1. யஜ்ஞோபவீத தாரணம்
2. புண்யாஹம்
3. அக்நி ஸந்தானம், ஔபாஸனம்
4. ஷோடச ச்ராத்தம்
5. ஸபிண்டீகரணம்
எண் | சாமான்கள் விபரம் | அளவு | குறிப்பு |
01 | தேங்காய் | 1 | |
02 | வெத்திலை | 1 கவுளி | |
03 | பாக்கு | 100 கிராம் | |
04 | பழம் | 1 டஜன் | |
05 | புஷ்பம் | 4 முழம் | |
04 | சந்தனம் | 1 டப்பி | |
05 | அரிசி | 5 கிலோ | |
06 | வாழைக்காய் | 16 | |
07 | சேப்பங்கிழங்கு | 3 கிலோ | |
08 | பயத்தம்பருப்பு | 1 கிலோ | |
09 | வெல்லம் | கால் கிலோ | |
10 | எள் | 100 கிராம் | |
11 | நெல் | கிராம் | |
12 | நெய் | கால் கிலோ | |
13 | நல்லெண்ணை | 100 மில்லி | |
14 | சீக்காய்பொடி | 1 பாக்கட் | |
15 | கற்பூரம் | 10 ரூ | |
16 | தீப்பெட்டி | 1 | |
17 | திருத்துழாய் | சிறிது | |
18 | ஏலம்,கிராம்பு,ஜாபத்ரி (ஒவ்வொன்றும்) | சிறிது | |
19 | ஜாதிக்காய் | 5 | |
20 | விராட்டி | 6 | |
21 | சுள்ளி | 1 கட்டு | |
22 | வேஷ்டி,சொம்பு,குளபாத்திரம் (ஒவ்வொன்றும்) | 5 (செட்) | |
23 | சரகு தொன்னை | 1 கட்டு | |
24 | வாழை நுனி இலை (ஸ்வாமிகளுக்கும் சேர்த்து) | 14 | |
25 | மாவிலைக் கொத்து | 4 | |
26 | நாலரை செங்கல், கொஞ்சம் மணல் | | |
-- | கீழுள்ளவை தானத்திற்கான சாமான்கள் | | |
27 | மட்டைத் தேங்காய் | 2 | |
28 | சந்தனக்கட்டை | 1 | |
29 | எள் | அரை கிலோ | |
30 | தங்கம் | 1 காயின் | |
31 | நெய் | அரை கிலோ | |
32 | வேஷ்டி | 1 | |
33 | நெல் | 1 கிலோ | |
34 | வெல்லம் | அரை கிலோ | |
35 | உப்பு | அரை கிலோ | |
36 | வெள்ளி | ஏதாவது | |
37 | நீர் நிறைந்த குடம் அல்லது சொம்பு | 1 | |
38 | திரிபோட்டு ஏற்றிய விளக்கு | 1 | |
39 | வேஷ்டி | 1 | |
40 | பெருமாள் அல்லது படம் | 1 | |
41 | பழங்களுடன் தட்டு | 1 | |
42 | புத்தகம் | 1 | |
43 | செருப்பு | 1 ஜோடி | |
44 | குடை | 1 | |
45 | விசிறி | 1 | |
46 | சாதத்துடன் வேஷ்டி | 1 | |
மேற்கண்ட தான சாமான்களுடன் அவற்றை பெருவதால் வரும் பாபத்திற்கு
பரிஹாரமாக தகுந்த தக்ஷிணையுடன் கொடுக்கவேண்டும்.மற்றும்
தண்டுல தானம், ப்ரும்மா தக்ஷிணை மற்றும் அபிச்ரவணம் போன்றவற்றிற்கும்
தக்ஷிணைகள் கொடுக்கவேண்டும்.
