1. யஜ்ஞோபவீத தாரணம் 2. புண்யாஹம்
3. நவச்ராத்தம் 4. வ்ருஷப உத்சர்ஜனம்
5. ஏகாதச ப்ராஹ்மண போஜனம் 6. ஆத்ய மாஸிகம்
7. ஆவ்ருதாத்ய மாஸிகம்
11ம் நாள் ஏகோதிஷ்டத்திற்குத் தேவையானவை:-
வாழைஇலை-6, தேங்காய்-2, வெத்திலை-25, பாக்கு-12, பழம்-2, புஷ்பம்-1முழம்,
சந்தனம் துளி, மாவிலைக்கொத்து, அரிசி-3 கிலோ, வாழைக்காய்-12,
சேம்பு-அரை கிலோ, பயத்தம் பருப்பு, வெல்லம், எள், நெல், எண்ணை, சீக்காய்பொடி,
விராட்டி-40, சுள்ளி கொஞ்சம், 4½ செங்கல், மணல்
ஏகாதச ப்ராம்மண போஜனம், நவச்ராத்தம் 12 செட் அரிசி, வாழக்காய் தத்தம்
வ்ருஷப உத்சர்ஜனம் 4 முழம் வேஷ்டி -1
1ஸ்வாமிக்கு வேஷ்டி 1ஜோடி, சொம்பு-1, குளபாத்திரம்-1,
ஏலக்காய், க்ராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, வெத்திலை, பாக்கு, தக்ஷிணை
கர்த்தாக்களுக்கு யஜ்ஞோபவீத தாரணம் ஆனதும் ப்ராணாயாமம் உபவீதத்திலேயே ' .... ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய சர்மண:
மம பிது: ப்ரேதஸ்ய / கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ஏகாதசே அஹநி ஆத்ய மாஸிக, ஆவ்ருதாத்ய
மாஸிக உபகரண சுத்தியர்த்தம் ... புண்யாஹ வாசனம் கரிஷ்யே "
என்று ஏற்கனவே உள்ள மந்திரங்களுடன் விசேஷமாகச் சொல்லி புண்யாஹ வாசனம் கர்தாக்கள் (வந்திருந்தால்)
அவர்கள் பத்திநிகளுக்கும் ப்ரோக்ஷித்து ஆத்தில் எல்லா இடத்திலும் ப்ரோக்ஷிக்கறது.
கர்த்தா பெரியவன் மட்டில் உபவீதி ப்ராணாயமம் '...ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய
/ கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ஏகாதசே அஹநி கர்த்தவ்யம் நவச்ராத்தம் யத்கிஞ்சிது
ஹிரண்ய ஸஹித ஆம ரூபேண கரிஷ்யே!" என்று சங்கல்பித்து
அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ப்ரோக்ஷித்து
தண்டுலா: , ஹிரண்யகர்ப .... ப்ரயச்சமே இதம் நவச்ராத்தம் யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹிதம் ஆமரூபம்
கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய இதம் ஆமம் ஹிரண்யம் ரக்ஷ யஸ்மை கஸ்மை ஸ்ரீவைஷ்ணவாய ஸம்ப்ரததே!
நம: நமம அச்சுயுதப்ப்ரீயதாம்.
ஏகோவிஷ்ணு: .... அவ்யய: அநேந நவச்ராத்தேந மம பித்ரு பித்ரு ப்ரேத ரூபி பகவாந் ஸ்ரீஜனார்தன: ப்ரீயதாம்
ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம் என்று தெற்குநுனி தர்பத்தில் கட்டைவிரலால் எள் ஜலம் விடறது.
எழுந்திருந்து உபவீதி வடக்கே பார்த்து கய கய கயா
ப்ராசீனாவீதி தெற்கே பார்த்து அக்ஷய்யவட: 3 தரம்.
ஒரு பில் பவித்திரம் உபவீதத்தில் ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி
' ... ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய / கோத்ராயா: நாம்நீயா:
மம மாது: ப்ரேதாயா: பைசாச பாதா நிவ்ருத்யர்த்தம் ஸமஸ்த பாப நிவ்ருத்யர்த்தம்
வ்ருஷப உத்ஸர்ஜனம் கரிஷ்யே" என்று சங்கல்பித்துக்கொண்டு
ஒரு வாழையிலையில் அரிசி சேர்த்து அதில் குடுமி மேற்காக தேங்காயை வைத்து
சந்தன புஷ்பாதிகளால் அலங்கரித்து தேங்காயைச் சுற்றி வஸ்திரம் வைத்து அருகில்
வெத்திலை பாக்கு பழம், ஒரு தொன்னையில் சிறிது எள் சேர்த்து தீர்த்தம் விட்டு வைக்கவேண்டியது.
அக்ஷதை எடுத்து ' ஆவோராஜா நமத்வரஸ்ய ருத்ரம் ஹோதாரம் ஸத்யயஜம் ரோதஸ்யோ:
அக்நிம் புராதநயித்ந: ரஜித்தாது ஹிரண்ய ரூபம் அவஸே க்ருணுத்வம்
அஸ்மிநு நாளிகேரே
வ்ருஷபராஜம் த்யாயாமி ஆவாஹயாமி "
என்று ஆவாஹம் செய்து அதற்கு அர்க்ய பாத்யாதி ஷோடச உபசாரங்கள் பண்றது.
