ச்ராத்தங்கள் பல வகைப்படும்.
1. நக்ன ச்ராத்தம்
2. ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்
3. நவ ச்ராத்தம்
4. ஏகோத்திஷ்ட ச்ராத்தம்
5. ஷோடச ச்ராத்தம்
6. ஸபிண்டீகரண ச்ராத்தம்
7. ஸோதகும்ப ச்ராத்தம்
8. ஊன மாஸிக ச்ராத்தம்
9. திதி மாஸிக ச்ராத்தம்
10. ஊன ஆப்தீக ச்ராத்தம்
11. வருஷ ஆப்தீக ச்ராத்தம்
12. ப்ரத்யாப்தீக ச்ராத்தம்
13. மஹாளய ச்ராத்தம்
14. தர்ச ச்ராத்தம்
15. சங்க்ரமண புண்யகால ச்ராத்தம்
16. க்ரஹணாதி புண்யகால ச்ராத்தம்
17. அஷ்டகா ச்ராத்தம்
18. அந்வஷ்டகா ச்ராத்தம்
19. யுகாதி, மந்வாதி புண்யகால ச்ராத்தம்
20. நாந்தி ச்ராத்தம்
மேற்கண்ட ச்ராத்தங்கள் வெவ்வேறு ரூபங்களில் பண்ணப்பட்டு வருகின்றன. அவையானவன
1. தில தர்பண ரூபம்
2. ஹிரண்ய ரூபம்
3. ஆம ரூபம்
4. ஸங்கல்ப ச்ராத்தம்
5. பார்வண ச்ராத்தம்
என்கிற ஐந்துவிதமாகப் பண்ணப்படுகிறது. ஒவ்வொன்றும் எப்படிச் செய்வது?
எனப்பது பற்றிய விபரங்கள் தொடர்ந்து கீழே வழங்கப்படுகிறது.
ச்ராத்தம் பித்ருக்களுக்காக பிள்ளைகளால் செய்யப்படுவது.
பித்ருக்களின் ஆன்மாவை ஜீவித்துள்ள ஒரு ப்ராஹ்மணனின் ஆன்மாவுடன் எழுந்தருளப் பண்ணி
ஜீவ ஆன்மாவிற்கு த்ருப்தியை ஏற்படுத்துவதன் மூலம் பித்ரு ஆன்மாவைத் திருப்திசெய்வது.
ச்ராத்தம் பண்ணாவிட்டால் பித்ருக்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. நீங்கள் அளிக்கும் உணவு
சாPரத்துடன் உள்ள ஜீவ ஆன்மாவிற்கு மட்டுமே, பித்ரு ஆன்மாவிற்கு உணவு தேவையில்லை
த்ருப்தி மட்டுமே தேவை. பித்ரு ஆன்மாவிற்கு ச்ராத்தங்கள் செய்து த்ருப்தியளித்து தொடர்வு
வைத்திருப்பவன், சாPரம் கழிந்து பித்ரு தசையை அடையும்போது, மற்ற பைசாசங்களால்
இழுக்கப்பட்டு திசை மாறி நரகம்போன்ற இடங்களுக்குச் சென்றுவிடாமல் இருக்க முன்னர்
பித்ரு நிலையில் இருப்பவர்களின் உதவி இவனுகு;குத் தேவைப்படுகிறது. அதற்காகவே
ஜீவித்துள்ளவன் பித்ருக்களுக்குச் ச்ராத்தம் பண்ண வேண்டும். ச்ராத்தம் பண்ணாதவர்களை
உணர்ந்து பண்ண வைப்பதற்காக பெருமாளும், தேவதைகளும், பித்ருக்களும் பலவித
சிரமங்களை ஏற்படச் செய்வர். எனவே வாழையடி வாழையாக சந்ததி தழைக்க,
சிரமங்கள் ஏற்படாமல் இருக்க ச்ராத்தங்களை விடாமல் பித்ருக்களுக்குத் த்ருப்தி
ஏற்படும் வகையில் ச்ரத்தையாகப் பண்ணவேண்டும்.
