Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
தர்பணம் முதலானவை பற்றி தர்மாசாஸ்த்ர சுருக்கத்தில் கண்டுள்ளபடி... பிதா இறந்து ஒரு வர்ஷ காலத்திற்குப் பிறகு திலதர்ப்பணம் செய்யவேண்டும் என்றும், க்ரஹணம் முதலிய நைமித்திகம் நேர்ந்தால் அது முதற்கொண்டு செய்யவேண்டுமென்றும், ஒரு வர்ஷம் க்ரமித்துத் தான் ப்ரேதத்வம் நீங்குகிறதென்றும் சிலர் சொல்லுகிறார்கள். அது ஸரியல்ல. ஏனெனில், ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு செய்யப்படும் ஸோதகும்பம், மாஸிகம், இவைகளை பித்ருத்வம் வந்து விட்டதென்ற ந்யாயத்தைக்கொண்டு பார்வணமாகச் செய்கிறார்கள். திலதர்ப்பணத்திற்கு மட்டில் பித்ருத்வம் வரவில்லை என்று நினைப்பது தகுதியாகுமா? அன்றுயும் தகப்பனிறந்து ஸபிண்டீகரணம் ஆனபிறகு ஒரு வர்ஷத்துக்குள் தாயார் ச்ராத்தம் வந்தால் அதற்கு அங்கமான பரேஹநி தர்ப்பணத்தை செய்கிறதா விட்டுவிடுகிறதா? இதற்கு பதில் அவர்களே தான் சொல்லவேண்டும். தர்சமும், ஸங்க்ரமணமும் ஒன்று சேர்ந்தால் ஏதாவதொன்றை அனுஷ்டிக்கலாம் என்று சிலர்.
தர்சத்தில் (அமாவாசையில்) எந்த ஸங்க்ரமணம் (மாதப்பிறப்பு) நேர்ந்தாலும், ஸங்க்ரமணத்தையே அநுஷ்டிக்கவேண்டும், ஸங்க்ரமணம் நைமித்திகம் ஆனதால் என்பது சிலர் மதம்.
தர்சம், ஸங்க்ரமணம், அர்த்தோதயம், அல்லது மஹோதயம் இவைகள் சேர்ந்தால் அர்தோதயம் அல்லது மஹோதயத்தை அநுஷ்டிக்கவேண்டியது. (விளக்கம்)
தர்சத்தில் க்ரஹணம் சேரும்போது க்ரஹணத்தை அநுஷ்டிக்கவேண்டியது.
பிதா மாதா இறந்துபோன வர்ஷத்தில் தர்ச ச்ராத்தம் முதலியவைகளைஅன்ன ரூபமாக செய்யவே கூடாது.
ஸபிண்டீகரணத்திற்குப் பிறகு திலதர்ப்பணத்தை மட்டும் செய்யவேண்டும். வேண்டாமென்பது சிலர் கொள்கை.
அவிபக்தர்களான ப்ராதாக்கள், தர்சம் முதலிய ச்ராத்த தினங்களில் வௌ;வேரிடங்களிலிருந்தால் தனித்தனியே ச்ராத்த தர்ப்பணாதிகளைச் செய்யவேண்டியது.
தர்ச ச்ராத்தத்தில் ஸ்த்ரீகளுக்கு வரணம் கிடையாது. பித்ரு வரணத்துடன் சேர்த்தும் செய்யக்கூடாது. ஆனால் தர்ப்பணமும் பிண்டமும் உண்டு.
தகப்பன் உள்ளவனுக்கு பித்ருகார்யங்களில் ;அதிகாரமில்லை. ஆனால் ‘பித்ருயக்ஞம்’, நாந்தீ, தீர்த்தச்ராத்தம் இவைகளை தகப்பன் உள்ளவனும் செய்யவேண்டியது.
தகப்பன் செய்தால் யார் தேவதைகளோ அவர்கள் இவனுக்கும் தேவதைகள். தீர்த்த ச்ராத்தத்தில் கயா ச்ராத்தம் கிடையாது.
ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து எள்ளை எடுக்கக்கூடாது. கட்டைவிரலாலேயே தள்ளிக்கொள்ளவேண்டியது.
ஸங்கல்பச்ராத்தத்தில் ;ஆவாஹனம், ஹோமம், அர்க்யம், விகிரம், பிண்டப்ரதானம் இவைகள் கிடையாது.
1. அமாவாஸ்யை. 2. போதாயன அமாவாஸ்யை. போதாயன அமாவாஸ்யை என்பது போதாயனஸ_த்ரிகளாலும், காத்யாயனஸ_த்ரிகளாலும் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.
இந்த போதாயன அமாவாஸ்யைக்கு சந்த்ர தர்சனம் முக்யம். போதாயன அமாவாஸ்யை கழித்த மறு நாளைக்கு மறுநாள் சந்த்ரதர்சனம் ஆகவேண்டியது.
ஒரு ஸ்த்ரீயின் பர்த்தாவுக்கு தன் ஒளரஸ புத்ரனோ, ஸவீக்ருதபுத்ரனோ, அல்லது ஸபத்நீபுத்ரன் வகையராவோ ச்ராத்தம் செய்யும் காலத்தில், இவள் அவர்களின் மந்நிலையில் இருக்கவேண்டியது. அப்படி இல்லாவிட்டால். என்றபடி, இவளும் பர்த்தாவை உத்தேசித்து தனிமையில் ச்ராத்தம் செய்யவேண்டியது. அப்படிச் செய்யாவிட்டால் ச்ராத்தத்தை விட்டவனுக்கு என்ன தோஷப்ராயச்சித்தம் ஏற்படுகிறதோ அதற்கு இவளும் உள்ளாகிறாள்.