கர்த்தா தர்பத்தினால் தேங்காயை காளை மாடாக பாவித்து அதைத் தொட்டுக்கொண்டு சொல்லவேண்டியது
'பிசங்கரூப: ஸுபர: வயோத்தா: ச்ருஷ்டீ வீரோஜாயதே தேவகாம: ப்ரஜாம்த்வஷ்டா விஷ்யது
நாபிமஸ்மே அதாதேவாநாம் அப்யேது பாத: தந்நஸ்தூPபம் அதபோஷயித்நு தேவத்வஷ்ட: விரராண:
ஸ்யஸ்வா யதோவீர: கர்மண்ய: ஸ{தக்ஷ: யுக்தக்ராவா ஜாயதே தேவகாம:"
இந்த மந்திரம் ஆனதும் 'ருசாம்ப்ராசீ மஹதீ" என்ற அநுவாகம் ஜபிக்கவேண்டும்.
இந்த ஜபம் முடிந்ததும் மீண்டும் பின்வரும் மந்திரங்கள் சொல்லப்படவேண்டும்.
ஏதம் யுவாநம் பரிவோததாமி தேநக்ரீடந்தீ: சரதப்ரியேண மாநஸ்சாப்தா ஜநுஷா ஸுபாகா:
ராயஸ்போஷேணா ஸமிஷா மதேமா நமோமஹின்மே உதக்ஷஷேதே மருதாம்பித:
ததஹம் க்ருணாமி அநுமந்யஸ்வா ஸ{யஜாயஜாமா ஜுஷ்டம் தேவாநாம் இதமஸ்து ஹவ்யம்
தேவாநாமேஷ: உபநாஹஆஸீது அபாங்கர்ப: ஓஷதீஷு ந்யக்த: ஸோமஸ்ய த்ரப்ஸம்
அவ்ருணீதா பூஷா ப்ருஹந்நு அத்ரிரபவது ததேஷாம் பிதாவத்ஸாநாம் பதிரக்நியாநாம்
அதோபித: மஹதாம் கர்கராணாம் வத்ஸோஜராயு ப்ரதிதுக் பீயூஷ: ஆமிக்ஷhமஸ்து க்ருதமஸ்யரேத:
துவாங்காவ: அவ்ருணத ராஜ்யாயா துவாகும்ஹவந்த: மருத: ஸ்வர்கா: வர்ஷ்மநு
க்ஷத்ரஸ்ய ககுபி சிச்ரியாண: ததோந: உக்ர: விபஜ வஸ_நி வ்ருத்யேநவை ஏஷபசுநா யஜதே
யஸ்யைதாநி நக்ரியந்தே ஏஷஹத்வை ஸம்ருத்தேநா யஜதே யஸ்யைதாநி க்ரியந்தே"
'ஹே வ்ருபராஜா த்ருணம் காத்வா,
திலமிச்ர ஜலம் பீத்வா,
தேவப்ராஹ்மண பூமிம் விஹாயா
யதேச்சம் விஹரா!"
என்று சொல்லி தேங்காயை உருட்டிவிடவேண்டியது.
உபவீதி ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி ... ப்ரீத்யர்த்தம்
கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய ஏகாதசே அஹநி
அத்ய க்ருத வ்ருஷப உத்சர்ஜன கர்மாங்கம் ஏகாதச ப்ராஹ்மண போஜனார்த்தம்
யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித தண்டுல தானம் கரிஷ்யே
11 பேருக்கு அரிசி வாழைக்காய் தக்ஷிணை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு
தண்டுலா: ... ப்ரயச்சமே, ஹிரண்ய கர்ப ... ப்ரயச்சமே கோத்ரஸ்ய சர்மண:
மம பிது: ப்ரேதஸ்ய அத்ய ஏகாதசே அஹனி அத்ய க்ருத வ்ருஷப உத்சர்ஜன
கர்மாங்கம் ஏகாதச ப்;ராஹ்மணபோஜன ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சிது ஹிரண்யம்
தண்டுலம் ஸ்ரீவைஷ்ணவாய ஸம்ப்ரததே. நம: நமம அச்யுத: ப்ரீயதாம்
11 பேருக்கு விநியோகம் பண்றது.
ஆத்தில் பண்ணுகிறவர்கள் கொஞ்சம் திறந்தவெளியாகவும் ஒதுக்குப் புறமாகவும்
நன்கு புகைபோகக்கூடிய இடமாகவும் பிறர் நடமாட்டம் இல்லாத இடமாகவும்
ஒரு ஐந்தடி சதுரம் இருந்தால் போதுமானது, திசைகளைப்பற்றி கவலையில்லை
ஆத்தின் எந்தத் திசையிலும் இருக்கலாம். ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து
அந்த இடத்தை புண்யாஹ ஜலத்தினால் ப்ரோக்ஷித்து கீழ்கண்ட சாமான்களை
அங்கே சேகரித்துக் கொள்ள வேண்டியது.