ச்ராத்தம் : திலதர்பண, ஹிரண்ய, ஆம, ஸோதகும்ப, ஸங்கல்ப, பார்வண, நக்ன,
மஹைக்கோத்திஷ்ட, ஏகோத்திஷ்ட, ஸபிண்டீகரண, ஊன, மாஸிக, ஆப்தீக,
ப்ரத்யாப்தீக என பல வகைகள் உள்ளன. இவற்றில் ஸபிண்டீகரணம் முடிந்து
வருஷஆப்தீகமும் முடிந்து வருடா வருடம் பண்ணப்படும் ச்ராத்தத்திற்கு ப்ரத்யாப்தீக
ச்ராத்தம் என்று பெயர். இந்த ப்ரத்யாப்தீக ச்ராத்தத்தை முறைப்படி உபநயனம்,
ப்ரும்மோபதேசம் ஆனவன், ஸமிதாதானம் பண்ணி அந்த அக்னியிலும், உபநயனம்
ஆகி ப்ராஹ்மண பெண்ணை முறைப்படி உத்வாஹாதி ஹோமங்களுடன் விவாஹம்
செய்தவன் அக்னிஸந்தான ஓளபாஸனம் பண்ணி அந்த அக்நியிலும் (பண்ணப்படும்
ச்ராத்தத்திற்கு பார்வண ச்ராத்தம் என்று பெயர்.) பார்வண ச்ராத்தமாக பண்ணவேண்டும்.
விச்வேதவருக்hக ஒரு ஸ்வாமி, பித்ருக்களுக்காக ஒரு ஸ்வாமி, மஹாவிஷ்ணு ஸ்தானத்திற்கு
ஒரு ஸ்வாமி என மூன்று ஸ்வாமிகளை வைத்து யதோக்தமாகப் பண்ண முடியாதபோது,
குறைந்த பக்ஷம் ஒரு ஸ்வாமியை பித்ருவாக வரித்து, ச்ராத்திற்கு உரிய அன்னங்கைள அளித்து
பண்ணுவது உத்தம ப!க்ஷமாகும். இதற்கும் காலதேச வர்தமானாதிகளால் இயலாதவர்கள் மட்டுமே
அடுத்த பக்ஷத்தைப் பற்றி யோசிக்கவேண்டும். அடுத்த பக்ஷமாக ஹோமங்களைப்
பண்ணமுடியாவிட்டாலும் அன்னங்களை தளிகை செய்து, பெருமாளுக்கு ஆராதனம்
பண்ணி கண்டருளப்பண்ணி, அமுது செய்வித்தல் மத்திம பக்ஷமாகும்
இதற்கு ஸங்கல்ப ச்ராத்தம் என்று பெயர். மற்ற எல்லாம் இருந்து ஸ்வாமி மட்டும்
கிடைக்காமல் போனால், பார்வணமாகவோ, ஸங்கல்பமாகவோ ச்ராத்தம் பண்ணி
ஸ்வாமிக்காக பரிவேஷணம் (பரிமாறுதல்) பண்ணப்பட்ட அன்னத்தை அப்படியே
ஒரு பசுமாட்டிற்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து பின்னர் கர்த்தா சாப்பிடவேண்டும்.
இது கௌண பக்ஷம். (மிக மிக குறைந்த பக்ஷத்திற்கு கௌண பக்ஷம் என்று பெயர்.)
இதற்கு வசிதியில்லாத பொருளாதார பிரச்சினை உள்ளவர்கள் ச்ராத்தம் செய்வதற்கு
தேவையான பொருள்களை யாசமாக (பிச்சை எடுத்து)வேனும் பெற்றுப் பண்ணவேண்டும்.
மற்ற பிரச்சினைகளால் பண்ண முடியாதவர்கள் அதம பக்ஷம் (பரிiக்ஷ எழுத உட்கார்ந்து
வெறும் வெள்ளைத்தாளை மடித்துக்கொடுத்துவிட்டு வந்தவனுக்குச் சமானம்.
பரிக்ஷை எழுதினாயா என்றால் ஓ எழுதிவிட்டேனே என்று சொல்லிக்ககொள்ள உதவும்) -
கீழ்கண்ட ஆம அல்லது ஹிரண்ய ச்ராத்தத்தைப் பண்ணலாம்.
ஆம ச்ராத்தமாவது:- ச்ராத்தத்தில் பண்ணப்படும் சாதம், பருப்பு, கரமதுகள், கூட்டுகள்,
பக்ஷணங்கள் என்ற வகையறாக்கள் அனைத்தையும் ஒரு ப்ராஹ்மணன் திருப்தியாக சாப்பிடத்
தேவையான அளவு அல்லது அதைவிடவும் கூடுதலாக அனைத்துப் பொருட்களையும் வைத்து,
அவருக்குண்டான தக்ஷpணையையும் வைத்து மந்திரங்களைச் சொல்லி தத்தம் செய்து
ஒரு ப்ராஹ்மணனுக்குக் கொடுப்பது.