கர்த்தாக்களுக்கு யஜ்ஞோபவீத தாரணம் ஆனதும் ப்ராணாயாமம் உபவீதத்திலேயே ' .... ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய சர்மண:
மம பிது: ப்ரேதஸ்ய / கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய துவாதசே அஹநி
ஸபிண்டீகரண ச்ராத்த த்ரவ்ய, உபகரண சுத்தியர்த்தம் ... புண்யாஹ வாசனம் கரிஷ்யே "
என்று ஏற்கனவே உள்ள மந்திரங்களுடன் விசேஷமாகச் சொல்லி புண்யாஹ வாசனம் கர்தாக்கள் (வந்திருந்தால்)
அவர்கள் பத்திநிகளுக்கும் ப்ரோக்ஷித்து ஆத்தில் எல்லா இடத்திலும் ப்ரோக்ஷிக்கறது.
இது கர்த்தா மூத்தவர் க்ருஹஸ்தராய் இருந்து, தாய் தந்தைக்கோ
அல்லது யாரிடமும் பில் வாங்காமல் தானே ஸ்வயமாக பண்ணும் கைங்கர்யத்தில்
மட்டுமே பண்ணப்படவேண்டும்.
இது சுமார் அரை மணி நேரம் ஆகும் பெரிய ப்ரயோகம். இது ச்ராத்த ப்ரயோகம்
வெளியிடும்போது அத்துடன் வெளியிடப்படும்.
கர்த்தா பெரியவன் மட்டில் உபவீதி ப்ராணாயமம் '...ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய
/ கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய துவாதசே அஹநி ஸபிண்டீகரண ச்ராத்தம் கரிஷ்யந்நு
தத் பூர்வபாவீநி ஆத்ய ஊனமாஸிக, த்விதிய மாஸிக, த்ரைபக்ஷிக ஊன மாஸிக, துரிய மாஸிக, பஞ்சம மாஸிக
ஷாண்மாஸிக, ஊன ஷாண் மாஸிக, ஸப்தம மாஸிக, அஷ்டம மாஸிக, நவம மாஸிக, தசம மாஸிக, ஏகாதச மாஸிக,
துவாதச மாஸிக, ஊன ஆப்தீக பஞ்சதச ஏகோத்திஷ்ட ச்ராத்தாநி, அதிக மாஸிக ஸஹிதாநி ஷோடச ச்ராத்தாநி
முக்யத: கர்த்தும் அஸக்தஸ்ஸந்நு, தத் தத் காலாத் ஆக்ருஷ்ய யத்கிஞ்சிது
ஹிரண்ய ஸஹித ஆம ரூபேண அத்ய கரிஷ்யே!" என்று சங்கல்பித்து
அரிசி, வாழைக்காய், தக்ஷிணை இத்யாதிகளைப் ப்ரோக்ஷித்து
ப்ருதிவீதே பாத்ரம் த்யௌரபிதாநம் ப்ரஹ்மணஸ்த்வா முகே ஜுஹோமி ப்ராஹ்மணாநாந்த்வா, ப்ராணாபாநயோ: ஜுஹோமி அக்ஷிதமஸி
மாஸ்யா ச்சேஷ்டா: அமுத்தரா அமுஷ்மிந் லோகே இதம் விஷ்ணு: விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும்ஸுரே
இதம் ஹிரண்ய ஸஹித ஆமம் ரக்ஷ கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய இதம் ஆமம் ஹிரண்யம் ரக்ஷ
நாநா கோத்ரேப்ய ஸ்ரீவைஷ்ணவேப்ய தேப்ய தேப்ய இதம் நமம!
நம: நமம அச்சுயுதப்ப்ரீயதாம்.
ஏகோவிஷ்ணு: .... அவ்யய: ஏபி: ஷோடச ச்ராத்தை: மம பித்ரு பித்ரு ப்ரேத ரூபி பகவாந் ஸ்ரீஜனார்தன: ப்ரீயதாம்
ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம் என்று தெற்குநுனி தர்பத்தில் கட்டைவிரலால் எள் ஜலம் விடறது.
எழுந்திருந்து உபவீதி வடக்கே பார்த்து கய கய கயா
ப்ராசீனாவீதி தெற்கே பார்த்து அக்ஷய்யவட: 3 தரம்.
பாணீ பாதௌ ப்ரக்ஷhள்யா, த்விராசம்யா!
கை கால் அலம்பிண்டு வந்து, இரண்டு தரம் ஆசமனம் பண்றது.
