|
ஸ்ரீ:
ஜாதகர்மா
அடிப்படை - விளக்கம்:
ஜாதகர்மாவானது, குழந்தை பிறந்தவுடன் பகல் இரவாக இருந்தபோதிலும் தகப்பன் துணியுடன் ஸ்நாநம் செய்து திதி வாரம் முதலியதுகளை விசாரியாமலே ஜாதகர்மாவைச் செய்யவேணும்.
பிறகு பூமி முதலியதுகளை சக்திக்கு அநுகுணமானதை (தானமாக)கொடுக்கவும். இந்த விஷயத்தில் முன் ஆரம்பித்த தீட்டு கிடையாது. ஆஹிதாக்நியாயிருந்தால் தீட்டு கழிந்தவுடன்
பருவதினத்தில் ஜாதேஷ்டியை செய்யவேண்டும். ப்ராணாயாமம் செய்து இந்த நக்ஷத்திரத்தில் பிறந்த பிள்ளைக்கு ஜாதகர்மம் செய்வதாய் ஸங்கல்பித்து திவஸ்பரி என்கிற அநுவாகத்தினால்
பவித்ரத்தோடு கூடின வலது கையினால் குழந்தையைத் தடவி, அஸ்மிந்நஹம் என்கிற பஞ்சாதியால் கர்த்தா தன் மடியில் பிள்ளையை வைத்துக்கொண்டு அங்காதங்காது என்கிற இரண்டு மந்திரங்களால் மந்திரித்து,
அந்த இரண்டு மந்திரங்களாலேயே குழந்தையை உச்சி முகர்ந்து, மேற்படி மந்திரங்களையே குழந்தையின் காதில் ஜபிக்கவேண்டும். மந்திரிப்பதிலும், உச்சிமுகவர்திலும், காதில் ஜபிப்பதிலும்
நக்ஷத்ரத்தில் பிறப்பினால் உண்டான பெயரை ரகஸ்யமாய் சொல்லவேண்டியது.
தங்கம் முதலான பாத்திரங்களில் தேன், நெய் இவைகளை கலந்து அதில் தங்கக்கம்பியை தலை முடிச்சுபோல் கட்டிவைத்து
❝மேதாந்தே" என்கிற மந்திரத்தினாலும், ❝த்வயிமேதாம்" என்கிற மூன்று மந்திரங்களாலும் தர்பத்தினால் கட்டப்பட்ட தங்கத்தினோடே (கையில்லாமல்)
ஒரு தடவை குழந்தையை சாப்பிடும்படி செய்து க்ஷேத்ர என்கிற ஐந்து மந்திரங்களால் குழந்தையை கடைசியில் கூர்ச்சத்தினால் ஸ்நாநம் செய்வித்து வெண்கலப் பாத்திரத்தில் தயிர் நெய்களை கலந்து
பூஸ்ஸ்வாஹா, புவஸ்;ஸ்வாஹா, ஸுவஸ்;ஸ்வாஹா, ஓகும் ஸ்வாஹா என்று அந்த வெண்கலப்பாத்திரத்தினாலேயே குழந்தையைச் சாப்பிடச்செய்து சாப்பிட்ட மிச்சத்தை தண்ணீனால் அலம்பி
வேறொருவனால் மாட்டுக்கொட்டிலில் கொட்டும்படி செய்யவும்.
தன் மடியில் இருந்த குழந்தையை ❝மாதே குமாரம்" என்கிற மந்திரத்தினால் தாயின் வலது ஸ்தனத்தைச் சாப்பிடச் செய்து, யத்பூமேஹே ஹ்ருதயம் என்று இரண்டினால் வலது கையினால் பூமியைத் தொட்டு துழாவி,
அதில் குழந்தையை கிழக்கு தலையாக படுக்கவிட்டு, நாமயதி என்பதினால் தழுவி ❝ஆபஸ்ஸுப்தேஷ{" என்பதினால் குழந்தையின் ஸமீபத்தில் பூர்ணகும்பம் வைத்து நல்ல இடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அக்நியை
ப்ரதிஷ்டை செய்து, ❝அயம் கலிம்" என்கிற எட்டு மந்திரங்களால் ஒவ்வொரு மந்திரத்தினாலும், தவிடுடன் கலந்த கடுகை கைகளினால் ஹோமம் செய்து, ஸ்வாஹா, ஸ்வாஹா என்று இரண்டு தரமும் ஹோமம் செய்யவேண்டும்.