ஹிரண்ய ச்ராத்தமாவது:- மேற்படி பொருள்களுக்குப் பதிலாக அவற்றை வாங்கத்
தேவையான பணத்தை வெற்றிலை பாக்கில் வைத்து தத்தம் பண்ணிக் கொடுப்பது.
ஹிரண்ய ரூப ச்ராத்தம்
காலையில் தீர்த்தமாடி, முறைப்படி ஊர்த்வ புண்ட்ரம் (திருமண்) தரித்து, சந்தியாவந்தானாதிகள் முடித்து,
பெருமாள் ஆராதனங்களை முடித்துக்கொண்டு கிழக்குமுகமாக அமர்ந்து இரு ஆசமனங்கள் செய்து பவித்திரம்
இருந்தால் 3 பில்லினால் பண்ணப்பட்ட ஒரு பவித்திரத்தைப் போட்டுக்கொண்டு, 3 தர்பங்களை ஆசனமாகப்
போட்டுக்கொண்டு, 3 தர்பங்களை கையில் இடுக்கிக்கொண்டு, ப்ராணாயாமம் செய்யவேண்டியது.
(ஆசமன ப்ராணாயாம மந்திரங்கள் தெரியாதவர்கள் நமது றறற.யாழடிடையஅ.உழஅ வெப்சைட்டில்
உள்ள சந்தியாவந்தன மந்திரத்தையும் அமாவாசை தர்பண மந்திரத்தையும் டவுன்லோட் செய்து
இங்கே விடுபட்டுள்ள மந்திரங்களைப் பூர்த்தி செய்துகொள்ளவும்.)
கைகூப்பி வடகலையானால் : 'ஓம் அஸ்மத் குருப்போய நம: ... தமாச்ரயே" வரை சொல்லி
பூணலை ப்ராசீனவீதமாக மாற்றிக்கொண்டு : 'ஹரிரோம்தது .... ஸ்ரீபகவதாஜ்ஞயா - பகவத் கைங்கர்ய ரூபம் ஃ
ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்" வரை சொல்லிக்கொண்டு
அப்பாவிற்குப் பண்ண : - தங்களுடைய கோத்திரம் அப்பா பெயர் '....... கோத்ரஸ்ய ..... சர்மண:
மம பிது:" என்றும் அம்மாவிற்குப் பண்ண : - '...... கோத்ராயா: .......... நாம்நீயா: மம மாது:
" என்றும் சொல்லி 'ப்ரத்யாப்தீக ச்ராத்தம் முக்யத: கர்த்தும் அ˜க்த:˜ந்நு யத்கிஞ்சிது ஹிரண்ய
ரூபேண அத்ய கரிஷ்யே." என்று ஸங்கல்பித்துக்கொண்டு இடுக்குப்பில் இருந்தால் தெற்கில் போட்டுவிடவேண்டியது.
வடகலையானால் உபவீதத்தில் : "பகவாநேவ - ஸ்வN˜ஷ பூதமிதம் மம பிது: ஃ மாது:
ப்ரத்யாப்தீக ஹிரண்யரூப ச்ராத்தாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரயதி"
என்று சொல்லவும். பின்னர் ப்ராசீனாவீதம் பண்ணிக்கொள்ளவும். எழுந்திருந்து வடக்கே திரும்பி
அல்லது கயை உள்ள திசைநோக்கி கயை த்யானம் செய்து தான் கயையில் உள்ளதாகவும், ச்ராத்தம்
பண்ணுகிறவிடம் கயையாக மாறிவிட்டதாகவும் த்யானம் செய்து கொண்டு, தெற்கே திரும்பி பித்ருக்களை
த்யானம் செய்து, முறைப்படி ச்ராத்தம் பண்ண முடியாத அ˜க்த்த நிலைக்கு மனமாற வருந்தி, இந்த
ஹிரண்ரூப ச்ராத்தத்தையே முக்ய (உத்தம) பக்ஷ ச்ராத்தமாக ஏற்றுக்கொள்ளவேணும் என்று ப்ராத்தித்து,
மேற்கொண்டு ச்ராத்தத்தைத் தொடர அவர்கள் அநுமதியை மாநசீகமாகப் பெற்றுக்கொண்டு கிழக்கு நோக்கி அமரவேண்டியது.
