புண்ணியாகவாசனம் ஆகி, தன்னையும் ப்ரஸவித்த ஸ்திரீ, குழந்தை, க்ரஹம் முதலியவைகளை
புண்ணியாகவாசன ஜலத்தால் ப்ரோக்ஷித்த பிறகு, 'ஓம் நமஸதஸே ஆரம்பித்து, ஸ்வீக்ருத்;ய"
வரையில் சொல்லி, (நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய அல்லது ஜாதாயா: (மம என்று சொல்லச் சொல்லி)
'சிசோ: தந்மாதா பித்ரோச்ச மாதுலஸ்ய மாதாமஹாதீனாம்ச ஆயு: அபிவ்ருத்யர்த்தம் ஸர்வாரிஷ்ட
சாந்தியர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸமஸ்த மங்களாவாப்யாத்தம் ஸமஸ்த ரோகபீடாபரிஹாரார்த்தம்
சதாயு: ஸம்பூர்ணதா ஸித்யார்த்தம் வேதோக்த ஆயுர்அபிவிருத்தியர்த்தம் ஏபி: ஸ்ரீவைஷ்ணவைஸ்ஸஹ
பீஜதானம் கர்த்தம் யோக்கியதா ஸித்திம் அனுக்ரஹாணா" 'ததாஸ்து யோக்கியதாஸித்திரஸ்து" என்று ப்ரதிவசனம்; பெற்று,
படியில் உட்கார்ந்து கொண்டு, விஷ்வக்ஸேன ஆராதனம் செய்து ஸ்ரீ கோவிந்தேத்;யாதி ஆரம்பித்து வேதோத்த ஆயு:
அபிவிருத்யர்த்தம் வரை மேலே உள்ளபடி சொல்லி (2 ஆவர்த்தி) 'பீஜாதானம் கரிஷ்யே" என்று ஸங்கல்பம் செய்து
இடுக்கு தர்ப்பத்தை வடக்கே சேர்க்கவும். விஷ்வக்ஸேனரை யதாஸ்தானம் செய்து (10வது அயிட்டத்தில் சொல்லியபடி)
பெரியோர்கள் அனுக்ரஹம் பெற்று (3வது அயிட்டத்தில் சொல்லிபடிசெய்து) க்ரஹப்ரீதி
விரைக்கு வைத்திருக்கும் நெல்லு, வெற்றிலை பாக்கு, தக்ஷிணை எல்லாம் தாம்பாளத்தில் எடுத்துக்கொண்டு,
'தன்யம் கரோதி தாதாரம் இஹலோகே பரத்ருச ப்ராணிநாம் ஜீவனம்தான்யம் அதச்சாந்திம் ப்ரயச்சமே ஹிரண்ய
கர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபூஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயச்சமே நக்ஷத்ரே ஆரம்பித்து
பீஜதானம் வரையில் சொல்லி யக்கிஞ்சித் ஹிரண்ய ஸகித இதம் பீஜம் நாநாகோத்ரேப்ய: ஸ்ரீ வைஷ்ணவேப்ய: தேப்ய:
தேப்ய: ஸம்ப்ரததே நம: நமம அச்சுத ப்ரியதாம், நெல்லில் பணத்தைப் போட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் மற்றும்
உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டியது.
மேல் உத்திரியத்தில் மேற்படி தான்யம்வாங்கி பூமியில் நெல்லையும் பணத்தையும் சோத்து, பணத்தை தேடி எடுக்கிற
ஸம்பிரதாயம், ஆசீர்வாதம் செய்து, வேஷ்டி ஓதிவிட்டு ஸதஸ்ஸ{க்கு தாம்பூலம் தக்ஷிணை ஸமர்ப்பிவித்து,
ப்ருஹஸ்பதி ஸம்பாவனை செய்து மஞ்சள் நீர்; ஆலத்தியெடுத்து படி களையவேண்டியது, ஆசமனம் பவித்திரம்
முடிச்சு அவிழ்த்து ஆசமனம் செய்து பெரியோர்களை ஸேவிக்கிறது வழக்கம்.
ப்ரஸவித்த ஸ்த்ரிக்கு புருஷ குழந்தையானால் 21 நாளிலும் பெண்குழந்தை ஆனால் 22 நாளிலும் பஞ்ச
கவ்யம் சேர்த்து கொடுக்கிறது. புருஷப்ரஜைக்கு 20வது நாளிலும், ஸ்த்ரீ ப்ரஜைக்கு 40 நாளிலும் பஞ்சகவ்யம்
சேர்;த்து கொடுத்து பெருமாளுக்கு திருவாராதனம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஆசாரியன் பாதுகை அல்லது
பெரியோர்கள் ஸ்ரீபாத தீர்த்தம் சேர்த்து கொடுத்து, பாண்ட ஸ்பாசம் (சட்டி தொடுகிறது) செய்கிறது பெரியோர்கள் சம்பிரதாயம்.
அதுவரையில் அவர்கள் தளிகைசெய்யக்கூடாது. பிறர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது.
அவர்களுக்கு மேற்படி காலம் வரையில் ப்ரஸவ தீட்டு உண்டு.