திருக்குறுங்குடி
- மூலவர் :
நின்றநம்பி (குறுங்குடி நம்பி, இருந்த நம்பி, வடுக நம்பி, வைஷ்ணவ நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலை மேல் நம்பி என்ற பெயர்களுண்டு), நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
அழகிய நம்பி (இவ்வாறே உள்ளுரில் அறியப்படுகிறது). நவராத்திரி உற்சவத்தில் அழகிய நம்பி நாச்சிமார்களுடன் கொலுவாக எழுந்தருளியிருக்கும் சமயம் ‘அழகிய நம்பி உலா” தொன்று தொட்டு நடக்கிறது.
- தாயார்:
குறுங்குடிவல்லி நாச்சியார் (இரு தனிக் கோயில் நாச்சியார்கள் உண்டு).
- தீர்த்தம் :
திருப்பாற்கடல், பஞ்சதுறை, சிந்துநதி
- விமானம் :
பஞ்சகேதக விமானம்.
- ப்ரத்யக்ஷம் :
சிவன்
- :
குறிப்பு : நம்மாழ்வார் அவதாரத்தலம். இங்கு திருமங்கையாழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளினார். மூலவர் யாவரும் மிக அழகிய விசேஷ வண்ணக்கலவையில் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு திருமஞசனம் இல்லை.
- :
நம்பாடுவான் என்ற பாணன் இத்திருககுறுங்குடி பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டு, வருடந்தோறும் கார்த்திகை ஏகாதசியன்று விரதம் இருந்து இத்தலத்துப் பெருமாளைப்பாடி வணங்கி வந்தான். ஒரு நாள் காட்டு வழி வரும்பொழுது பிரம்ம ராட்சசன், நம்பாடுபவனைப் பிடித்து உணவாக வேண்டும் என்று கூறினான். நான் பெருமாளை சேவித்த பிறகு, வரும்போது உனக்கு உணவாகிறேன் என்று நம்பாடுவான் உறுதி கூறினார். நம்பாடுவானுக்கு காட்சிதரவே கொடிக் கம்பம் சற்று விலகியது. ஏனெனில் அவன் கோயிலின் வெளியிலிருந்து பெருமாளை சேவித்து வந்தான். பெருமாள் காட்சி கொடுத்தார். இதனால் இத்தலத்துக் கொடிக் கம்பம் சிறிது விலகியே காணப்படும்
- :
நம்பாடுவான் திரும்பி வரும்போது, குறுங்குடியிலுள்ள பெருமாள் முதியவர் வேடத்தில் அவனை செல்ல வேண்டாம், இங்கு பிரம்மராட்சசன் உன்னை தின்று விடுவான் என்றதும், அவன் உணவுக்காகவே தான் செல்வதாகவும், கொடுத்த வாக்குறுதிக்காக செல்கிறேன் என்றதும் பெருமாள் அவனுக்குக் காட்சி கொடுத்து மறைந்தார். பிறகு ராட்சசனிடம் என்னைப் புசி என்றதும், அவனோ எனக்குப் பசியில்லை என்றான். நீ விரதத்தால் பெற்ற பலனில் பங்கு கொடு, என் உருவம் நீங்கும் எனக் அரக்கன் கூறினான். அவ்வாறே தன் பலனில் பங்கு தர, அவன் சாபம் நீங்கப்பெற்றான்.
- :
இவ்வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு கூறியதாக பேசப்படுகிறது. இக்குறுங்குடிக்கு வைகுண்டம் கூப்பிடு தூரமே உள்ளது எனக் கருதப்படுகிறது.
-
திருமங்கையாழ்வார் குறுங்குடி வந்து நம்பியை சேவிக்குமாறு பாடுகிறார்.
"வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர, அடைமின், அடியீர்காள்‚
சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறு ஒப்பான்,
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே"
- மங்களாசாஸனம் :
- நம்மாழ்வார் : 3571
- மொத்தம் 1 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.