பின்னர் வெத்திலை பாக்கில் ச்ராத்தத்திற்கு ஆகும் செலவை பணமாக வைத்துக்கொண்டு துளி
பச்சை அரிசியையும் சேர்த்துக்கொண்டு அவற்றைக் கையில் கொண்டு பின் வரும்; மந்திரத்தால்
ப்ராசீனாவீதத்துடன் தத்தம் செய்யவும். திருமணமானவராயின் மனைவி அருகில் இருந்தால்,
அவள் கையால் அந்த வெத்திலை பாக்கு பணத்தில் சிறிது தீர்த்தம் ப்ரோக்ஷpக்கச் சொல்லவும்.
'ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவN˜h: அநந்த புண்ய பலதம் அத:˜hந்திம் ப்ரயச்சமே,
தண்டுலா: வைச்வதேவத்யா: பாகேந அந்நம் பசந்தியே தஸ்மாத் தண்டுல தாநேந அத:˜hந்திம் ப்ரயச்சமே.
.... கோத்ரஸ்ய ..... ˜ர்மண: மம பிது: ஃ ..... கோத்ராயா: ....... நாம்நியா: மம மாது: - ப்ரத்யாப்தீக
ச்ராத்தம் முக்யத: கர்த்தும் அ˜க்த˜;˜ந்நு அத்ய கரிஷ்ணமாண ஹிரண்ய ரூப ப்ரத்யாப்தீக ச்ராத்தே,
வஸ{, ருத்ர, ஆதித்ய ஸ்வரூப பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹா: ஃ மாத்ரு, பிதாமிஹி, ப்ரபிதாமஹ்யா: -
தேவதா: யத்கிஞ்சிது ஹிரண்யம் ரக்ஷ யஸ்மை கஸ்மை ஸ்ரீவைஷ்ணவாய (ஸ்மார்த்தாள் - ப்ராஹ்மணாய)
ஸம்ப்ரததே நம: நமம. அச்யுத: ப்ரீயதாம்.
ஒரு தர்ப புக்னம் இருந்தால் அதை தெற்கு நுனியாகப் போட்டு, கையில் சிறிது எள்ளும், ஒரு திருத்துழாய்
தளமும் (புஷ்பம்) வைத்துக்கொண்டு, 'ஏகோவிஷ்ணு: மஹத்பூதம் ப்ரத:க்பூதாநி அநேக˜: த்ரீன்லோகாந்
வ்யாப்ய பூதாத்மா புங்த்தே வி˜;வபு: அவ்யய:, அநேந மம பிது: ஃ மம மாது: ப்ரத்யாப்தீக ச்ராத்த ஆராதநேந
பகவாந் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ ஸ்வரூபி ஃ மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி ஸ்வரூபி - ஸர்வாகார:
பகவாந் ஸ்ரீ ஜநார்ததனஞ்ச: ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம் " என்று அந்த புக்னத்தில் கட்டைவிரல்
வழியாக விழும்படி சிறிது தீர்த்தம் சேர்த்து விடறது.
எழுந்திருந்து உபவீதம் போட்டுக்கொண்டு வடக்கே பார்த்து 'கய கய கயா கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம்
கயா ச்ராத்தம்" என்று சொல்லி, தெற்கே திரும்பி ப்ராசீனாவீதம் போட்டுக்கொண்டு 'அக்ஷய்ய வட:"
என்று 3 தரம் சொல்லிவிட்டு உபவீதம் போட்டுக்கொண்டு ஸ்வாமி எதிரில் இருந்தால் அவரிடம் சிறிது அக்ஷதை
கொடுத்துவிட்டு தத்தம் பண்ணின விஷயங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரைச் ஸேவிக்கவேண்டியது.
அல்லது யாருக்கு அதை அனுப்பி வைக்கப் போகிறீர்களோ அவரை மனதில் த்யானித்துச் ஸேவித்து
(புக்னசெட் இருந்தால் டவுன்லோட் செய்துள்ள தர்பண மந்திரத்தில் 'தர்ச ச்ராத்தம்" என்பதற்கு பதிலாக
'மம பிது:ஃமம மாது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாங்க தில தர்பணம் கரிஷ்யே" என்று சொல்லிக்கொண்டு மற்றபடி
அதில் உள்ளபடி அனைத்துத் தர்பணங்களையும் பண்ணி வடகலையார்:- 'பகவாநேவ ஸ்வN˜ஷ பூதமிதம் மம பிது: ஃ
மாது: ப்ரத்யாப்தீக ஹிரண்ய ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்".
என்று சொல்லி, பவித்ரம் பிரித்துப்போட்டு, ஆசமனம் பண்ணி, காயேநவாசா சொல்லி முடிக்கவேண்டியது.