மஹாளயம்.
மஹாளயத்தில் பரணிக்கு ‘மஹாபரணீ “ என்று பெயர். த்ரயோதசிக்கு, ‘கஜச்சாயை” என்று பெயர். மத்யாஷ்டமிக்கு ‘கயை” எனப்பெயர். இவைகளிற் செய்யும் ச்ராத்தம், கயா ச்ராத்தத்திற்கு ஸமானம். அமாவஸ்யை, வ்யதீபாதம், பரணீ, த்வாதசீ, அஷ்டமி இவைகளில் திதி, நக்ஷத்ரம், வாரம் இவைகளால் ஏற்பட்ட தோஷங்களைக் கவனிக்கவேண்டியதில்லை. மஹாளயபக்ஷத்தைத் தவிர, மற்ற பக்ஷங்களில் ப்;;;;ரதமை, ஷஷ்டி, ஏகாதசி, த்ரயோதசி, ஜன்மநக்ஷத்ரம், ரோஹிணீ, ரேவதீ, மகம் இவைகளில் மஹாளயம் கூடாது. ஏகவர்க்கத்திற்கு மஹாளயம் செய்யும் விஷயத்தில், த்ரயோதசீ, மகம் இவைகள் கூடாது. இரண்டு வர்க்கத்திற்கும் செய்கிற மஹாளயத்தில் த்ரயோதசீ, மகம் மெத்த ச்லாக்யம், பிள்ளைகள் பிரித்துக்கொண்டாலும், ஒன்றாக இருந்தாலும், ப்ரத்யேகமாய்த்தான் மஹாளயம் செய்யவேண்டியது. பிரித்துக்கொள்ளாத காலத்தில், மகத்துடன் சேர்ந்த திரயோதசியில் செய்யக்கூடாது. இந்த மகா த்ரயோதசியில் பிண்டதானம் கிடையாது. இரண்டு அயனங்களிலும், 2 விஷ{வங்களிலும், எல்லாயுகாதிகளிலும் பிண்டதானத்தைத் தவிர, ச்ராத்தம் செய்யவேண்டும். மகாநக்ஷத்ரத்தில் பிண்டப்ரதானம் கூடாது. அந்வஷ்டகை, வ்ருத்தி, மஹாளயம், ப்ரத்யாப்திகம், கயை இவைகளில் ;மாதாவுக்குத் தனியாக வரணமுண்டு. காருணிக பித்ருக்களாவன:-- சிறிய தகப்பன், பெரிய தகப்பன், தமையன், தம்பி, பிள்ளைகள், அத்தை, அம்மான், பெரியதாயார், சிறியதாயார், ஸஹோதரிகள், தங்கை தமக்கைகளின் புத்ரர்கள், பார்யை, மாமனார், அத்திம்பேர், மாம்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், ஸ்நேகிதன் இவர்களுக்கும் மஹாளயத்தில் ச்ர்hத்தம் செய்யவேண்டும். பிள்ளையுள்ள சிறிய தகப்பனுக்கு வேண்டியதவச்யமில்லை. மஹாளயச்ராத்தத்தை அன்னரூபமாய் செய்கிறவர்களும், ஹிரண்யரூபமாய் செய்கிறவர்களும், ப்ரதிவர்ஷமும் அவ்விதமே செய்யவேண்டுமென்ற நியமமில்லை. தேச காலசக்த்யனுஸாரமாய் மாரிச்செய்வதால் ;தோஷமில்லை. விதுரர்கள் மஹாளத்தை அன்னரூபமாய்ச் செய்ய அதிகாரமுள்ளவர்களல்ல. பர்வதினத்தில், ப்ரத்யாப்திகச்ராத்தம் க்ரஹணத்தால் நிஷேதிக்கப்பட்டு மறுநாள் செய்யவேண்டிவரும் விஷயத்தில் பர்வதினத்தில் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை ;ஹிரண்ய ரூபமாய்ச் செய்யவேண்டியது. அதற்கங்கமாய் தர்ப்பணம் கிடையாது. மாதா ஜீவித்திருந்தால்; மஹாளயத்தில் மாத்ரு வர்க்கத்துக்கு வரணமில்லை. ஸபத்நீமாதா ஜீவித்திருந்தாலும் பிதாமஹ்யாதிகளுக்கு வரணமில்லை. ஆனால் மாதாவோ அல்லது ஸபத்நீமாதாவோ இறந்துபோயிருந்தால் அவர்களுக்கு மட்டில் வஸ{ரூபமாக வரணம் செய்யவேண்டுமென்று தோன்றுகிறது. இரண்டு பேரும் இறந்துபோயிருக்கும் பக்ஷத்தில் க்ரமப்படி மாத்ருவர்க்கத்திற்கும் ஸபத்நீமாதாவுக்குத் தனியாகவும் வரணம் உண்டு. சிலர் ஸபத்நீமாதாவை காருணிக பித்ருக்களில் சேர்த்து வரணம் செய்கிறார்கள். அது பிசகு. அவள் மாதாவைப்போலவே தவிர, காருணிக பித்ருக்களில் சேரமாட்டாள். ஸன்யாஸியின் மஹாளயத்தை த்வர்தசியிலேயே செய்யவேண்டியது. மற்ற திதிகளில் செய்யக்கூடாது. ஆனால் த்வாதசியில் ;ஸந்யாஸியல்லாத மற்றவர்களுக்கும் செய்யலாம்.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!