8 அல்லது நாலரை செங்கல், நாற்பதைம்பது காய்ந்த விராட்டிகள், கொஞ்சம் சுள்ளி,
கற்பூரம், தீப்பெட்டி, நல்லெண்ணை, சீயக்காய்;;பொடி, வெத்திலை, பாக்கு, 2 பழம்,
சந்தனம் சிறிது, சிறிது புஷ்பம், துளி வெல்லம், கொஞ்சம் அக்ஷதை, கொஞ்சம் எள்,
சாமான்களை வைத்துக் கொள்ள வாழை இலை அல்லது தாம்பாளம், 8 தொன்னைகள்
அல்லது கிண்ணங்கள், கொஞ்சம் நெல், மாவிலைகள், அத்தி இலைகள், கொஞ்சம் நெய்,
கர்தாக்களுக்கும் வாத்;தியாருக்கும் தேவையான ஆஸனங்கள், சொம்பு, குளபாத்திரம்,
ஆசமன பாத்திரங்கள் (தீர்த்தத்துடன்)
செங்கற்களைக் கொண்டு தரையில் சதுரமாக அமைத்துக்கொண்டு அதில் நடுவில் பெரிதாக
வட்டமாக உள்ள ஒரு விராட்டியை வைத்துவிட்டு ஒரு இருபது விராட்டிகளை சரியாக இரண்டு
பாதியாக உடைத்து வைத்துக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்றாக கீழ் விராட்டியின் வெளி விளிம்பைச்
சுற்றி வட்டமாக வைத்து முக்கால் அடி உயரத்துக்கு நடுவில் பெரிய துவாரம் உள்ளதுபோல்
ஒரு அக்நி குண்டத்தை தயாரித்து வைக்கறது.
இங்கு அக்நியை ஒரு ஸ்வாமியைப்போல் பாவித்து எல்லா உபசாரங்களும் பண்ணப்படவேண்டும்.
தீர்த்த உபசாரத்தை அக்நிக்கு வடக்கில் ஒரு தொன்னையை வைத்து அதில் ஸமர்பிக்கவேண்டும்
மற்ற சந்தன, புஷ்ப, எள், எண்ணை என அனைத்து உபசாரங்களையும் அக்நியிலேயே ஸமர்ப்பிக்கவேண்டும்.
கர்தா ஆசமனம் பண்ணி ஒரு பில் பவித்திரம் அணிந்து அனுஜ்ஞை!
'அசேஷே ... ஸ்வீக்ருத்யா கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய / கோத்ராயா:
நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ஏகாதசே அஹநி, மம பிது: ப்ரேதஸ்ய/ மாது: ப்ரேதாயா:
ப்ரேதத்துவ விமுக்தி: த்வாரா வஸ்வாதி பித்ருத்வ சித்தியர்த்தம் அக்ஷய்ய புண்யலோக அவாப்த்யர்த்தம்
ப்ராஹ்மண அபாவாது த்ரவ்ய அபாவாச ஆத்ய மாஸிக மஹைகோதிஷ்ட ச்ராத்தம் ஏக்கோத்திஷ்ட விதாநேன
அக்நௌ கர்த்தும் யோக்யதா சித்திம் அநுக்ரஹாணா!"
ஒரு பில் ஆசனத்தில் உட்கார்ந்து உபவீதத்தில் ப்ராணாயமம் ப்ராசீனாவீதி - அநுஜ்ஞைப்படி சங்கல்பம்!
பகவாநேவ ... ஆத்யமாஸ்ய ச்ராத்தாக்யம் .... காரயதி .
அக்நியை முதலில் கற்பூரம் சேர்த்து மூட்டிவிடவேண்டியது.
எள் எடுத்துக்கொண்டு அக்நியில்சேர்த்து
'பித்ரே ப்ரேதாய நம: / மாத்ரே ப்ரேதாயை நம:"
தொன்னையில் கூர்ச்சத்தால் தீர்த்தம் விட்டு 'அபப்ரதாயா"
அக்நியில் தர்பம் ஒன்று சேர்த்து 'பிது: ப்ரேதஸ்ய இதமாஸனம்"
எள் சேர்த்து 'இமே திலா: ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம்"
பாத்யம்:- 'பித:ப்ரேத ஸ்வாகதம் - இதந்தே பாத்யம்" என தொன்னையில் கூர்ச்சத்தால் ஜலம் விடவும்.
'இதம் ஆசமனீயம்" தொன்னையில் ஜலம் விடறது.
க்ரஸரம்:- துளி வெல்லத்தில் எள் கலந்து அக்நியில் சேர்த்து
'பித: ப்ரேத அந்த: சுத்யர்த்தம் அயம் தே க்ருஸர:"
அக்நியில் தாம்பூலம் சேர்த்து 'ஆஸ்ய சுத்யர்த்தம் இதம்தே தாம்பூலம்"
அக்நியில் எண்ணைவிட்டு 'சாPர சுத்யர்த்தம் இதம் அப்யஞ்சனம்"
'ஸ்நாநார்த்தம் இதம் உத்வர்த்தனம்" சிறிது சீயக்காய் பொடி சேர்க்கறது.
அக்நி ப்ரதிஷ்டை - தர்வீசம்ஸ்காரம்
அக்நிக்கு தெற்கில் தெற்கு நுனியாக தர்பம் போட்டு அதில் பெரிய அத்தி இலை
சின்ன அத்தி இலை ப்ரோக்ஷணி பாத்ரம், ஆஜ்ய பாத்திரம் இவை ஸாதனம் செய்கிறது.