பிரஸவ அறை காக்கிறவர்களைக் கூப்பிட்டு, தவிட்டோடு கூடின கடுகுகளை ஒவ்வொருவரும் கைகளினால் மந்திரமில்லாமல் பத்து நாள் வரையிலும் அக்நியில் போடுங்கள் என்று சொல்லவும்.
இது வெகு காலத்தில் செய்யப்படும் ஜாதகர்மாவில் கிடையாது.
ஜாதகர்மாவில் அப்யுதய, புண்யாஹங்கள் விதிக்கப்பட்டுள்ளன. குழந்தையின் முகத்தை உடனே பார்க்கவேண்டும், இதனால் கடன்களிலிருந்து விடுபடுகிறான் என்பதாக ருக்வேத ப்ராஹ்மணத்தில் ஓதப்பட்டிருக்கிறது.
|
உபநயனத்திற்கு தேவையான பொருட்களுடன் மேலும்
அரிசி மாவு, கடுகு, தவிடு கொஞ்சம் தேவை.
பவித்ரம் தரித்து ஓம்நமஸ்தஸே ஆரம்பித்து ஸ்வீக்ருத்ய வரையில் சொல்லி தக்ஷிணை ஸ்வாமிகளுக்கு ஸமர்ப்பிவித்து
அச்வினி நக்ஷத்ரே மேஷ ராசௌ ஜாதஸ்ய அஸ்ய (மம) குமாரஸ்ய கரிஷ்யமாண ஜாதகர்ம நாமகர்ண அன்னப்ராசன சௌள உபநயந
கர்மாணிகர்த்தும் யோக்கியதா ஸித்திம் அனுக்ரஹாணா ததாஸ்து யோக்கியதாஸித்;திரஸ்து என்று அனுக்ரஹம் பெற்று,
படியில் உட்கார்ந்து 2 தர்ப்பம் ஆஸனம் 2தர்ப்பம் இடுக்கிக்கொண்டு ப்ராணாயாமம் செய்து, சுக்லாம்பரதரம ஆரம்பித்து அஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீபகவதாக்ஞா கைங்கர்யம் நக்ஷத்ரே ராசௌ (அச்வினி நக்ஷத்ரே மேஷ ராசௌ ஜாதம் இமம (மம) குமாரம் ஜாதகர்மணா ஸமஸ்கரிஷ்யாமி என்று இரண்டு ஆவர்த்தி சொல்லி இடுக்கு தர்ப்பத்தை வடக்கே சேர்க்கவும். வாத்ஸப்ரேணாபி ம்ருசதி குமாரனை தொட்;டுக்கொண்டு பின்வரும் மந்த்ரத்தைச் சொல்லவும்,
திவஸ்பரி ப்ரதமம் ஜக்ஞே அக்நி: அஸ்மத் த்வி தீயம் பரிஜாதவேதா: த்ரிதீயம் அப்ஸுந்ருமணா: அஜஸ்ரம்; இந்தனா ஏநம் ஜரதே ஸ்வாதீ: வித்மாதே அக்நே த்ரேதா த்ரயாணி வித்மாதே ஸத்ம விப்ருதம் புருத்ரா, வித்மாதேநாம ப்ரமம் குஹாயத்வித்மதா முத்ஸமம் யத ஆஜகந்த, ஸமுத்ரேத்வா ந்ருமணா: அப்ஸ்வந்த: ந்ருசக்ஷh ஈதே திவோஅக்நஊதந், த்ரிதீயே த்வாரஜஸிதஸ்திவாகும் ஸம்ருதஸ்யயொநௌ மஹி ஷா அஹிந்வந், அக்ரந்தக்நி: ஸ்தனயன்னிவத்யௌ: க்ஷhமாநேரிஹத்வீருதஸ்ஸமஞ்சந், ஸத்யோஜக்நா: விஹீமித்த: அக்யத் ஆரோதஸி பானுனாபாதி அந்த: உசிக்பாவக: அரதி: ஸுமேதுhமர்த்தேஷ்வக்நி: அம் ருதோநிதாயி, இயர்திதுhமம் அருஷம் பரிப்ரத் உச்சு க்ரேண சோசிஷா த்யாமிநக்ஷத், விஸ்வஸ்யகேது: புவநஸ்ய கர்ப ஆரோதஸி அப்ருணாத் ஜாயமான: வீடும்சித்அத்ரிம் அபிநத்பராயந் ஜனாயதக்நிம் அயஜந்தபஞ்ச, ஸ்த்ரீணாமுதார: தருண: ரயீணாம் மநீஷாணாம் ப்ரார்பண: ஸோமகோபா: வஸோ: ஸூநு: ஸஹஸ: அப்ஸுராஜா விபத்யாக்ரே உஷஸாமிதாந: யஸ்தே அத்ய க்ருணவத் பத்ரசோசே அப10பம்தேவ க்ருதவந்தம் அக்நே, ப்ரதன்னய ப்ரதராம் வஸ்ய: அச்சாபித்யும்நம்தேவ பக்தம் யவிஷ்ட, ஆதம்பஜஸெள ச்ரவஸேஷ்வக்நி: உக்தஉக்தஆபஜசஸ்யமானே, ப்ரியோ அக்நாபவாதி உஜ்ஜாதேநபிநதத் உஜ்ஜநி த்வை: த்வாமக்நே யஜமாநா அனுத்ய10ந்விஸ்வாவஸூ நிததிரேவார்யாணி, தயாஸஹ த்ரவிணம் இச்சமா நாவ்ரஜம் கோமந்தம் உசிஜ: விவவ்ரு: த்ருசனோருக்ம: உர்வியாத் வ்யத்யவு: துர்மர்ஷமாயு: ச்ரியேரு சாந: அக்நி: அம்ருத: அபவத்வயோபி: யNதுநம்த்யவு: அஜநயத் ஸுரேதா:
உத்தரேண யஜுஷா உபஸ்த ஆதாய உத்தராப்யாம் அபிமந்த்ரணம் மூர்;த்தந்யவக்ராணம் தக்ஷிணே கர்ணே ஜாப: பிறகு குமாரனை தொட்டுக்கொண்டு ஜபிக்கவும்.
|
அஸ்மிந் அஹம் ஸஹஸ்ரம் புஷ்யாமி ஏதமாநஸ் வேவஸே குமாரனை மடியில்வைத்துக்கொண்டு, (குமாரம்சங்கே நிதாய) பின் வரும் மந்த்ரத்தை இரண்டாவர்த்தி சொல்லி குமாரனின் தலையில் உச்சியை மோர்ந்து பார்த்து பத்னியையும் உச்சி முகரச் செய்யவும்.
பிறகு மூன்றாவதுதரம் ஜபித்து வலது காதில் பிறந்த நக்ஷத்திரத்தை ரகசியமாக இருவரும் சொல்லவும், மந்த்ரம் - அங்காத் அங்காத் ஸம்பவஸி ஹ்ருதயாத் அதிஜாயஸே, ஆத்மாவை (வேதோவை) புத்ரநாமாஸி ஸஜீவஸ்ரத: சதம், அச்மாபவ பரசுர்பவ ஹிரண்யம் அஸத்ருதம்பவ, பஞநாம்த்வா ஹிங்காரேண அபிஜிக்ராமி.
தகப்பனார் அல்லாமல் வேறு ஒருவர் உபநயநம் செய்தால், (வேதோவை) என்கிறதைச் சொல்ல வேணும். ஆத்மாவை என்று சொல்லக்கூடாது. மூர்தந்யவக்ராணாம் தக்ஷ;ணேகர்ணே ஜாதம் நக்ஷத்ரநாம நிர்திசதிதத் ரஹஸ்யம்பவதி.
