பொதுவாக பஞ்சாங்கத்தில் கையாளப்படும் அனைத்து தலைப்புகள் பற்றிய விளக்கங்கள் இந்த பக்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த “பஞ்சாங்கம்” என்ற பகுதியின் கீழ் தரப்பட்டுள்ள அனைத்து இணைப்பு மெனுக்களால் இணைக்கப்படும் பக்கங்கங்களில்
வழங்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஜோதிடத்திற்கு பஞ்சாங்கம்தான் அடிப்படை. பஞ்சாங்க அறிவு நன்றாக உள்ளவா்கள் எளிதாக ஜோதிடத்தைப் புரிந்துகொள்ளலாம்.
எனவே பஞ்சாங்கத்தில் அடங்கும் விஷயங்கள் எதையும் ஜோதிடம் என்ற தலைப்பில் கொடுக்கவில்லை.
சுப முஹூா்த்தங்கள் உள்ளிட்ட நல்ல காரியங்கள், இன்னின்ன சுபங்கள் இந்திந்த லக்னங்களில்தான் பண்ணவேண்டும்
என்றும், மற்றும் தோ்ந்தெடுக்கும் லக்னத்திற்கு குறிப்பிட்ட ஸ்தானங்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும் என்றும்
சுப முஹூா்த்த நிர்ணய விதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிக் கொடுக்கப்பட்டுள்ள விதிப்படியான லக்னத்தை
ஒரு குறிப்பிட்ட நாளில் எப்படி அமைப்பது. அது ராகு காலம் எமகண்டம் போன்ற மற்ற விஷயங்களால் பாதிப்பில்லாத
நேர்த்தில் அமைந்துள்ளதா என பலவகையிலும் பார்த்து ஒரு முஹூா்த்த லக்னத்தை அமைப்பது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
ப்ரபவ, விபவ என 60 தமிழ் வருடங்களின் பெயா் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒருவிதமான நம்பிக்கை. ஒவ்வொரு கிழமையும் காலை 6 மணி முதல் ஒன்றரை மணி நேரத்திற்கு
ஒரு பிரிவாக பிரித்து, தனம், லபாம், உத்யோகம், சோரம் என்றெல்லாம் தலைப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் நன்மையாகக் குறிப்பிட்டுள்ள காலங்களைத் தேர்ந்தெடுத்து பணியாற்றினால் வெற்றி கிட்டும் என்பது
முன்னோர்களின் நம்பிக்கை.
கெளாரி பஞ்சாங்கம் போல் இதுவும் ஒரு வகை நம்பிக்கை. இதில் வளா்பிறை தேய் பிறை இவற்றையும் சோ்த்து
அவரவா் நக்ஷத்திரத்திற்கு தகுந்தாற்போல் பறவையை குறிப்பிட்டு ஐந்து விதமான பறவைகள் வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு தொழில் புரிவதாகக் குறிப்பிட்டு எந்தெந்த தொழில் புரியுமபோது என்னென்ன பலன் கிட்டும் என்று வரையறுத்துக்
தந்துள்ளார்கள். இதை ஆரூட ஜோதிடமாகக் கொண்டு இதன்படி நடந்து வெற்றியடைந்தோர் பலா் உள்ளனா்.
ராகு காலம், எமகண்டம், குளிகை காலம் வார சூலை போன்றவற்றின் அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய நக்ஷத்திரத்திற்கு எட்டாவது ராசியில் சந்திரன் வரும் காலத்தை சந்திராஷ்டமம் என்றும்,
அக்காலத்தில் சிரமங்கள் உண்டாகலாம் என்றும் ஜோதிட குறிப்பு உள்ளது. எந்தெந்த நக்ஷத்திரக் காரருக்கு
எந்தெந்த நக்ஷத்திரம் வரும் நாள் சந்திராஷ்டமம் என்று பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சகம் என்பது முஹூா்த்தம் வைப்பதற்கு ஒரு முக்கியமான அம்சம். பஞ்சகம் இல்லாத லக்னத்தில்
முஹூா்த்தம் செய்யக்கூடாது. எனவே பஞ்சகம் பார்ப்பது எப்படி என்பது விளக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கிரகங்களின் ஆதிக்கம் மாறும்.
எந்தெந்த நேரத்தில் எந்தெந்த க்ரஹத்தின் ஆதிக்கம் என்பதை அறிந்து கெடுதலான நேரத்தை தவிர்த்து
நக்ஷத்திரம் மற்றும் கிழமைகளின் சோ்க்கையை வைத்து சித்த - அமிர்த - மரண
யோகங்கள் ஏற்படுகின்றன. அதற்கான பட்டியல்.