த்ரிபி: பஞ்சபிர்வா க்ருதம் பவித்ரம் த்ருத்வா! ப்ரணம்யா!
3 அல்லது 5 தர்பங்களால் பவித்திரம் போட்டுண்டு ஸேவிக்கறது.
ப்ராசீனாவீதி. அசேஷே ஹேபரிஷது பவத்பாதமூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் சௌவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிது தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்யா
ஸ்வாமிகளுக்கு அநுஜ்ஞை தக்ஷிணை ஸமர்ப்பிக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய (மாது: ப்ரேதாயா:) அத்ய த்வாதசே அஹநி ப்ரேதத்வ விமுக்தி த்வாரா, வஸ்வாதி பித்ருத்வ ஸித்யர்த்தம் அக்ஷய்ய புண்ணலோக அவாப்த்யர்த்தம் பரமபத ப்ராப்த்யர்த்தம்,மோக்ஷ ஸாம்ராஜ்ய ஸித்யர்தம் பார்வண ஏகோத்திஷ்ட விதாநேந ஸபிண்டீகரண ...ச்ராத்தம் கர்த்தும் யோக்யதா சித்திம் அனுக்ரஹாணா!
தாயாருக்குப் பண்ணும்போது: கோத்ராயா: நாம்நீயா: மம மாது: என்று எல்லா இடங்களிலும் மாற்றிச்சொல்லவும். அமுக என்ற இடத்தில், அதற்குப் பதில் தகுந்த பெயர்களைச் சொல்லிக்கொள்ளவும். ச்ராத்தம் பெயர்கள் - ச்ராத்த வகைகள் என்ற தலைப்பில் பார்க்கவும்.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ....... ச்ராத்தம் பவதி தத்ரஆஹவநீயார்த்தே பவத்பி: ப்ரஸாத: கரணீய:!
திலாக்ஷதாநு க்ருஹீத்வா!
எள்ளும் அக்ஷதையும் எடுத்துண்டு மந்திரம் சொல்லறது.
ஸமஸ்த ஸம்பது ஸமவாப்தி ஹேதவ: ஸமுக்தித ஆபத்குல து}மகேதவ: அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவ: புநந்துமாம் ப்ராஹ்மணபாத பாகும்ஸவ:
தீர்த்தம் சேர்த்து ஸ்வாமிகளின் மடியில் படும்படியாக சேர்த்துடறது.
உபவீதி! அக்ஷதாநாதாயா!
அக்ஷதை எடுத்துக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ....ச்ராத்தே க்ருது தக்ஷ ஸம்கிக விச்வவேப்ய: தேவேப்யோ நம:!
விச்வேதேவரின் வலது தோளில் அக்ஷதையைச் சேர்க்கவேண்டியது.
ப்ராசீனாவீதி! திலாநாதாயா.
எள் எடுத்து மந்திர முடிவில் பித்ரு ஸ்வாமி இடதுதோளில் சேர்க்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ........ச்ராத்தே வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பிது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நம:!
குறிப்பு:- ஆபஸ்தம்ப ஸபிண்டீகரண ச்ராத்தத்தில் இறந்தவர் ஆண், பெண் யாராயினும் பித்ரு வரணம் ஆண்களுக்குத்தான்
(அப்பா இருந்தால் தாத்தாவிலிருந்தும், தாத்தாவும் இருந்தாலும், தாத்தா இருந்து அப்பாவுக்கு பண்ணினாலும் தாத்தாவிற்கு
பிறகு 3 தலைமுறை வரிக்கவும். ஒரு வேளை தாத்தா இருந்து அப்பா இல்லாதபோது தாயாருக்கு பண்ணினால் அப்பாவில்
ஆரும்பித்து தாத்தாவை விட்டு விட்டு அதன்பிறகு இரண்டு பேரை வரிக்கவேண்டும்.)
எள் எடுத்துக்கொண்டு ப்ரேத வர்ண ஸ்வாமிக்கு இடது தோளில் சேர்த்து,
பித்ரே ப்ரேதாய நம: (மாத்ரே ப்ரேதாயை நம:) என்று வரிக்கணும்.