நக்ஷத்திரத்தின் பெயர் - ஆச்வாயுஜ ஆபரணக்ருத்திக் ரௌஹண மார்க்கசீர்ஷ ஆர்த்ரக புனர்வஸோ புஷ்ய ஆச்லேஷ மாக ப10ர்வபால்குன உத்ர பால்குன ஹஸ்த சைத்ர ஸ்வாதே விசாக அநுhராத ஜ்யேஷ்ட மூலக ப10ர்வாஷாட ச்ரவண தனிஷ்ட சதபிஷக் ப10ர்வப்ரோஷ்டபாத உத்தரப்ரோஷ்டபாதரைவத
பிறகு மது க்ருதம்ஸம்ஸ்ருஜ்யதஸ்மிந் தர்ப்பணே சிகாபந்தவத் ஸாந்ரேண க்ரந்திநா ஹிரண்யம் அவதாய தேந ததாய
மதுக்ருதமிதி ஸம்ருஜ்யதஸ்மிந்தர்ப்பணே நிஷ்டர்க்யம் பத்வா அவதாய உத்தரை: மந்த்ரை: குமாரம் ப்ராசயித்வா.
வெண்கல பாத்திரத்தில் (ஆனால், மடக்கில்தான்) (தேன் நெய்) பழக்கத்தில் வெல்லம் நெய் இவை எடுத்துக்கொண்டு இரண்டு தர்ப்பத்தால் ஹிரண்யம் (பணத்தை தலைமயிலை முடிந்துகொள்வது போல் முடிந்துகொண்டு வெல்லம் நெய்யை அந்த சுவர்ணத்தினால் எடுத்துக்கொண்டு பின்வரும் மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்து சாப்பிடவேண்டும். 5 மந்திரம் ஒவ்வொன்றுக்கும் கடைசியில் சாப்பிடவேணும் என்று சிலர்; அபிப்ராயம். ஆனால் பழக்கத்தில் ஒரே தடவையாக சாப்பிடச் செய்கிறது.
|
மந்த்ரம் - மேதாந்தே தேவஸ்ஸவிதாமேதாம்; தேவீஸரஸ்வதீ மேதாந்தே அச்விநௌ தேவாவாதத் தாம்புஷ்கரஸ்ரஜா, த்வயிமேதாம் த்வயி ப்ரஜாம் த்வய்யக்நி: தேஜோததாது, த்வயிமேதாம் த்வயிப்ரஜாம் த்வயீந்த்ர: இந்த்ரியம் ததாது, த்வயிப்ரஜாம் த்வயிஸூர்ய: ப்ராஜோததாது.
க்ரந்தத்தில் இல்லை. பழக்கத்தில் அத்பி: சேஷம் ஸம் ஸ்ருஜ்ய கோஷ்டே நிநீய மடக்கிலுள்ள பாக்கியை தீர்த்தத்தைச் சேர்த்து மாட்டுக்கொட்டிலில் சேர்க்கவும்.
உத்தராபி: பஞ்சபி: குமாரம்ஸநாபயித்வா பின்வரும் 5 மந்த்ரங்களால் குமாரனை ஸ்நாநம் செய்விக்க வேண்டியது. 5 தரம்; ப்ரோக்ஷிக்கிறது பழக்கமாகயிருக்கிறது. சேர்ந்தால் போல் சிலர் அபிப்ராயம், ஒவ்வொரு மந்த்ரம் முடிவில் சிலர் அபிப்ராயம்.