பெருமாள் ஸேவித்து தீர்த்தம் ஸ்வகரித்துக்கொண்டு சாப்பிடவேண்டியது.
காலையில் தீர்த்தமாடி, முறைப்படி ஊர்த்வ புண்ட்ரம் (திருமண்) தரித்து, சந்தியாவந்தானாதிகள் முடித்து,
பெருமாள் ஆராதனங்களை முடித்துக்கொண்டு கிழக்குமுகமாக அமர்ந்து இரு ஆசமனங்கள் செய்து பவித்திரம்
இருந்தால் 3 பில்லினால் பண்ணப்பட்ட ஒரு பவித்திரத்தைப் போட்டுக்கொண்டு, 3 தர்பங்களை ஆசனமாகப்
போட்டுக்கொண்டு, 3 தர்பங்களை கையில் இடுக்கிக்கொண்டு, ப்ராணாயாமம் செய்யவேண்டியது.
(ஆசமன ப்ராணாயாம மந்திரங்கள் தெரியாதவர்கள் நமது றறற.யாழடிடையஅ.உழஅ வெப்சைட்டில்
உள்ள சந்தியாவந்தன மந்திரத்தையும் அமாவாசை தர்பண மந்திரத்தையும் டவுன்லோட் செய்து
இங்கே விடுபட்டுள்ள மந்திரங்களைப் பூர்த்தி செய்துகொள்ளவும்.)
கைகூப்பி வடகலையானால் : 'ஓம் அஸ்மத் குருப்போய நம: ... தமாச்ரயே" வரை சொல்லி
பூணலை ப்ராசீனவீதமாக மாற்றிக்கொண்டு : 'ஹரிரோம்தது .... ஸ்ரீபகவதாஜ்ஞயா - பகவத் கைங்கர்ய ரூபம் ஃ
ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்" வரை சொல்லிக்கொண்டு
அப்பாவிற்குப் பண்ண : - தங்களுடைய கோத்திரம் அப்பா பெயர் '....... கோத்ரஸ்ய ..... சர்மண:
மம பிது:" என்றும் அம்மாவிற்குப் பண்ண : - '...... கோத்ராயா: .......... நாம்நீயா: மம மாது:
" என்றும் சொல்லி 'ப்ரத்யாப்தீக ச்ராத்தம் முக்யத: கர்த்தும் அ˜க்த:˜ந்நு யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆம
ரூபேண அத்ய கரிஷ்யே." என்று ஸங்கல்பித்துக்கொண்டு இடுக்குப்பில் இருந்தால் தெற்கில் போட்டுவிடவேண்டியது.
வடகலையானால் உபவீதத்தில் : "பகவாநேவ - ஸ்வசேஷ பூதமிதம் மம பிது: ஃ மாது:
ப்ரத்யாப்தீக ஆமரூப ச்ராத்தாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரயதி"
என்று சொல்லவும். பின்னர் ப்ராசீனாவீதம் பண்ணிக்கொள்ளவும். எழுந்திருந்து வடக்கே திரும்பி
அல்லது கயை உள்ள திசைநோக்கி கயை த்யானம் செய்து தான் கயையில் உள்ளதாகவும், ச்ராத்தம்
பண்ணுகிறவிடம் கயையாக மாறிவிட்டதாகவும் த்யானம் செய்து கொண்டு, தெற்கே திரும்பி பித்ருக்களை
த்யானம் செய்து, முறைப்படி ச்ராத்தம் பண்ண முடியாத அ˜க்த்த நிலைக்கு மனமாற வருந்தி, இந்த
ஹிரண்ரூப ச்ராத்தத்தையே முக்ய (உத்தம) பக்ஷ ச்ராத்தமாக ஏற்றுக்கொள்ளவேணும் என்று ப்ராத்தித்து,
மேற்கொண்டு ச்ராத்தத்தைத் தொடர அவர்கள் அநுமதியை மாநசீகமாகப் பெற்றுக்கொண்டு கிழக்கு நோக்கி அமரவேண்டியது.
அரிசி, வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பயத்தம் பருப்பு, வெல்லம், பாகற்காய், புடலங்காய் இவைகளை ஒரு இலையில் வைத்து
அத்துடன் வெத்திலை பாக்கில் ஸ்வாமி தக்ஷிணைக்காக கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு பின் வரும் மந்திரத்தால்
ப்ராசீனாவீதத்துடன் தத்தம் செய்யவும்.
