Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
நித்யவிதி
நித்யவிதிக்கு தேவைகள் :- 10ம் நாள் வரை
ஒரு கை அல்லது 50கிராம் போட்டு பொங்கிய சாதம் கொண்டு பெரிய பிண்டம்-1, சிறிய பிண்டம்-1
தீப்பெட்டி, திரிநு}ல், எண்ணை, இளநீர்-1,
எள்-சிறிது, வெல்லம்-சிறிது, நெய்-சிறிது, தயிர்-சிறிது சரகு தொன்னையில் எடுத்து வைக்கவும்.
ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தத்திற்கு :-
அரிசி, வாழைக்காய், சேம்பு, வெல்லம், ப.பருப்பு, வெத்திலை, பாக்கு, தக்ஷpணை .............
நவ ச்ராத்தம்: (1,3,5,7,9 மற்றும் 11ம் நாட்களில் மட்டும்)
அரிசி, வாழைக்காய், சேம்பு, வெல்லம், ப.பருப்பு, வெத்திலை, பாக்கு, தக்ஷpணை .............
அநுஜ்ஞை, க்ருச்ரம் போன்ற வைதீக சில்லரை செலவு
நித்யவிதி பண்ணி வைக்க வாத்யார் ஸம்பாவனை ................... வீதம்

சங்கல்பம்

தீர்த்தமாடி ஒற்றை ஈர வேஷ்டியுடன் திருமண் மட்டும் இட்டுக் கொண்டு உபவீதத்தில் ஆசமனம் பண்ணி ஒரு பில் பவித்திரம் ஒன்று அணிந்து கொண்டு தடாக தீர குண்டத்தில் முதலில் ஸேவித்துவிட்டு உட்கார்ந்து ஒரு பில் ஆசனம் ஒரு இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம் பண்ணவேண்டியது.
ப்ராசீனாவீதி தொடையில் கைவைத்து ஹரி: ஓம் தது

ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா . . . . . . . . .ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே சித்திரபானு நாம ஸம்வத்ஸரே தக்ஷpணாயனே சரத் ருதௌ துலா மாஸே சுக்லஃக்ருஷ்ண பNக்ஷ . . . . . . . . . . திதௌ . . . . . . . . . . வாசரே . . . . . . . . . . நக்ஷத்ரே ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் . . . . . . . . . . திதௌ ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீ மந்நாராயண ப்ரீத்யர்த்தம்
ஆத்ரேய கோத்ராயா: -------- நாம்நீயா: மம (ன்னு சொல்லறது) மாது: ப்ரேதாயா: அத்ய. ? . . . . . . . . . அஹநி தஹன ஜநித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்த்யர்த்ம் தடாக தீர குண்டே அத்யதின கர்த்தவ்யம் வாசோதக திலோதக ப்ரதாநாநிச கரிஷ்யே!
தத்காலே க்ருச்ர ஆசரணஞ்ச கரிஷ்யே! இடுக்குப் பில்லை தெற்கே சேர்க்கவேண்டியது.

க்ருச்ரம்

ஐந்து ரூபாய் சில்லரை சிறிது எள் எடுத்துக்கொண்டு ஹிரண்ஹகர்ப்ப கர்பஸ்தம் ஹேமபீஜம்; விபாவசோ: அனந்த புண்யபலதம் அத:சாந்திம் ப்ரயச்சமே தடாக தீர குண்டே வாசோதக திலோதக ப்ரதான காலே திதி வார நக்ஷத்திர லக்ன யோக கரணை: யோதோஷ: ஸமஜனி தத்தோஷ பரிஹாரார்த்தம் ப்ராஜாபத்ய க்ருச்ர ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சிது ஹிரண்யம் ஸ்ரீ வைஷ்ணவாய ஸம்ப்ரததே
என்று தீர்த்தம் சேர்த்து கட்டை விரல் வழியாக விட்டுவிடவேண்டியது!
நம: நமமா அச்சுயுத: ப்ரீயதாம்! என்று சொல்லறது.
-------- இதுவரை கர்தா எல்லாரும் ஒன்றாக சங்கல்பம் செய்து கொள்ளலாம் ----