விபரீதம் உல்லிக்யா - ஒரு தர்பத்தால் கிழக்கிலிருந்து மேற்குக்கு வடக்கே ஆரம்பித்து
தெற்கில் முடியும்படி 3 கோடுகள் கிழிக்கறது.
அதுபோல் தெற்குக்கு 3 கோடுகள் கிழக்கே அதன் மேற்கே அதன் மேற்கே என கிழிக்கறது.
தீர்த்தம் ப்ரோக்ஷித்து தர்பம் தென்மேற்கே எரியறது.
'விபரீதம் பரிஸ்தீர்யா" - கிழக்கிலும் மேற்கிலும் தெற்கு நுனி வடக்கிலும் தெற்கிலும் கிழக்கு நுனி.
'ஏகதர்பேண ஆயாமதம் க்ருத்வா" - ஒரு தர்ப ஆயமதம் பண்றது.
'ப்ரோக்ஷணீ ஸம்ஸ்கார:" ப்ரோக்ஷணீ பாத்திரத்தில் ஆயமதம் தெற்கு நுனியாக வைத்து ஜலம் விட்டு
3 முறை கிழக்கே தள்ளி ஆயாமதத்தால் ஜலமெடுத்து தெற்கே உள்ள பாத்திரங்களை நிமிர்த்தி ப்ரோக்ஷிக்கறது.
வேறு ஜலம் விட்டு ப்ரோக்ஷணீயை வடக்கு மூலையில் நகர்த்தி வைக்கறது.
நெய் பாத்திரத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆயாமதம் தெற்கு நுனியாக வைத்து
நெய் விட்டுக்கொண்டு தெற்கிலிருந்து ஒரு அக்நி துண்டத்தை எடுத்து தெற்கு மூலையில்
வைத்து நெய் பாத்திரத்தை அதனருகில் நகர்த்தி ஒரு தர்பத்தை கொளுத்தி நெய்யில் காமித்து
தெற்கே எரிந்துவிட்டு ஒரு தர்ப நுனியைக் கிள்ளி ப்ரோக்ஷணீயில் அலம்பி நெய்யில் சேர்த்து
ஒரு தர்பத்தைக் கொண்டு அக்நியில் ஏத்தி ஆஜ்ய பாத்திரத்தை அப்ரதக்ஷிணமாக மூன்று முறை
சுற்றி தர்பத்தை தெற்கே எரியறது.
ஆஜ்ய பாத்திரத்தை அக்நியைத் தாண்டி தெற்கே வைக்கறது.
அக்நியை அக்நியுடன் சேர்த்துடறது.
ஆஜ்ய பாத்திரத்தை நேரே எடுத்து வைத்துக்கொள்றது.
ஆயாமதத்தால் போகவர மூன்று தரம் நெய்யை அறைக்கறது.
ஆயாமத முடிச்சைப் பிரித்து
ஜலம் தொட்டு அக்நியில் மேற்கு நுனியாக சேர்க்கறது.
சின்ன பெரிய இலைகளை கைக்கொன்றாக
எடுத்துக்கொண்டு அக்நியில் காய்ச்சறது.
ஒரு தர்பம் கொண்டு துடைக்கறது. மீண்டும் காய்ச்சறது.
ஜலத்தால் இலைகளைப் ப்ரோக்ஷிக்கறது. இலைகளை வைத்துவிட்டு தர்பத்தை ஜலம் தொட்டு அக்நியில் சேர்க்கறது.
அக்நிக்குத் தெற்கே பாத்திர ஸாதன தர்பத்திற்கு கிழக்கே ஒரு தர்பம் ஆவாஹனத்திற்கும்
அதற்கும் கிழக்கே ஒரு தர்பம் அர்க்ய பாத்திரத்திற்கும் சேர்க்கவேண்டியது.
அர்க்ய க்ரஹணம்: அர்க்ய க்ரஹணத்திற்காக போடப்பட்டுள்ள தர்பத்தில் ஒரு தொன்னையை வடக்கு தெற்காக வைக்கறது.
அதற்குள் ஒரு அங்குல அளவில் ஒரு பில்லால் சிறு கூர்ச்சம் பண்ணி வைக்கவேண்டியது.
அர்க்ய க்ரஹணம்
' ஸ்ரீ-ம் கோத்ரஸ்ய .. சர்மண: .... .... அத்ய அஹநி ப்ரேத த்ருப்த்யர்த்தம் அர்க்ய க்ரஹணம் கரிஷ்யே"
என்று சங்கல்பம் பண்ணிக்கொண்டு
'தத் காலே க்ருச்ராசரணஞ்ச கரிஷ்யே" என்று க்ருச்ரம் பண்றது.
ஒரு தொன்னையில் சந்தனத்தை கரைத்து எடுத்துக்கொண்டு பின் வரும் மந்திர முடிவில் அர்க்ய தொன்னையில் சேர்க்கவேண்டும்.
'ஆம ஆகச்சது பிதா ப்ரேத: (மாதா ப்ரேதா) தேவயாநாநு ஸமுத்;;ராநு ஸலிலாநு ஸவர்ணாநு
அஸ்மிநுயஜ்ஞே ஸர்வகமாநு லபதே அக்ஷய்யமாநம் உபதுஹ்யதாம் இமாம் கோத்ர சர்மந்நு பிதப்ரேத
(கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே) இதம்தே அர்க்யம் க்ருஹ்ணாமி "
எள் எடுத்துக்கொண்டு 'திலோஸி ஸோமதேவத்ய: கோஸவ: தேவ நிர்மித: ப்ரத்நவத்ப்ய: ப்ரத்தஏஹி
பிதரம் ப்ரேதம் (மாதரம் ப்ரேதாம்) இமாந்லோகாந் ப்ரீணயாஹிந:" என்று அந்த ஜலத்தில் சேர்க்கறது.