க்ஷேத்ரியைத்வா நிரிருத்யைத்வா த்ருஹோமுஞ்சாமி வருணஸ்யபாசாத் அனாகஸம்; ப்ரம்ஹணேத்வா கரோமி சிவேதே த்யாவாப்ருதிவீ உபேஇமே, சந்தே அக்நி: ஸஹாத்பிரஸ்து சந்த்யாவாப்ருதிவீ ஸஹாத்பிரஸ்து சந்த்யாவாப்ருதிவீ ஸஹெள ஷதீபி: சமந்தரிக்ஷம் ஸஹவாதேநதே சந்தேசதஸ்ர: ப்ரதிச: பவந்து, யாதைவீ: சதஸ்ர: ப்ரதிச: வாதபத்நீ: அபிஸூர்ய: விசஷ்டே தாஸாந்த்வா ஜரஸ: ஆததாமி ப்ரயக்ஷ;ம ஏது நிருருதிம் பராசை: அமோசியக்ஷ;மாத் துரிதாத் அவர்த்யை த்ருஹப் பாசாந் நிருருத்யை சோதமோநி அஹா அவர்த்யை அவிதத் ஸ்யோநம் அப்யப10த்பத்ரே ஸுக்ருதஸ்யலோகே, ஸூர்ய ம்ருதம் தமஸ: க்ராஹ்யாயத் தேவா: அமுஞ்சந் அஸ்ருஜந் ஏநஸ: ஏவமஹம் இமம்க்ஷேத்ரியாஜ்யாமி சகும்ஸாத்த்ருஹோமுஞ்சாமி வருணஸ்யபாசாத்,
பிறகு ததிக்ருதம் காம்ஸ்ய பாத்ரேஸம்ஸ்ருஜ்ய என்று ஸூத்ரம், பழக்கத்தில் தயிர், நெய், வெல்லம் ததி மதுக்ருதமிதி ஸம்ஸ்ருஜ்ய தஸ்மிந் தர்ப்பேண ஹிரண்யம் நிஷ்ட்டாக்கியம் பத்வா உத்தரயாகுமாரம் ப்ராச்ய முன்போல் பணத்தை தர்ப்பத்தில் தலை முடிச்சுப் போல் வைத்துக்கொண்டு நெய், தயிர் வெல்லம் எடுத்துக் கொடுக்கிறது. ஓம்ப10: ஸ்வாஹா, ஓம்புவ: ஸ்வாஹா ஓம்ஸுவ: ஸ்வாஹா ஓகுஸ்ஸ்வாஹா இதி ஒரேதடவையாக என்று சிலர், ஒவ்வொரு மந்த்ரம் முடிவிலும் சிலர் பழக்கம். ப்ராசயிதவா அத்பி: ஸம்ஸ்ருஜ்யய அந்யேந கோஷ்டேநிநீய சேஷத்தை வேறுமாட்டுக்கொட்டிலில்; ஜலத்தை சேர்த்து சேர்க்கவும், உத்தராய குமாரம் மாது: உபஸ்தாதாய, பிறகு குழந்தையை பின்வகும் மந்த்ரத்தைச் சொல்லி தாயார் வலது இடுப்பில் எடுத்துக் கொள்ளவும். மாதேகுமாரம் ரக்க்ஷேhவதீந் மாதேநு: அத்யாஸாரிணீப்ரியாதனஸ்யப10யா: ஏதமாநாஸ்ஸ்வேக்ருஹே உத்தரயயாகுமாரம் மாது: தக்ஷிணஸ்தனம்பரதி தாப்ய, பிறகு பின்வரும மந்த்ரத்தைச் சொல்லி தாயாரின் வலது ஸ்தனத்தில் (முலையில்) பால் கொடுக்கிறது. இது (பிறந்த குழந்தைக்குடனே செய்தால்) பிறகு செய்வதில் வலதுபுறம் குமாரனை நிருத்தி மந்த்ரத்தை மாத்திரம்சொல்லுகிறது பழக்கம். யஸ்மைத்வம் ஸ்தன: ப்ரப்ரியாயாயு: வர்ச்சோ யசோபலம் உத்தரயா குமாரம், ப10மிம் அபிம்ருச்ய யசோபலம் உத்தரயா குமாரம், ப10மிம் அபிம்;ருச்ய பிறகு 2 தர்ப்பத்தைச் சேர்த்து குமாரனை உட்காரவைக்கிறது.