'ப்ருதிவீதே பாத்ரம் த்யௌ: அபிதானம் ப்ரஹ்மணஸ்துவா முகேஜுஹோமி
ப்ராஹ்மணாநாந்த்வா ப்ராணாபாநயோ: ஜுஹோமி அக்ஷிதமஸி மைஷாம் சேஷ்டா:
அமுத்ரா அமுஷ்மின் லோகே இதம் விஷ்ணு: விசக்ரமே த்ரேதா நிததே பதம்
ஸமூடமஸ்ய பாகும்ஸுரே ஸ்வதா விஷ்ணோ யத்கிஞ்சித் ஹிரண்ய ஸஹித
ஆமம் ரக்ஷா
.... கோத்ரஸ்ய ..... சர்மண: மம பிது: ஃ ..... கோத்ராயா: ....... நாம்நியா: மம மாது: - ப்ரத்யாப்தீக
ச்ராத்தம் முக்யத: கர்த்தும் அசக்த: அத்ய கரிஷ்ணமாண ஹிரண்ய ஸஹித ஆம ரூப ப்ரத்யாப்தீக ச்ராத்தே,
வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூப பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹா: ஃ மாத்ரு, பிதாமிஹி, ப்ரபிதாமஹ்யா: -
தேவதா: யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆமம் ரக்ஷ யஸ்மை கஸ்மை ஸ்ரீவைஷ்ணவாய (ஸ்மார்த்தாள் - ப்ராஹ்மணாய)
ஸம்ப்ரததே நம: நமம. அச்யுத: ப்ரீயதாம்.
ஒரு 3 பில் புக்னம் இருந்தால் அதை தெற்கு நுனியாகப் போட்டு, கையில் சிறிது எள்ளும், ஒரு திருத்துழாய்
தளமும் (புஷ்பம்) வைத்துக்கொண்டு, 'ஏகோவிஷ்ணு: மஹத்பூதம் ப்ரத:க்பூதாநி அநேக˜: த்ரீன்லோகாந்
வ்யாப்ய பூதாத்மா புங்த்தே விச்வபு: அவ்யய:, அநேந மம பிது: ஃ மம மாது: ப்ரத்யாப்தீக ச்ராத்த ஆராதநேந
பகவாந் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ ஸ்வரூபி ஃ மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி ஸ்வரூபி - ஸர்வாகார:
பகவாந் ஸ்ரீ ஜநார்ததனஞ்ச: ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம் " என்று அந்த புக்னத்தில் கட்டைவிரல்
வழியாக விழும்படி சிறிது தீர்த்தம் சேர்த்து விடறது.
எழுந்திருந்து உபவீதம் போட்டுக்கொண்டு வடக்கே பார்த்து 'கய கய கயா கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம்
கயா ச்ராத்தம்" என்று சொல்லி, தெற்கே திரும்பி ப்ராசீனாவீதம் போட்டுக்கொண்டு 'அக்ஷய்ய வட:"
என்று 3 தரம் சொல்லிவிட்டு உபவீதம் போட்டுக்கொண்டு ஸ்வாமி எதிரில் இருந்தால் அவரிடம் சிறிது அக்ஷதை
கொடுத்துவிட்டு தத்தம் பண்ணின விஷயங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரைச் ஸேவிக்கவேண்டியது.
அல்லது யாருக்கு அதை அனுப்பி வைக்கப் போகிறீர்களோ அவரை மனதில் த்யானித்துச் ஸேவித்து
(புக்னசெட் இருந்தால் டவுன்லோட் செய்துள்ள தர்பண மந்திரத்தில் 'தர்ச ச்ராத்தம்" என்பதற்கு பதிலாக
'மம பிது:ஃமம மாது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாங்க தில தர்பணம் கரிஷ்யே" என்று சொல்லிக்கொண்டு
பித்ரு வர்கத்திற்கு மட்டும் ஆவாஹனம், ஆஸனம், தர்பணம் பண்ணி மாத்ரு வர்கத்தை விட்டு விடவும்.
வடகலையார்:- 'பகவாநேவ ஸ்வசேஷ பூதமிதம் மம பிது: ஃ
மாது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்".
என்று சொல்லி, பவித்ரம் பிரித்துப்போட்டு, ஆசமனம் பண்ணி, காயேநவாசா சொல்லி முடிக்கவேண்டியது.
பெருமாள் ஸேவித்து தீர்த்தம் ஸ்வகரித்துக்கொண்டு சாப்பிடவேண்டியது.