தடாகதீரம்

துணியை மூன்றாக மடித்துக்கொண்டு தர்பத்தை அதில் சேர்த்து சுற்றிக்கொண்டு மந்திரம் முடியும்போது குண்டத்தில் கட்டைவிரல் பக்கமாக பிழிந்து ஜலம் விடவேண்டியது
! தஹன ஜநித க்ஷ{த் த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்த்யர்த்ம் தடாக தீர குண்டே --------- கோத்ராயை ---------- நாம்நியை மம மாத்ரே ப்ரேதாயை ஏதத் வாசோதகம் ததாமி! இதே மந்திரத்தால் 3 தரம் துணியை வைத்துவிட்டு ஒரு தர்பத்தை கையில் சுற்றிக்கொண்டு கட்டைவிரல் நுனி வழியாக எள்ளும் ஜலமுமாக எத்தனாவது நாளோ அத்துடன் 2 கூட்டி அத்தனை முறை விடவேண்டும் (உ-ம்: 3ஆம்நாள் 5முறை, 4ம்நாள் 6முறை, 10ம்நாள் 12 முறை) தஹன ஜநித க்ஷ{த் த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்த்யர்த்ம் தடாக தீர குண்டே -------- கோத்ராயை ---------- நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை ஏதத் திலோதகம் ததாமி! எழுந்திருந்து கை கூப்பிக்கொண்டு -------- கோத்ர ----------- நாம்நீ மம மாத ப்ரேதே மயா க்ருதானி ஏதானி வாசோதகாநி உபதி;ஷ்டா ஏதாநி திலோதகாநி உபதிஷ்டா உட்கார்ந்து அத்ர ஸ்நாஹி ஜலம் பிபா த்ருப்தா பவா சீதா பவா த்ருப்ய த்ருப்யா என்று குண்டத்தில் ஜலம் விட்டு குண்டத்தை அப்ரதக்ஷpணமாக சொம்பைக் கவிழ்த்தபடி ஜலம் சுற்றி 'மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா" என்று சொம்பை தெற்கே கவிழ்க்கவேண்டியது! ஜலத்தைத் தொட்டு சொம்பை ப்ரோக்ஷpத்து நிமிர்த்தி வைத்துவிட்டு உபவீதம் பண்ணிக்கொண்டு ஸேவித்து விட்டு ப்ராசீனாவீதி பண்ணிக்கறது!
(இதுபோல் 3 வாசோதகமும் நாள் கணக்குக்கு 2 கூடுதல் திலோதகமும் கர்தா சின்னவரில் ஆரம்பித்து பெரியவர் முடிய ஒவ்வொருவராக எல்லாரும் பண்ண வேண்டும். க்ருஹத்வார குண்டத்தில் பெரியவர் மட்டுமே பண்ணவேண்டும்.)
----------------------------

