Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
திருப்பாவை
 தனியன்கள்
நீளாதுங்கஸ்தநகிரிதடீ சுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ!
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:
அன்னவயற்புதுவையாண்டாடாளரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல்பதியம் -- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்! -- நாடி நீ
வேங்கடவற்கென்னைவிதியென்றவிம்மாற்றம்
நாம்கடவாவண்ணமே நல்கு.
பாசுரங்கள்
*மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கேபறைதருவான்
பாரோர்புகழப்படிந்தேலோரெம்பாவாய்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்

*ஓங்கியுலகளந்த வுத்தமன்பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்பத்
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி - வாங்கக்,
குடம்நிறைக்கும் வள்ளற்பெரும்பசுக்கள்
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்.

ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல்மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுதைத்தசரமழைபோல்
வாழவுலகினில்பெய்திடாய் நாங்களும் -
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

மாயனை மன்னுவடமதுரைமைந்தனைத்
தூயபெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தினில்தோன்றுமணிவிளக்கைத்
தாயைக்குடல்விளக்கஞ்செய்த தாமோதரனைத்
தூயோமாய்வந்துநாம் தூமலர்கள் தூவித்தொழுது
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்கப்
போயபிழையும் புகுதருவானின்றனவும்
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன்கோயில்
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும்
மௌ்ளஎழுந்தரியென்றபேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.

கீசுகீசென்றெங்குமானைச்சாத்தன், கலந்து -
பேசினபேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து
வாசநறுங்குழலாய்ச்சியர், மத்தினால் -
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும்நீ கேட்டேகிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.

கீழ்வானம்வெள்ளென்றெருமைசிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து,
உன்னைக் - கூவுவான்வந்துநின்றோம், கோதுகலமுடைய -
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.

தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரியத்
தூபம்கமழத் துயிலணை மேல்கண்வளரும்
மாமான்மகளே! மணிக்கதவம்தாள் திறவாய்
மாமீரவளையெழுப்பீரோ?, உன்மகள்தான் -
ஊமையோஅன்றிச் செவிடோஅனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய்.

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல்திறவாதார்
நாற்றத்துழாய்முடி நாராயணன், நம்மால்-
போற்றப்பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள் -
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ
ஆற்றவனந்தலுடையாயருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்மாவாய்.

கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமாரெல்லாரும்வந்து, நின் -
முற்றம் புகுந்து முகி;ல்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி!, நீ -
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்.

கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்!

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லவரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய்ப்
பிள்ளைகளெல்லோரும் பாவைக்களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்
குள்ளக்குளிரக் குடந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்!

உங்கள் புழக்கடைத் தோட்டத்துவாவியுள் செங்கழுநீர்
வாய்நெகிழ்ந்தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர்
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான்போதந்தார்
எங்களை முன்னமெழுப்பாவான் வாய்பேசும்
நங்காயெழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடுசக்கரமேந்தும் தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்

எல்லேயிளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லை நீபோதாயுனக்கென்னவேறுடையை
எல்லாரும்போந்தாரோ போந்தார்போந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரைமாற்றழிக்க - வல்லானை,
மாயனைப் பாடேலோரெம்பாவாய்.

*நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய - கோயில்காப்பானே!
கொடித்தோன்றும் தோரண - வாயில்காப்பானே!
மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு,
அறைபறை- மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான்
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால்முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!
நீ நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பர்வாய்.

அம்பரமே தண்ணீரே சோறேயறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாயறிவுறாய்
அம்பரமூடறுத்து ஓங்கியுலகளந்த
உம்பர்கோமானே உறங்காதெழுந்திராய்
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.

*உந்துமதகளிற்றனோடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம்கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண், மாதவிப் -
பந்தல்மேல் பல்கால் குயிலனங்கள் கூவினகாண்
பந்தார்விரலியுன் மைத்துனன்பேர்பாடச்
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

குத்துவிளக்கெறியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங்கண்ணினாய்! நீயுன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.

முப்பத்துமூவர் அமரர்க்குமுன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்!, செற்றார்க்கு -
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்னனெம்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதேயெம்மை நீராட்டேலோரெம்பாவாய்.

ஏற்றகலங்கள் எதரிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய், உலகினில் -
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாதுவந்துன்னடிபணியுமாப்போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.

அங்கண்மாஞாலத்தரசர் அபிமான - பங்கமாய்
வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டும்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல்சாபமிழிந்தேலோரெம்பாவாய்.

*மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரியசிங்கமறிவுற்றுதத தீவிழித்து
வேரிமயிர்பொங்கவெப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா!
உன் - கோயில்நின்றிங்கனே போந்தருளக்,
கோப்புடைய - சீரியசிங்காசனத்திருந்து
யாம்வந்த - காரியமாராய்ந்தருயேலோரெம்பாவாய்.

*அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்னச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி
கன்றுகுணிலாவெறிந்தாய்! கழல்போற்றி
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி
என்றென்றென்றுன் சேவகமே ஏத்திப்பறைகொள்வான்
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்.

ஒருத்திமகனாய்பிறந்து ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்குநினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞசன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை -
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்கசெல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்னவண்ணத்துன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோலவிளக்கே கொடியேவிதானமே
ஆலினிலையாய் அருளேலோரெம்பாவாய்.

*கூடாரைவெல்லும் சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்-
பாடிபறைகொண்டு யாம்பெருசம்மானம்
நாடுபுழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமேயென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போமதன்பின்னே பாற்சோறு - மூட,
நெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.

*கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத வாய்க்குலத்து, உன்றன்னைப்-
பிறவிபெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா!,
உன்றன்னோ- டுரவேல் நமக்கிங்கொழிக்கவொழியாது
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் - உன்றன்னைச் -
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோரெம்பாவாய்.

*சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து,
உன்- பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப்பறைகொள்வானன்றுகாண் கோவிந்தா
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும்,
உன்தன்னோடு- உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம்
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்.

*வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றை அணிபுதுவைப் --
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார்ரீரண்டு மால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்றின்புறுவரெம்பாவாய்!!

திருப்பாவை இத்துடன் நிறைவு பெறுகிறது!

*இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்  
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!