'மதுவாதா: ருதாயதே மதுக்க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ந: ஸந்துவோஷதீ: மது" என்று கொஞ்சம்
தேன் அல்லது வெல்லத்தை அர்க்யத்தில் சேர்க்கறது.
இதுபோல்
'மதுநக்தம் ... அஸ்துந:பிதா மது" என்று ஒரு முறை
'மதுமாந்ந: ... காவோபவந்துந: மது" என்று ஒரு முறையும் வெல்லம் சேர்க்கறது.
ஒரு தர்பம் கொண்டு அர்க்யத்தை அப்ரதக்ஷிணமாக பின்வரும் மந்திரத்துடன் கலக்கறது.
'ஸோமஸ்ய த்விஷிரஸி தவேவமே த்விஷிர்பூயாது அம்ருதமஸி ம்ருத்யோர்மாபாஹி
தித்யோந்மாபாஹி அவேஷ்டா: தந்தசூகா: நிரஸ்தம் நமுச்சேசிர:" என்று அதில் ஏதேனும்
குப்பை இருந்தால் எடுத்து தர்பத்துடன் சேர்த்து தென்மேற்கே எறியறது.
'சந்நோ தேவீ: அபிஷ்டயே ஆபோ... வந்துந:" என்று தொன்னையை மூடிக்கொண்டு சொல்றது.
கொஞ்சம் எள், சந்தனம், புஷ்பம் இவற்றையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் தொன்னையில்
சேர்த்துவிட்டு ஒரு அத்தி இலை அல்லது மாவிலையால் தொன்னையை மூடிவைத்து
அதன் மேல் ஒரு தர்பமும் வைத்து மூடவேண்டியது.
எள், மணல், விராட்டி து}ள் கையில் எடுத்துக்கொண்டு
'அபஹதா: அஸ{ரா: ரக்ஷhகும்ஸி பிசாசா: யேக்ஷயந்தி ப்ருத்வீமநு அந்யத்ரேத:
கச்சது யத்ராஸ்ய கதம்மந: உதீர்த்தாம் அவர: உத்பர: உந்மத்யம: பிதா ப்ரேத:
ஸோம்ய: அஸ{ம்ய: ஈயாயா அவ்ருக: ருதஜ்ஞ: ஸநோவது பிதா ப்ரேத: ஹவேஷு"
(ஸ்த்ரீகளுக்கு: உதீர்த்தாம் அவரா உத்பரா உந்மத்யமா மாதா ப்ரேதா ஸோம்யா
அஸ{ம் யா ஈயாயா அவ்ருகா ருதஜ்ஞா ஸாநோவது மாதா ப்ரேதா ஹவேஷு).
'அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேது புண்டாPகாக்ஷம்
ஸபாஹ்ய ஆப்யந்தரசுசி:"
என்று போஜன ஸ்தலத்தை அக்நிக்கு தென்மேற்கு மூலையில் ப்ரோக்ஷிக்கறது.
'பிதரம் ப்ரேதம் (மாதரம் ப்ரேதாம் ) ஆவாஹயிஷ்யே" என்று சொல்லி அர்க்ய
பாத்திரத்திற்கும் பாத்திரஸாதனத்திற்கும் இடையில் உள்ள தர்பத்தைத் தொட்டுக்கொண்டு
'ஆயாஹி பித: ப்ரேத (மாத: ப்ரேதே) ஸோம்ய (ஸோம்யே) கம்பீரை: பதிபி: பூர்வ்யை:
ப்ரஜாம் அஸ்மப்யம் ததத் (தததீ) ரயிஞ்சா தீர்காயுத்வஞ்சா ஸதாசாரதஞ்சா கோத்ரம்
சர்மாணம் பிதரம் ப்ரேதம் (கோத்ராம் நாம்நீம் மாதரம் ப்ரேதாம்) ஆவாஹயாமி"
என்று எள் சேர்த்து ஆவாஹனம் பண்றது.
'கோத்ரஸ்ய சர்மண: பிது: ப்ரேதஸ்ய (கோத்ராயா: நாம்நீயா: மாது: ப்ரேதாயா:)
இதமாஸனம் " ஒரு தர்பத்தை போடறது,
'இதமர்ச்சனம்" எள் சேர்க்கறது
'இதந்தே திலோதகம்" சிறிது எள் ஜலம் விடறது.
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத (கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே)"
'ஸ்வாகதம், இதந்தே பாத்யம்" என்று தொன்னையில் சிறிது ஜலம் விடறது.
அப: ப்ரதாயா
'பிது: ப்ரேதஸ்ய இதம் ஆஸநம்" அக்நியில் ஒரு தர்பம் சேர்க்கறது.
புந: அப: ப்ரதாயா
'பித்ரு ப்ரேதார்த்தே பவதா க்ஷண: கர்த்தவ்ய:" தர்பம் அக்நியில்
'ப்ராப்நோத்பவாந்" என்று சொல்றது.