மந்த்ரம் - யத்ப10மே: ஹருதயம்திவி சந்த்ரமஸிஸ்திதம் ததுர்விபச்யம்மாஹம் பௌத்ரம் அககும்ருதம் யத் தேஸுஸீமே ஹ்ருதயம் வேதாஹம் தத்ப்ரஜாபதௌ வேதாம தஸ்ய தேவயம் மாஹம் பௌத்ரம்சககும்ருதம் இதிப்ருதிவீம் அபிம்ருச்ய அபிமிருஷ்டயாம் ப்ருதிவ்யாம் துhஷ்ணீம் குமாரம் ஸம்வேசயேத் உத்தரயாகுமாரம அபிம்ருச்ய நாமயதி நிருததியத்ரவ்யம் வதாமஸியத்ரச அபிம்ருசாமஸி என்று குமாரனைத் தொடுகிறது. உத்தரயாகுமாரம் சிரஸி உத்கும்பம்நிதாய பிறகு குமாரனின் சிரஸில் (தலையில்) உத்கும்பத்தை பின் வரும் மந்த்ரத்தைச் சொல்லி வைக்கிறது. ஆபஸ்ஸுப்தேஷ{ஜாக்ரத ரக்ஷhகும்ஸி நிருதோநுதத்வம்.
பிறகு ப்ராணாயாமம் செய்து, ஸ்ரீ பகவதாக்ஞாக கைங்கர்யம். ஜாதகர்ம கர்மாங்கம் பலீகரண்ஹோமம் கரிஷ்யே லௌகிகாக்நியை ப்ரதிஷ்டை செய்யவும். பரிஸ்தீர்யதர்வீவத் அஞ்ஜலிம் ஸம்ஸ்க்ருத்ய பரிஷிச்ய பலீகரணமிச்ராந்கௌரஸர்ஷபாந் அயம்கலிம் இத்யா திபி: மந்த்ரை: ப்ரதிமந்த்ரம் ஸ்வாஹா, காரத்ரய ஸஹி தம்ப்ரதிஸ்வாஹாகாரம் அஞ்சலிநாசதுர்விம்சதிவாரம் ஹ{த்வா தத்ப்ரகார:
லௌகிகாக்நியை ப்ரதிஷ்டை செய்து, இரண்டு உள்ளங்களையும் காய்ச்சி வாத்தியார் தர்ப்பத்தால் கைகளை துடைக்க பிறகு கைகளை மறுபடியும் காய்ச்சி கைகளை ப்ரோக்ஷிக்கச் செய்து தர்ப்பத்தை தீர்த்தத்தை தொட்டு அக்னியில் சேர்த்து, தேவஸவிதப்ப்ரஸுவ என்று ஈசான திக்கிலிருந்து தீர்த்தத்தால் அக்னியை பரிஷேசனம் செய்து (கைகளை ஸம்ஸ்காரம் செய்ய வேண்டாம் என்று சிலர் அபிப்ராயம்) தவுடு கடுகு (அல்லது பச்சஅரிசி மா, கடுகு) இவைகளை கலந்து ஸ்வாஹா என்று அக்நியில் இரண்டு கைகளாலும் சேர்த்து சேஷத்தை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். சிலர் இரண்டு கைகளின் ஐந்து விரல்களாலும் எடுத்துக் கொள்ளவேண்டுமென்றும் சிலர் பவித்திர விரல்கள் நடுவிரல்கள் கட்டைவிரல்கள் இவைகளால் தவடு கடுகை எடுத்து ஹோமம் செய்யவேணும் என்கிறார்கள்.