தமிழ் பஞ்சாங்கங்கள் திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் போன்றவை ஒரு நாளில்
சூரிய உதயத்திலிருந்து எவ்வளவு நேரம் உள்ளது என்று குறிப்பிடப்படுவதால்,
சூரிய உதயம் முக்கியத்துவம் பெருகிறது. எனவே சென்னைக்கான சூரிய உதயமும்
சென்னைக்கும் மற்றும் தமிழகத்தின் சில முக்கிய நகரங்களுக்கான சூரிய உதய நேர வித்யாஸமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட நக்ஷத்திரம் உள்ள நாள் பொருத்தமா இல்லையா
என்பதை தீா்மானிப்பதே தாரா பலன் ஆகும். இதுபற்றிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் காலத்தை நாழிகை என்ற
அளவீட்டைக் கொண்டே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆங்கில மணி நிமிடம்
மட்டுமே நம் அனைவருக்கும் தெரியும்.
ஒரு நாளின் 24 மணி நேரத்தை 12 ராசிகளும் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால் அனைத்து
ராசியும் சமமான நேரத்தை உடையவை அல்ல. ஏனெனில் பூமி ஒழுங்கான உருண்டை அல்ல.
ஒவ்வொரு ராசிக்கான நாழிகை மற்றும் மணி நிமிடம் பட்டியல் தரப்பட்டுள்ளது. இதைக் கொண்டு
ஒரு குறிப்பிட்ட தேதியில் சூரிய உதயத்தின்போது உள்ள ராசி சூரிய உதயத்திலிருந்து எவ்வளவு நேரம் வரை இருக்கின்றது
என பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதைக் கொண்டு அடுத்த அடுத்த லக்னங்களின் ஆரம்ப நேரம் முடிவு நேரம்
இவற்றை சுலபமாகக் கண்டுகொள்ளலாம்.
திருமணம் செய்துகொள்ளும் மணமக்களின் ஜாதகப் பொருத்தம் பல முறைகளில் பார்க்கப்படுகின்றன.
ஆனால் அனைத்திற்கும் அடிப்படையானது நக்ஷத்திரப் பொருத்தம். நக்ஷத்திரப்பொருத்தம் இல்லாமல்
மற்ற பொருத்தங்கள் இருந்தாலும் அதை யாரும் ஏற்பதில்லை. எனவே அடிப்படையான நக்ஷத்திரப்
பொருத்தத்தையே கொஞ்சம் விரிவாக (ஒரே நக்ஷத்திரம் வேறு வேறு ராசியில் இருந்தால் அதற்கான பலனும் சேர்த்துத்)
தரப்பட்டுள்ளது. இதைக்கொண்டு அடிப்படைப் பொருத்தத்தைத் தாங்களே தோ்வுசெய்து பின்னா் ஜோதிடாரிடம் கொடுத்து
விரிவாகப் பார்த்து முடிவு செய்யலாம்.
ஜோதிடா் இல்லாத இடங்களிலும், ஜோதிடரை அணுகமுடியாத அவசர காலத்திலும்,
தாங்களே நல்ல நாளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லா ஆண்டுகளிலும், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு குறிப்பிட்ட தமிழ் தேதியிலும் ஒரு குறிப்பிட்ட
சூரிய உதய நேரத்தைக் கொண்ட அனைத்து இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட லக்னமே
இருக்கும். எனவே தமிழ் தேதி - ஆங்கில தேதிகளில் ஒவ்வொரு நாளும் 12 லக்னங்களும் ஆரம்ப முடிவு நேரங்கள்
பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை சூரிய உதய நேரத்திற்கு சமமான சூரிய உதய நேரம் கொண்ட ஊா்களுக்குப்
பொருந்தும்.
ஒவ்வொருவருக்கும் பிறந்தது முதல் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு க்ரஹத்தின் தசை நடக்கும். பிறந்தபோது உள்ள
தசையின் பாக்கி அளவு தெரிந்தால் இந்த அட்டவணையைக் கொண்டு அடுத்தடுத்த தசை மற்றும் புக்திகளின் காலங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நக்ஷத்திரத்தில் பிறந்தவா்களுக்கும் இந்த ஒலியில் ஆரம்பி்க்குமாறு பெயா் வைத்தால் சிறப்பாக அமையும்
என்பதை கருதி அதற்கான ஒலிக்குறிய எழுத்துக்களை வழங்கியுள்ளனா். அதற்கான பட்டியல் தரப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சூரியன் மற்றும் சந்திர க்ரஹணங்கள் ஏற்படும். அடுத்து க்ரஹணம் எப்போது, பரிகாரம் என்ன என்பது பற்றிய தகவல்கள்.