அப: ப்ரதாய
அர்க்ய பாத்திரத்திலுள்ள சிறு கூர்ச்சத்தை எடுத்து வடக்கே உள்ள உபசாரம் சமர்ப்பிக்கும்
தொன்னையில் வைக்கறது.
அர்க்ய தீர்த்தம் இலையினால் எடுத்துக்கொண்டு இந்த உபசார
தொன்னையை இடது கையினால் தொட்டுக்கொண்டு பின்வரும் மந்திரம் சொல்றது.
'யாதிவ்யா: ஆப: பயஸா ஸம்பபூவு: யா: அந்தரிNக்ஷ உதபார்த்திவீர்யா: ஹிரண்யவர்ணா:
யஜ்ஞியா: தாநஆப: ஸக்குஸ்யோநா: பவந்து கோத்ர சர்மந்நு பித: ப்ரேத (கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே)
இதந்தே அhக்யம்" என்று அர்க்ய ஜலத்தை தொன்னையில் விடறது.
பித: ப்ரேத இயந்தே தக்ஷிணா த்ருப்தி: என்று (புநர் அர்க்ய தானத்திற்காக) ஒரு முறை தீர்த்தம் விடறது.
'புந: சுத்தோதகம்" என்று கூர்ச்சத்தால் தீர்த்தம் ப்ரோக்ஷித்து
அர்க்ய கூர்ச்சத்தை உபசார தொன்னையிலிருந்து எடுத்து அர்க்ய தொன்னையில்
வைத்து முன்போல் இலையால் மூடி தர்பத்தால் மூடவேண்டியது.
'அர்ச்சதா ப்ரார்ச்சதா ப்ரியமே தாச: அர்ச்சதா அர்ச்சந்து புத்ரகா: உதபுநர்நு திஷ்ணுவர்ச்சதா"
என்று சொல்லி எள் எடுத்து அக்நியில் சேர்த்து
'பித: ப்ரேத இதந்தே அர்ச்சநம்" என்கிறது.
'கந்தத்வாராம் ..." சொல்லி சிறிது சந்தனத்தை அக்நியில் சேர்த்து
'அலங்காரார்தே அமீதே கந்தா:" என்கிறது.
'ஆயநேத பராயணே து}ர்;;வாரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஸ்ச்சா புண்டரீகாணி
ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே" துளி புஷ்பம் அக்நியில் சேர்த்து 'இமாநி புஷ்பாநி" என்கிறது.
'யுவாசுவாஸா: .... தேவயந்த:" சொல்லி ஒரு தர்பத்தை அக்நியிலிட்டு 'ஆச்சாதாநார்த்தம்
வஸ்த்ரார்த்தம் அயம் தர்ப:" என்றும்
'பவித்ரார்த்தம் அயம் தர்ப:" என்றும் ஒரு தர்பம் அக்நியிலிடவேண்டியது.
'சேஷ உபசரார்த்தே இமே திலா:" என்று சிறிது எள்ளை அக்நியில் சேர்த்து
'ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்" என்று சொல்லவேண்டியது.
ஹோமத்திற்காகப் பண்ணப்பட்டுள்ள ப்ரசாதத்திலிருந்து சிறிது தொன்னையில்
எடுத்து வந்து நெய் சேர்த்து அக்நிக்குக் காட்டி அக்நிக்குத் தெற்கே வைத்து
மீண்டும் துளி நெய் சேர்க்கறது.
து}ஷ்ணீம் அக்நியை அப்ரதக்ஷிணமாக பரிசேஷணம் பண்றது.
ஏற்கனவே ஸம்ஸ்காரம் பண்ணிவைத்துள்ள பெரிய இலையை இடது கையில்
வைத்து சிறிய இலையால் நெய்யைத் தொட்டு ஒரு தரம் பெரிய இலையைத் துடைத்து
பின் ஒரு குச்சியை இலையுடன் மேக்ஷணமாக வைத்துக்கொண்டு தொன்னையிலிருந்து
ஒரு தரம் சாதம் எடுத்து இலையில் வைத்துக் கொண்டு ஒருதரம் நெய் எடுத்துவிட்டுக்
கொண்டு சிறிய இலையை கீழே வைத்துவிட்டு சாதம் உள்ள பெரிய இலை மேக்ஷணத்துடன்
வலது கையில் வாங்கிக்கொண்டு இடது கையால் ப்ரசாத தொன்னையைத் தொட்டுக் கொண்டு
'கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய யமாயச ஸ்வாஹா - "
(கோத்ராயை நாம்ந்யை மம மாத்ரே ப்ரேதாயை யமாயச ஸ்வாஹா)
என்று ப்ரசாதத்தை அக்நியில் சேர்த்து “கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய யமாய ச இதம் நமமா" என்கிறது.
இலையில் நெய் எடுத்து இதே மந்திரத்தால் நெய்யால் ஹோமம் பண்றது.
நெய்யினால் பூ: இத்யாதி நாலு ஹோமம் பண்றது. அக்நியை அப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் பண்றது.
இரு அத்தி இலை, குச்சி இவற்றை மந்திரமில்லாமல் அக்நியில் போட்டுவிடவேண்டியது.
