|
|
அமலனாதிப்பிரான் |
|
தனியன்கள்
|
|
ஆபாதசூடமநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்
|
|
காட்டவேகண்டபாத கமலநல்லாடையுந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே
|
|
பாசுரங்கள் |
|
*அமலனாதிபிரான் அடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான், திருக் -
கமலபாதமவந்து என்கண்ணிலுள்ளனவொக்கின்றவே. . --- (1)
உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரைக்
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான்,
அரைச்சிவந்தவாடையின்மேல் சென்றதாமெனசிந்தனையே.--(2)
* மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் -
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்
அந்திபோல்நிறத்தாடையும அதன்மேலயனைப்படைத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.
---(3)
சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து -
உதிரவோட்டி, ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான், திருவயிற் -
றுதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.
---(4)
பாரமாய பழவினைபற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான்,
திருவாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே. ---(5)
துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன், அஞ்சிறைய -
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை, முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே. ---(6)
கையினார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல் -
மெய்யனார், துளபவிரையார் கமழ்நீள்முடியெம் - ஐயனார்,
அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.
--(7)
பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட, அமரர்க் கரியவாதிப்பிரான்
அரங்கத்தமலன்முகத்துக் கரியவாகிப்புடைபரந்து
மிளிர்ந்துசெவ்வரியோடி, நீண்டவப் - பெரியவாயகண்கள்
என்னைப்பேதைமைசெய்தனவே.
---(8)
* ஆலமாமரத்தினிலைமேல் ஓருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனிஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே. ---(9)
* கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெய்
உண்டவாயன், என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக்காணாவே.
--- (10)
அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.
*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|