க்ருஹத்வாரம்

ப்ராசீனாவீதியுடன் க்ருஹத்வாரகுண்டத்திற்கு (உள்ளே) போய் கர்த்தாக்கள் உபவீதம் பண்ணிக்கொண்டு ஸேவித்து உட்கார்ந்து பெரியவர் மட்டும் ப்ராணாயாமம் பண்ணிவிட்டு ப்ராசீனாவீதி பண்ணிக்கொண்டு சொல்லவேணடியது.
அத்யபூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் . . . . . . திதௌ ஸ்ரீபகவதாக்ஞயா பகவத்கைங்கர்யம் ------- கோத்ராயா: ------- நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய .......மே அஹநி க்ருஹத்வார குண்டே அத்ய தின கர்த்தவ்யம் பிண்டபலி ப்ரதாநாநிச கரிஷ்யே! தத்காலே க்ருச்ராசரணஞ்ச கரிஷ்யே! எள் 5 ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு ஹிரண்ஹகர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவசோ: அனந்த புண்யபலதம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே --------- கோத்ராயா: ----------- நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: க்ருஹத்வார குண்டே பிண்ட பலி ப்ரதான காலே திதி வார நக்ஷத்ர லக்ன யோக கரணை: யோதோஷ: ஸமஜனி தத்தோஷ பரிஹாரார்த்தம் ப்ராஜாபத்ய க்ருச்ர ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சி;து ஹிரண்யம் ஸ்ரீவைஷ்ணவாய ஸம்ப்ரததே.
நம: நமமா அச்சுயுத ப்ரீயதாம். முன்போல் துணியை மூன்றாக மடித்துக்கொண்டு தர்பத்தை அதில் சேர்த்து சுற்றிக்கொண்டு மந்திரம் முடியும்போது குண்டத்தில் கட்டைவிரல் பக்கமாக பிழிந்து ஜலம் விடவேண்டியது! தஹன ஜநித க்ஷ{த் த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்த்யர்த்ம் க்ருஹத்வார குண்டே -------- கோத்ராயை ----------- நாம்நியை மம மாத்ரே ப்ரேதாயை ஏதத் வாசோதகம் ததாமி! 3 தரம் பண்ணி துணியை வைத்துவிட்டு ஒரு தர்பத்தை தெற்கு நுனியாக சேர்த்து அதில் எள்ளும் ஜலமுமாக கட்டைவிரல் வழியாக 'மார்ஜயதாம் மம மாதா ப்ரேதாஆ..." என்று சொல்லி விடவேண்டியது.
பண்ணி வைத்துள்ள ஒரு கை சாதத்தை நார்த்தங்காய் அளவு ஒரு பெரிய பிண்டமும், எலுமிச்சை அளவில் ஒரு சிறிய பிண்டமும் பிடித்துக் கொள்ளவேண்டியது.
பெரிய பிண்டத்தை கையில் வைத்துக்கொண்டு தஹன ஜநித க்ஷ{த் த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதா ஆப்யாயனார்த்தம் ப்ரேதா த்ருப்த்யர்த்ம் க்ருஹத்வார குண்டே --------- கோத்ராயை ---------- நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை க்ஷ{து உபசமநார்த்தம் ப்ராத: ஏதம் பிண்டம் ததாமி.
சாயமேதம் பலிம்; ததாமி!
க்ருதம் தாமி (நெய்)
குடம் ததாமி(வெல்லம்)
ததி ததாமி (தயிர்)
திலோதகம் ததாமி (எள்)
குடோதகம் பிபா (வெல்லம் கரைத்து குண்டத்திற்குள்)
தக்ரோதகம் பிபா (தயிரைக் கரைத்து மோராக்கி குண்டத்தினுள் )
சுத்தோதகம் பிபா (சொம்பு ஜலம் குண்டத்தினுள்)
நாளி கேர உதகம் பிபா (இளநீர் குண்டத்தினுள்)
கை கூப்பிக் கொண்டு (முடிந்தால் எழுந்து நின்று) உபசராமாக கையைக் காமித்து ---------- கோத்ர ----------- நாம்நீ மம மாதப்ரேதே மயா க்ருதானி ஏதானி ப்ராத: ஏதம் பிண்டம் உபதிஷ்டா சாயமேதம் பலிம் உபதிஷ்டா க்ருதம் உபதிஷ்டா குடம் உபதிஷ்டா ததி உபதிஷ்டா திலோதகம் உபதிஷ்டா குடோதகம் உபதிஷ்டா தக்ரோதகம் உபதிஷ்டா சுத்தோதகம் உபதிஷ்டா நாளிகேர உதகம் உபதிஷ்டா என்று சொல்லி உட்கார்ந்து
சாதம் வடித்த பாத்திரத்தில் சிறிது எள்ளும் ஜலமும் சேர்த்து பிண்டத்தை அப்ரதக்ஷpணமாக சுற்றி 'மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா "
என்று கவிழ்த்து ப்ரோக்ஷpத்து நிமிர்த்தி வடக்கே வைக்கவேண்டியது!

ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்

இதை ஒவ்வொருநாளும் நித்தியவிதி முடிந்தவுடன் செய்யவேண்டும்.
அல்லது பத்து நாளைக்குமாகச் சேர்த்து பத்தாம் நாளன்று செய்யலாம்.
ஆனால் ப்ரபூதபலி போடுவதற்கு முன்னால் பண்ணிவிடவேண்டும்.
கிழக்கே பார்த்து உட்கார்ந்து உபவீதி ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி 'அத்ய பூர்வோக்த.....ம் "
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய" '----------- கோத்ராயா: --------- நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: " 'அத்ய . . அஹநி க்ருஹத்வார குண்டே ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தானி திலோதக சம சங்க்யயா காநி யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆம ரூபேண கரிஷ்யே!"
அரிசி வாழைக்காய் வெல்லம் தக்ஷpணை வைத்து தர்பத்தால் தீர்த்தம் எடுத்து ப்ரோக்ஷpத்து 'தண்டுலா: வைச்வதேவத்யா: பாகேந அந்நம் பசந்தியே தஸ்மாது தண்டுல தாநேநா அதஸ்சாந்திம் ப்ரயச்சமே ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே அமூநி (அதீத ப்ரதமதினமாரப்ய அத்யதின பர்யந்தாநி) ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தாநி யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆம ரூபாணி கோத்;;ராய சர்மணே மம பித்ரே ப்ரேதாய ஃ கோத்ராயை நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை இதம் ஆமம் ஹிரண்யம் ரக்ஷh நாநா கோத்ரேப்ய: ஸ்ரீவைஷ்ணவேப்ய: தேப்ய: தேப்ய: ஸம்ப்ரததே!
நம: நமமா அச்சுயத: ப்ரீயதாம். "
தெற்கு நுனியாக ஒரு தர்பம் போட்டு அதில் பின்வரும் மந்திரம் முடிந்ததும் கட்டைவிரல் வழியாக எள் ஜலம் விடவும்.
'ஏகோ விஷ்ணு: மஹத்பூதம் ப்ரதக்பூதாநி அநேகஸஹா த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்;க்தே விச்வபு: அவ்யய: ஏபி: (அதீத ப்ரதமதினமாரப்ய அத்ய தின பர்யந்தை:) ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தை: யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆம ரூபை: மம பித்ரு ப்ரேத ரூபி (ஃமம மாத்;ரு ப்ரேதா ரூபி ) பகவாந் ஸ்ரீ ஜனார்த்தந: ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம்" என்று எள்ளும் ஜலமுமாக விடவேண்டியது எழுந்திருந்து உபவீதம் பண்ணிக்கொண்டு வடக்கே பார்த்து 'கய கய கயா கயா ச்ராத்தம் கயாச்ராத்தம் கயாச்ராத்தம்" என்று சொல்லி தெற்கே திரும்பி 'அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட:" என்று சொல்லவும்.
உட்கார்ந்து இந்த தத்தங்களை உடனே அருகிலுள்ள ப்ராஹ்மணர்களுக்கு விநியோகம் பண்ணிவிடலாம்.
அல்லது நவச்ராத்தத்தையும் முடித்துக்கொண்டு பின்னர் இரண்டையும் சேர்த்து விநியோகம் பண்ணலாம்.

