Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
திருப்பள்ளியெழுச்சி
 தனியன்கள்
தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவ தர்ஹணீயம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் -- வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர். 
*கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரிவரொடும்புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடுமுரசும் அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும் அ
ரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --- (1)

கொழுங்கொடிமுல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசைமாருதமிதுவோ
எழுந்தன மலரணைப்பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனி நனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையின் அருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(2)

சுடரொளிபரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளிசுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள்நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(3)

மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசைதிசை பரந்தனவயலுள்
இரிந்தன சுரும்பினமிலங்கையர் குலத்தை
வாட்டியவரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து,
அவபிரதமாட்டியவடுதிரலயோத்தியம்மரசே!
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(4)

புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்ததுபுலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம்புனைந்த அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான் அமரர்கள்புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர்கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. ---(5)

இரவியர் மணிநெடுந் தேரொடுமிவரோ
இறையவர் பதினொருவிடையருமிவரோ மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டியவெள்ளம்
அருவரையனைய நின் கோயில்முன்னிவரோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(6)

அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும் வந்திவனோ
எம்பெருமான்! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடித்தொழுவான் அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --(7)

வம்பவிழ் வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடிமுதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன்முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ
தோன்;றினனிரவியும் துலங்கொளிபரப்பி அம்பரதலத்தினின்றகல்கின்றதிருள்போய்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(8)

ஏதமில்தண்ணுமையெக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோடிசைதிசை கெழுமிக்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(9)

* கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் -- அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. --- (10)

அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி. ழூ *இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும  
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!