உபவீதி பண்ணிக்கொண்டு சிறிது அக்ஷதை எடுத்து விஷ்ணு ஸ்வாமிக்கு வலது தோள்பக்கம் சேர்த்து ‘ச்ராத்த ஸம்ரக்ஷக மஹாவிஷ்ணவே நம:” என்று வரிக்கவேண்டும்.
மீண்டும் ப்ராசீனாவீதி பண்ணிக்கொண்டு
பிறகு கையைக் கூப்பிக்கொண்டு சொல்றது.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச்சா மஹா யோகிப்ய: ஏவசா நமஸ்ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம:!
ஸ்வாமிந: அஸ்மிநு திவசே அமுக கோத்ரம் அமுக சர்மாணம் மம பிதரம் ப்ரேதம் (மாதரம் ப்ரேதாம்)
உத்திஸ்ய .ஸபிண்டீகரண ச்ராத்தம் கர்த்து காம: அஸ்மி அயம் தேச: காலஸ்ச்சா அஸ்மிநு க்ருஹே
வித்யமாநா: பக்வ அபக்வ பதார்த்தா: ச்ராத்த அர்ஹா: பூயாஸு: இதம் க்ஷே ஷத்ரம் கயா க்ஷேத்ர ஸதுர்ஸம் ©த்வா
மம பிதரம் ப்ரேதம் உத்திஸ்ய ஸபிண்டீகரண ச்ராத்த கரணே அதிகார ஸம்பதஸ்து இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹண்ணந்து!
பதில்: ததாஸ்து அதிகார ஸம்பதஸ்து
உபவீதி! உதங்முக: ஸ்தித்வா!
வடக்குப் பார்த்து நின்று கயையை த்யானம் பண்ணிண்டு சொல்றது.
ச்ராத்த ©மிம் கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் கதாதரம்!
ப்ராசீனாவீதி! தக்ஷிணாமுக: ஸ்தித்வா!
தெற்கே பார்த்து பித்ருக்களை த்யானம் பண்ணிண்டு சொல்றது.
வஸ்வாதீங்க்ச்ச பித்ரூநு த்யாத்வா தத: ச்ராத்தம் ப்ரவர்த்தயே!
உபவீதி! உபவிஸ்யா!
தர்பேஷ்வாஸீன: தர்பான் தாரயமாண: பவித்ரபாணி: ப்ராணாநாயம்ய
3 தர்பங்களை ஆசனமாகப் போட்டுக்கொண்டு பவித்திரத்துடன் 3 தர்பங்களை இடுக்கிக்கொண்டு ப்ராணாயாமம்
பண்ணவேண்டியது.
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்.... புண்யதிதௌ
ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் அல்லது பகவத் கைங்கர்ய ரூபம் அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண:
மம பிது: ப்ரேதஸ்ய (மாது: ப்ரேதாயா:) அத்ய த்வாதசே அஹநி ப்ரேதத்வ விமுக்தி த்வாரா, வஸ்வாதி
பித்ருத்வ ஸித்யர்த்தம் அக்ஷய்ய புண்ணலோக அவாப்த்யர்த்தம் பரமபத ப்ராப்த்யர்த்தம்,மோக்ஷ ஸாம்ராஜ்ய
ஸித்யர்தம் பார்வண ஏகோத்திஷ்ட ஸமுச்சாயித விதாநேந ஸபிண்டீகரண ...ச்ராத்தம் ச்ராத்தம் கரிஷ்யே!
இடுக்கு தர்பங்களை வலதுபுறம் தெற்கே போட்டுடறது.
வடகலையார் மட்டும்
ஸாத்வீகத்யாகம்
உபவீதி! பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ருவ்ருத்தி ஸ்வசேஷதா
ஏகரஸேநா அநேந ஆத்மநா கர்;த்ரா ஸ்வகீயைஸ்ச்சா உபகரணை: ஸ்வாராதன ஏகப்ரயோசநாய பரமபுரஷ:
ஸர்வசேஷீ ஸர்வேஸ்வர: ஸ்ரீயப்பதி: ஸ்வசேஷ©தமிதம் மம பிது: ஸபிண்டீகரண ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரயதி! ப்ராசீனாவீதி!