நவச்ராத்தம்

இந்த நவச்ராத்தம் 1ஃ3ஃ5ஃ7ஃ9ஃ11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் மட்டும் பண்ண வேண்டும்.
அல்லது ஒரேதரமாக 11ம் நாள் அன்று சேர்த்து பண்ணிவிடலாம்.
உபவீதி ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி 'ஸ்ரீ பகவதாக்ஞயா ........ம் " 'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய " (ஃ கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா:) 'அத்ய . . . . அஹநி க்ருஹத்வார குண்டே (அதீத ப்ரதம தின, த்ருதிய தின, பஞ்சம தின, ஸப்தம தின, நவம தின) அத்ய தின கர்த்தவ்ய நவ ச்ராத்தம் யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆம ரூபேண கரிஷ்யே!"
அரிசி வாழைக்காய் வெல்லம் தக்ஷpணை வைத்து தர்பத்தால் தீர்த்தம் எடுத்து ப்ரோக்ஷpத்து 'தண்டுலா: வைச்வதேவத்யா: பாகேந அந்நம் பசந்தியே தஸ்மாது தண்டுல தாநேநா அதஸ்சாந்திம் ப்ரயச்சமே ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் (அதீத ப்ரதம தின, த்ருதிய தின, பஞ்சம தின, ஸப்தம தின, நவம தின) அத்ய தின கர்த்தவ்ய நவச்;ராத்தம் யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹிதம் ஆம ரூபம்" 'கோத்ராய சர்மணே மம பித்ரே ப்ரேதாய " (ஃ கோத்ராயை நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை) இதம் ஆமம் ஹிரண்யம் ரக்ஷா யஸ்மை கஸ்மை ஸ்ரீ வைஷ்ணவாய ஸம்ப்ரததே! நம: நமமா அச்சுயுத: ப்ரீயதாம்.
ஏகோ விஷ்ணு: மஹத்பூதம் ப்ரதக்பூதாநி அநேகசஹா த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்;க்தே விச்வபு: அவ்யய: அநேந நவச்ராத்தேநா யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆமரூபேணா மம பித்ரு ப்ரேத ரூபி (ஃமம மாத்ரு ப்ரேதா ரூபி) பகவாந் ஸ்ரீ ஜனார்த்தந: ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம் " தெற்கு நுனியாக ஒரு தர்பம் போட்டு அதில் எள்ளும் ஜலமுமாக விடவேண்டியது.
எழுந்திருந்து உபவீதம் பண்ணிக்கோண்டு வடக்கே பார்த்து ' கய கய கயா கயா ச்ராத்தம் கயாச்ராத்தம் கயாச்ராத்தம்" என்று சொல்லி தெற்கே திரும்பி 'அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட:" என்று சொல்லி உபவீதம் பண்ணிக் கொண்டு பவித்ரம் பிரித்துப் போட்டு ஆசமனம் பண்ணிவிடவேண்டியது.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!