மந்த்ரம் - 1 அயம் கலிம் பதயந்தம் ச்வாநமிவ உத்வ்ருத்தம் அஜாம் வாசிதாமிவமருத: பர்யாத்தம் ஸ்வாஹா, ஸ்வாஹா ஸ்வாஹா அக்நய இதம் (தவிடு கடுகை ஒருதரம் எடுத்து மூன்று ஆவர்த்தி அக்நியில் சேர்த்து பாக்கியை வேறு பாத்திரத்தில் சேர்;க்கவும். இம்மாதிரி எட்டு தடவை எடுத்து, 24 தரம் ஹோமம்; செய்ய வேணும்.) (2) சண்டேரத: சண்டிகேர உலூகல: ச்யவந: நச்யதாதிதஸ்ஸ்வாஹா, ஸ்வாஹா ஸ்வாஹா அக்நயஇதம்.
(3) அயச்சண்டோமர்க்க: உபவீர உலூகல: ச்யவந: நச்யதாதிதஸ்ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா அக்நயஇதம். (4) கேசிநீ: ஸ்வலோமிதீ: கஜாபஸஜோபகா சிநீ: அபேதநச்யதாதிதஸ் ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா அக்நயஇதம் (5) மிஸ்ரவாஸஸ: கௌபேரகா. ரக்ஷேh ரஜேநப்ரோஷிதா: க்ராமம் ஸஜாநய: கச்சந்தீச்சந்த: பலிதாக்ருதாந் ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா அக்நயஇதம். (6) க்னதைதாந் க்ருண்ணீதேதிஅயம் ப்ரம்ஹணஸ்புத்ர: தாந்ஸக்நி: பர்யஸரத் தாந்இந்த்ர: தாந்ப்ரஹஸ்பதி: தாநஹம்வேத ப்ராம்ஹண ப்ரம்ருசத: கூடதந்தரந் விகேசாந் லம்பநஸ்தநாந் ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா அக்நீஇந்த்ரா ப்ரஹஸ்பதிப்ய இதம் (7) நக்தம்சாரிண: உரஸ்பேசாந் சூலஹஸ்தாந் ப10ர்வயேஷாம்; பிதேச்யுச்சை: ச்ராவ்யகர்ணக: மாதா ஜகந்யாஸர்பதி க்ராமேதிதுநம் இச்சந்தீ ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா அக்நயஇதம். (8) நிதீதசாரிணீ ஸ்வஸா ஸந்தினாப்ரேக்ஷ;தேகுலம் யாஸ்வபந்த் போதயதி யஸ்யை விஜாதாயாம்மந: தாஸாம்த்தம் போதயதி யஸ்யை விஜாதாயாம்மந: தாஸாம்த்வம் க்ருஷ{ணவர்தமதே க்லோமாநம் ஹ்ருதயம் யக்ருத் அக்நே அக்ஷிணி நிர்தஹத்ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா அக்நய இதம், தேவஸவித: ப்ராஸாவீ: என்று அக்நியை பரிஷேனம் செய்து, பாத்திரத்தில் ஹோமம் செய்து சோத்த தவிடு கடுகை அக்நியில் ப்விஷ்;டேப்விஷடேவதுhஷ்ணீம் என்று சேர்க்கிறது. அக்நியை படியைவிட்டு எடுத்துவிடவேண்டும்.
பிறந்தவுடன் செய்தால் பத்து தினமும் வருகிறவர்கள் போகிறவர்கள் அக்நியில் தவிடு கடுகை சேர்க்கவேணும். அக்நியும் அணையாமல் பாதுகாக்கவேணும்.
பிறகு ப்ராணாயாமம் செய்து ஸ்ரீ பகவதாக்ஞா கைங்கர்யம் நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய (அச்விநி நக்ஷத்ரே மேஷராசௌஜாதஸ்ய) அஸ்ய (மம) குமாரஸ்ய க்ருத ஸ்யஜாதகர்மண: கரிஷ்யமாணானாம் நாமகர்ண அந்த ப்ராசன சௌள உபநயந கர்மாங்கம் அப்யுதயும் ஹிரண்யரூபேண கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து (நாந்தி ச்ராத்தம் செய்கிறது. தத்ஸங்கம் புண்யாஹவாசநம் கரிஷ்யே புண்யாஹ தீர்த்தத்தால் குமாரர்கள் எல்லாரையும் ப்ரோக்ஷிக்கிறது.
|
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|