ஶ்ரராத்தத்தில் உபயோகப்படுத்தக்கூடிய வஸ்துக்கள்
உளுந்து, கருப்பு எள், சம்பர்நெல், கோதுமை, பயறு, கடுகு, கருப்பில்லாத பாகல் (3 விதம்), பில்வம், நெல்லி, திறாiக்ஷ, பலா(2 விதம்), மா, மாதுளை, கடுக்காய், குங்குமப்பூ, கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை (5 விதம்), இலந்தை, தேங்காய், திப்பிலி, மிளகு, புடலங்காய், முள்கத்திரி, சுக்கு, தேன், நெய், சர்க்கரை (வெல்ல சர்க்கரை), காயம், பச்சைகற்பூரம், வெல்லம், கடலுப்பு, வெள்ளரி, பசுவின்பால், அவல், எருமைப்பால் (மத்யமம்), ஜீரகம், சிகப்புக்கொடியுள்ள கூச்மாண்டம் (பூசணிக்காய்), கரணைக்கிழங்கு(2விதம்), சேபபங்கிழங்கு, கடலை, ஏலம், வெள்ளைப்புஷ்பங்கள், தாமரை,ஜாதிபுஷ்பம், சம்பகம் மல்லிகை, துளசி, தாழம்பூ, மரு இவைகள் ச்ராத்தயோக்மானதுகள்.
வரகு, காராமணி, கொள்ளு, கடலை, கருப்புப்பாகல் காய், பெருங்காயம், துவரை, முருங்கை, பூஷணி, சுரைக்காய், எருமைப்பால், மாதுளை, விளா, காச்சு உப்பு, ஒற்றைக்குளம்புள்ள ம்ருகத்தின் பால், எலுமிச்சை, புடலங்காய், மிளகாய், மோர், மந்தாரை இவைகள் ச்ராத்தத்திற்கு யோக்யமல்லாதவைகள்.
விதி நிஷேதம் இரண்டிலும் சொல்லப்பட்டவைகளைச் சேர்த்தாலும் சேர்க்கலாம். தள்ளினாலும் தள்ளலாம். போஜனப்ரகரணத்தில் நிஷித்தமான வஸ்துக்களை ச்ராத்தத்தில் சேர்க்கக்கூடாது.
"ஶ்ராத்தகாண்டம் சில முக்கிய தகவல்கள்"