்கான ச்ராத்த திதிகள் பட்டியல்.
இந்த பக்கம் பஞ்சாங்கம் என்ற தலைப்பிலும் இடம்பெற்றுள்ளது.
ச்ராத்த திதி ஸம்பந்தமாக ஏதேனும் ஸந்தேகம் இருந்தால்
தொடர்புகொள்ளவும்.
ச்ராத்தத்தின் பல வகைகளும் அதுபற்றிய விளக்கங்களும் இந்தப் பக்கத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது. மந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அப்பா என்றால் இவர்தான் என்பதுபோல, தாத்தா என்றால் அம்மாவழி தாத்தாவா
அப்பாவழி தாத்தாவா என்ற குழப்பம் வந்துவிடும். ஆங்கிலத்திலும் மேட்டேர்னல்
என்ற வார்த்தையை சேர்த்தால்தான் தாய்வழி தாத்தா என்பது புலனாகும்.
தமிழில் நேரான ஒரே வார்த்தை கிடையாது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில்
தனித்தனி பெயர்கள் உள்ளது அதன் சிறப்பு. அப்படி பித்ருக்களின்
ஸம்ஸ்க்ருத, தமிழ், ஆங்கில பெயர்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
ச்ராத்தம் ஏன் பண்ணவேண்டும் என்பதற்கு தர்க்க ரீதியாக தெளிவாக
காரணங்களுடன் விளக்கமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
யஜூர்வேத ச்ராத்தம் எப்படி பண்ணுவது என்ற வழிமுறைகள் படங்களுடன்
மந்திரங்களுடன் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஸாமவேத ச்ராத்தம் எப்படி பண்ணுவது என்ற வழிமுறைகள் படங்களுடன்
மந்திரங்களுடன் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஸாம கானம்
ஆடியோ வழங்கப்பட்டுள்ளது.
கயா ச்ராத்தம் பற்றிய தகவல்கள் மற்றும் அவ்வப்போது சென்று வந்தவர்களின்
அநுபவங்கள், அங்கு யாரைத் தொடர்புகொள்ளவேண்டும் என்பது பற்றிய
தகவல்களும் மற்றும் கயா ச்ராத்தம்பற்றி ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அண்ணா
நிகழ்த்திய உபந்யாஸம் ஆடியோவும் வழங்கப்பட்டுள்ளது.
யஜூர் வேத தரா்பண மந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸாம வேத தரா்பண மந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யஜூர் வேத மஹாளய தர்பணம் பண்ண தேவையான மந்திரங்கள்
முழமையாக வழங்கப்பட்டுள்ளன. இதை உபயோகித்து அமாவாஸை
தர்பணம் எப்படி பண்ணுவது என்ற தகவலும் வழங்கப்பட்டுள்ளது.
மஹாளயம் பற்றிய தகவல்கள் திதிகள் தேதிகள் போன்ற குறிப்புகள்
வழங்கப்பட்டுள்ளன.
க்ரஹண தர்பணம் பண்ண தேவையான சங்கல்ப மாறுதல்கள்
மற்றும் இந்த வருட க்ரஹண தேதிகள் பண்ணவேண்டிய நேரங்கள்
கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ச்ராத்தம் ஸம்பந்தமாக இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும்
அவ்வப்பபோது கேட்கப்படும் பதில்களும் வழங்கப்பட்டுள்ளன.