போஜனம்:
'கோத்ரஸ்ய சர்மண: பிது: ப்ரேதஸ்ய போஜந ஸ்தாநே இதமாஸநம்"
என்று ஒரு தர்பத்தை அக்நியிலும்
'இதம் போஜன பாத்ராஸனம்"
என்று அக்நிக்குத் தெற்கில் ஒரு தர்பத்தைச் சேர்க்கவேண்டும்.
அதன்மேல் தெற்கு நுனியாக ஒரு வாழை இலையை சேர்க்கறது.
ஹோமம் பண்ணின பாக்கி சிறிது இலையில் சேர்த்துவிட்டு மீதி சாதத்துடன்
கொஞ்சம் சாதம் சேர்த்து ஒரு பிண்டம் பண்ணி வைத்துவிட்டு பாத்திரத்திலுள்ள
பாக்கி சாதம் பூராவையும் இலையில் சேர்க்கவும்.
தத்தம்
பரிவேஷணம் பண்ணப்படுள்ள ப்ரசாதத்தை தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து
'ஓம் பூர்புவஸ்ஸ{வ தத்ஸவிதுர்வரேண்யம் ... ப்ரசோதயாது" என்று அபிமந்த்ரணம் பண்ணி
'தேவஸவித: ப்ரஸுவ" என்று இலையைச் சுற்றி அப்ரதக்ஷிணமாக பரிசேஷணம் பண்றது.
ஹஸ்தே சுத்தோதகம் ப்ரதாய.
(உபசார தொன்னையில் கூர்ச்சத்தால் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கறது.
இலையின் நுனிப் பக்கம் இடது கை கீழே வலது கை மேலே வைத்துப்
பிடித்துக்கொண்டு கீழ் மந்திரம் ஜபிக்கறது )
'ப்ருத்வீதே பாத்ரம் ... அக்ஷிதமஸி மாஸ்யா Nக்ஷஷ்டா: அமுத்ரா அமுஷ்மிந்நு
லோகே! இதம் விஷ்ணு: ... பாகும்ஸுரே! இதம் அந்நம் ரக்ஷ! கோத்ரஸ்ய ... ச்ரார்த்தே
கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய இதம் அந்நம் நம: நமம!" என்று சொல்லி துளசி கலந்த
எள் ஜலத்தை இலைநுனிக்கருகில் பூமியில் கட்டைவிரலால் விடவேண்டியது.
தெற்கு நுனியாக ஒரு தர்பம் போட்டு அதில் 'ஏகோவிஷ்ணு: ... அவ்யய: அநேந மம பிது:
ப்ரேதஸ்ய ஆத்ய மாசிக மஹைக்கோத்திஷ்ட ச்ராத்தேந மம பித்ரு ப்ரேத ரூபி பகவாந் ஸதேவ:
ஸ்ரீஜநார்த்தன ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம்" என்று கட்டை விரல் வழியாக துளசி,
எள் ஜலம் சேர்த்து விடவேண்டியது.
எழுந்திருந்து வடக்கே பார்த்து 'கய கய கய"
தெற்கே பார்த்து
'அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட:" என்று சொல்லவேண்டியது.
'கோத்ரஸ்ய சர்மண: பிது: ப்ரேதஸ்ய யதா சௌகர்யம் பரிஷேசனம்"
என்று கூர்ச்சத்தால் தீர்த்தம் எடுத்து இலையைச் சுற்றி விட்டு 'ஸத்யந்த்வா
ருதேந பரிஷிஞ்சாமி" என்று சொல்ல வேண்டியது. 'புநஸ்ஸுத்தோதகம்"
என்று ப்ரோக்ஷித்து,
'அம்ருதோபஸ்தரணமஸி" என்று கூர்ச்சத்தால் தீர்த்தம்
எடுத்து உபசார தொன்னையில் விடவேண்டியது.
'ப்ரணாய ஸ்வாஹா" இத்யாதி
ப்ராணாஹுதி மந்த்ரங்களைச் சொல்லி சிறிது சிறிதாக இலையிலிருந்து ப்ரசாதம்
எடுத்து அக்நியில் சேர்க்கவேண்டியது.
'ப்ரம்மணிமே ஆத்மா அம்ருதத்வாய -
யதாசுகம் ஜுஷத்வம் " என்று ப்ராத்தித்துவிட்டு,
இலையில் உள்ள அன்னத்தை
நான்கு பாகமாக வகுந்துகொண்டு அதில் தென்கிழக்கில் உள்ள பாகத்தை எட்டு சம
அளவாக பண்ணிக்கொண்டு ஒவ்வொரு பாகமாக எடுத்து பின் வரும் மந்திரத்தால்
அக்நியில் ஹோமம் பண்ணவேண்டும்.
'யமாய ஸோமம் ஸ{நுத யமாய ஜுஹுதா ஹவி: யமகும்ஹா
யஜ்ஞோகச்சதி அக்நிது}த: அரங்க்ருத ஸ்வாஹா"
'யமாய இதம் நமம" என்று ஒவ்வொன்றுக்கும் உத்ஸ்ய த்யாகம்
ஒவ்வொரு நான்கில் ஒரு பாகத்திலிருந்தும் எட்டெட்டு ஆஹ{தி பண்ணி முடிவில்
'மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி" என்று கூர்சத்தால் தீர்த்தம் எடுத்து அல்லது
குளபாத்திரத்துடனோ உபசார தொன்னையில் தீர்த்தம் சேர்க்கவேண்டியது.