கூரையில் உள்ள பல்லி தற்செயலாக மனிதா்களின் எந்த அங்கத்தில் விழுகிறது என்பதைக் கொண்டு அண்மையில் எப்படிப்பட்ட நிகழ்வுகள்
ஏற்படலாம் என்பதைக் கூறும் ஆரூடம்.
பஞ்சாங்கத்தில் நாள் தொடங்கும் நேரத்தில் உள்ள திதி நாள் முழுவதும் இல்லாமல் போகும்போது பின்னால் வரும் திதியே ச்ராத்த திதியாக அமையும்.
எனவே எந்தெந்த ச்ராத்த திதி எந்தெந்த நாளில் என்பதைக் காட்டும் பட்டியல்.
வருடம் முழுமைக்குமான பண்டிகைகள், தேதிகள், விளக்கங்கள்.
நடப்பு வருடம் மற்றும் அடுத்த வருடத்தில் 27 நக்ஷத்திரக்காரா்களுக்கும் பொருத்தமான முஹூா்த்தங்களின் பட்டியல்.
தனிப்பட்ட முறையில் என் ராசிக்கு என்ன பலன், எனக்கு என்ன நடக்கும் என்றெல்லாம் கேட்காமல், வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் புரியாமல் இருக்கும்போது
மேலும் விளக்கம் கேட்டு அனுப்பப்படும் பொதுவான, அா்த்தமுள்ள முக்கியமான கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும்.
KARTHIGAI MONTH HELLO, I wish to write about Karthigai-The month for Moon–the eighth month as per our panchagam following surya sancharam-(tamil version).All the pooja vratam in Dakshnayana kalam –are followed as per chandraayanam masam , for example chaturmasyam, avani avvitam expect this Karthigai. NOW, I want focus about certain important aspects :deepam should be lighted on all days of the month during evenings at our1) home,2) near source of water ie., well or river/temple tank3)nea COwshed 4)tulisi 5)Mutt 6) Temple of worship. Then first cusp of moon–Chandradarashnam(about 540pm)should be greeted in house yards , now of course in our terrace by putting rangoli, lamp,tamboolam milk,fruit,after harathi it has to bedistributed with our near and dear . Karthigai-festival is combines fasting till evening.chandra graham- attains neecha sthana in vrishika, hence it is performed as niverthi. In olden days agricultural workers were served food by their land lords ,as they should not suffer- fasting festivals like Karthigai, Gokulastami even Ekadasi a small difference was maintained for ex., Bharani deepam, karthigai, Rohini- for vaishnavas. The Offering for deity on this day is ground nut ,pori, avaul,sweet balls- the inner meaning -is due heavy dampness and submerging ofpaddycrop which Cannot be used as seeds(REBIRTH) are roasted,and wet pressed to get this prasadhams,so also so, the prayer is to seek vimochana from rebirth andl iight lamp as atma samparnam. The common aspect is vana bhojanam – It is belived lord Krishna along with cows and gopikas involved In vana bhojanam with great joy. Lord Indra saw this joyful aspect- stunned and he applied GHO-duli- So that he can have joy of nara.Taking holybath in tirthams, Rivers, givings dhanam near this rivers, cow feeding (for cow feeding one need not take bath also)will relieve us from evil or Doshas. AS PER CHAANRAMAYANAM-the month begins on diwali ammavasa.The other variation other than said above are –Sukla astami- skherabi dwadasi. Sukla astami- Gho- suktha will be recitated several times by eight vaiddkas representing Ashta vasus at places where chaturmasya vratha is located., PANCHAKAVYA PROSHSHANAM on this day Willweed out sorrows and evils ,debts, overcoming business rivals.Chaturmasya ends on dwadasi and Yethi- along with their followers leave that place after parranam.In the evening, thulasi with amla nelli Branch tied together is perforemed pooja by Gruasthas,on karthika poornima day the followers of this panchagam will perform – sri satyanarayana pooja/vratha and Deepampooja.- presented by – Sridharan email: ammalnadadhur@gmail.com