நான்காவது பாக எட்டு ஆஹுதி முடிவில்
' அந்தே பாநீயம் ஸமர்ப்பயாமி" என்றும் தீர்த்தம் விடவேண்டியது.
முடிந்ததும் வலது கையில் தீர்த்த பாத்திரம் இடது கையில் பிண்ட தானத்திற்காக
வைத்துள்ள ப்ரசாதம் உள்ள தட்டை வைத்துக்கொண்டு
'பித:ப்ரேத ஸம்பந்நம், பித: ப்ரேத த்ருப்தோஸி,
பித: ப்ரேத அம்ருதாபிதாநமஸி" என்று சொல்லி ஜலம் எடுத்து
உபசார தொன்னையில் விடவேண்டியது.
'ஹஸ்த ப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி" என்று ஜலம் விடறது.
'ஆசமநீயம் ஸமர்ப்பயாமி" என்றும் ஜலம் விடறது.
அப:ப்ரதாய - அர்க்ய பவித்ரம் ஆதாய - ஹஸ்தே நிதாய
'யாதிவ்யா: ஆப: பயசா ஸம்பபூவு: யா: அந்தரிNக்ஷ உத பார்த்திவீர்யா: தாநஆப:
ஸக்குஸ்யோநா: பவந்து" என்று ஜபித்து 'கோத்ர சர்மந்நு இதம்தே புக்தி த்ருப்தி:"
என்று கேட்டு 'புநஸ்ஸ{த்தோதகம்" என்று கூர்ச்சத்தால் தீர்த்தம் ப்ரோக்ஷித்து
அர்க்ய கூர்ச்சத்தை எடுத்து பிரித்துவிட்டு அர்க்ய தொன்னையில் சேர்த்துவிடவேண்டியது
அப: ப்ரதாய, 'பித: ப்ரேத போஜனாம்தே யத்கிஞ்சிது தக்ஷிணா ஸஹிதம் தாம்பூலம்
ஸமர்ப்பயாமி" என்று ஒரு நாணயம் ஒரு வெத்திலை ஒருபாக்கில் வைத்து அக்நியில் சேர்க்கவேண்டியது.
உபவீதி: ஆர்த்ரா அக்ஷதாநு தத்வா - சாஷ்டாங்கம் ப்ரணமேது.
( ஒரு சுற்று அக்நியை சுற்றிவந்து ஸேவிக்கறது)
ப்ராசீனாவீதி: திலாநாதாய - 'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத உத்திஷ்டா" என்று
ஆவாஹனம் பண்ணின தர்பத்தில் எள் சேர்க்கவேண்டியது.
உத்தாபனம்: பித: ப்ரேத உத்திஷ்டா என்று அக்நியிலும் சிறிது எள் சேர்க்கிறது.
'அஸ்மத்குலம் அபிவர்த்ததாம்" என்று சிறிது நெல் எடுத்து அக்நிக்கு அருகில் சேர்க்கறது.
உபவீதம் - ப்ராணாயாமம் - ப்ராசீனாவீதம்
'ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்;ய ச்ராத்தே பிது: ப்ரேத த்ருப்த்யர்த்தம் பிண்ட ப்ரதானம் கரிஷ்யே"
என்று சங்கல்பம் பண்ணிக்கொண்டு தெற்கு நுனியாக தர்பம் சேர்;த்து அர்க்ய தொன்னையிலிருந்து
தீர்த்தம் அத்தி இலையினால் எடுத்து அந்த தர்பத்தின்மேல் வடக்கிலிருந்து தெற்காக விட்டு
'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத:" என்று சொல்லி, பிண்ட ப்ரதானத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த
அந்நத்தை பிண்டமாக பிடித்துக்கொண்டு
'கோத்ரஸ்ய ச்ராத்தே கோத்ர சர்மந்நு பித்ரே ப்ரேதாய ஏதம் பிண்டம் ததாமி"
என்று பிண்டத்தை வைத்து
'கோத்ர சர்மந்நு ஏதம் பிண்டம் உபதிஷ்ட" என்று சொல்லி
உபஸ்தானம் செய்து,
பிண்டம் இருந்த பாத்திரத்தில் எள் சேர்த்து அர்க்ய தீர்த்தத்தையும்
அதிலேயே சேர்த்து 'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத:" என்று அப்ரதக்ஷிணமாக பிண்டத்தைச்
சுற்றி பாத்திரத்தை தெற்கே கவிழ்த்துவிடவேண்டியது.
உபவீதம் பண்ணி பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து ப்ரோக்ஷித்து வடவண்டை எடுத்து வைக்கவேண்டும்.
பவித்திரம் பிரித்துப்போட்டு ஆசமனம்.
ஸாத்வீக த்யாகம்.
முக்ய ஸ்நாநம் முடியாத பக்ஷத்தில் மந்த்ர ஸ்நானம்
மாத்யாந்நிகம்.
ஆத்ய மாசிகம் போலவே ஆவ்ருதாத்ய மாசிகம் எல்லாம் பண்ண வேண்டியது.
அக்நியில் பண்ணின உபசாரங்கள் அனைத்தும் ஸ்வாமிக்குப் பண்ணவேண்டும்.
யமாய ஸோமம் .. மந்திரம் கிடையாது